Jun 24, 2017

வேதாரண்யம் டூர்

அடுத்தது என்ன வேலை பண்ணலாம், நாளைக்கு என்ன சமைக்கலாம், வீட்டுக்காரர் எப்ப வருவார், இப்டி கவலைப்பட்டு, பட்டு தூக்கமும், ஒடம்பு தெம்பும் போச்சு என் மனைவிக்கு, இன்ஸாம்னியா இந்த வ்யாதிக்குப் பேராம்.   அடிக்கடி டூர், தனியா!! கூட்டிட்டுப் போகனும், மனசு விட்டுப் பேசனும், வேலை செய்ய விடாம, ரிலாக்ஸா வெச்சுக்கனும்னு இங்க்லீஷ், ஆயுர்வேதிக் டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.  வீட்ல அவங்க ஏஜ் க்ரூப்ல இருக்கற ஆள் நாந்தான்.  நான் காலைல 10 மணிக்கு ஃபோட்டான்க்குப் போய்ட்டு, நைட் 12-3 மணிக்குள்ள வந்துடுவேன்!!  தூங்க்கி, குளிச்சு, திருப்பி ஆஃபீஸ் போய்டுவேன்.  மிச்சம் வீட்ல இருக்கறது 60+ ல மாமா, மாமி, 90+ ல தாத்தா, 2 ஆம் வகுப்புல பொண்ணு, 2 வயஸுல பையன்.   வெளில அப்பப்ப கூட்டிட்டுப் போனா தப்பே இல்ல.  கொஞ்சம் காச கரைக்கனும், உலகையும், மனைவியையும் பத்ரமா வெச்சுப் பாக்க.

ரெண்டு குழந்தைங்களும் சிசேரியன், அப்றம் போன மாசம் ஒரு ஆபரேஷன்.  நாங்க போற எல்லா டூருக்கும் வாகன விஷயத்துல நம்பிக்கையா இருக்கற டீம், பெருங்களத்தூர் ஃபேமிலி ட்ராவல்ஸ்.  எல்லா ரக வண்டியும் வெச்சிருக்காங்க, மணியும் (செல்: 9500004224 ), அவர் ஃப்ரண்ட்ஸும் சேர்ந்து எங்களுக்கு ஆஸ்தான ட்ராவல்ஸா இருக்காங்க.  எப்பவும் போல அன்ப்ளான்டு டூர் தான்.

25 ஜனவரி 2016, திங்கள் ஒரு நாள் லீவு போட்டா நாலு நாள் லீவு.  அப்டியே ECRல (கிழக்குக் கடற்கரைச் சாலை), வேதாரண்யம் வரைக்கும் போய்ட்டு வரப் போறோம்.  23, சனிக்கிழமை காலை 1 மணிக்குக் கெளம்பியாச்சு, ட்ரைவர் டைசன் அவரோட எட்டியோஸ் கார்ல.  சின்னப் பையன், ஆனா ரோடு ரொம்ப பொறுப்பா ஓட்றாரு.  அப்பாவோட பெரியப்பா பையன், ராமச்சந்த்ரன் சித்தப்பா, மதுரை த்யாகராஜா காலேஜ்ல காமர்ஸ் HODஆ இருந்தார், அவர் பொண்ணு ரேவதிக்கா கல்யாணம் ஆகி கடலூர்ல தான் இருக்கா.  ரொம்ப நாள் ப்ளான் அவங்க வீட்டுக்குப் போகனும்னு.  முதல் ஃபோன், கொஞ்சம் வம்பு இழுக்கலாம்னு,  அக்காதான் பேசறான்னு  நெனைச்சு, "டிவி சானல்லேந்து பேசறோம், ரேவதி இருக்காங்களான்னு" கேட்டா, அது அவங்க மாமியார், நான் இன்னும் அவங்களெல்லாம் பாத்ததே இல்ல. பட்டுனு ஃபோன வெச்சிட்டாங்க  வாய்ஸ் ஒரே மாதிரி இருந்ததுல கொஞ்சம் கொழப்பம்.  அடுத்த தடவ, அக்காவே ஃபோன எடுத்தா.   கெளம்பிட்டோம், வந்துட்டு, ரெண்டு, மூணு கோவில் பாத்துட்டு, லஞ்ச் முடிச்சிட்டு, கெளம்பறோம்னு ப்ளான் சொல்லியாச்சு.

எல்லாரும் குளிச்சு ஒரு மணிக்கு விடிகாலை வண்டியெடுத்து, 4.30 மணி போல அக்காகிட்ட வழி கேட்டு, வீட்டுக்குப் போயிட்டோம்.   ஒரு குட்டித் தூக்கம், கால நீட்டி.  அக்கா வீட்டுக்காரர், குழந்தையை ஆஃபீஸ், ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பிச்சிட்டு, போலாமான்னு கேட்டா. லஞ்ச்சும் எங்களுக்கு ரெடி பண்ணி வெச்சிட்டா.  டைசன் கொஞ்சம் அசந்திட்டார், விடிகாலை ட்ரைவிங், கொஞ்சம் கஷ்டம்,  தூக்கம் தள்ளும்,  திருடங்க எல்லாம் கையில ஒரு கல்ல புடிச்சிட்டே, குந்தியிருப்பாங்களாம், தூங்கிப் போய், கல்லு அவங்கள அறியாம விழுந்திட்டா, அதான் சரியான  நேரம்னு திருட ஊருக்குள்ள போவாங்களாம்.  எங்க தாத்தா சொல்வார், அந்த  நேரம் அது,   அவரையும் எழுப்பித் தயாரானோம்.

1. பாடலீஶ்வரர் கோவில்:

- புலிக்கால் முனிவர் (வ்யாக்ர பாதர்) பூஜை செய்த கோவில்
- பாதிரி மரத்தடியில் இருந்து அம்பாள் சிவ பூஜை செய்த ஸ்தலம் (பாதிரி மரத்துக்கு ஸம்ஸ்க்ருதததில் பாடல வ்ருக்ஷம் என்று பெயர், அதனால் பாடலீஶ்வரர்), தமிழில் திருப்பாதிரிப் புலியூர்.
- சைவக் குரவர்களில் ஒருவரான அப்பரை சமணத்திற்கு மாறாததால், அவரை ஒரு கல் தூணில் பூட்டி, கடலில் போட்டு விட்டனர், அவர் கீழ்வரும் பாடலால் சிவனைத் துதித்து, ஒரு பாதிப்பும் இன்றி கரையேறினார், அந்த இடம் இப்போது "கரையேற விட்ட குப்பம்" என்று அழைக்கப்படுகிறது.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

வேதப் பொருளொனும், ஜோதி வடிவானவனுமான சிவனின் பொன் திருவடிகளை இறுக்கமாகப் பற்றித் தொழுவோர்க்கு, கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் நற்றுணையாவது நமஶ்ஶிவாய என்ற ஐந்தெழுத்தே.

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.

சுதை, சிற்பங்களோடு கூடின அருமையான கோவில்.  தரிசித்து விட்டு திருவந்திபுரம் சென்றோம்.

2.  ஆதிசேஷனால் (அஹீந்த்ர = ஆதிசேஷன்)  நிர்மாணிக்கப்பட்டதால் திருவஹீந்த்ரபுரம், மருவி திருவந்திபுரம் என்றாயிற்று.  தேவநாதப் பெருமாளையும், எதிரே மலைமேலே வீற்றிருக்கும் ஹயக்ரீவரையும் தரிசித்தோம்.  ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப் பெற்ற) செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.

3. திருமாணிக்குழி:
மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.

என்று ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.  பூத்த மலர்களால் அர்ச்சிக்கப்படும், மார்க்கண்டேயரது உயிரைப் பறிக்க வந்த காலனை காலால் உதைத்த சிவன் இருக்குமிடம்,  சந்தனம், அகில் முதலியவைகளோடு, மலை, குளங்களில் இருக்கும் மலர்களையும் கொண்டு வயல்களில் பாயும் கெடில நதி ஓடுமிடம் இந்த மாணிக்குழியே.

- சிவன் சன்னதியில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணையைக் குடிக்க ஒரு எலி முயற்சித்தது.  அப்போது அதன் செய்கையால் திரி உந்தப்பட்டு மங்கலாக எரிந்து கொண்டிருந்த அந்த விளக்கு ப்ரகாசமாக எரியத் தொடங்கியது.  அறியாமல் செய்த இந்தச் செயலில் மகிழ்ந்த சிவபெருமான் அந்த எலியைச் சக்ரவர்த்தியாகப் பிறக்க வரமளித்தார்.  (இப்படி எளிதில் சந்தோஷம் அடைவதால் சிவனுக்கு ஆஶுதோஷ் என்று ஒரு பெயர்).  எலி மஹாபலியானது.  மஹாபலிச்சக்ரவர்த்தியைக் காலால் மிதித்த பாபம் போக, வாமனராக அவதரித்த மஹாவிஷ்ணு பூஜித்த வாமன புரீஶ்வரர்.  (மாணி=ப்ரம்மசாரி) .  இந்தக் கதையை விளக்கும் சிற்பங்கள் இந்தக் கோவிலில் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன.

- மஹாவிஷ்ணு முதலானோர் தொடர் பூஜை செய்து கொண்டிருப்பதாலும், சிவ சக்தி ஸ்வரூபத்தில் மூலவர் இருப்பதாலும் இங்கு சிவபெருமானை பூஜையின் போது அதிக நேரம் தரிசிக்க முடியாது.  அவர்களுக்குக் காவலாக பதினோரு ருத்ரர்களில் ஒருவரான பீமருத்ரன் இங்கு மூலவரை மறைத்துத் திரைச்சீலையில் (ஸ்க்ரீன்) எழுந்தருளியிருக்கிறார்.  அவருக்கு முதலில் பூஜை செய்து, அவர் அனுமதியோடு அந்தத் திரையை விலக்கி, மூலவருக்கு தீபாராதனை 2-3 நிமிஷம் செய்து, மீண்டும் மூடி விடுகின்றனர்.  அவ்ளோதான் தரிசனம்.  குருக்கள் காஞ்சிபுரம் ஸ்ரீ உமாபதி ஶிவாச்சார்யாரின் மாணாக்கர்.  எளிய விளக்கங்களோடு அழகாக தர்சனம் செய்து வைத்தார்.

அக்கா வீட்டுக்கு வந்தோம், ஏற்கனவே சமையல் முடிச்சிட்டுதான் எங்களோட வந்திருந்தா அக்கா, நல்ல சாப்பாடு, நல்லா சாப்டோம்,  எல்லாரும் நல்லா கவனிச்சாங்க.  ஓய்வு, அக்கா பொண்ணு ஸ்கூல்லேந்து வந்ததும், கடலூர் ஸில்வர் பீச்சுக்குப் போனோம்,  மெரினா பீச் மாதிரி கூவம் கலப்பு இல்ல,  நெறையா கடைகளும், குப்பைகளும் இல்ல, தண்ணி சுத்தமா இருந்துது, கொஞ்ச நேரம் விளையாடிட்டு, அக்கா வீட்டுக்குப் போய்ட்டாங்க,  நாங்க வடலூர் வள்ளலார் கோவில்க்குப் போலாம்னு  நெனைச்சோம்.  ஆனா இன்னும் ரெண்டு நாள்ல தைப்பூசம், சரியான கூட்டமா இருக்கும், அப்பறமா போங்கன்னுட்டா அக்கா.

4. சிதம்பரம்.
- சைவர்களுக்குக் கோவில்னா இதுதான்.
- தில்லை மரங்கள் மிகுந்திருந்ததால் தில்லை என்றும் பெயர்.
- மனித வாழ்வின் பல ரகசியங்களை உள்ளடக்கி, தொடர்போடு விளங்கும் கோவில், அமைப்பு
- மூலவர் திருமூல நாதர் எனும் லிங்க வடிவினர், எல்லா சிவ கலைகளும் இங்குதான் தோன்றி, ஐக்யமாகிறது என்பதற்கிணங்க கடைசியாக அர்த்த ஜாமப் பூஜை நடக்கிறது.
- ஒரே இடத்தில் சபாபதியையும், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சித்ரசபையில் பள்ளி கொண்டிருக்கும் கோவிந்தராஜப் பெருமாளையும் தர்சிக்கலாம்.
- புலிக்கால் முனிவருக்கும், பதஞ்சலிக்கும் நடன தரிசனம்.
- ஐந்து நாட்ய சபைகளில் இந்த கனக சபை முதலானது, (மற்ற நான்கு சபைகள்:  மதுரை மீனாக்ஷி சுந்தரேஶ்வரர் திருக்கோவில் - வெள்ளி சபை - இறைவனுக்குக் கால் வலிக்காதா என்று கவலைப் பட்ட பாண்டிய மன்னனுக்காக இங்கு மட்டும் நடராஜர் வலது பாதத்தைத் தூக்கி ஆடுகிறார்,   திருவாலங்காடு வடாரண்யேஶ்வரர் திருக்கோவில் - ரத்னசபை, திருனெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் - தாம்ர சபை,  திருக்குற்றாலீஶ்வரர் - சித்ர சபை)
- சிதம்பர ரகசியம்: பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயத் தலம்.  வெளி.  நடராஜருக்கு அருகிலேயே திரையைத் திறந்து தீபாராதனை காட்டுவார்கள்.  ஒரு உருவமும் அங்கில்லை.  ஆகாசலிங்கம் இருப்பதாக தங்க வில்வமாலை அணிவித்து இருப்பார்கள்.  இதுவே சிதம்பர ரகசியம்.  (மற்ற பஞ்ச பூத ஸ்தலங்கள்: நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்ரவனேஶ்வரர், நீர் - திருவானைக்கா ஜம்புகேஶ்வரர், காற்று - ஸ்ரீ காளஹஸ்தி, நெருப்பு - திருவண்ணாமலை அருணாசலேஶ்வரர்)
- ரத்ன சபாபதி ஒன்று பத்ரமாக கருவரையிலேயே ஒரு பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது.  தினமும் வெளியே எடுத்து, அவருக்குப் பூஜை நடக்கிறது.

- அன்னைக்கும், நடராஜருக்கும் நடந்த நடனப் போட்டியில் பெருமானின் குண்டலம் கீழே விழுந்து விட, ஆடலின் ஒரு அங்கமாக, தன் கால் விரல்களாலேயே அதைத் தன் காதில் பொருத்திக் கொண்டு விடுகிறார்.  அம்பாள் இதனால் வெட்கி, தில்லை எல்லைக்காளியாக 3 கி.மீ தொலைவில் கோவில் கொண்டுள்ளாள்.  தக்ஷிணா மூர்த்தி வடிவிலும் இங்கு அம்பிகை குடி கொண்டுள்ளாள்.

5. சீர்காழி:  காழி = உறுதி, ப்ரளய காலத்திலும் அழியாது உறுதியாக இருந்ததால், ஸ்ரீகாழி என்று அழைக்கப்பட்டது, மருவி சீர்காழி ஆனது.
- மூன்று நிலைகளில் கோவில் உள்ளது,  டிக்கெட் வாங்கிக் கொண்டு மேல் இரு நிலைகளுக்கும் படியேறிப் போகலாம்.
- படைப்புத் தொழிலில் பங்கம் வராதிருக்க ப்ரஹ்மா பூஜை செய்த ப்ரஹ்மபுரீஶ்வரர் கீழ் நிலையில் உள்ளார்.
- ஊழியிலும் அழியாத இத்தலத்தை உமா தேவிக்கு, ப்ரணவத்தைத் தோணியாக்கி, அதில் அழைத்து வந்து காண்பித்த தோணியப்பரும், உமையும் பெருவடிவில் இரண்டாம் நிலையில் எழுந்தருளி உள்ளனர்.
- மஹாபலியை அழித்த பாபத்தாலும், செருக்காலும் உலகை நடுங்கச் செய்து கொண்டிருந்த மஹாவிஷ்ணுவை, சிவாம்சமான அஷ்ட (8) பைரவர்களில் ஒருவரான வடுக பைரவர் அடித்து வீழ்த்தினார்.  மஹாலக்ஷ்மியின் வேண்டுதலில் அவரை மீண்டும் எழுப்பிய சிவபெருமான், விஷ்ணுவின் வேண்டுதலில், தான் வேறு, அவர் வேறு அல்ல என்று காண்பிக்க, அவருடைய தோலையே சட்டையாக அணிந்து, அவரது எலும்பை கதையாகக் கொண்டு சட்டை நாதராக மூன்றாவது நிலையில் எழுந்தருளியிருக்கிறார்.
- மேலே இருந்து பார்த்தால் 8 பைரவர்களுக்கும் உள்ள தனித்தனி சன்னிதிகளும் தெரிகின்றது.
- ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், சேக்கிழார், பட்டினத்தார், அருணகிரி நாதர், முத்துஸ்வாமி திக்ஷதர், நம்பியாண்டார் நம்பி, அருணாசலக் கவிராயர் என்று பலராலும் போற்றப்படும் ஸ்தலம்.
- சிவனுக்கும், உமையவளுக்கும் நடுவில் குழந்தையாக முருகன் தரிசனம் கிடைப்பதை ஸோமாஸ்கந்த (ஸ=உடன், உமா = உமை, ஸ்கந்தன் = முருகன்) தரிசனம் என்பர்.  முருகனே இந்த ஊரில் ஆறாம் நூற்றாண்டில் சிவபாத ஹ்ருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் ஞானஸம்பந்தராகத் தோன்றினார்.  இந்தக் கோவில் ஸ்வாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் ஞானசம்பந்தருக்குத் தனி சன்னதியே உள்ளது (ஸோமாஸ்கந்த அமைப்பு).
- ஒரு நாள் அப்பாவோடு இக்கோவிலில் உள்ள ப்ரஹ்மதீர்த்தம் என்ற குளத்துக்குப் போயிருந்தார் குழந்தையாக இருந்த ஞானசம்பந்தர்.   இவரைக் கரையில் இருத்தி விட்டு நீரில் முங்கிக் குளித்துக் கொண்டிருந்தார் அப்பா.  அப்போது குழந்தை அழ ஆரம்பித்து விட, சிவபெருமானின் கருணையால் உமையே தன் பாலை, ஒரு கிண்ணத்தில் இவருக்கு வந்து ஊட்டி விட்டு, மறைந்தாள்.  குளித்து விட்டு, ஆசாரமாக வந்த அப்பா, குழந்தையின் வாயில் பால் ஒழுகியிருப்பதைக் கண்டு, யாரிடம் பால் குடித்தாய் என்று கோபமாக அதட்டுகிறார்.

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

அப்பா! காதுல தோடு போட்டுண்டு, காளை மாட்டு மேல ஏறி, தலைல வெள்ளையா நிலாவ வெச்சிண்டு, ஒடம்பு முழுக்க சுடுகாட்டு சாம்பல பூசிண்டு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட திருடனப்பா அவன், முன்னாளில் தாமரையில் தோன்றிய ப்ரஹ்மா பணிந்து, பூஜிக்க அவனுக்கு அருள் செய்ய பெருமை மிக்க இந்த ப்ரஹ்மபுரத்தில் (ஸ்ரீகாழி) எழுந்தருளியவனப்பா அவன்!!
என்று வானை நோக்கித் தன் பிஞ்சுக் கையை நீட்டுகிறார்.  அங்கு அந்தக் குழந்தைக்குப் பணிந்து, நந்திகேஶ்வரரின் மேல் உமைமஹேஶ்வரராகத் தோன்றி அவரோட அப்பாவுக்கும் குளக்கரையில் தரிசனம் தருகிறார் சிவபெருமான்.

- இன்றும் ஞானசம்பந்தருக்குப் பாலூட்டிய நிகழ்ச்சி வருடம் ஒருமுறை நடந்து, அந்தப் பால் ப்ரசாதமாகத் தரப்படுகிறது.

- சூரபத்மன் கூட்டத்துக்குப் பயந்து, இங்கிருந்த மூங்கில் காடுகளில் மறைந்திருந்த தேவேந்த்ரனால் பூஜிக்கப்பட்ட ஸ்வாமி.
- 18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் சமாதி இங்கு உள்ளது.

6. வைத்தீஶ்வரன் கோவில் - நவக்ரஹங்களில் ஒருவரான அங்காரஹனுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்த்ததால் வைத்தீஶ்வரன்.
- புள்ளிருக்குவேளூர் - புள் (கருடன், சம்பாதி முதலிய பறவை), ருக்கு வேதம், வேள்- முருகவேள், சூர்யன் முதலானோர் பூஜித்த தலம்.
- பாடல் பெற்ற ஸ்தலம்

மயிலாடுதுறை: இறைவி மயிலாக வந்து பூஜித்த, பாடல் பெற்ற ஸ்தலம். பாக்கல, மணியாய்டுச்சு, வழியா, காரைக்கால் தாண்டி 23, சனிக்கிழமை ராத்திரி 12 மணிக்கு நாகப்பட்ணம் வந்து சேந்தோம்.  அப்பா ஃப்ரண்டு போலீஸ் ராஜா மாமா, ஏற்கனவே ஃபைர் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்க்க இருந்த சத்யா லாட்ஜுல ரூம் சொல்லி இருந்தார், 400₹ ஏசி ரூம் வாடகை,  தஞ்சாவூர்ல ட்யூட்டில இருக்கறதால, காலைல வந்து பாக்கறேன்னு சொன்னார், நல்ல டைட் பேக்கேஜ், தொடர்ந்து கோவில்கள், கதை, கதையா சொல்லி கூட்டினு போனாலும், என் பொண்ணு டயர்டா ஆயிட்டா.  இனிமே ஒரு நாளைக்கு 2-3 மூணு கோவில்தான் இனிமே கூட்டிண்டு போகணும்னு கன்டிஷன் போட்டுட்டுத் தூங்கினா குழந்தை.  இவளுக்குப் போர் அடிக்கக் கூடாதுன்னு தான் ஒவ்வொரு நாளும் ஒரு பீச், பார்க் ஏதாவது சேக்கனும்னு ப்ளான்.  இன்னிக்குக் கடலூர் சில்வர் பீச் போயாச்சு, நாளைக்கு ஒரு ஸஸ்பென்ஸ் இருக்கு இவங்க எல்லாருக்குமே.

24 ஜனவரி 2016: இனிய நினைவுகள், ஒன்ற வருஷத்து அப்பறமாவும் இன்னும் ப்ளாக்ல கதைக்கற அளவுக்கு ஞாபகம் இருக்கு.  வெரி ஹேப்பி அயம், ப்ளெஸ்டா ஃபீல் பண்றேன்.  ஐடி கம்பனிலேந்து நானாவோ, அவங்களாவோ அனுப்பி, ஏதாவது காலேஜ்ல மிச்ச சர்வீஸ முடிச்சு, பசங்களும் கல்யாணம் ஆகி, அவங்க குழந்தை, குடும்பம் செட்டில் ஆனப்பறம், ஒருத்தரும் கூட இல்லேன்னா, இப்படித்தான் எங்கயாவது  நடையா சுத்திண்டு, பொறுக்கிண்டு பொழுத போக்குவேன்னு நினைக்கறேன்.  தாத்தா சொல்வாங்க, நாம் ஒன்று நினைக்க, சித்ரக்காரர் (சித்ரகுப்தன் - நம்ம தலையெழுத்து புக்ஸ மெயின்டெயின் பண்றவர்) ஒன்று நினைப்பார்னு.  பாப்போம்.  அப்ப இந்த ப்ளாக்ஸ், ஃபோட்டோஸ் திரும்பிப் பாக்க காசு, ஃபோன் என்ட இருக்குமான்னு தெர்ல, இன்ட்ரெஸ்ட் இருக்குமான்னும் தெர்ல, எனக்கு கண்ணு அப்ப எப்டி இருக்கும்னே தெரியல !!  சின்னப்பயலே! சின்னப்பயலே !! பாட்ல எம்.ஜி.ஆர் "நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி" ம்பாரு.  பாப்போம் காலம் நமக்கு என்ன பயிற்சி தருதுன்னு.

7. நாகப்பட்ணம்:
- பாடல் பெற்ற ஸ்தலம்.
- 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதார ஸ்தலம்.
- பூபாரத்தை சமன் செய்ய தென் திசைக்கு வந்த அகத்தியருக்குத் திருமணக் கோலத்தில் தரிசனம் தந்த ஸ்தலம்.
- நாகராஜனான ஆதிசேஷனால் பூஜிக்கப்பட்டதால் நாகப்பட்ணம்
- காயாரோகணேஶ்வரர் - புண்டரீக முனிவரைத் தன் உடலில் (காயம் - உடல், தோல்) சேர்த்து (ஆரோகணம் - ஏற்றுதல், அவரோஹணம் - இறக்குதல்)க் கொண்ட ஸ்வாமி.
- ஸப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்று:  முசுகுந்த சக்ரவர்த்தி தேவாசுரப் போரில், தேவர்கள் சார்பில் போரிட்டு, வென்று கொடுத்தார்.  வெற்றியைக் கொண்டாடி, மகிழ்ந்த தேவேந்த்ரன், வேண்டிய பரிசைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறு சக்ரவர்த்தியை வேண்டினான்.   அவரோ தேவேந்த்ரன் தினமும் பூஜிக்கும் சிவலிங்கத்தைத் தன் பூஜைக்குத் தருமாறு வேண்டினார்.  வாக்களித்து விட்ட தேவேந்த்ரன் என்ன செய்வதென்று யோசித்து, ஒரு ஐடியா பண்ணினான்.  தேவதச்சனாகிய விஶ்வகர்மாவை அழைத்துத் தான் பூஜிக்கும் சிவலிங்கத்தைப் போன்றே, ஆறு சிவலிங்கங்களை செய்யச் சொன்னான்.  விஶ்வகர்மா உளி படாமல், (டங்கம் - உளியால் செய்தது, வி  டங்கம் - உளி படாதது) மானசீகமாகவே சிவலிங்கங்களைப் படைத்தான்.  இந்த்ரன் அவைகளோடு தன் சிவலிங்கத்தையும் சேர்த்து வைத்து, உண்மையான ஸ்வாமியைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுமாறு முசுகுந்த சக்ரவர்த்தியிடம் கூறினான்.  அவர் தன் சிவ பக்தியாலும், சிவனருளாலும் உண்மையான சிவலிங்கத்தைக் கண்டு கொண்டார்.  அவர் பக்தியை மெச்சிய, இந்த்ரன்  ஏழையுமே அவருக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்தான்.  முக்ய லிங்கத்தை திருவாரூரிலும், வேறு ஊர்களில் மீதமுள்ள ஆறையும் ப்ரதிஷ்டை செய்து வழிபட்டார் சக்ரவர்த்தி.  இந்த ஏழு ஊர்களிலும், மூலஸ்தானத்தைத் தவிர, நடராஜர் சன்னதியில் இந்த சிவ லிங்கங்களைப் பத்திரமாக வைத்து, இன்றும் பூஜைகள் நடந்து வருகிறது.  நடராஜருக்கும் விடங்கர் (பேரழகன்) என்று பெயருண்டு.  இந்த ஏழூர்களிலும் வித்யாசமான நடன நிலைகளில்  நடராஜர் தரிசனம் தருகிறார்.

சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில்-பேரான
ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம்

திருவாரூர் - தியாகராசப்பெருமான்
திருநள்ளாறு - நாகவிடங்கர்
நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
திருக்காராயில் - ஆதிவிடங்கர்
திருக்குவளை - அவனிவிடங்கர்
திருவாய்மூர் - நீலவிடங்கர்
வேதாரண்யம் - புவனிவிடங்கர்

சிவன் கோவில், நீலாயதாக்ஷி அம்பாள் கோவில் என்று கூறினால் உள்ளூரில் அடையாளம் சொல்கிறார்கள்.  எந்த ஊரிலும் ஸ்வாமியோட பேர் சொல்லி, காயாரோகணேஶ்வரர் கோவில் எங்க இருக்குன்னு கேட்டா  நெறையா பேருக்குத் தெரியல.   சிவதரிசனத்தோடு பொழுது புலர்ந்தது.

8. நாகப்பட்ணம் ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் - இது ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம், தாயார் இங்கு தனியாக கருடி (கருடன் - கருடி!!) வாஹனத்தில் எழுந்தருளுவாள்.  இது இங்கு மட்டுமே காணும் சிறப்பு, அழகாக இருக்கும் கருடி வாகனம், ஹாஃப் சாரி கட்டிண்டு,

9. பொரவாச்சேரி முருகன் கோவில்:  பொருள் வைத்த சேரி என்பது மருவி, பொரவாச்சேரியானது.  ஒரு தெய்வீகச் சிற்பி இந்தக் கோவில் முருகனை ஒரே கல்லில் வடித்தான்.  ஆறுமுகங்கள், ஆயுதங்களோடு பன்னிரு கரங்களையும் கொண்ட பெரிய முருகனை, வாயில் பாம்பைக் கவ்விக் கொண்டு மயில் தன் கால்களில் தாங்கி நிற்குமாறு வடித்திருக்கிறார்.  ஆயுதங்களைப் பிடித்திருக்கும் கந்தனின் கை நரம்புகளும், மொத்த எடையையும் தாங்கியிருக்கும் மயிலின் கால் எலும்புகளும் அழகுறத் தெரிகின்றன இந்தக் கற்சிலையில், இந்தப் பெருமை வேறெந்த கோவிலுக்கும் கிடைத்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் அரசன் அவன் கட்டை விரலை வெட்டி விடுகிறான்.  ஆனாலும் அதே அழகோடு ஒரு கி.மீட்டரில் அருகிலுள்ள சிக்கல் சிங்காரவேலனை வடிக்கிறான் அந்த சிற்பி,   இப்போது அவன் கண்களைத் தோண்டி விடுகிறான் அரசன்,  தன் எண்ணத்தையே கண்ணாகக் கொண்டு அவன் மீண்டும் எண்கண் முருகனை வடிக்கிறான்.   அதன் பின் மீண்டும் அதேபோல் ஒரு சிற்பத்தை வடிக்கையில் தவறி, சிலை சாய்கிறது, குருடனான அந்த சிற்பி அதை எட்டிப் பிடித்தான்.  அதுவே எட்டுக்குடி.  வள்ளி தெய்வானையோடு முருகன் அவனுக்கும், அரசனுக்கும் காட்சி தந்து, சிற்பியை முன்போல் பொலிவுறச் செய்கிறான்.

10.  சிக்கல் சிங்கார வேலர்:  சூரபத்மனுடன் போருக்குப் புறப்பட்டு, வழி நெடுக பல ஸ்தலங்களில் சிவ ப்ரதிஷ்டை, பூஜை செய்து,  சென்று கொண்டிருந்த முருகனுக்கு உமையம்மை தன் சக்தியைத் திரட்டி, ஆழத்திலும், அகலத்திலும், கூர்மையிலும் சிறந்த அறிவைக் குறிக்கும், வேலாயுதமாக தந்த திருக்கோவில்.    ஸ்வாமி நவநீதேஶ்வரர் ( நவனீதம் - புது வெண்ணெய்), காமதேனுவின் வெண்ணெயில் சிவலிங்கம் செய்து, இங்கு பூஜை செய்த வஸிஷ்டர், முடிவில் அதை எடுக்க முயல்கையில், வராமல் சிக்கிக் கொண்டதால் இந்த ஊருக்குப் பெயர் சிக்கல்.  வேல் தந்ததால் அன்னைக்கு பெயர் வேல் நெடுங்கண்ணி.  இன்றும் ஷஷ்டியின் போது உமையம்மையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கையில், முருகன் சிலையிலும், சன்னிதியிலும் உக்ரத்தால் வியர்வை நீர் கசிவதைப் பார்க்க முடிகிறது.

காலை தரிசனங்கள் முடிந்தது,  சிக்கலிலேயே கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கடையில் பூரி, பட்டானி சுண்டல் (5  ரூபாதான்), தோசைன்னு சிற்றுண்டியை முடித்தோம், சூப்பரா இருந்துது.   ராஜா அண்ணா ப்ளான் படி, ஹோட்டல காலி பண்ணிட்டு, 9.30 மணி போல அவரோடயே, நாகப்பட்ணம் நம்பியார் நகர் குப்பத்துக்குச் சென்றோம்.  இந்த மீனவர்களின் மூதாதையர் தான் நாம் முன்பு கூறிய அதிபத்த நாயனார்.  தினமும் தொழிலில் கிடைக்கும் முதல் மீனை சிவனுக்கு அமுதாகத் தந்து விட்டு தான், மீதத்தைத் தனக்குக் கொள்வார்.   நுளைபாடியென்பது இதன் புராணப் பெயர்.  இங்கு இவர் பூஜித்த அமுதீசர் கோவில் உள்ளது.  மீனவக் குடும்பங்கள் இந்தக் கோவிலை நன்றாகப் பராமரித்து வருகின்றனர்.    ஐயர் வேஷத்தில் பஞ்ச கச்சத்தோடு கோவில் தரிசனங்களை முடித்து விட்டு, அங்கு சென்ற எங்களுக்கு ஊரார் பெரும் வரவேற்பே கொடுத்து விட்டனர்.  இப்போதெல்லாம் கட்டு மரங்களை, ட்ராக்டரிலும் இழுத்து வந்து விடுகின்றனர்.  முன்பு பத்து, இருபது பேர்களாக சேர்ந்து குண்டு, குண்டு கம்பங்களில் கயிறைக் கட்டி, இழுத்தும், தூக்கியும் வருவர்.  நல்ல பசங்க, டிகிரி, எம்.பி.ஏ ன்னு படிச்சிட்டும் இந்தத் தொழிலில் இன்னும் இருக்கின்றனர்.  நல்ல கும்பல் நாங்க வந்திருக்கோம்னு, ஒரு மீன்பிடி ஸ்ட்ரீமெர்ல அவங்க நாலு பேர், நாங்க நாலு பேர்னு ஏறிக் கடல்ல கொஞ்ச தூரம் கூட்டினு போனாங்க.  லைஃப் ஜாக்கெட் ஏதும் இல்ல, டயர் ட்யூப்பும் இல்ல.  போட்ல அமர்ந்து கொண்டு என் மனைவி, அவள இறுக்கமா பிடிச்சிட்டு ஒரு வயசு கூட ஆகாத என் பையன்.   திரும்பி கரைக்கு வர்ற வரைக்கும் அவன் பிடிய விடவே இல்ல,  மனைவி தோள்லேந்து தலையையும் தூக்கல.  அலைகள் பெரிசு, பெரிசா வந்து கொண்டிருந்தது.  என் பொண்ணும் அவங்க சொன்னத கேட்டு ஒக்காந்திட்டா,  நான் என்னவோ நாயகன் படத்து கமலஹாசன் மாதிரி திமிரா நின்னுட்டு இருந்தேன்.  அனுபவம் இல்ல, அறிவும் இல்ல, ஆசை மட்டும் இருக்கு.  ஸ்பீடு ப்ரேக்கர் மாதிரி ஒரு பெரிய அலை வந்துது,  டொம்னு போட்டுக்குள்ளேயே விழுந்தேன்.  கணுக்கால்ல சிராய்ச்சு ரத்தம் வந்திடுச்சு.  மெல்ல, மெல்ல எல்லா அலைகளையும் தாண்டிப் போனாங்க.  மனந்தளராத விக்ரமாதித்தன் மாதிரி வேட்டிய மடிச்சு, கட்டிட்டு எழுந்தேன்,  நீல நிறத்துல, அலையில்லாம கண்ணுக்கெட்டின தூரம் வரை தண்ணி.  ஒன்னு, ரெண்டு ஸ்ட்ரீமெர் எங்கள தாண்டி கரைக்குப் போச்சு,  வெரைட்டியா மீனு, நண்டுல்லாம் காம்சிட்டுப் போனாங்க.  என் பொண்ணுக்கு இப்போ தைரியம் வந்தாச்சு, எழுந்து கைய விரிச்சு "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" எம்.ஜி.ஆர் பாட்டு பாட ஆரம்பிச்சிட்டா, எல்லாரும் கோரஸ்ஸா பாடி என்ஜாய் பண்ணினோம்.    நான் கடல்ல குதிக்கப் போறேன்னேன்.

ஏக எதிர்ப்பு, நீச்சல் தெரியுமா, சேஃப்டி கருவிகள் ஏதும், இல்ல, மருந்துகளும் இல்லன்னு அந்தப் பசங்க.  வந்த எடத்துல இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு எங்க வீட்ல,  ஏற்கனவே கட்டாயப்படுத்தி ட்ரைவர் டைசன ஏத்தினு வந்திட்டோம்,  கன்யாகுமரி அந்தப் பையன்.  மூணு கடலும் சங்கமிக்கற எடம்,  ஆயிரம் இருந்தும், நீச்சலும் தெரியல, தைரியமும் இல்லயே,  நோ பீஸ் ஆஃப் மைண்டு.!!  வாந்தி, வாந்தியா எடுத்துனு போட்ல ஒரு மூலைல இருக்காரு.  அவரே போட் பண்ணி, போயிருக்கேன்னாரு,  அப்பறம் பாத்தா, அது மெட்ராஸ் டிஸம்பர்ல மழை, வெள்ளம் வந்தப்ப, வேளச்சேரில தெர்மகோல்ல பண்ணிப் போன அனுபவமாம்.  எனக்குக் காவிரி நீச்சல்லாம் இங்க சரி பட்டு வராதுன்னு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.  அவங்க த்ருப்திக்கு (எனக்கும் கொஞ்சம் பயந்தே) போட்ல ஒரு குட்டி நூல் கயிறைப் புடிச்சுக்க சொல்லிட்டு, மறு முனைய என் கைல கட்டிட்டு  ஒரு ஜம்ப்.  காவிரி பழக்கம், ஆழத்துக்குப் போயி எல்லாரும் நம்பறதுக்கு அடி மண் எடுத்துட்டு வர்றது.  கொஞ்ச நேரத்துக்கு அப்புறந்தான் புத்தி வந்துது,  இது கடலு, நீ மண்ண தொடப் போறதில்லன்னு.  சுதாரிச்சு, தம் புடிச்சு, தண்ணி மேல வந்திட்டேன்.  எல்லாம் பயத்தோட எதிர்பாத்துட்டு இருந்தாங்க.    போட் முன் பக்கத்துல அதிபத்த நாயனார் துணை ன்னு எழுதி இருந்துது.  எல்லாம் சிவமயமா தெரிஞ்சிது.  கொஞ்ச நேரம் பத்மாஸனம் போட்டு தண்ணிலயே சீரா மூச்சு விட்டுட்டு, மிதந்துக்கிட்டு இருந்தேன்,  ஸூர்யன் சுளீர்னு கண்னைப் பறிக்க தரிசனம்.  திவ்யமான குளியல்.  வயிறு ஃபுல்லா சிக்கல் டிஃபன் சிக்கல்,   போட்ல திருப்பி மூச்சுப் புடிச்சு ஏற முடியல.  போட் ரொம்ப பெரிசா தெரிஞ்சிது.  கொஞ்ச நேரம் திருப்பி, தண்ணிலயே ரெஸ்ட் எடுத்துட்டு, போட் பின் பக்கம் வந்து, அவங்க உதவியோட மேல ஏறினேன்.  நல்லா ஆட்டம் போட்டாச்சு.  தண்ணில குதிக்கும் போது வீடியோ ரெக்கார்டிங் ஆன் பண்ணி, அப்டியே நான் குதிக்கறது, குளிக்கறது, யோகாஸனம் போட்டு தண்ணில மிதக்கறது எல்லாத்தையும் பதிவு பண்ண சொல்லி, கேமராவ குடுத்துட்டு குதிச்சிருந்தேன்.  வந்து நல்லா தண்ணியெல்லாம் தொடச்சிட்டு, கேமராவ கேட்டா, அவரு பேண்ட் பாக்கெட்லேந்து எடுத்துக் குடுக்கறாரு, ரெக்கார்டிங் அப்டியே ஆன்லயே இருக்கு,  பயத்துல பாக்கெட்ல போட்டுட்டாராம், உருப்படியா ஒன்னும் பதிவாகல.  கடல்ல ஒரு பழைய கப்பல நங்கூரம் போட்டு நிறுத்தி இருந்தாங்க.  மீனெல்லாம் வலைலேந்து பிரிச்சு, வகைப்படுத்திட்டு இருந்தாங்க.  அது கிட்ட போயி, கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துட்டு, கரைக்கு வந்து சேந்தோம்.  அமுதீசர் கோவில்ல போயி, மோட்டார் போட்டு நல்ல தண்ணில குளிச்சு, சிவ தரிசனம் முடித்தோம்.  என் பையன் அப்பதான் கொஞ்சம் தைரியம் வந்து எறங்கினான்.  ட்ரைவர் ஓகே.  பசங்க நம்பர்லாம் இப்ப எங்கிட்ட இல்ல,  சிம் கார்டு டேமேஜ் ஆகி, எல்லா நம்பரும் போய்டுச்சு, ஞாயிற்றுக் கிழமை எல்லா மீனவர் குடும்பத்துலயும் சிறப்பு சமையல், எங்களுக்காக வந்து ஒரு வெஜிடேரியன் ஹோட்டல்ல கொஞ்சம் சாப்டு, எங்கள வழியனுப்பி வெச்சாங்க பாய்ஸ்.  வேதாரண்யம் போறதுக்கு முன்னாடி வடக்குப்பொய்கை நல்லூர் கோரக்கர் சமாதிக்குப் போய்ட்டுப் போகச் சொன்னாங்க.  மணி மாலை 3.00.

11. அமுதீசர் கோவில், 12, வடக்குப் பொய்கை நல்லூர் கோரக்கர் சமாதி தரிசனம் முடிந்து வேதாரண்யம் கோவில் குருக்கள் ஸ்ரீ சிவ சங்கர சிவாச்சார்யார் இல்லம் போய்ச் சேர்ந்தோம்.

13. வேதாரண்யம்:
- மறைகள் (வேதங்கள்) நான்கும் இறைவனை வழிபட்ட தலமாதலால் வேதாரண்யம் , திருமறைக்காடு.
- மூலஸ்தானத்துக்கு அடுத்த அர்த்த மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக நிற்கின்றன.
- மஹாபலி முன்பிறவியில் எலியாக இருந்து, விளக்குத் திரியைத் தூண்டி விட்ட தலம் .  வேதாரண்யம் விளக்கழகு என்ற பழமொழி நினைவு கூறத்தக்கது.
- ராமபிரானின் முன்னோரான த்ரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்த தலம்.
- முன்பு பார்த்த ஸப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்று.
- ஸரஸ்வதியின் யாழ் இசைக்கும், அன்னையின் குரலிசைக்கும் நடந்த போட்டியில் அன்னை வென்று யாழைப் பழித்த மொழியாள் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கும் தலம்.  இதனால் இங்கு தனி சன்னதியில் இருக்கும் ஸரஸ்வதி கையில் வீணையின்றி இருக்கிறாள்.
- ராமர் இலங்கைக்கு ஏகும் முன், இங்கு துர்க்கையை ப்ரதிஷ்டை செய்து வழிபட்டு சென்றிருக்கிறார்.  அருகிலுள்ள ராமர் பாதம் என்ற குன்றில் ஏறிப் பார்த்த போது இலங்கையில் இராவணின் கோட்டையின் பின் பக்கம் தெரிந்தது.  சக்ரவர்த்தித் திருமகன் பின் பக்கமாக செல்வதும், தாக்குவதும் தனக்கு அழகன்று என்று இராமேஸ்வரம் சென்று, இலங்கைக்குச் சென்றார்.
- ராவணனைக் கொன்ற ப்ரஹ்மஹத்தி தோஷத்தை மீண்டும் இங்கு வந்தே போக்கிக் கொண்டார்.
- வெகு காலமாக அரசனின் ஆணையால் கோவில் கதவு மூடப்பட்டு, மக்கள் பின்புறம் உள்ள ராஜ கோபுரத்தின் வழியாகவே தர்சனம் செய்து வந்துள்ளனர்.  இங்கு வந்திருந்த ஞானஸம்பந்தரின் பாடலால் பூட்டப்பட்டிருந்த கதவுகள் தானாகவே திறந்து, மக்கள் வழிபாட்டுக்கு உதவியது.  (இந்த நிகழ்ச்சியை பழைய திருவருட்செல்வர் திரைப்படத்தில் அற்புதமாக படமாக்கியிருந்தனர் ஏ.பி. நாகராஜன் குழுவினர்).  அந்த பெரியக் கதவுக்கு வெள்ளிக் காப்பு செய்துள்ளனர்.

பராமரிப்பில் இதுவும் பெரும்பாலான தமிழகக் கோவில்களைப் போலத்தான்.  மோசமாக இருந்தது.  கேரளா, திருப்பதில எல்லாம் கோவில் கலெக்ஷனைக் கொஞ்சமாவது கோவில்லயே செலவு செஞ்சு மக்களைத் திருப்பி, திருப்பி மயக்கி வரவழைக்கறான்.  நம்மூர்ல பழனி மலையச் சுத்தியே ஒரே மூச்சா நாத்தம் தான்.   (இது முன் கூட்டியே தெரிஞ்சு தான் போகர் ஸ்வாமி சிலைய நவபாஷாணத்துல செஞ்சிட்டார்).  அவ்வளவா கலெக்ஷன் இல்லாத இந்தக் கோவிலப் பத்தியெல்லாம் சொல்லனுமா ?  அம்மாவின் ஆணைக்கிணங்க இப்பதான் சமீபத்துல அவசர, அவசரமா கும்பாபிஷேகம் வேற நடந்திருக்கு.

மாலை விடங்கர் விக்ரஹத்துக்கு அபிஷேகம், பூஜைகள் 10-15 நிமிஷங்கள்.  நடராஜர் சன்னிதில ஒரு இரும்பு ஜெயில்ல, இரும்பு லாக்கர்குள்ள இருக்கார் இந்த மரகத ஸ்வாமி.  அறநிலையத் துறை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் முன்னிலையில் தினமும் காலை, மாலை ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு, குருக்கள் இவைகளைத் திறந்து பூஜைகளை முடித்து, மீண்டும் உள்ளே வைத்து பூட்டி விடுகிறார்.  ஜெயிலுக்கு வெளிலேந்து எல்லாரும் பாக்கலாம்.  20-30 பேர் இருப்போம்.  நாங்க முன்னாடியே போய் பக்கத்துல ஒக்காந்துட்டோம்.  நல்லா பூஜை பாத்துட்டு, ப்ரசாதம் வாங்கிண்டு, டின்னர் முடிச்சிட்டு தூங்கினோம்.

25 ஜனவரி 2016, திங்கள்:
சரியான முன்னறிவிப்புகள் இல்லாததாலும், ப்ரைவேட் கம்பெனில வேலை பார்க்கிறதாலையும் நண்பரால எங்க டூர்ல கலந்துக்க முடியல,  அவர் பசங்களும் ஸ்கூலுக்குப் போயிட்டாங்க.   அவர் மனைவியும், அண்ணியும் தடபுடலா கவனிச்சிட்டாங்க.  வேதாரண்யேஶ்வரரை கடல்ல குளிச்சிட்டு, ஒரு ஏரில குளிச்சிட்டு, கோவில் குளத்துல குளிச்சிட்டு தான் தரிசிக்கனும்னு இங்க முறை.  ட்ரைவருக்கு ரெஸ்ட் குடுத்துட்டு, ஒரு லோக்கல் ஆட்டோ ஏற்பாடு செஞ்சு நண்பரோட அண்ணாவே எங்களோட வந்துட்டார்.  இந்த ஊர் கடல வேத நதின்னு தான் சொல்றாங்க.  என்னன்னு தெரியலை, எங்க பாத்தாலும் சரியான களி மண்,  கொண்டு வந்து கரைல தள்றாரு சமுத்ர ராஜன்.  தண்ணியெல்லாம் சேத்துக் கலர்ல இருக்கு.  எங்க கால வெச்சாலும் சல், சல்லுனு புதையுது.  தலைல தண்ணிய தெளிச்சிட்டு கெளம்பிட்டோம், குளிக்க முடியல, அண்ணாவுக்கும் ஏன் இப்படின்னு புரியல.   இன்னும் கொஞ்ச நாள்ல 27 வருஷத்துக்கப்பறம் மீண்டும் மஹோதயம் ங்கிற புண்ய நாள் வருது.  (தை மாசம், அமாவாசை, ஸ்ரவண நக்ஷத்ரம், திங்கள் கிழமை எல்லாம் சேர்ந்து வரும் நாள்).  கோடி சூர்ய க்ரஹணங்களுக்கு இணையான பலன் இந்த நாள்ல ஸமுத்ர ஸ்னானம் செஞ்சா, ஜபம் பண்ணினா.  லக்ஷக் கணக்குல கும்பல் வரும்னு கலெக்டர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யச் சொல்லி நடந்திட்டிருக்கு.

அங்கிருந்து கிளம்பி, ஏரில குளிச்சிட்டு, கோவில் குளத்துல போய்க் குளிச்சோம், ராஜ கோபுரத்துக்குள்ள நுழைஞ்சதும், இடது புறம் இந்த குளம், கோபுரத்துல நெறையா சுதைகள் இருக்கு.  குழந்தை கொஞ்சம், கொஞ்சமா தைரியம் வந்து கையிலேயே ஒக்காந்துண்டு குளிச்சான்.  நேத்து ராத்திரி புறப்பாடு முடிஞ்சு ஸ்வாமி 1.30 மணிக்கு விடிகாலைல தான் தூங்கப் போயிருக்கார்.  திருப்பியும் ஒரு தடவ மரகத விடங்கர் தரிசனம் செஞ்சோம்.

கார்ல கெளம்பி கோடிக்கரை போற வழில குன்றுல ஏறி ராமர் பாதம் பார்த்தோம்.  என் பையன் வால்மீகி ராமாயணம் படிச்சு, பொறந்ததால அவனுக்கும் ராமன்னுதான் பேர், தாத்தா ராமாயணத்த அனுக்ரஹ க்ரந்தம், அது கேட்டதக் குடுக்கும்னு சொல்வார்.  அது என் அனுபவம்.  அவன் குழந்தையா இருக்கும் போதே, அவனோட அங்க போனதுல கொஞ்சம் சந்தோஷம்.  மொத்த வழில அந்த குன்றுல மட்டும் அவ்ளோ குரங்குகள்.  கோடிக்கரை கடலை தரிசனம் செஞ்சு, நீரை எடுத்துத் தெளிச்சிண்டோம்.  வரும் போது உப்பளத்துல அதிகாரியா இருக்கற நண்பர் சிவ சங்கர்ட அனுமதி வாங்கிட்டு, கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சிட்டு, வீட்டுக்குப் போய் சாப்டோம்.

ஒரு மணி நேரம் ரெஸ்ட், நா மட்டும் தான் கொஞ்சம் படுத்தேன் (வேற என்ன வேல ஆம்பளைக்கு), மனைவி எல்லாத்தையும் பேக் பண்ணினாங்க.  பொண்ணு ஃப்ரெண்டு பொண்களோட விளையாடிட்டு இருந்தா.  நாலு, நாலரைக்குக் கெளம்பினோம்.

14. திருநள்ளாறு:
- திரு ன்னு ஆரம்பிச்சாலே அது பாடல் பெற்ற ஸ்தலம்தான்.
- நள மஹாராஜாவுக்கு இங்கு தான் சிவ பூஜை பலனாக சனி தோஷம் நீங்கிற்று.
- சப்த விடங்கரில் இங்கும் ஒருவர்.
- தர்ப்பைக் காட்டில் எழுந்தருளியதாள் ஸ்வாமி தர்ப்பாரண்யேஶ்வரர்.

15. திருக்கடையூர்:
- பாடல் பெற்ற ஸ்தலம்.
- அமிர்த கடத்தில் தோன்றியதால் அம்ருத கடேஶ்வரர்
- அஷ்ட வீரட்ட சிவ ஸ்தலங்கள்ல இதுவும் ஒன்னு.  மார்கண்டேயருக்கு ஆயுசு 16 வயதே என்பதால் அந்த வயதில் அவர் உயிரை எடுப்பதற்காக வந்த யமதர்ம ராஜா, அவர் இங்குள்ள சிவபெருமானை இறுக்க அணைத்துக் கொண்டிருக்கும் போதும்,  யோசிக்காமல் பாசக் கயிறை வீசினான்.  சிவன் ஓங்கி விட்டார் ஒரு உதை அவனுக்கு,  எங்க வந்து, என்ன பண்ணினு இருக்கும் போது, யாருக்கு சேத்து கயிறை வீசற, இனிமே நீ இந்த வேலை செய்ய வேணாம்,  நானே பாத்துக்கறேன், போ!! ன்னு சத்தம் போட்டு, அவன் ஆயுதங்களையெல்லாம் புடுங்கினு, தொரத்தி விட்டார்.  மார்க்கண்டேயருக்கும் என்றும் இனிமே உனக்கு பதினாறு வயசு தான்னு வரம் கொடுத்திட்டார்.   (இன்னிக்கு மெட்ராஸ்ல இருக்கற வேளச்சேரிக்கு புராணப் பெயர் வேதஶ்ரேணி, இங்க தான் அந்த யமன் திரும்பியும் வந்து யம தீர்த்தம்னு ஒரு குளத்த உண்டாக்கி, தினமும் குளிச்சு, முறையா பூஜை, தவம் எல்லாம் செஞ்சு, சிவன சந்தோஷப்படுத்தி, திருப்பியும் தன்னோட தண்டம், முதலான ஆயுதங்களையும், சக்தியையும், பொறுப்பையும் பெற்றான்.  அதனால வேளச்சேரி ஸ்வாமி பேர் தண்டீஶ்வரர்.)
- திருக்கடையூர் அபிராமி மேல தான் அபிராமி பட்டர் அந்தாதி பாடினார், அம்பாள் அவருக்காகத் தான் ஜொலிக்கற தன் ஆபரணத்தைத் தூக்கிப் போட்டு அமாவாசைய, பௌர்ணமியா மாத்தினா.

26 ஜனவரி 2016, செவ்வாய் விடிகாலை வீட்டுக்கு வந்தோம். ரெஸ்ட்.

கர்ப்பமா இருக்கறவங்க, நேர்ல இந்த கோவில்லுக்கெல்லாம் போக முடியாம இருக்கறவங்கவங்களுக்கு,  டெலிவரி மேனேஜர், என்னோட ரிப்போர்ட்டிங் மேனேஜர் திருனெல்வேலி ஜான்ஸனுக்கும் இந்த போஸ்ட் சமர்ப்பணம்!!  மீண்டும் சந்திப்போம்.


Jun 14, 2017

வால்பாறை - அதிரப்பள்ளி டூர்


மே 26, 2017, வெள்ளிக்கிழமை.

தண்ணீர் ! தண்ணீர் !!  எங்க இருக்கு சென்னைல, தமிழ் நாட்ல ?

சில்லுனு ஒரு க்ளைமேட் - எங்க இருக்கு சென்னைல, தமிழ் நாட்ல ?

இப்டி பல பேர் தேடிட்ருக்கோம்,  ஐ.டி கம்பனீஸ்லேந்து.  

வீட்ல ஏசி இருக்கு.  குடிக்க தண்ணி இருக்கு,  நாலு பேர் குளிக்கவும் க்ரௌண்டு வாட்டர் இருக்கு.

ஆமா, தனி வீடு தான்,   ஃப்ளாட்ல லாம் தண்ணி காசு குடுத்து தான் வாங்கறாங்க.  

காஞ்சி சங்கராச்சார்யர் போற எடத்துலெல்லாம் தொட்டி கட்டி, தண்ணீல முங்கி தான் குளிப்பாங்க.   நாங்களும் காவிரிக் கரைலேந்து வந்த கும்பல்ங்க்றதால அப்டி முங்கி குளிச்சு பழக்கம்.  எங்க போறது இப்போ ?  ஸம்மர் லீவு பசங்களுக்கு, இப்ப போனா நான் மட்டும் லீவு போட்டா போறும்.  ஸ்கூல் தொறந்தா, லீவு போட மனஸே வராது.  

இருக்கறது ரெண்டு ஆப்ஷன்.  ஒன்னு ரிசார்ட்,  இல்லனா எங்கயாவது ஆத்தங்கரை.   ரிசார்ட் பாத்தா எல்லாம் புக்டு.  பெரியவங்க முங்கி குளிக்கற பாத் டப்புக்கு பேர், ஜகூஸி யாம் !!. அது, ஸ்விம்மிங் பூல் இருக்கற ரிசார்ட் பாத்தாலும் சென்னை கிட்ட க்ளைமேட்டுக்கு என்ன பண்றது ?   ஐடியல் பீச் ரிசார்ட்ல 10 அடி ஆழத்துல ஸ்விம்மிங் பூல் இருக்காம்.   ஓசன் ஸ்ப்ரே ரிசார்ட்ல ப்ரைவேட் ஸ்விம்மிங் பூல் இருக்காம்.  மினிமம்  நாலாயிரத்லேந்து பதினாறாயிரம் வரை.  கெடைக்கவும் இல்ல.  போக வர டாக்ஸி, சாப்பாடு எல்லாம் சேத்தா பத்துலேந்து முப்பதாயிரம் வரை டும்.

ஆத்தங்கரை ஏதாவது இருக்கான்னு பாத்தா மினிமம் 500, 600 கி. மீ போக வேண்டியிருக்கும் போல இருக்கு.  எங்கயும் ப்யூர் வெஜ். சாப்பாடு கெடைக்கறதும் இப்பெல்லாம் ரொம்ப கஷ்டமாய்டுச்சு.  வீட்லேந்து செஞ்சு எடுத்திட்டு போலாம்னா,  எப்ப, எப்டி ஆஃபிஸ்லேந்து செவுரு ஏறி குதிச்சு போவோம்னு தெரியல.  ப்ளான்டு லீவெல்லாம் சரி பட்டு வரல,  போன தடவையே 2-3 ஆயிரம் ரூபா கேன்ஸல் பண்ணதுல போய்டுச்சு.   தனிக்குடும்பம்,  சாப்ட மட்டும்   நெறையா பேர் இருக்கோம்.  செய்யறதுக்கு ஒரு வொய்ஃப் தான் இருக்கா !!  அவங்களுக்கு ஒரு ரெஸ்ட் குடுக்கனும்னு தான் டூரே.

மே 1, வீக் என்ட்லதான் வந்துது.  அதுவும் இப்டி தான் ப்ளான் பண்ணாம, பாஹுபலிலயே போய்டுச்சு.   இப்ப மே 29ம் வீக் என்ட்லதான் வருது.  அமெரிக்கால என்னவோவாம்.  அதுக்கு நமக்கு லீவு.    வீட்டுக்குப் போயாச்சு. ஒரு ப்ளானும் இல்ல.  மூணு  நாள் லீவு,   கொடைக்கானல், ஊட்டி ஏற்கனவே போயாச்சு.  மொத்த  ஊரும் இப்ப அங்கதான் இருக்கு.   திருநெல்வேலி, கன்யாகுமரில க்ளைமேட் இல்ல.  மைசூர், பெங்களூர்ல ஆறும் இல்ல, க்ளைமேட்டும் இல்ல.  வால்பாறை, அதிரப்பள்ளி ஃபால்ஸ் போன வாரம் நண்பர் ப்ரேம் போய்ட்டு வந்திருக்காரு.  அவர் தங்கியிருந்த கனவா (Kanova Resort) ரிசார்ட்  ரூம் வாசல்ல  அதிரப்பள்ளி  ஆறு.    இதெல்லாம் பேசிட்டு தூங்கவும் தூங்கியாச்சு.

காலைல திருப்பி மேல எழுதி இருக்கற எல்லாத்தையும் பேசிட்டு,   பஸ் ரேட்டு பாத்தா, 2000 ரூபாய்கு கம்மியா எந்த தண்ணி இருக்கற எடத்துக்கும் டிக்கெட் இல்ல.,  தெரிஞ்சது தானே.  டிஸ்டண்ட்ஸ் ஜாஸ்தி, படுத்திட்டு போகனும், ஏசி வேணும்,  ட்ரைன் ட்ரை பண்றதே இல்ல.  அதெல்லாம் ப்ளான் பண்ணி போறவங்களுக்கு.   மணி காலை 11,  டாக்ஸிக்கு ஃபோன் பண்ணியாச்சு,  கி.மீ. க்கு 8.30 ரூபா, ஒரு  நாளைக்கு ட்ரைவர் பேட்டா 300,   ஏசி எட்டியோஸ்ஸ்ஸ்.  ட்ரைவர் டைசன்,   ஏற்கனவே  நாகப்பட்ணம், வேதாரண்யம் டூர்ல எங்கள்ட்ட அனுபவப்பட்டவர்.  இன்னும் சாப்டல. 

12.30 AM க்குக் கெளம்பினோம்.  விழுப்புரம் டோல் வரைக்கும் குழம்பம் தான்.  டைசன் ஊர் கன்யாகுமரிதான்னாரு.  அவரையும் அங்க க்ளைமேட், திருப்பரப்பு ஃபால்ஸ் தண்ணி எல்லாம் விசாரிக்க சொன்னோம்.  ஒரு ஹோட்டல்ல ஃப்ரைடு ரைஸ், கர்டு ரைஸ், அது, இதுன்னு பார்ஸல் வாங்கிட்டு,  ஓட்ற கார்லயே  நிமிஷத்துல காலி பண்ணிட்டு, விழுப்புரம் டோல்ல தங்க  நாற்கரச் சாலைலேந்து (இது மட்டும் சுத்தத் தமிழ்ல!!) ரைட் எடுத்து, சேலம்  நோக்கி பயணம்.    சேலம், அவினாசி, பொள்ளாச்சி, வால்பாறை, அதிரப்பள்ளி.  இதான் ரூட் ப்ளான்.  

அவினாசி: அருணகிரிநாதர்  பாடல் பெற்ற முருகர் ஸ்தலம்.  

"இறவாமற் பிறவாமல் எனையாள்சற்       குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத்         தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற்    குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப்     பெருமாளே"

வள்ளி மணவாளா ! அவினாசிப் பெருமாளே !!, அறம் முதலான  நாலையும் அளிப்பவனே,   எனக்குக் குருவாயிருந்து என்னை இந்த பிறப்பு, இறப்பு சுழலிலிருந்து  காத்து ஆண்டருள்வாய்.  

இந்த கோவில் சாமி கருணாம்பிகா ஸமேத அவினாசியப்பர்.  63 நாயன்மார்களில் முக்யமானவர்களில் ஒருவரான சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் இந்த ஊர்ப்பக்கம் வந்த  போது, எதிரெதிர் வீட்ல, ஒன்ல அழற சத்தமும், இன்னொரு வீட்ல மங்கல ஓசையும் கேட்க, இதென்ன விஷயம் என்று கேட்டார்.   ஊரார், "இந்த இரண்டு வீட்டுக் குழந்தைகளும் நண்பர்கள்.   மூன்று வருஷங்களுக்கு முன் குளத்துக்கு  நீராடப் போயிருந்த போது, ஒருவனை அங்கு இருந்த முதலைக் கடித்து உண்டு விட்டது.    அவன் நண்பனுக்குத் தான் இன்று இந்த வீட்டில் பூணூல் போடுகிறார்கள்.  இறந்தவன் இருந்திருந்தால் அவனுக்கும் இந்த நிகழ்வெல்லாம் இப்போது நடந்திருக்கும்.    நண்பனின் வைபவத்தில் தானும் கலந்து, மகிழ்ந்திருப்பான் என்றெல்லாம் எண்ணி இறந்தவன் வீட்டார் அழுது கொண்டிருக்கிறார்கள்" என்று விளக்கினர்.    இதைக் கேட்ட ஸுந்தரர் அவர்கள் மீது கருணை கொண்டு, ஸ்வயம்புவான அவினாசியப்பரிடம் குழந்தையை மீட்டுத் தருமாறு கட்டளையிடும் தொணியில் வேண்ட, வற்றியிருந்த குளத்தில்  நீர் பெருகி, அதில் முதலையும் உண்டாகி, இன்றைய வயதில் சிறுவனைத் திருப்பித் தந்தது.  இந்தக் குளம் கோவிலிலிருந்து 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.  முதலை வாயில் சிறுவன் மீண்டு வரும் சிலைகள் உள்ளன.  

“உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய் 
  அரைக்கு ஆடு அரவர் ஆதியும் அந்தமும் ஆயினாய் 
  புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே   
  கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே”
  
உரைப்போர் உள்ளத்தும்,   நினைப்போர் உச்சியிலும்  உறைவோனே ! அரையில் அரவை அணிந்தவனே !   ஆதியும், அந்தமுமானவனே ! எழிற்சோலைப் புக்கொளியூரில் உறையும் அவினாசியே ! முதலையும், காலனையும் பிள்ளையைக் கொண்டு வந்து தரச்சொல்.

போகும் போது இந்த ஊருக்குப் போக முடியல.  பொள்ளாச்சில போய், சீதாராம் லாட்ஜ்ல ஒரு ரூம் வேண்டி, ராத்திரி 12.30 மணிக்குப் புகுந்தோம்.   பழைய வீட்ட லாட்ஜா வெச்சிருக்காங்க.  நல்லா இருந்துது.  நான் ஏசி 600 ரூபா குடுத்தோம்.  காலை 5.30 மணிக்குக் கெளம்பிடலாம்னு ப்ளான்.  நம்ம ப்ளானாச்சே,  நடக்குமா ?   12 மணி நேரம் கார் பயணம்.  ட்ரைவர் திரும்பிப் பாக்கறதுக்குள்ள கதவ சாத்தி, காருக்குள்ளயே தூங்கிட்டாரு.  நான் மட்டும் அலாரம் வெச்சு எழுந்திட்டேன்.  மனைவி, குழந்தைங்கள்லாம் டயர்டா தூங்கிக்கிட்டிருக்காங்க.  5, ...6...7 மணிக்குக் குளிச்சு, ரெடியானோம்.  வால்பாறை போயி, அதிரப்பள்ளி போகனும்.  லாட்ஜ் ஓனர் மாலை 6 மணிக்கு மேல, வால்பாறை-அதிரப்பள்ளி ரூட்ல விட மாட்டாங்க,   வால்பாறைல லேட் பண்ணாம நேர அதிரப்பள்ளி போய்டுங்கன்னாரு.    வெஜ் சாப்பாடு வழில உருப்படியா ஒன்னும் கெடைக்காது.  இங்கயே கௌரி க்ருஷ்ணா ஹோட்டல்ல சாப்டுட்டு, வெரைட்டி ரைஸ் பார்ஸல் வாங்கிண்டு போய்டுங்கோன்னார்.  கௌரி க்ருஷ்ணா கொஞ்சம் காஸ்ட்லி,  பட் நோ டைம், நோ ஐடியா, டிஃபன் சாப்டோம்.  பார்ஸல் ரெடியாகல.  கெளம்பியாச்சு.  8 மணிக்குக் காலைல பொள்ளாச்சில கெளம்பி, மதியம் ஒரு 3 மணி போல அதிரப்பள்ளி வந்து சேர்ந்தோம்.

வழில மங்க்கி ஃபால்ஸ், மங்க்கி தான் அங்கயும், இங்கயும் விழுது.  தண்ணி விழல.  வரலாற்றுப் பதிவுக்காக ஃபோட்டோ எடுத்துட்டு, கெளம்பினோம்.  ஆழியார் டாம், பார்க்,   சோலையாறு டாம் எல்லாம் வழில க்ளிக்கிண்டே போனோம்.  கூழாங்கல் ஆறு, சிரபுஞ்சிக்கு அடுத்ததா அதிகமா மழை பொழியற சின்னக் கல்லாறு இதெல்லாம் பாக்கல.  ஆழியாறு டாம் வ்யூ மேல போற ரோடு வளைவுகள்லேந்து பாத்தா சூப்பரா இருக்கு.  




வால்பாறைல கருமலை எஸ்டேட்டோட பாலாஜி கோவில் ஒன்னு சின்னதா அழகா, அவங்களோடு ப்ரைவேட் கார்டன்குள்ள இருக்கு.  ஃபோட்டோ, வீடியோ அனுமதி இல்லயாம் !!  அங்க தரிசனம் பண்ணிட்டு அதிரப்பள்ளி நோக்கிப் பயணித்தோம்.  வழி நெடுக எங்க பாத்தாலும் ஒரே பசுமை, அப்பப்ப கொஞ்சம் தூறல், மே மாசத்துல தமிழ்நாட்ல மிஸ்ட்டு (பனி ப்பா!!) படர்ந்திருக்கும் இன்னொரு இடம்.  சில்லுனு ஒரு பயணம், ஏசிய ஆஃப் பண்ணி, கார் ஜன்னலை எறக்கி விட்டோம்.  ஒரு நாப்பது கொண்டை ஊசி வளைவுகள்.   தமிழ் நாடு பார்டர் வரைக்கும் ரோடு அகலமா இருக்கு, அங்கங்க டீ கடைகள், வீடுகள்னு பாக்க முடியுது.  நம்ம ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் எல்லைக் கதவு தாண்டினதும் ரோடு அகலம் கொறஞ்சிடுச்சி.   10 அடில கேரள வன எல்லை ஆரம்பிக்குது, அவங்க கேட்ல குழந்தைங்க, ட்ரைவர் உட்பட எத்தனை பேர், போறீங்க, எங்க போறீங்கன்னு கேட்டு,  வண்டி நம்பர், நபர்கள் எண்ணிக்கை எல்லாத்தையும் எழுதி, ட்ரைவர்ட ஒரு ஃபார்ம்ல கையெழுத்து வாங்கிட்டு, நமக்கும் அப்டி ஒரு டிக்கெட் குடுக்கறாங்க.  அத பத்ரமா கொண்டு போய் அதிரப்பள்ளில அதே மாதிரி இருக்கற ஒரு பூத்ல குடுக்கனும்.  திரும்பி வரும்போதும் அதே மாதிரி இந்த பூத்ல ஒரு டிக்கெட் வாங்கிட்டு, நம்ம பார்டர்ல இருக்கற கேரளா கேட்ல குடுக்கனும்.  சீட்டு பத்ரம்.
















கேரளாக்குள்ள  வந்தாச்சு.  அதிரப்பள்ளி வரை இதே ரூட்ல போய்ட்டு திரும்பி வந்தா டாக்ஸிக்கு கேரளா பர்மிட் தேவையில்லை.  ஆனா வால்பாறை வழியா அதிரப்பள்ளி போய்ட்டு அப்டியே திருச்சூர், கோயம்புத்தூர் வழியா வந்திடலாம்னு நெனைச்சா பர்மிட் வேணும்.  ஒரு கார் போற அளவுதான் ரோடு அகலம், அடர்ந்த காடுகள்.  ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை.  யானை வரும், சிறுத்தை வரும், கரடி வரும், முதலை கடிச்சிடும்னு வழி  நெடுக போர்டுகள்.  வால்பாறை-அதிரப்பள்ளி ரூட்ல டீ, காபி, டிஃபன் கடைகள்னு ஒன்னும் கெடையாது.  இந்த வால்பாறை-அதிரப்பள்ளி ரூட் மாலை 6 மணிலேந்து மறு நாள் காலை 6 மணி வரை மூடிடுவாங்க, விலங்குகளுக்காக. ( நம்மளுக்காகவும்).  சூப்பர் ஃபாரஸ்ட், எஸ்டேட்ஸும் கெடையாது.  கேரளா வண்டி எல்லாம் சல்லு, சல்லுன்னு வராங்க,  குருட்டு டர்னிங்க்ல கூட ஹாரன் அடிக்கறதில்ல, ஸ்லோ பண்றதில்ல.  மத்த ஸ்டேட்ஸ் வண்டிங்க தான் பாத்து, பாத்து ஹாரன் அடிச்சு, ஸ்லோ பண்ணி, ரோட விட்டு எறங்கி போகனும்.  பஸ் அதிகமா இந்த ரூட்ல இல்ல, பஸ்ல வந்தா இப்டி நிறுத்தி, நிறுத்தி வேடிக்கை பாத்திட்டு, ஃபோட்டோ எடுத்திட்டெல்லாம் போக முடியாது.  இன்னும் சில கூட்டுக் குடும்பங்கள் பாரம்பர்ய டூர் முறைப்படி வீட்டு சாப்பாடு கட்டிட்டு வந்து சாப்படறாங்க.  

ஞாயிறு காலை 8.30 மணிக்கு பொள்ளாச்சில கிளம்பி, ஒரு 3 மணி போல அதிரப்பள்ளி வந்து சேந்தோம்.   நண்பர் ப்ரேம் நாத் போன வாரம் தான் இதே பேக்கேஜ் போய்ட்டு வந்திருந்தார்.  எல்லா வழிலயும் உதவியா இருந்துது அவரோட டிப்ஸ்.  அவர் தங்கியிருந்த கணவாய் ரிசார்ட்ல தான்  நாங்களும் ரூம் புக் பண்ணியிருந்தோம்.  நான் ஏசி 24 மணி நேரத்துக்கு 1350 ₹.  நாங்க ரிக்வெஸ்ட் பண்ணினோம்னு வெஜ் சாப்பாடு வேற அவங்க தங்கையே செஞ்சு குடுத்தாங்க.  ரூம் கொல்லை பக்கத்துலயே அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியோடு ஆறு ஓடுது.  இங்க தான் கமலோட புன்னகை மன்னன், விக்ரமோட ராவணன், பாஹுபலி ஷூட்டிங் எல்லாம் எடுத்திருந்தாங்க.   வந்த டயர்டுக்கு மோக்ஷத்தை பாத்தா மாதிரி இருந்துது.  ஒரு ரெண்டு மணி நேரம் கொட்ற மழைல ஆத்துல ஆட்டம் போட்டோம்.   தண்ணி இங்க இருக்கு மே மாசத்துல, குடிக்கலாம், முங்கி குளிக்கலாம், பூஜை பண்ணலாம், எல்லாம் பண்ணினோம்.  நைட் ஒரு ஏழு மணிக்கு அன்லிமிடெட் சப்பாத்தி, தால், பொன்னி ரைஸ், ரசம், பப்படம், தயிர், நல்ல தூக்கம், சாயந்தரம் 6 மணிக்கு போட்ட ஜனரேட்டர், காலைல தான் அணைச்சாங்க.  அடிக்கடி மரம், ஏதாவது விழுந்து இப்டி ஆய்டுமாம்.  காலைல தான் வந்து சரி பண்ணுவாங்களாம்.  நல்ல உபசரிப்பு. நல்ல மெய்ன்டனென்ஸ்.  







காலை எப்ப வரும், ஆத்துல குளிக்கலாம்னு ரெண்டு, மூணு தடவ எழுந்து, எழுந்து பாத்தேன்.  ஒரே இருட்டு.  காலை எட்டு மணிலேந்து மாலை 5 மணி வரைக்கும் தான் ஃபால்ஸ்க்கு அனுமதி, பெரியவங்களுக்கு 30₹,  நேத்திக்கு சரியான கும்பல், இன்னிக்கு வொர்க்கிங் டே ங்கிறதால கும்பல் அதிகமா இல்ல.  நாங்க தான் ஃபர்ஸ்ட் டீம், என்ட்ரன்ஸ்லேந்து ஒரு பத்து நிமிஷம் நடந்தா அருவி மேல வந்து சேந்துடறோம்.  அங்கிருந்து கீழ போக வழி இருக்கு, நாங்க போகல, திருப்பி ரூம்க்கு வந்து ஆத்துல குளியல், டிஃபன் பூரி, கிழங்கு, புட்டு, கடலைக்கறி, தோட்டத்து மாம்பழம்.  சாப்டுட்டு  மதியம் 12 மணிக்கு ஊருக்குக் கெளம்பினோம்.  பொள்ளாச்சில ஒரு டிஃபன், சேலத்துல டின்னர், நான் ஸ்டாப் தாம்பரம் காலை 3 மணிக்கு, 

ட்ரைவர் டைசன் ஆஃஸம், ப்ரேம் ப்ளான், ட்ராவல்தான் வெரி ஹெக்டிக், டோல் சார்ஜ்ஜே 1000 ₹ மேல ஆய்டுச்சுப்பா,  பொள்ளாச்சி வரை பஸ்ல போய்ட்டு, அங்கிருந்துதான் டாக்ஸி எடுக்கனும்.  பாப்போம், தூங்கி, ஒரு பக்கெட் குளியல் போட்டு ஆஃபீஸ் கெளம்பனும்,  

மீண்டும் அடுத்த டூர்ல சந்திப்போம்.




Dec 10, 2013

Toothpaste Classification

Have you ever noticed that there is a distinct color at the bottom of each toothpaste pack ?

Do you know the meaning of the colors ?...

Green : Natural.
Blue : Natural + Medicine.
Red : Natural + Chemical composition.
Black : Pure Chemical.

Pravachanam Links

pravachanam by various people links:

1. https://groups.google.com/forum/#!msg/kanini/cY8_I_ba4uE/oKtlS3FNSYUJ

2. http://archive.org/details/sivananda-lahari-mp3-nochur-venkataraman

3. http://www.mediafire.com/sankaragurukulam

4. http://www.pravachanam.com/

Jan 13, 2013

கவிக்குஞ்சர பாரதி வம்சம்

கவிக்குஞ்சர பாரதி வம்சம்

கவிக் குஞ்சர பாரதி (1810-1896)
கோடீச்வர ஐயர் (1870 - 1936)

கர்நாடக ஸங்கீத உலகில் ப்ரபலமான இவர்களின் வம்சாவளியில் வந்தவர் என் மாமியார்.

கவிக்குஞ்சர பாரதியின் இயற்பெயர் கோடீஸ்வர ஐயர், பிற்காலத்தில் சிவகங்கை ஸமஸ்தான வித்வானாக இருக்கும் போது மஹாராஜாவால் கவிக்குஞ்சரம் என்று கௌரவிக்கப்பட்டார்.  ராமநாதபுரம் ஸேதுபதி ராஜாக்களின் ஸமஸ்தானத்திலும் ஆஸ்தான வித்வானாகக் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

கவிக்குஞ்சரபாரதியின் மகன் ஸுப்ரமண்யபாரதி, அவர் மகன் தான்
கோடீச்வர ஐயர் (கவிக்குஞ்சர தாஸன்).  இவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் இறைப்பாக்களை இயற்றியவர்.  ஸ்ரீமதி கற்பகாம்பாள் இவரது மனைவி. இவர்களுக்கு ஸுப்ரமண்ய ஐயர், நாகமணி ஐயர் என்ற இரு புதல்வர்களும், பாகீரதி, கோமதி, மீனாக்ஷி என்ற மூன்று புதல்விகளும் பிறந்தனர்.  ஸுப்ரமண்ய பாரதிக்கு சங்கர ஐயர், கபாலீச்வர ஐயர் என்ற இரு புதல்வர்கள். சங்கர ஐயருக்கு ராஜலக்ஷ்மி, கோடீஸ்வரன், பானுமதி, கணேசன், ஸுப்ரமண்யன், மஹாலிங்கம், ராஜேச்வரி என்று ஏழு குழந்தைகள்.
 இவர்கள் இப்போது சென்னை பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல்,
தாம்பரம், குன்றத்தூர் ஆகிய ஊர்களில் வசித்து வருகிறார்கள்.

மஹாலிங்கம் என்பவர் இந்த வம்சத்தில் இப்போது ப்ரபலமாக
சாஸ்தாதாசன் என்ற பெயரில் இந்தியா, வெளிநாடுகள், தொலைக்காட்சிகளில் கச்சேரிகள் செய்து வருகிறார்.  கபாலீச்வர ஐயர் தன் ஸகோதரன் குழந்தைகளுடனேயே கடைசி காலம் வரை இருந்து விட்டார்.

ஸ்ரீமதி பாகீரதியின் குழந்தைகள் ஸோமஸுந்தரம், வீரமணி (நம்ம "பள்ளிக்கட்டு ஸபரிமலைக்கு" புகழ் வீரமணி-ஸோமு தாத்தாவேதான்), கானமூர்த்தி, கற்பகம், ஜோதிஸ்வரூபிணி முதலானோர்.


May 8, 2010

ஜோக்ஸ்

Interviewer: what is your birth date?
candidate: 13th October
Interviewer: year?
candidate: EVERY YEAR
Interviewer: Can you spell a word that has more than 100 letters in it?
candidate: P-O-S-T-B-O-X.

After returning back from a foreign trip, sardar asked his wife,
Do I look like a foreigner?
Wife: No! Why?
Sardar: In London a lady asked me Are you a foreigner?


tourist from U.S.A. asked Sardar:
Any great man born in this village???
Sardar: no sir, only small Babies!!!


Lecturer: write a note on Gandhi Jayanthi
Sardar writes, "Gandi was a great man, but I don't know who is Jayanthi.

When sardar was traveling with his wife in an auto, the driver
adjusted the mirror. Sardar shouted, "You are trying to see my
wife? Sit behind. I will drive.

Interviewer: just imagine you are on the 3rd floor, it caught fire
and how will you escape?
Sardar: its simple. I will stop my imagination!!!

Sardar: My mobile bill how much?
Call centre girl: sir, just dial 123 to know current bill status
Sardar: Stupid, not CURRENT BILL my MOBILE BILL.

Sardar: I think that girl is deaf..
Friend: How do u know?
Sardar: I told I Love her, but she said her chappals are new

Friend: I got a brand new Ford IKON for my wife!
Sardar: Wow!!! That's an unbelievable exchange offer!!!

Teacher: Which is the oldest animal in world?
Sardar: ZEBRA
Teacher: How?
Sardar: Bcoz it is Black & White

Sardar attending an interview in Software Company.
Manager: Do U know MS Office?
Sardar: Where is it sir, i dont know, if you tell, i will try there also
Sardar in airplane going 2 Bombay .. While its landing he shouted: " Bombay ... Bombay "
Air hostess said: "B silent."
Sardar: "Ok.. Ombay. Ombay"

Teacher: "What is common between JESUS, KRISHNA , RAM, GANDHI and BUDHA?"
Sardar: "All are born on government holidays...!!!

Sardar: Miss, Do u called 2 my mobile?
Teacher: Me? No, why?
Sardar: Yesterday I saw in my mobile- 1 Miss Call".

Sir: What is difference between Orange and Apple?
Sardar: Color of Orange is orange, but color of Apple is not APPLE

Feb 25, 2010

ஜோக்ஸ்

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சரவணன் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...


11) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: உன்ன எவன் மேக்-அப் போட்டுக்காம குழந்தைப் பக்கத்துல போகச் சொன்னது.

12) காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

13) "லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு லூஸு

14) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

15) எல்லா நாலும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா நாலும் ஒரே மாதிரி தானே இருக்கு

16. continue the below sequence in a logical way:
M, T, W, T, ...

Answer: M, T, W, T, F, S, S (week days!!!)

17. Correct the below formula in a single stroke

5+5+5=550

Answer: 545+5 = 550 (Use single stroke to change the first '+' sign into 4)

18. Write anything on the below line:
_____________

Answer:

write 'anything' on the line

19. draw a rectangle with three lines.

Answer: Draw a rectangle with three lines inside it.


-------------------------------
என் மூத்தப்பையன் பல்டாக்டர், இரண்டாவது பையன் வக்கீல் ,

அப்பண்ணா இரண்டு பேருக்குமே சொத்தை புடுங்கிற வேலைன்னு சொல்லுங்க!
---------------
மனைவி; நான் எத்தனை ஜன்ம ம் எடுத்தாலும் நீங்கதான் புருஷனா வரணும், கணவர்; இதுதான் கடைசி ஜென்ம மா இருக்கணும்
------------------------
மாமா, கோவத்துல உங்க மகள கன்னத்தில அறைஞ்சிட்டேன்,   மாமனார்: அத விடுங்க மாப்ள, இப்ப எந்த ஆஸ்பத்ரில அட்மிட் ஆய்ருக்கீங்க.

R U SMART

Test for Smartness
Below are 5 questions. answer them instantly. OK?
Let's find out just how clever you really are....

First Question:
You are participating in a race. You overtake the second person. What position are you in?






Answer: If you answered that you are first, then you are
absolutel! y wrong! If you overtake the second person, you take his place, so you are second!

Try not to screw up next time.
Now answer the second question,
but don't take as much time as you took for the first one, OK ?

Second Question:
If you overtake the last person, then you are...?




~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~




Answer: If you answered that you are second to last, then you are wrong again. Tell me, how can you overtake the LAST Person?


You're not very good at this, are you?




Third Question:
Very tricky arithmetic! Note: This must be done in your head only.
Do NOT use paper and pencil or a calculator. Try it.

Take 1000 and add 40 to it.. Now add another 1000 ... Now add 30.
Add another 1000 . Now add 20. Now add another 1000
Now add 10 . What is the total?




~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~


Did you get 5000?

The correct answer is actually 4100.



Fourth Question:

Mary's father has five daughters: 1.... Nana, 2. Nene, 3. Nini, 4. Nono. What is the ! name of the fifth daughter?




~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~

Her name is Mary. Read the question again!



Question 5: A mute person goes into a shop and wants to buy a toothbrush. By
imitating the action of brushing his teeth he successfully
expresses himself to the shopkeeper and the purchase is
done.

Next, a blind man comes into the shop who wants to buy a pair of
sunglasses; how does HE indicate what he wants?


~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~




Answer: He just has to open his mouth and ask...
It's really very simple....

Feb 11, 2010

தமிழ் இது, தமில் இல்ல

1. கவி காளமேகம்

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி

- இது கவி காளமேகம் பாட்டுங்க. "காக்கைக்காகா கூகை" வகையச் சேந்தது தான் இதுவும்.
புரியலேன்னா இப்டி மாத்தி படிச்சுப் பாருங்க.

தாதி தூதோ தீது தத்தை தூது ஓதாது
தூதி தூது ஒத்தித்த தூததே - தாது ஒத்த
துத்தி தத்தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்தது ஓதித் திதி

நமக்கா! இது தமிழ். நமக்குத் தெரிஞ்சது தமில். இன்னும் கொஞ்ச நாள்ல சிவாஜி, எம். ஜி. ஆர்நடிச்ச படத்துக்கே தமில்ல கீல எலுத சொல்லுவோம். இது எப்டி புரியும். இதான் பொருள். அதாவது மீனிங்.

தாதி தூதோ தீது = வேலைக்காரி தூது சரிப்படாது
தத்தை தூது ஓதாது = கிளி சரியா தூத சொல்லாது
தூதி தூது ஒத்தித்த தூததே = தோழி தூது போனா ஒத்திப் போட்டுனே போவா, அதுவும்சரிப்படாது.
துதித்துத்தே தொத்தீது = சாமிய கும்பிட்டும் பலனிருக்காது.
தாது ஒத்த துத்தி தத்தாதே = பூக்களின் தாது ஒத்த தேமல் என் மேல் படராதிருக்க
தித்தித்தது ஓதித் திதி = ஏதாவது ஒரு இனியது (ஐடியா) சொல்லு.


2
. கூப்பிடு தூரம்:
நாலு விரக்கடை
= ஒரு ஜான். விரக்கடை = சுண்டு விரல்
ரெண்டு ஜான் =
ஒரு முழம்
ரெண்டு முழம் =
ஒரு சிறு கோல் (தமிழ் வாத்யார் நம்மள அடிக்கவும், வண்டி ஓட்றவன்மாட்டஅடிக்கவும் வெச்சிருப்பாங்களே அதான்)
நாலு சிறுகோல் =
ஒரு பெருங்கோல் (நடக்கவும், பாம்பு அடிக்கவும், காய் பறிக்கவும், மரத்தஉலுக்கவும் யூஸ் பண்ணுவோமே அது)
இப்படி ஐநூறு பெருங்கோல் =
ஒரு கூப்பிடு தூரமாம். (நீயும், நானும், கொழந்தையும், தாத்தாவும், பொம்பள ஆளுங்களும், வியாதிக் காரங்களும் கூப்பிடுற தூரத்துக்கும்இதுக்கும்மொத்தத்துல ஒரு சம்பந்தமும் இல்ல).

3
. கால்ல முள்ளு குத்தினா வாலி பொண்டாட்டி தாரையோட கால எடுத்து தேய்! !

ஒரு புலவருக்குக் கால்ல முள் குத்திடுச்சு. அதப் பாத்த இன்னொரு புலவரு:

"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை எடுத்துத் தேய்" சரியாப் போயிடும்னாரு.

இதான் அவர் சொன்னதோட அர்த்தம்:
பத்துரதன் புத்திரனின் (தசரதன் புத்ரன், ராமனின்) மித்திரனின் (சுக்ரீவனின்) சத்துருவின்வாலி) பத்தினியின் (தாரை) காலை எடுத்து (தாரை ங்கற சொல்லுல இருக்கற துணைக்காலஎடுத்துட்டா, தாரை ங்கறது தரை ன்னு ஆய்டும்) தேய்,

முள்ளு குத்தினா தரைல தேய், சரியாப் போய்டும் னு சொல்றதுக்குத் தான், இந்தப்புலவரு
ராமனோடு ப்ரெண்டு சுக்ரீவனோட எதிரி வாலியோட பொண்டாட்டி தாரை, இதுக்கு மேலஜாக்ரதையா இருக்கணும். தாரையோட கால எடுன்னா தாரைங்கற சொல்லுல இருக்கறதுணைக்கால தான் எடுக்கனும். அப்பதான் பதில் கிடைக்கும். முள்ளு குத்தின வலியும்போகும். அத வுட்டுட்டு தாரையோட கால எடுத்துத் தேச்சா ஒத தான் கெடைக்கும்.

Nov 30, 2009

ஜோக்ஸ்

மனைவி: ஏங்க உங்க ப்ரண்டுக்கு பாத்த பொண்ணு நல்லாவே இல்ல. அப்பறம் ஏங்க அவர்கிட்ட நல்லா இருக்காங்கன்னு பொய் சொன்னீங்க.
கணவன்: அவன் மட்டும் எனக்கு பாத்துட்டு வந்து உண்மையா சொன்னான்?

மனைவி: ஏங்க, என் கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் அழகா, சமையலா, ஸ்டைலா, உபசரிப்பா எதுங்க?
கணவன்: உன்னோட இந்த காமெடிதான்

மனைவி: ஏங்க, சமையல்காரிய நிறுத்திட்டு நானே சமைச்சா எனக்கு எவ்ளோ சம்பளங்க தருவீங்க.
கணவன்: என்னோட இன்ஷ்யூரன்ஸ் பணம் பூரா ஒனக்குத் தானே.

மனைவி: நம்ம பையன் வளந்து என்னாவா ஆகணும்னு ஆசைப்பட்றீங்க.
கணவன்: புருஷன தவிர வேற எது வேணும்னாலும் ஆகட்டும்.

டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம். இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: எப்ப, எவ்ளோ அவருக்கு குடுக்கனும் டாக்டர்.
டாக்டர்:அவருதான் ஓய்வு எடுக்கனும்னு சொல்றேனே. மாத்திரை ஒங்களுக்குத்தான்.

பிஸ்ஸா, பர்கர் கடைக்காரர்: சார், ஒங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா சார்.
கணவன்: பின்ன அம்மாவா இந்த மழை, புயல்ல இதெல்லாம் வாங்கிட்டு வரச்சொல்வாங்க.

கடவுள்: என்ன வரம் வேண்டும் மகனே
கணவன்: இந்தியாலேந்து அமெரிக்காக்கு ஒரு ரோடு வேணும் சாமி.
கடவுள்: அது ரொம்ப கடினம், முடியாதது. வேறு ஏதாவது கேள்
கணவன்: என் மனைவி ரொம்ப பேசினே இருக்கா சாமி. அத கொஞ்சம் நிறுத்துங்களேன்.
கடவுள்: அமெரிக்காவுக்கு சிங்கிள் ரோடா, டபுள் ரோடா சொல்லு.

காதலன்: அன்பே, மும்தாஜுக்கு ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டினாப் போல நானும் ஒனக்கு ஒரு மாளிகை கட்டவா
காதலி: இப்பவே மூணு மாசம். மொதல்ல நீ தாலிய கட்டு.

போலீஸ் சர்தார்ஜி: வேகமா வண்டிய ஓட்டக்கூடாதுன்னு ஒனக்குத் தெரியாதா? எடு லைஸன்ஸ.
ட்ரைவர் சர்தார்ஜி: லைசன்ஸுன்னா என்னா, எப்டி இருக்கும்.
போலீஸ்: சதுரமா உன் போட்டோ ஒட்டி இருக்குமே, அது.
(ட்ரைவர் சர்தார்ஜி ஒன்னும் புரியாம ஒரு மூஞ்சி பாக்கற கண்ணாடிய எடுத்துத் தராரு போலீஸ் சர்தார்ஜி கிட்ட)
போலீஸ் சர்தார்ஜி: அட நீயும் போலீஸ் தானா, சாரிப்பா, தெரியாம நிறுத்திட்டேன். போங்க போங்க.

ஆபீஸ் பையன் தொப்பிய ஸ்டைலா திருப்பிப் போட்டுனு இருக்கறத பாத்த சர்தார்ஜி தானும் ஆசையா தன்னோட தலைப்பாகைய திருப்பி வச்சிக்கினாரு. சாயந்தரம் வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவர பாத்த பக்கத்து வீட்டு சர்தார்ஜி: நீ ஆபிஸுக்கு போயிட்டு இருக்கியா, ஆபீஸ்லேந்து வந்துனு இருக்கியா?!!

ஒரு ஊர்ல சர்தார்ஜி நாட்டு வைத்தியர், அவரோட வ்யாபாரம் புதுசா வந்த ஒரு டாக்டரால படுத்துப் போச்சு. ரொம்ப யோசிச்சு புது டாக்டரோட வைத்தியம் சரியில்ல, வ்யாதி தீரலைன்னு நிரூபிச்சிடலாம்னு அவர்கிட்ட போயி, "டாக்டர், எனக்கு ருசியே தெரிய மாட்டேங்குது, எந்த மருந்து சாப்டாலும் சரியாகல" ன்னார். புது டாக்டர் அவர் அஸிஸ்டென்ட் கிட்ட, "அந்த 43 -ஆம் நம்பர் லேகியத்த எடு" ன்னார். அந்த லேகியத்த எடுத்து நம்ம சர்தார்ஜி வாயில் போட்டார். சர்தார்ஜி: அய்யய்ய, கருமம், கருமம், இது எருமை மாட்டு சாணிய்யா" ன்னார். புது டாக்டர், "ஒங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சிடிச்சு, பாத்தீங்களா நம்ம வைத்தியத்த" ன்னார். சர்தார்ஜி நொந்து போய் திரும்பி வந்துட்டார். கொஞ்ச நாள் கழிச்சு, திரும்பியும் புது டாக்டர்கிட்ட போயி, "ரொம்ப ஞாபக மறதியா இருக்கு டாக்டர், ஒண்ணும் தோண மாட்டேங்குது" ன்னார். புது டாக்டர் பாத்தார். அஸிஸ்டெண்ட் கிட்ட, "எடு அந்த 43 -ஆம் நம்பர் லேஹியத்த" ன்னார். அவ்ளோதான், சர்தார்ஜி உட்டார் ஓட்டம்.

நண்பர் வீட்டுக்கு வந்த சர்தார்ஜி கடும் மழைல மாட்டிக்கிண்டார். நண்பர் இரவு அங்கேயே தங்கிட்டுப் போக சொன்னார். கேக்காம ஓடிப்போன சர்தார்ஜி கொஞ்ச நேரத்துல நல்லா நனைஞ்சு போயி வந்தார். நண்பர்: எங்க போயிட்டீங்க நான் சொன்னத கேக்காம? சர்தார்ஜி: எப்டியும் நைட்டு வீட்டுக்குப் போக முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு இந்த மழைல. அதான் சொல்லிட்டு வந்தேன்

காபிக்கடையில் நண்பனிடம்: காபி ஆறிப்போறதுக்குள்ள குடிச்சிடு. Hot Coffee அஞ்சு ரூபா, Cold Coffee பத்து ரூபான்னு போட்ருக்கான்.

தபால்காரர்: இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் ஒங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்லயே அனுப்ச்சிருக்கலாம்ல.?

நண்பன் 1: ஏன்டா, இவ்ளோ மெள்ள லெட்டர் எழுதற?
நண்பன் 2: எங்கப்பாவால வேகமா படிக்க முடியாது.

ஓவியக் கண்காட்சில நண்பர்: என்னங்க இது, எந்த கோணத்துல பாத்தாலும் ஒண்ணும் புரியல இந்த படத்துல.
நண்பர் 2: அது மூஞ்சி பாக்கற கண்ணாடிடா

நண்பர் 1: ஒரு நாளைக்காவது ஆபீஸ்க்கு சரியான நேரத்துக்குப் போகலாம்னு பாத்தா முடியல.
நண்பர் 2: ஏன்டா, கொஞ்சம் சீக்கறம் எழுந்து, சீக்கறமா எல்லா வேலையும் முடிச்சிட்டு, வேகமா ரெடியாக வேண்டியதுதானே.
நண்பர் 1: மொதல்ல வேலை கெடைககனுமில்ல

பக்தை: fபாதர், என்னோட கிளிகள் எப்பப் பாத்தாலும் சினிமா பாட்டையே பாடினு இருக்குங்க, பக்திப் பாட்டே பாட மாட்டேங்குதுங்க.
Fபாதர்: என்னோட கிளிகள் எப்பவும் ப்ரேயர் தான். உன் கிளிகள என்னோடதோட பழக விட்டா கொஞ்ச நாள்ல உன்னோடதும் பக்திக்கு மாறிடும்.
(கொண்டாந்து விட்டாச்சு, Fபாதர் கிளிகள் ப்ரே பண்ணினு இருக்குங்க)
பக்தை கிளி: அழகிய அசுரா, அழகிய அசுரா, அத்து மீற ஆசை இல்லியா...
Fபாதர் கிளி: (நண்பன் கிளியிடம்) டேய், நம்ம ப்ரேயர்க்கு பலன் கெடச்சிடுச்சு.

பஸ்ஸுல மந்திரி, கலெக்டர்னு யார் ஏறினாலும் மொதல் சீட்டு ட்ரைவருக்குத் தான்.

மேல் உலகத்துல சாமி மொதல் ஆளுகிட்ட: நீ சின்ன வயசுல பண்ணின தப்புக்கு ஒனக்கு ஒரு எரிஞ்சு போன பொண்ண பரிசா தரேன்.
ரெண்டாவது ஆளுக்கு ஒரு அழகான பொண்ண பரிசா தரார்.
மொதல் ஆள்: என்னாங்க இப்டி பண்றீங்க.
சாமி: இது அந்த பொண்ணு சின்ன வயசுல பண்ணின தப்புக்கு

நண்பர் 1: எதுக்குடா உன் வீட்டுல மூணு நீச்சல் குளம் கட்டி இருக்க.
நண்பர் 2: ஒண்ணு ஜில் தண்ணில குளிக்கறவங்களுக்கு, இன்னொன்னு வெண்ணீர்ல குளிக்கறவங்களுக்கு, மூணாவது காலித்தொட்டி, நீச்சல் தெரியாதவங்களுக்கு.

ஒரு நேர்முகத்தேர்வு
கேள்வி கேட்பவர்: எலெக்ட்ரிக் மோட்டார் எப்படி ஓடுகிறது.
வந்தவர்: டுர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... டுர்ர்ர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
கேள்வி கேட்டவர்: யேய், யேய், யேய் நிறுத்து, நிறுத்து
வந்தவர்: டுர்ர்ர்.. டுர்ர்ர்... டப்.. டப்... டப்.....

காதலி: நாளைக்கு எனக்கு பொறந்த நாள், ஒரு ரிங் தரியா ப்ளீஸ்
காதலன்: லேண்ட் லைனுக்கா, செல்லுக்கா !!!

குண்டுப் பயணி: கண்டக்டர், எனக்கு ரெண்டு டிக்கெட் குடுங்க.
கண்டக்டர்: எதுக்குய்யா ஒருத்தருக்கு ரெண்டு டிக்கெட்டு
பயணி: ம்... குண்டா இருகேன்ல, அதான். ஒனக்கேன் டிக்கெட்ட குடு.
கண்டக்டர்: இந்தா 2 டிக்கெட்டு, 21ஆவது சீட்டும், 37ஆவது சீட்டும் காலியா இருக்கு, போயி ஒக்காந்துக்க.

போலீஸ் 1: என் பையன் விவரம் தெரியாம திடீர்னு நேத்திக்குத் துப்பாக்கிய எடுத்து என் மனைவி நெத்திப் பொட்டுல சுட்டுப்புட்டான்.
போலீஸ் 2: அய்யய்யோ, என்னா ஆச்சு. எங்க இருக்காங்க, என்னாப்பா இப்டி சொல்ற.
போலீஸ் 1: ஏய் ஏய் ஏன் பயப்பட்ற, கண்ணாடில தானே ஒட்டி வெச்சிருந்தா, அது தூள் தூளா ஒடஞ்சு போச்சு போ.

மருமகள்: என் மாமியார் நேத்திக்கு கிணத்துல விழுந்து செத்துப் போயிட்டாங்க.
பக்கத்து வீட்டு மருமகள்: ம்.... எல்லார் வீட்லயும் தான் கிணறும் இருக்கு, மாமியாரும் இருக்காங்க. ம்... அதெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்.
மருமகள்: எல்லாம் தன்னால விதிப்படி நடக்கும்னு கையக் கட்டிக்கிட்டு ஒக்காந்திருந்தா இருக்க வேண்டியது தான்.

எறும்பு சாக்பீஸ பாத்துட்டு ஒருத்தன்: இப்பத்தான் புரியுது, எதாவது கொலை நடந்துட்டா ஏன் போலீஸ் சாக்பீஸ்ல கோடு போட்றாங்கன்னு.

நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்ன சொல்ற.
ட்ரைவர்: நான் இவ்ளோ பேரெல்லாம் கொல்லல. ஒருத்தன் தண்டவாளத்து மேல நடந்துனு போயினு இருந்தான். அவனதான் கொல்லனும்னு நினைச்சேன்.
நீதிபதி: அப்பறம் எப்படி இவ்ளோ பேர் செத்தாங்க.
ட்ரைவர்: நான் என்ன பண்றது. அவன் திமிரா தண்டவாளத்த விட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். அதனால தான் நானும் ட்ரைன எறக்க வேண்டியதா போச்சு.

ரயில்வே தேர்வாளர்: ரெண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க.
வந்தவர்: ஒடனே என் தம்பியை வரச் சொல்லிடுவேன். அவன் இதுவரைக்கும் ஒரு ரயில் விபத்த கூட பாத்ததில்ல.

ஜட்ஜ்: ஆர்டர், ஆர்டர், ஆர்டர்
கைதி: 2 மசால் தோசை, ஒரு பொங்கல், ஒரு ஆமை வடை, ஒரு உளுந்து வடை, ...
ஜட்ஜ்:
ஷட் அப், ஷட் அப்
கைதி:
இல்ல, இல்ல ஒரு செவன் அப்

சர்வர்:
டெய்லி பார்சல் வாங்கினு போறீங்களே, இங்கயே சாப்ட வேண்டியது தானே சார்.
வந்தவர்:
டாக்டர் என்ன ஹோட்டல்ல சாப்ட கூடாதுன்னு சொல்லி இருக்காரு.

நண்பன் 1:
சண்டை போட்டுனே இருக்கியே, மனைவி செத்துட்டா என்னடா பண்ணுவ
நண்பன் 2:
பேச்சுலர்னு போட்டுப்பேன்

சர்தார் 1:
எதுக்குடா மெழுகுவத்தி ஏந்தி வைச்சிருக்க
சர்தார் 2:
கரண்ட் இல்ல
சர்தார் 1:
சரி, fபேனையாவது போடு
சர்தார் 2:
லூசு, போடாத, மெழுகுவத்தி அணைஞ்சுடும்

சர்தார்:
செக் புக் தொலைஞ்சு போச்சு சார்
மற்றவர்:
அட ராமா, எவனாவது கையெழுத்து போட்டு பணத்தையெல்லாம் எடுத்துடப் போறான்.
சர்தார்:
அப்டி ஒன்னும் நடந்துடாது, நான் ஏற்கனவே எல்லாத்துலையும் கையெழுத்த போட்டு வெச்சிட்டேன்

சர்தார் 1:
நாளைக்குப் படத்துக்குப் போறேன் வரியா
சர்தார் 2: முடிஞ்சா வரேன்
சர்தார் 1: முடிஞ்சுட்டா ஒண்ணும் புரியாது, ஆரம்பிக்கும்போதே வந்துடேன்

மூணு சர்தாருங்க ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு ட்ரெயின்ல ஏறினாங்க. இத பாத்த கூட வந்த 2, 3 வெள்ளைக்கார பயணிகளுக்கு ஒரே குழப்பம். எப்படி சமாளிக்கறாங்கன்னு பாக்கலாம்னு நினைச்சாங்க. டி.டி.ஆர் வரும்போது மூணு சர்தார்களும் பாத்ரூம்ல போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. டி.டி.ஆர் கதவ தட்டி டிக்கெட் கேட்டாரு. ஒருத்தர் மட்டும் கைய நீட்டி டிக்கெட்ட நீட்டினாரு. டி.டி.ஆர் செக் பண்ணிட்டுப் போய்ட்டாரு. வெள்ளக்காரர்களுக்கு ஏமாற்றமா போய்டுச்சு. திரும்பி வரும்போது அவங்களும் ஒரே ஒரு டிக்கெட் வாங்கிக்கிட்டாங்க. ஆனா இப்ப சர்தாருங்க டிக்கெட்டே வாங்கல. எப்படியோ மாட்டிக்கட்டும்னு ஏறியாச்சு எல்லாரும் வண்டில. டி.டி.ஆர் வராரு. வெள்ளக்காரங்க எல்லாரும் ஒடனே பாத்ரூம்குள்ள போய்ட்டாங்க. இப்ப ஒரு சர்தார் எழுந்து போயி பாத்ரூம் கதவ தட்டி "டிக்கெட், டிக்கெட்" னாரு. ஒரு வெள்ளக்காரர் மட்டும் கதவ திறந்து ஒரு டிக்கெட்ட நீட்டினாரு. நம்ம ஆளு அத வாங்கிட்டு வந்துட்டாரு.

ஒரு நண்பர் சர்தார்ஜிய சினிமா பாக்கக் கூட்டிட்டுப் போனார். படம் ஆரம்பிக்கும்போது "தேவர் பிலிம்ஸ்" னு போட்டாங்க. ஒடனே சர்தார்ஜி நான் இந்த சினிமா ஏற்கனவே பாத்துட்டேன்னு எழுந்து போயிட்டாரு.

செராக்ஸ் கடைக்காரர்: காப்பி அடிக்கக்கூடாதுன்னு ஒண்ணாங்க்ளாஸ்லேந்து சொல்லினு இருந்தாங்க எல்லாரும். எனக்கு என்னமோ அன்னிலேந்து இன்னி வரைக்கும் காப்பிதான் கை கொடுத்து வாழவைக்குது.

அப்பா: அழாதப்பா, அழாதப்பா ப்ளீஸ், அம்மாதானே அடிச்சாங்க. உடு, உடு.
மகன்: போப்பா, ஒன்ன மாதிரி என்னால தாங்கிக்க முடியல

டீச்சர்: பாக்டீரியா படம் வரைய சொன்னேனே, ஏன் வரையல நீ
பையன்: வரைஞ்சிட்டேன் மிஸ், ஆனா பாக்டீரியாதான் கண்ணுக்குத் தெரியாதே

அப்பா: என்னடா இவ்ளோ கம்மியா மார்க் வாங்கிருக்க
மகன்: பயங்கர விலைவாசிப்பா இப்பல்லாம், எதையுமே வாங்க முடியல

அப்பா: எங்கடீ சட்டைல வெச்சிருந்த 100 ரூபாயக் காணம்
அம்மா: நீங்க தானே புள்ள பரிச்சைக்குப் போறேன்னதுக்கு 10, 20 ன்னு எடுக்கக் கூடாது, 100 எடுக்கனும்னீங்க, அதான்

டீச்சர்: ஏண்டா லேட்டு,
பையன்: ஸ்பீடாதான் டீச்சர் வந்தேன், வாசல்ல "பள்ளிப் பகுதி, மெதுவாகச் செல்லவும்" போட்ருந்துது. அதான் டீச்சர் லேட் ஆய்டுச்சு.

பையன் அப்பா குரலில் ஸ்கூலுக்குப் போன் போட்டு: ராமு இன்னிக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான் சார். அவனுக்கு ஒடம்பு சரியில்ல
ஸ்கூல்: நீங்க யாருங்க பேசறது.
பையன்: எங்கப்பாதான் பேசறேன்!!

அப்பா: என்னடா எக்ஸாம்ல கேள்வில்லாம் எப்டி இருந்துது.
மகன்: ஈஸியாதாம்ப்பா இருந்துது
அப்பா: நல்லா பண்ணியிக்கியா
மகன்: அதான் ரொம்ப கஷ்டம்ப்பா

சார்: ஒங்கிட்ட 100 ரூபா குடுக்கறேன். அதுல 25 ரூபாய திருப்பி வாங்க்கிகறேன். இப்ப உங்கிட்ட எவ்ளோ பாக்கி இருக்கும்.
பையன்: ஒண்ணும் இருக்காது சார்.
சார்: என்னடா, இந்த கணக்குக்கூடவா தெரியல.
பையன்: உங்களுக்குதான் சார் என்னப் பத்தி தெரியல
சார்: சரி, இப்ப உன் கிட்ட ஒரு ரூபா இருக்கு, ஒங்கப்பா கிட்ட ஒரு ரூபா கேக்கற. அப்ப ஒங்கிட்ட எவ்ளோ இருக்கும்
பையன்: ஒரு ரூபாதான் சார்
சார்: எப்டிடா
பையன்: ஒங்களுக்கு எங்கப்பா பத்தியும் தெரியல சார்

சார்: பயங்கரமான காட்டு மிருகங்கள் 10 சொல்லு
பையன்: 6 சிங்கம், 4 புலி சார்

சார்: கட்டபொம்மன எங்க தூக்குல போட்டாங்க
பையன்: கழுத்துல சார்

நர்ஸ்: டாக்டர், டாக்டர், அந்த பேஷண்ட்டுக்கு பல்ஸ் கொறஞ்சுக்கிட்டே போகுது, என்ன பண்றது டாக்டர் இப்போ
டாக்டர்: அவங்க சொந்த காரங்கள ஒடனே பில்ல கட்ட சொல்லுங்க

டீச்சர் மற்றொரு டீச்சரிடம்: அந்தப் பையன தலைய சீவிட்டு வாடான்னு சொன்னா, யார் தலையன்னு கேக்கறாம்ப்பா.

அப்பா: ஒங்க சார் ஒங்களுக்கு எத்தன பாடம் சுமாரா நடத்துவாரு.
மகன்: அவர் எல்லாப் பாடத்தையுமே சுமாரா தாம்ப்பா நடத்துவாரு.

டீச்சர்: என்னடா கணக்குல பெரிய புலின்னு சொன்ன, சீரோ மார்க் வாங்கிருக்க.
பையன்: பதுங்கி இருக்கேன் டீச்சர்

டீச்சர்: நில நடுக்கம் எப்ப வரும்
பையன்: பூமிக்குக் குளுரும் போது வரும் டீச்சர்

டீச்சர்: அந்தமான் எங்க இருக்குன்னு சொல்லு
பையன்: எந்தமான் டீச்சர்
டீச்சர்: துடுக்காவா பேசற, பெஞ்ச்ல ஏறு.
பையன்: ஏறினாலும் தெரியல டீச்சர்

டீச்சர்: என்னது, தண்டவாளத்துல பஸ் போகுதா, எங்கடா போகுது.
பையன்: எங்க ஊர் லெவல் க்ராசிங்ல டீச்சர்.

டீச்சர்: பப்பூ எழுந்திரு, உங்கிட்ட ஒரு கேள்வி. தலைல எத்தன முடி இருக்கும்
பப்பூ: ஒரு லட்சம் டீச்சர்
டீச்சர்: எப்டிடா
பப்பூ: ஒரு கேள்வி தானே டீச்சர் கேக்கறேன்னு சொன்னீங்க

மகன்: அப்பா, அப்பா, ஒங்களால கண்ண மூடிட்டே கையெழுத்துப் போட முடியுமாப்பா
அப்பா: ஓ முடியுமே
மகன்: இருங்க இங்கயே, ப்ராக்ரஸ் கார்ட கொண்டு வரேன்

கடைக்காரர்: பத்து பழம் பத்து ரூபாப்பா
வந்தவர்: கொஞ்சம் கொறைக்கக் கூடாதாங்க
கடைக்காரர்: சரி, எட்டு பழம் எடுத்துக்கங்க

மகன்: அப்பா எனக்கு க்ளாஸ்ல போர்டே தெரிய மாட்டேங்குது
அப்பா: அடடே, என்னப்பா சின்ன வயசுலயே இப்டி சொல்ற, சரி நல்ல டாக்டரா பாத்து, போய் காமிக்கலாம்.
மகன்: அட, அது இல்லப்பா, முன்னாடி ஒருத்தன் ஒசரமா ஒக்காந்துருக்காம்ப்பா.

டீச்சர்: நீ வலது கைல எழுதுவியா, எடது கைல எழுதுவியா
பையன்: நான் பேனால தான் டீச்சர் எழுதறேன்.

டீச்சர்: பப்லு, ஒங்கப்பா என்ன வேல பாக்கறாரு.
பையன்: எங்கம்மா சொல்ற எல்லா வேலையையும் பாப்பாரு டீச்சர்

அப்பா: என்னடா போன தடவ 98 மார்க் வாங்கிட்டு, இந்த தடவ 2 மார்க் வாங்கிருக்க
மகன்: என்னப்பா நீ, போன தடவ என்னன்னா மிச்சம் ரெண்டு மார்க் எங்கன்னு கேட்ட, இப்ப என்னன்னா போன தடவ வாங்கினத கேக்கற.

கண்டக்டர்: யோவ் யோவ் இங்கெல்லாம் ஸ்டாப் கெடையாது, எறங்கு, எறங்கு
ஏறியவர்: ஏற மட்டும் கூடாது, எறங்கலாமாக்கும், ஸ்டாப்ல எறங்கிக்கறேன்.
(ஸ்டாப்ல எறங்கிட்டு திருப்பி ஏறிக்கறாரு)
கண்டக்டர்: என்னய்யா ஸ்டாப்ல எறங்கிக்கறேன்னு சொன்ன, திருப்பி ஏறிட்ட
ஏறியவர்: என்னய்யா ஸ்டாப்லயும் ஏறக்கூடாதா, பின்ன எங்க தான்யா ஏற.

அப்பா: உன் வயசுல நான் எப்டி நல்லவனா இருந்தேன் தெரியுமா
மகன்: யாருக்குத் தெரியும். சுவர்க்கத்துக்குப் போகும்போது பாட்டிகிட்ட கேக்கறேன்
அப்பா: பாட்டி நரகத்துக்குப் போயிருந்தா?
மகன்: நீ கேளு

டீச்சர்: என் க்ளாஸ்ல யாரும் தூங்க முடியாது.
பையன்: ஆமா கத்தினே இருந்தா எப்டி தூங்கறது.

டீச்சர்: காந்தி தாத்தா வாழ்நாள் முழுக்க சட்டையே போடல. இதுலேந்து என்ன தெரியுது.
பையன்: அவர் ஒடம்பு டீச்சர்

மகன்: அம்மா, அம்மா ஒரு ரூபா காயினை நான் முழுங்கிட்டேம்மா, வாம்மா டாக்டர்ட்ட போலாம்.
அம்மா: வேணாம், வேணாம், டாக்டர் 100 ரூபாய முழுங்கிடுவாரு.

Nov 10, 2009

சிறப்பாக வாழ்வது எப்படி?

http://www.puratchithalaivar.org/ சைட்ல போய் பாரு. இவர புடிச்சிருக்கோ இல்லியோ வாழும் வகையைத் தெரிஞ்சுக்கவாவது போய்ப் பாரு. தமிழ்லையும் இருக்கு.

Nov 2, 2009

M. K. T பாடல்கள் - 5

41. ஞான ஸபையில் தில்லைக் கானந் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே.
ஹர ஹர எனவர முனிவரும் அமரரும் புகழ் பரமானந்த நடராஜனே (ஞான)
மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ்-செவ்
வானம் நிகர் சடையாட இள நகை
அரும்பும் மதிமுகமும் திரு விழி யழகுமாய் (ஞான)
நேமியுடன் முழங்காழி யணி
சாரங்க பாணி ம்ருதங்கமும்
நி ஸ த நி ப ம ரி க ம ரி ஸ ஸ்வர
நாத நாரதர் வீணையும்
ஸாம கான விநோதனே-சிவ
காம ஸ¤ந்தரி நாதனே
ஸவாமி அடிமையை யாள் ஸகல ஜகன்
நாதனே பாதமே தீம் ததீம் இசையுடன் (ஞான)

42. இது நிஜமா - நீ
இவ்வடிமைக்கும் காட்சி தந்தது நிஜமா (இது)
ஐயனோடு கைலாசபதி அறியாத ஆதிமூலமே (இது)
(நின்) நாம மொரு முறை சொல்ல என் நாக்கு தந்த பாக்கியமோ
நாயடிமையின் தாய் தந்தையர் தரு நாள் அனுக்ரஹமோ

43. மாநில வாழ்வு பெறும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே (மாநில)
வான் அமுதம் எழில் மான் விழி மாதே
அபிமானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த (மாநில)
என் மன உண்மை நிலை நீ அறிய
எடுத்துரைக்கும் மௌனம் படைத்தனை அன்பே
உன் மன சம்மதம் உண்டோ இல்லியோ
நான் உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ (மாநில)

44. தமியேன் பைந்தமிழ் அன்னையின் பால் அருந்திய தமிழ் பாலன்
தமிழ் வளர உயிர் வாழும் ஊழியன் என்றுலகறியும் (தமியேன்)
தமிழரசி அங்கயற்கண் உமையன்னையே தயவில்லையா
தமிழெனக்கும் எதில் அமர இடம் இல்லையா தகவில்லையோ
தருணம் வதேனயாலை சரணடைந்தேன் இனித்தாளே
வரமருளாய் சபை நடுவே வருன் எழி உந்தனைச்சாரும்

45. சந்த்ர சூரியர் போங்கதி மாறினும் வீழினும் நமக்கென்ன
இந்த இன்பமே சொந்தமதானால் வானுலகும் வேண்டாம் (சந்த்ர)
காதலரன்பைத் தடைசெய்ய உலகிலோர் கருவிக்கு வலிமையுண்டோ?
சாதலே வரினும் அதிலும் இருவரும் பிரிந்திடா உண்மை கொண்டோம்
இந்த உலகிலென் உடல் பொருள் ஆவி நீயே எனதுயிரும்
என்னுடல் உமக்கே சொந்தமிவ்வடியாள் பேசவும் அறியேனே

46. உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது (உண்மை)
பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அறிஞன் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
இன்னல் வரினும் ஜீவன் தன்னை இழக்க நேர்ந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது (உண்மை)
அன்னை தந்தை தனை மறவா அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
என்னவந்தும் தனை மறவா இயல்பதும் வேண்டும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல் (உண்மை)

47. உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே
உனதெழிலில் ரதிமங்கையும் நிகரோ நாணமுறாளோ?
பன்னெடுநாள் என்மனதைக் கொள்ளை கொண்டீரே
பரமானருள் நாடைந்தேன் பாவனமானேன் பிறவி
பாவனமானேன்
நம்மிருவர் உள்ளம் நிறை காதலிளங்கே
வளர் பிறை போல் வளர்ந்தோங்கவும்
இறைவன் தாள் பணிவோமே

M. K. T பாடல்கள் - 4

31. ஷ்யாமளா தேவி என் ஜீவப்ரியே (ஷ்யாமளா)
பாதை மேல் விழியாய்ப் பார்த்தே நொந்தேன்
பாங்குடன் தேன்மொழி பேசிட வாராயோ (ஷ்யாமளா)
என்றுனைக் காண்பேன் இன்பம் பெறுவேன்
ஏக்கமே தீர இரங்கிடுவாயே நீயே (ஷ்யாமளா)
ஆசை முகம் காட்டியே என் அல்லலைத் தவிராயோ
ஆடி வந்து எந்தன் அன்பினை மேவி ஆனந்தம் தாராயோ (ஷ்யாமளா)

32. சிவபெருமான் க்ருபை வேண்டும் அவன்
திருவருள் பெற வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சாந்த
சுகவாழ்வு வாழ வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)
காம முதல் பகையும் குரங்கு மனமும் செத்து
ராமதாஸன் உய்ய வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)

33. சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்ரமண்ய ஸ்வாமி உனை மறந்தார் அந்தோ
அற்பப் பணப்பேய்ப் பிடித்தே
அறிவிழந்து அற்பர்களைப் புகழ்வார்
நாவால் பொய் மொழிவார்
பொருள் விரும்பி தனது வாழ்
நாளெல்லாம் பாழ் செய்வார் உந்தன்
பாவன நாமமதை ஒரு பொழுதும்
பாவனை செய்தறியார்
அந்தோ விந்தையிதே அறிந்தறிந்து
ஆழ் நரகில் உழல்வாரே மாந்தர் (இவர்)
சிந்தை திருந்தி உய்ய குஹனே
உந்தன் திருவருள் புரியாயோ

34. சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

35. தில்லையின் நாயகனே சிவகாம வள்ளி மனோஹரனே - என்
அல்லல் பிணிகள் அற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும்
கனகசபேசன் திருநடம் காண விழைந்தேனே - என்
கனவிலும் வேறு நினைவின்றி கருத்தழிந்தேனே
தெள்ளிய நின் சடையும் திருமேனி வள்ளலை எண்ணும்தோறும்
உள்ளம் மகிழ்ந்தேனே பேரானந்த வெள்ளம் அமிழ்ந்தேனே (தில்லையின்)

36. உனைக் கண்டு மயங்காத பேர்கள் உண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில் (உனைக்)
அண்டத்திலே நில மண்டலமேல்
பல எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவ (உனைக்)
தீரத்திலே உயர் கம்பீரத்திலே
கொடை உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே (உனைக்)
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானத்திலே சரச கானத்தில் தேவ (உனைக்)

37. (வெள்ளிமலை) வள்ளலைப் பாடும் வாயால் அறுதலை பிள்ளையைப் பாடுவேனோ
எந்தன் ஸ்வாமியைப் பாடும் வாயால் தகப்பன் ஸ்வாமியைப் பாடுவேனோ
அம்மை அப்பனைப் பாடும் வாயால் பழனியாண்டி சுப்பனைப் பாடுவேனோ
வள்ளியின் கண்வலை வீசிலை வேடன் கள்ளனைப் பாடுவேனோ
அம்பிகை பாகன் எனும் அகண்ட சுயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் தயவால் மணம் பெறும் தம்பியைப் பாடுவேனோ

38. வசந்த ருது மன மோஹனமே
மலர்ந்த மலரிதழ் மணம் கமழ் தென்றல் (வசந்த)
மல்லிகைப் பூங்கொடி குந்தள வராளி
மொய்த்த மலர் நகை குலுங்க விளங்கும்
நகைப் பைத்தியம் யதுகுலாம் போதிலும்
நனவிலும் கனவிலும் இதே சிந்தையா
சுருட்டி கொணர்ந்து கொடுத்தலுத்தார் போலவே
சொல்லுக்குப் பஞ்சம் இல்லை கொஞ்சும் குயிலின் இசை

39. வதனமே சந்த்ர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ? (வதனமே)
மாறன் அம்போ நீள் விழியோ மதுர கானமோ? (வதனமே)
மின்னும் மோஹனக் கொடியிடையாள்
அன்னமோ மடப் பிடி நடையாள்
புன்னகை தவழ் பூங்கொடியாள்
புவன சுந்தரியோ? (வதனமே)

40. யானைத் தந்தம் போலே பிறைநிலா

M. K. T பாடல்கள் - 3

21. மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் (மனமே)
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரை புகழ்ந்து பாடாதே
காம மோஹ மத வைரிகள் வசமாய்
கர்ம வினை சூழ் உலக வேதனையில்
தடுமாறும் மனமோடு துயர் உறாமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பர சுகம் பெறவும் (மனமே)
விளங்கும் தூய சத்ஜன சங்கம்
விடுக்கக் கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழம் என்று மயங்கும்
விட்டில் ஆகாதே சஞ்சலம் நீங்கும் (மனமே)

22. மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாள்வாய் (மனம்)
தனத்தையே தெய்வம் என நினைந்தாள்
சத்யவார்த்தை தன் உயர்வறியாளே (மனம்)
சாம்ப சதாசிவ சம்போ சிவ சங்கரி பரமேஸ்வரி
வீம்புடனே அஹங்காரம் கொண்டதால்
வேதனை கொண்டாள் பேதை இவள் - மனம்
வேதனை கொண்டாள் பேதையிடம் (மனம்)

23. மன்மத லீலையை வென்றார் உண்டோ
என்மேல் உனக்கேனோ பராமுகம் (மன்மத)
நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான் மூன்று உலகிலும் (மன்மத)
என்னுடனே நீபேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ - உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கிடுமோ
உன்னை நயந்து நான் வேண்டியும் ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ
ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ மனம் கவர் (மன்மத)

24. மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ
மாமுனிவரே அறியேன், யாரும் அறியாமல் (மறைவாய்)
கரையான் தின்றதோ கள்வர் கவர்ந்து சென்றாரோ
பேதை சிறியேன் செய் தீவினையோ இறைவன் சோதனையோ (மறைவாய்)
மருள்தீர் மெய்தவ ஞானப் பெரியோய் பேதை யான்
மெய்யாய் வடிவேல் அறிய நெஞ்சில் வஞ்சம் அறியேன் ஐயா
கருணை புரிவீர் மன்னித்தருள்வீர் களிமண் சுட்ட
கலம் போனால் என்ன செம்பொற் கலமே செய்து தருவேன் (மறைவாய்)

25. கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே மதன் விடும் வலையே (கவலையைக்)
நவரசங்களிலும் ஸ்ருங்காரமே தலையே
நளின நடையழகிற் கீடெங்கும் இல்லையே (கவலையைக்)
புஜமிரண்டும் மூங்கில் தளர்நடை அஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரசிகத் தன்மையில் கை தேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டக்குறிஞ்சி (கவலையைக்)

26. ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற (ஒரு நாள்)
வெறு நாளாக்கிப் (நம் வாழ்நாளை) பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல் (ஒரு நாள்)
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம், இதைக்
கண்டு நெஞ்சில் மோகம்
கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே பின் கரை
கொள்ள வெகு வருத்தமே, முனிவர்
தொண்டுசெய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வருமே அதனால் (ஒரு நாள்)

27. பவளமால் மலையை...

28. ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
மாதரசே பிழை யேதுசெய்தேன் சுகுண (ராதே)
எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ - நீ
எங்கு சென்றாலும் நானுன்னை விடுவேனோ ஓடாதே (ராதே)
கண்ணை யிழந்தவன் நீயோ நானோ
கண்ணா நீவேறு நான் வேறோ, எவன் சொன்னவன் (கண்ணை)
விண்ணும் கண்ணும் நிறை முகில் வண்ணனே
விருப்பு வெறுப்பில் பரஞ்சோதி பொருளே இன்று (கண்ணை)

29. ராஜன் மஹராஜன்
திருவெற்றியூர் மேவும் திருவாளன் த்யாக (ராஜன்)
தேஜஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
ஸ்ரீவடிவுடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்)
மட்டிலா புகழ்மிகு பட்டினத்தார் அன்று
கட்டிக் கலந்த கருணை யரசே
தட்டிக் கழிக்காமல் தனையனை யாட்கொண்டு
பட்டினி பிணி மூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)

30. சத்வ குணபோதன் சரணம் இது
சித்தமும் வீணே கலங்குவதேனோ (சத்வ)
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் (சத்வ)
கண்ணிழந்தால் என்ன கடவுட்கும் என்ன
கண்ணில்லையோ நம்மை காக்கும் தயாளன் (சத்வ)

M. K. T பாடல்கள் - 2

11. சொல்லு பாப்பா சொல்லு பாப்பா
சுகம் பெற வழி ஒன்று சொல்லு பாப்பா (சொல்லு)
வெல்லும் பகை ஒழிய சொல்லு பாப்பா
வெற்றிக் கொடி பறக்க சொல்லு பாப்பா
நல்ல தமிழ் வளர சொல்லு பாப்பா - மக்கள்
ஞான விலாசம் பெற சொல்லு பாப்பா (சொல்லு)
கைத்தொழில் ஓங்கும் என்று சொல்லு பாப்பா - மக்கள்
கஷ்டங்கள் தீருமென்று சொல்லு பாப்பா
வர்த்தகம் ஓங்குமென்று சொல்லு பாப்பா - மக்கள்
வாழும் விதங்களெல்லாம் சொல்லு பாப்பா (சொல்லு)
ஜாதி வித்யாசம் நீங்க சொல்லு பாப்பா - கோவில்
சன்னதி பொது என்று சொல்லு பாப்பா
போது மனத்துறுதி சொல்லு பாப்பா
ஓம் சக்தி என்றே நிதம் சொல்லு பாப்பா

12. சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொள்ளோ (சுட்டும்)
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வைரம்
நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி (சுட்டும்)
சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையோ உந்தன் நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரல் இனிமையடி
வாளைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன் (சுட்டும்)

13. தீன கருணா கரனே நடராஜா நீலகண்டனே (தீன)
நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி யருளும்
மௌன குருவே ஹரனே எனை யாண்ட நீலகண்டனே (தீன)
மீனலோசனீ மணாளா தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌனகுருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே (தீன)
ஆதி அந்தம் இல்லா ஹரனே
அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதி வேணியனே பரமேசா நீலகண்டனே (தீன)

14. த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ர பிம்ப வதனம்தனில் தினம் (த்யானமே)
காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான் இரு
கண் மயங்கி சாவேனோ (த்யானமே)
லோகமும் அதிலே தோன்றும் இந்த்ரிய
போகமும் யாவும் துறந்தேன் விஷய
போகமும் யாவும் துறந்தேன் கமல
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயரும் ஆகவும் (த்யானமே)

15. என்னுடல் தனில் ஒரு ஈ மொய்த்த போது
உங்கள் கண்ணில் முள் தைத்தாற்போல் இருந்தும்
என்னுடல் நோய் கண்டு இரவொடு பகலும்
கண்ணுறங்காது உடல் இளைத்தும்
இன்னமுதூட்டி இன்பத்தாலாட்டி என்னை ஆளாக்கிய
பெருமைக்கு என்னிடம் இயற்கையில்
உங்கள் உள்ளுருகும் அன்பினுக்கு ஒரு கைமாறேது
என்னுயர் தவப்பயன் அம்மையே அப்பா
இம்மையில் எனது கண்கண்ட என்
அருட்கடவுள் அம்மையே அப்பா
எனக்கொரு நற்கதி உண்டோ என்னரும்
விதியா அம்மையே அப்பா
என் பிழை பொறுத்தருள்வீரோ
என்னுயிர் துணையாம் அம்மையே அப்பா
எங்கு சென்றுங்களைக் காண்பேன்
அம்மை அப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அறிவில்லாமலே நன்றி மறந்தேன்
எனதருமைத் தாயே தந்தையே

16. காந்தியைப் போலொரு சாந்த சொரூபனை
காண்பதும் எளிதாமோ மஹாத்மா (காந்தியை)
மாந்தரிலே ஞான யோகம் மேவும் தவ
மாந்தரிலே சுயநலம் சிறிதும் இல்லா (காந்தியை)
அஹிம்சை தனிலே புத்தரவர்
ஆத்ம சோதனையில் யேசு நாதரவர்
அறுபகையும் வென்ற கர்ம சீலரவர்
நமது ராஜ்ஜியத்தாய் இந்திய நாட்டிலவதரித்த (காந்தியை)
குழந்தை உள்ளமும் அன்பு கனிந்த மொழியும் கொண்டு
கொடுமைகளை எதிர்த்து வெல்லும் சித்தன்
முழங்கால் துணியும் மோகனப் புன்னகையும்
தகையப் பகையரும் கண்டஞ்சும் சுத்தன் - இனிமேல் (காந்தியை)

17. ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே
ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ (ஞானக்)
ஆன ப்ருந்தாவனமும் அதோ என் எதிரிலே
அனந்த கண்ணன் உருவம் அதோ தெரிவதாலே (ஞானக்)
வானவர் பணிந்திடும் மாதவன் பதம் தொழும்
அனந்தம் கிடைத்த பின்பு எது வந்தாலென்ன (ஞானக்)

18. இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டு ரங்கன் அருள் இருந்தால் (இங்கும்)
பங்கஜ மலர் மது உண்ணும் வண்டு போல்
மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு (இங்கும்)
உலகெல்லாம் மகிழவே தனது பொருள்
உடல் உயிர் உதவும் உதாரராம்
உலகிலே பொருளிலும் பற்றில்லா
உத்தம சத்குண வித்தகராம்
ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல் வரும்
துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
இரவு பகல் ரங்கன் நினைவில் மனோலயமாம்
அந்தரங்க சமரச உணர்வோடிருப்பவர்க்கு (இங்கும்)

19. க்ருஷ்ணா முகுந்தா முராரே - ஜய (க்ருஷ்ணா)
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பரதாரி கோபாலா (க்ருஷ்ணா)
காளிய மர்த்தன கம்ச நிஷூதன
கமலாயத நயனா கோபாலா (க்ருஷ்ணா)
குடில குந்தளம் குவலய தள நீலம்
மதுர முரளீரவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்
கோபி ஜன மன மோஹன வ்யாபக
குவலயதள நீலா கோபாலா (க்ருஷ்ணா)

20. மானிட ஜன்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர் (மானிட)
ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் உண்மை
ஞான பக்தி பகுத்தறிவுடன் இக பர சுகம் தரும் கருணையாம் (மானிட)
கருவறையினுள் கிடந்து வெளியில் வருந்துயர் நினைந்தாலும் உடல்
கலங்குதே இங்கே திகில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
இரு வினை வசமாம் இவ்வுடல் ஒரு நீர்க்குமிழி
இதனிடை உயர் நெறி அடையவே இறைவன் அருளை வேண்டி
உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரிபுரமதில் ஒரு முறை கண்டு பணிந்து
ப்ரபோ பாண்டுரங்கா ஜய விட்டலா என்று பணிந்திட (மானிட)