Showing posts with label Tours - Bharath Dharshan. Show all posts
Showing posts with label Tours - Bharath Dharshan. Show all posts

Jun 14, 2017

வால்பாறை - அதிரப்பள்ளி டூர்


மே 26, 2017, வெள்ளிக்கிழமை.

தண்ணீர் ! தண்ணீர் !!  எங்க இருக்கு சென்னைல, தமிழ் நாட்ல ?

சில்லுனு ஒரு க்ளைமேட் - எங்க இருக்கு சென்னைல, தமிழ் நாட்ல ?

இப்டி பல பேர் தேடிட்ருக்கோம்,  ஐ.டி கம்பனீஸ்லேந்து.  

வீட்ல ஏசி இருக்கு.  குடிக்க தண்ணி இருக்கு,  நாலு பேர் குளிக்கவும் க்ரௌண்டு வாட்டர் இருக்கு.

ஆமா, தனி வீடு தான்,   ஃப்ளாட்ல லாம் தண்ணி காசு குடுத்து தான் வாங்கறாங்க.  

காஞ்சி சங்கராச்சார்யர் போற எடத்துலெல்லாம் தொட்டி கட்டி, தண்ணீல முங்கி தான் குளிப்பாங்க.   நாங்களும் காவிரிக் கரைலேந்து வந்த கும்பல்ங்க்றதால அப்டி முங்கி குளிச்சு பழக்கம்.  எங்க போறது இப்போ ?  ஸம்மர் லீவு பசங்களுக்கு, இப்ப போனா நான் மட்டும் லீவு போட்டா போறும்.  ஸ்கூல் தொறந்தா, லீவு போட மனஸே வராது.  

இருக்கறது ரெண்டு ஆப்ஷன்.  ஒன்னு ரிசார்ட்,  இல்லனா எங்கயாவது ஆத்தங்கரை.   ரிசார்ட் பாத்தா எல்லாம் புக்டு.  பெரியவங்க முங்கி குளிக்கற பாத் டப்புக்கு பேர், ஜகூஸி யாம் !!. அது, ஸ்விம்மிங் பூல் இருக்கற ரிசார்ட் பாத்தாலும் சென்னை கிட்ட க்ளைமேட்டுக்கு என்ன பண்றது ?   ஐடியல் பீச் ரிசார்ட்ல 10 அடி ஆழத்துல ஸ்விம்மிங் பூல் இருக்காம்.   ஓசன் ஸ்ப்ரே ரிசார்ட்ல ப்ரைவேட் ஸ்விம்மிங் பூல் இருக்காம்.  மினிமம்  நாலாயிரத்லேந்து பதினாறாயிரம் வரை.  கெடைக்கவும் இல்ல.  போக வர டாக்ஸி, சாப்பாடு எல்லாம் சேத்தா பத்துலேந்து முப்பதாயிரம் வரை டும்.

ஆத்தங்கரை ஏதாவது இருக்கான்னு பாத்தா மினிமம் 500, 600 கி. மீ போக வேண்டியிருக்கும் போல இருக்கு.  எங்கயும் ப்யூர் வெஜ். சாப்பாடு கெடைக்கறதும் இப்பெல்லாம் ரொம்ப கஷ்டமாய்டுச்சு.  வீட்லேந்து செஞ்சு எடுத்திட்டு போலாம்னா,  எப்ப, எப்டி ஆஃபிஸ்லேந்து செவுரு ஏறி குதிச்சு போவோம்னு தெரியல.  ப்ளான்டு லீவெல்லாம் சரி பட்டு வரல,  போன தடவையே 2-3 ஆயிரம் ரூபா கேன்ஸல் பண்ணதுல போய்டுச்சு.   தனிக்குடும்பம்,  சாப்ட மட்டும்   நெறையா பேர் இருக்கோம்.  செய்யறதுக்கு ஒரு வொய்ஃப் தான் இருக்கா !!  அவங்களுக்கு ஒரு ரெஸ்ட் குடுக்கனும்னு தான் டூரே.

மே 1, வீக் என்ட்லதான் வந்துது.  அதுவும் இப்டி தான் ப்ளான் பண்ணாம, பாஹுபலிலயே போய்டுச்சு.   இப்ப மே 29ம் வீக் என்ட்லதான் வருது.  அமெரிக்கால என்னவோவாம்.  அதுக்கு நமக்கு லீவு.    வீட்டுக்குப் போயாச்சு. ஒரு ப்ளானும் இல்ல.  மூணு  நாள் லீவு,   கொடைக்கானல், ஊட்டி ஏற்கனவே போயாச்சு.  மொத்த  ஊரும் இப்ப அங்கதான் இருக்கு.   திருநெல்வேலி, கன்யாகுமரில க்ளைமேட் இல்ல.  மைசூர், பெங்களூர்ல ஆறும் இல்ல, க்ளைமேட்டும் இல்ல.  வால்பாறை, அதிரப்பள்ளி ஃபால்ஸ் போன வாரம் நண்பர் ப்ரேம் போய்ட்டு வந்திருக்காரு.  அவர் தங்கியிருந்த கனவா (Kanova Resort) ரிசார்ட்  ரூம் வாசல்ல  அதிரப்பள்ளி  ஆறு.    இதெல்லாம் பேசிட்டு தூங்கவும் தூங்கியாச்சு.

காலைல திருப்பி மேல எழுதி இருக்கற எல்லாத்தையும் பேசிட்டு,   பஸ் ரேட்டு பாத்தா, 2000 ரூபாய்கு கம்மியா எந்த தண்ணி இருக்கற எடத்துக்கும் டிக்கெட் இல்ல.,  தெரிஞ்சது தானே.  டிஸ்டண்ட்ஸ் ஜாஸ்தி, படுத்திட்டு போகனும், ஏசி வேணும்,  ட்ரைன் ட்ரை பண்றதே இல்ல.  அதெல்லாம் ப்ளான் பண்ணி போறவங்களுக்கு.   மணி காலை 11,  டாக்ஸிக்கு ஃபோன் பண்ணியாச்சு,  கி.மீ. க்கு 8.30 ரூபா, ஒரு  நாளைக்கு ட்ரைவர் பேட்டா 300,   ஏசி எட்டியோஸ்ஸ்ஸ்.  ட்ரைவர் டைசன்,   ஏற்கனவே  நாகப்பட்ணம், வேதாரண்யம் டூர்ல எங்கள்ட்ட அனுபவப்பட்டவர்.  இன்னும் சாப்டல. 

12.30 AM க்குக் கெளம்பினோம்.  விழுப்புரம் டோல் வரைக்கும் குழம்பம் தான்.  டைசன் ஊர் கன்யாகுமரிதான்னாரு.  அவரையும் அங்க க்ளைமேட், திருப்பரப்பு ஃபால்ஸ் தண்ணி எல்லாம் விசாரிக்க சொன்னோம்.  ஒரு ஹோட்டல்ல ஃப்ரைடு ரைஸ், கர்டு ரைஸ், அது, இதுன்னு பார்ஸல் வாங்கிட்டு,  ஓட்ற கார்லயே  நிமிஷத்துல காலி பண்ணிட்டு, விழுப்புரம் டோல்ல தங்க  நாற்கரச் சாலைலேந்து (இது மட்டும் சுத்தத் தமிழ்ல!!) ரைட் எடுத்து, சேலம்  நோக்கி பயணம்.    சேலம், அவினாசி, பொள்ளாச்சி, வால்பாறை, அதிரப்பள்ளி.  இதான் ரூட் ப்ளான்.  

அவினாசி: அருணகிரிநாதர்  பாடல் பெற்ற முருகர் ஸ்தலம்.  

"இறவாமற் பிறவாமல் எனையாள்சற்       குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத்         தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற்    குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப்     பெருமாளே"

வள்ளி மணவாளா ! அவினாசிப் பெருமாளே !!, அறம் முதலான  நாலையும் அளிப்பவனே,   எனக்குக் குருவாயிருந்து என்னை இந்த பிறப்பு, இறப்பு சுழலிலிருந்து  காத்து ஆண்டருள்வாய்.  

இந்த கோவில் சாமி கருணாம்பிகா ஸமேத அவினாசியப்பர்.  63 நாயன்மார்களில் முக்யமானவர்களில் ஒருவரான சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் இந்த ஊர்ப்பக்கம் வந்த  போது, எதிரெதிர் வீட்ல, ஒன்ல அழற சத்தமும், இன்னொரு வீட்ல மங்கல ஓசையும் கேட்க, இதென்ன விஷயம் என்று கேட்டார்.   ஊரார், "இந்த இரண்டு வீட்டுக் குழந்தைகளும் நண்பர்கள்.   மூன்று வருஷங்களுக்கு முன் குளத்துக்கு  நீராடப் போயிருந்த போது, ஒருவனை அங்கு இருந்த முதலைக் கடித்து உண்டு விட்டது.    அவன் நண்பனுக்குத் தான் இன்று இந்த வீட்டில் பூணூல் போடுகிறார்கள்.  இறந்தவன் இருந்திருந்தால் அவனுக்கும் இந்த நிகழ்வெல்லாம் இப்போது நடந்திருக்கும்.    நண்பனின் வைபவத்தில் தானும் கலந்து, மகிழ்ந்திருப்பான் என்றெல்லாம் எண்ணி இறந்தவன் வீட்டார் அழுது கொண்டிருக்கிறார்கள்" என்று விளக்கினர்.    இதைக் கேட்ட ஸுந்தரர் அவர்கள் மீது கருணை கொண்டு, ஸ்வயம்புவான அவினாசியப்பரிடம் குழந்தையை மீட்டுத் தருமாறு கட்டளையிடும் தொணியில் வேண்ட, வற்றியிருந்த குளத்தில்  நீர் பெருகி, அதில் முதலையும் உண்டாகி, இன்றைய வயதில் சிறுவனைத் திருப்பித் தந்தது.  இந்தக் குளம் கோவிலிலிருந்து 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.  முதலை வாயில் சிறுவன் மீண்டு வரும் சிலைகள் உள்ளன.  

“உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய் 
  அரைக்கு ஆடு அரவர் ஆதியும் அந்தமும் ஆயினாய் 
  புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே   
  கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே”
  
உரைப்போர் உள்ளத்தும்,   நினைப்போர் உச்சியிலும்  உறைவோனே ! அரையில் அரவை அணிந்தவனே !   ஆதியும், அந்தமுமானவனே ! எழிற்சோலைப் புக்கொளியூரில் உறையும் அவினாசியே ! முதலையும், காலனையும் பிள்ளையைக் கொண்டு வந்து தரச்சொல்.

போகும் போது இந்த ஊருக்குப் போக முடியல.  பொள்ளாச்சில போய், சீதாராம் லாட்ஜ்ல ஒரு ரூம் வேண்டி, ராத்திரி 12.30 மணிக்குப் புகுந்தோம்.   பழைய வீட்ட லாட்ஜா வெச்சிருக்காங்க.  நல்லா இருந்துது.  நான் ஏசி 600 ரூபா குடுத்தோம்.  காலை 5.30 மணிக்குக் கெளம்பிடலாம்னு ப்ளான்.  நம்ம ப்ளானாச்சே,  நடக்குமா ?   12 மணி நேரம் கார் பயணம்.  ட்ரைவர் திரும்பிப் பாக்கறதுக்குள்ள கதவ சாத்தி, காருக்குள்ளயே தூங்கிட்டாரு.  நான் மட்டும் அலாரம் வெச்சு எழுந்திட்டேன்.  மனைவி, குழந்தைங்கள்லாம் டயர்டா தூங்கிக்கிட்டிருக்காங்க.  5, ...6...7 மணிக்குக் குளிச்சு, ரெடியானோம்.  வால்பாறை போயி, அதிரப்பள்ளி போகனும்.  லாட்ஜ் ஓனர் மாலை 6 மணிக்கு மேல, வால்பாறை-அதிரப்பள்ளி ரூட்ல விட மாட்டாங்க,   வால்பாறைல லேட் பண்ணாம நேர அதிரப்பள்ளி போய்டுங்கன்னாரு.    வெஜ் சாப்பாடு வழில உருப்படியா ஒன்னும் கெடைக்காது.  இங்கயே கௌரி க்ருஷ்ணா ஹோட்டல்ல சாப்டுட்டு, வெரைட்டி ரைஸ் பார்ஸல் வாங்கிண்டு போய்டுங்கோன்னார்.  கௌரி க்ருஷ்ணா கொஞ்சம் காஸ்ட்லி,  பட் நோ டைம், நோ ஐடியா, டிஃபன் சாப்டோம்.  பார்ஸல் ரெடியாகல.  கெளம்பியாச்சு.  8 மணிக்குக் காலைல பொள்ளாச்சில கெளம்பி, மதியம் ஒரு 3 மணி போல அதிரப்பள்ளி வந்து சேர்ந்தோம்.

வழில மங்க்கி ஃபால்ஸ், மங்க்கி தான் அங்கயும், இங்கயும் விழுது.  தண்ணி விழல.  வரலாற்றுப் பதிவுக்காக ஃபோட்டோ எடுத்துட்டு, கெளம்பினோம்.  ஆழியார் டாம், பார்க்,   சோலையாறு டாம் எல்லாம் வழில க்ளிக்கிண்டே போனோம்.  கூழாங்கல் ஆறு, சிரபுஞ்சிக்கு அடுத்ததா அதிகமா மழை பொழியற சின்னக் கல்லாறு இதெல்லாம் பாக்கல.  ஆழியாறு டாம் வ்யூ மேல போற ரோடு வளைவுகள்லேந்து பாத்தா சூப்பரா இருக்கு.  




வால்பாறைல கருமலை எஸ்டேட்டோட பாலாஜி கோவில் ஒன்னு சின்னதா அழகா, அவங்களோடு ப்ரைவேட் கார்டன்குள்ள இருக்கு.  ஃபோட்டோ, வீடியோ அனுமதி இல்லயாம் !!  அங்க தரிசனம் பண்ணிட்டு அதிரப்பள்ளி நோக்கிப் பயணித்தோம்.  வழி நெடுக எங்க பாத்தாலும் ஒரே பசுமை, அப்பப்ப கொஞ்சம் தூறல், மே மாசத்துல தமிழ்நாட்ல மிஸ்ட்டு (பனி ப்பா!!) படர்ந்திருக்கும் இன்னொரு இடம்.  சில்லுனு ஒரு பயணம், ஏசிய ஆஃப் பண்ணி, கார் ஜன்னலை எறக்கி விட்டோம்.  ஒரு நாப்பது கொண்டை ஊசி வளைவுகள்.   தமிழ் நாடு பார்டர் வரைக்கும் ரோடு அகலமா இருக்கு, அங்கங்க டீ கடைகள், வீடுகள்னு பாக்க முடியுது.  நம்ம ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் எல்லைக் கதவு தாண்டினதும் ரோடு அகலம் கொறஞ்சிடுச்சி.   10 அடில கேரள வன எல்லை ஆரம்பிக்குது, அவங்க கேட்ல குழந்தைங்க, ட்ரைவர் உட்பட எத்தனை பேர், போறீங்க, எங்க போறீங்கன்னு கேட்டு,  வண்டி நம்பர், நபர்கள் எண்ணிக்கை எல்லாத்தையும் எழுதி, ட்ரைவர்ட ஒரு ஃபார்ம்ல கையெழுத்து வாங்கிட்டு, நமக்கும் அப்டி ஒரு டிக்கெட் குடுக்கறாங்க.  அத பத்ரமா கொண்டு போய் அதிரப்பள்ளில அதே மாதிரி இருக்கற ஒரு பூத்ல குடுக்கனும்.  திரும்பி வரும்போதும் அதே மாதிரி இந்த பூத்ல ஒரு டிக்கெட் வாங்கிட்டு, நம்ம பார்டர்ல இருக்கற கேரளா கேட்ல குடுக்கனும்.  சீட்டு பத்ரம்.
















கேரளாக்குள்ள  வந்தாச்சு.  அதிரப்பள்ளி வரை இதே ரூட்ல போய்ட்டு திரும்பி வந்தா டாக்ஸிக்கு கேரளா பர்மிட் தேவையில்லை.  ஆனா வால்பாறை வழியா அதிரப்பள்ளி போய்ட்டு அப்டியே திருச்சூர், கோயம்புத்தூர் வழியா வந்திடலாம்னு நெனைச்சா பர்மிட் வேணும்.  ஒரு கார் போற அளவுதான் ரோடு அகலம், அடர்ந்த காடுகள்.  ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை.  யானை வரும், சிறுத்தை வரும், கரடி வரும், முதலை கடிச்சிடும்னு வழி  நெடுக போர்டுகள்.  வால்பாறை-அதிரப்பள்ளி ரூட்ல டீ, காபி, டிஃபன் கடைகள்னு ஒன்னும் கெடையாது.  இந்த வால்பாறை-அதிரப்பள்ளி ரூட் மாலை 6 மணிலேந்து மறு நாள் காலை 6 மணி வரை மூடிடுவாங்க, விலங்குகளுக்காக. ( நம்மளுக்காகவும்).  சூப்பர் ஃபாரஸ்ட், எஸ்டேட்ஸும் கெடையாது.  கேரளா வண்டி எல்லாம் சல்லு, சல்லுன்னு வராங்க,  குருட்டு டர்னிங்க்ல கூட ஹாரன் அடிக்கறதில்ல, ஸ்லோ பண்றதில்ல.  மத்த ஸ்டேட்ஸ் வண்டிங்க தான் பாத்து, பாத்து ஹாரன் அடிச்சு, ஸ்லோ பண்ணி, ரோட விட்டு எறங்கி போகனும்.  பஸ் அதிகமா இந்த ரூட்ல இல்ல, பஸ்ல வந்தா இப்டி நிறுத்தி, நிறுத்தி வேடிக்கை பாத்திட்டு, ஃபோட்டோ எடுத்திட்டெல்லாம் போக முடியாது.  இன்னும் சில கூட்டுக் குடும்பங்கள் பாரம்பர்ய டூர் முறைப்படி வீட்டு சாப்பாடு கட்டிட்டு வந்து சாப்படறாங்க.  

ஞாயிறு காலை 8.30 மணிக்கு பொள்ளாச்சில கிளம்பி, ஒரு 3 மணி போல அதிரப்பள்ளி வந்து சேந்தோம்.   நண்பர் ப்ரேம் நாத் போன வாரம் தான் இதே பேக்கேஜ் போய்ட்டு வந்திருந்தார்.  எல்லா வழிலயும் உதவியா இருந்துது அவரோட டிப்ஸ்.  அவர் தங்கியிருந்த கணவாய் ரிசார்ட்ல தான்  நாங்களும் ரூம் புக் பண்ணியிருந்தோம்.  நான் ஏசி 24 மணி நேரத்துக்கு 1350 ₹.  நாங்க ரிக்வெஸ்ட் பண்ணினோம்னு வெஜ் சாப்பாடு வேற அவங்க தங்கையே செஞ்சு குடுத்தாங்க.  ரூம் கொல்லை பக்கத்துலயே அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியோடு ஆறு ஓடுது.  இங்க தான் கமலோட புன்னகை மன்னன், விக்ரமோட ராவணன், பாஹுபலி ஷூட்டிங் எல்லாம் எடுத்திருந்தாங்க.   வந்த டயர்டுக்கு மோக்ஷத்தை பாத்தா மாதிரி இருந்துது.  ஒரு ரெண்டு மணி நேரம் கொட்ற மழைல ஆத்துல ஆட்டம் போட்டோம்.   தண்ணி இங்க இருக்கு மே மாசத்துல, குடிக்கலாம், முங்கி குளிக்கலாம், பூஜை பண்ணலாம், எல்லாம் பண்ணினோம்.  நைட் ஒரு ஏழு மணிக்கு அன்லிமிடெட் சப்பாத்தி, தால், பொன்னி ரைஸ், ரசம், பப்படம், தயிர், நல்ல தூக்கம், சாயந்தரம் 6 மணிக்கு போட்ட ஜனரேட்டர், காலைல தான் அணைச்சாங்க.  அடிக்கடி மரம், ஏதாவது விழுந்து இப்டி ஆய்டுமாம்.  காலைல தான் வந்து சரி பண்ணுவாங்களாம்.  நல்ல உபசரிப்பு. நல்ல மெய்ன்டனென்ஸ்.  







காலை எப்ப வரும், ஆத்துல குளிக்கலாம்னு ரெண்டு, மூணு தடவ எழுந்து, எழுந்து பாத்தேன்.  ஒரே இருட்டு.  காலை எட்டு மணிலேந்து மாலை 5 மணி வரைக்கும் தான் ஃபால்ஸ்க்கு அனுமதி, பெரியவங்களுக்கு 30₹,  நேத்திக்கு சரியான கும்பல், இன்னிக்கு வொர்க்கிங் டே ங்கிறதால கும்பல் அதிகமா இல்ல.  நாங்க தான் ஃபர்ஸ்ட் டீம், என்ட்ரன்ஸ்லேந்து ஒரு பத்து நிமிஷம் நடந்தா அருவி மேல வந்து சேந்துடறோம்.  அங்கிருந்து கீழ போக வழி இருக்கு, நாங்க போகல, திருப்பி ரூம்க்கு வந்து ஆத்துல குளியல், டிஃபன் பூரி, கிழங்கு, புட்டு, கடலைக்கறி, தோட்டத்து மாம்பழம்.  சாப்டுட்டு  மதியம் 12 மணிக்கு ஊருக்குக் கெளம்பினோம்.  பொள்ளாச்சில ஒரு டிஃபன், சேலத்துல டின்னர், நான் ஸ்டாப் தாம்பரம் காலை 3 மணிக்கு, 

ட்ரைவர் டைசன் ஆஃஸம், ப்ரேம் ப்ளான், ட்ராவல்தான் வெரி ஹெக்டிக், டோல் சார்ஜ்ஜே 1000 ₹ மேல ஆய்டுச்சுப்பா,  பொள்ளாச்சி வரை பஸ்ல போய்ட்டு, அங்கிருந்துதான் டாக்ஸி எடுக்கனும்.  பாப்போம், தூங்கி, ஒரு பக்கெட் குளியல் போட்டு ஆஃபீஸ் கெளம்பனும்,  

மீண்டும் அடுத்த டூர்ல சந்திப்போம்.




Oct 6, 2009

கோடைக்கானல் டூர்

யுனிவர்சிடி வேலைய விட்டு கம்பனி வேலைக்கு வந்தப்பறம் போற மொதல் டூர். ஞாயிற்றுக் கிழம மட்டுந்தான் லீவு கம்பனில. யுனிவர்சிடிலயும் அப்டிதான் இருந்துது. அப்பறம் ரெண்டு நாள்னு மாத்திட்டாங்க. வெள்ளி, சனி ரெண்டு நாள் முடிவா லீவு போட்டாச்சு. எங்க டூர் போறது, எவ்ளோ நாள் போறது, அங்க என்னென்ன இருக்கு பாக்க, தங்கறது, சாப்பிடறது எங்க இப்டி எல்லாமே வ்யாழக் கிழம (28.08.2009) தான் முடிவு எடுத்தது. வீட்ல தங்கற நேரம் கொறஞ்சதால இந்த டூருக்கு ரொம்ப முக்யத்துவம். ஆபீஸ் நெனப்பே இல்லாம இருக்கனும்னு.

வ்யாழக் கெழம நெட்ல பாத்து கொடைக்கானல் போலாம்னு முடிவு பண்ணி, அங்க என்னென்ன எடம்லாம் பாக்கனும்னும் லிஸ்ட் போட்டாச்சு. நாம நெனைக்கும்போது ட்ரைன், பஸ்ல டிக்கெட் கெடைக்குமா. மொதல் வெடி அங்கதான் ஆரம்பம். ட்ராவல்ஸ் சைட்டெல்லாம் செக் பண்ணி, பர்வீன் ட்ராவல்ஸ்ல மெட்ராஸ்லேந்து கொடைகானல்கே பஸ் இருக்கறத பாத்து, வீட்டுக்காரம்மாகிட்ட விஷயத்த சொல்லி, தயாரா இருக்க சொல்லியாச்சு. எங்க ஆபீஸ் அடையாறு சிக்னல்ல. அடையாறு பஸ் டிப்போகிட்ட, பர்வீன் ட்ராவல்ஸ் ஆபீஸ் இருக்கு. அங்க போயி டிக்கெட் புக் பண்ணியாச்சு. ஒருத்தருக்கு நானூறோ, நானூத்தம்பதோ ஞாபகம் இல்ல. கடைசி வரிசைதான். இந்த மாதிரி ஏர் பஸ்ல புக் பண்ணி போறது இதுதான் மொதல் தடவ. A/C லாம் இல்ல. ஆனா பஸ் நல்லாத்தான் இருந்துது. தூக்கிப்போடும்போதும் தூளில இருந்தா மாதிரித்தான் இருந்துது. வீடு தாம்பரம். அதுனால பெருங்களத்தூர்ல போர்டிங் போட்டாச்சு.

ரோஹித், கமல் கூட சேந்து ஒரு டிஜிடல் ஃபோட்டோ கேமெராவும் வாங்கியாச்சு. நாலாயிரம், அஞ்சாயிரம்னு ஆரம்பிச்சு ஒரு பத்தாயிரம் அதுக்கு வெடி. நாங்க ஜாய்ண்டு ஃபேமிலி. ஒரு 13, 15 மனுஷங்க, ஒரு 26 பசு மாடுங்கன்னு. சோத்துக்கு வழி இருக்கோ இல்லியோ, ஷோஸியல் சர்வீஸ், உபன்யாசம்னு எல்லாரும் எப்போதும் பிஸி. நாங்க சின்னதா இருந்ததெல்லாம் அப்பா நெறையா ப்ளாக் அண்ட் வொயிட் ஃபோட்டோ எடுத்து வெச்சிருக்கார். அங்கேந்து வந்தது இந்த கேமெரா ஆசை. இந்த டூருக்கப்பறமே வீட்ல நடக்கற ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும், குழந்தைங்க ஆட்டங்களையும் படம் எடுத்தாச்சு இந்த கேமெரால. உடனே, உடனே டிவி ல போட்டுக் காமிச்சா எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். நோ பிலிம், நோ ஸ்டுடியோ, நோ வெயிட்டிங் ஆல்பத்துக்கு, எடுக்கும்போது கொழந்த சிரிக்கலயே, கேமராவ பாக்கலயேன்னு கவலை இல்ல. ஒரு நாலஞ்சு எடுத்தா அதுல ஒன்னு, ரெண்டுல சிரிச்சிருக்கும்.

ம்... பஸ்சு வந்தாச்சு. ஒயரமான பஸ். ஏறியாச்சு. பர்வீன்னு எழுதின வெள்ளத்துணி போட்டு மூடின புஷ் பேக் சீட்டு. ஸ்க்ரீன் போட்ட கண்ணாடி ஜன்னல். சூப்பர்தான் போ. பர்வீன்லயே மெட்ராஸ்-கோடைக்கானல் டூர் அரேஞ்ஜ் பண்றாங்களாம். அவங்களும் இதுல தான். மீதி எடத்துல திருச்சி, கோடைக்கானல் போறவங்களயும் ஏத்தியாச்சு. சும்மா சொல்லக்கூடாது. செங்கல்பட்டு, மஹாபலிபுரம், பாண்டிச்சேரி, திருச்சின்னு எங்கேந்தெல்லாம் புக் பண்ணியிருக்காங்களோ, அங்கெல்லாம் போயி அவங்கள ஏத்தினு போச்சு. மஹாபலிபுரத்துல ஹோட்டல் மாமல்லன்னு ஒரு எடத்துல சாப்பாட்டுக்கு நிறுத்தினாங்க. சாப்டுத்தான் கெளம்பினோம். ஆனா டூர்னா சாப்பாடும் சேந்ததுதானே. நேரங்காலமில்லாம கிடைச்சத, கெடச்ச அளவு சாப்டுதான் பீமன் செத்தானாம். பெரியவங்க வழிய மீறலாமா. நாமும் சாப்டுவோம்னு சாப்டாச்சு. நல்லா இருந்துது. அப்பறம் தூக்கம் தான். இந்த மாதிரி பெரிய ட்ராவல் போகும்போது பாட்டுக்கேட்டுனே போக ஒரு பொட்டி வாங்கனும். நடு ராத்திரி கண்ண திறந்து பாத்தா, பாண்டிச்சேரில போயினுருக்கு வண்டி. திருப்பித் தூக்கம். திருச்சில இருக்கற அம்மா, அப்பாட்ட சொல்லாமலே, திருச்சிய தாண்டிப் போறோம். எங்க சொல்றது. நமக்கே நேத்தி சாயந்தரம் தான் தெரியும்.

29.08.2009 வெள்ளிக் கிழமை காலம்பற ஒரு ஆறு மணி. மலைக்குக் கீழ ஒரு எடத்துல டீ, காபி சாப்பிட நிறுத்தினார். ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு க்ராமத்துக் காலை. சுத்தி மலைகள். ஒரு குடிசைல ஒரு ஆயா ஆப்பம் போட்டு விக்கறாங்க. அந்த சிலு சிலு க்ளைமேட்ல அந்த குடிசை கீத்து வழியா வர்ற அந்த அடுப்புப் புகை. நம்ம கூடவே போட்டி போட்டுனு மலை, மரத்தையெல்லாம் தாண்டி வர்ற காலையிளம் கதிரவன். ஆஹா, காட்சி எல்லாரையும் கவிஞனாக்குது. பஸ்ஸு போகும்போது பின்னாடி திரும்பி வளைந்து, வளைந்து போகும் பாதை, மலை, கூட வர்ற சூரியன், வித விதமான வடிவேலு ஹேர் ஸ்டைல்ல இருக்கற மரங்கள்னு எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணியாச்சு.

ஒன்பது மணி. கோடைக்கானல் ஹோட்டல் சிவப்ரியா வாசல்ல எறக்கிவுட்டாங்க. ரூம்லாம் பயங்கர வாடகை. ஆயிரம், ரெண்டாயிரம்னு. ப்ரோக்கர் கண்ணுல படாம நைசா ஒரு மெடிக்கல் ஷாப்ல போயி, எங்கயாவது ஒரு நானூறு, ஐநூறு ரூபாய்க்கு ரூம் கெடைக்குமான்னு கேட்டோம். அவர் ஒடனே பக்கத்துல இருந்த ஒரு ப்ரோக்கர கூப்ட்டு ஹெல்ப் பண்ண சொன்னாரு!! அங்க எல்லாருமே அரசு அங்கீகாரம் பெற்ற கைடுன்னு ஒரு ஐடி கார்டு வெச்சிருக்காங்க. நாங்க அவர் கூட போனோம். ஏரி கிட்ட, ஒரு மேட்டுல விக்னேஷ் கெஸ்ட் ஹவுஸ் னு ஒரு எடத்துக்குக் கூட்டினு போனாரு. அவர் எங்களுக்காக எண்ணூறு ரூபால ஆரம்பிச்சு, அப்பறம் நாங்களும், கூட வந்த ப்ரோக்கரும் கேட்டுக்கொண்டதற்காக ஒரு நாளைக்கு நானூறு ரூபான்னு ஒரு ரூம காமிச்சார். பாத்தோம். ஓகே சொன்னோம். பல்ல தேச்சு, குளிச்சு வெளில கெளம்பியாச்சு.

என்னென்ன பாக்கனும்னு லிஸ்ட் இருக்கு. ஆனா எப்டி போறது. ஆட்டோ, பஸ்ஸு கெடையாது. ஒன்லி டாக்ஸி. மினிமம் அம்பது ரூபாவாம். ஒரு ட்ரைவர்ட்ட எங்க லிஸ்ட காமிச்சோம். அவரு முன்னூறு ரூபா குடுங்க. இன்னிக்கு சில எடங்கள காமிக்கறேன்னு சொன்னாரு.

செட்டியார் பார்க்,
குறிஞ்சி ஆண்டவர் கோயில்,
ஒரு ஜெயின் கோவில்,
கரடி அருவி,
பேரிக்கா மரங்கள் இதெல்லாம் காம்ச்சிட்டு போட் க்ளப் கிட்ட உட்டாரு. எவ்ளவோ செலவு பண்றோம். இத பண்ண மாட்டோமான்னு நமக்கு நாமே தேத்திண்டோம். நல்லா தான் இருந்துது. குறை ஒன்றும் இல்லை. நல்ல டிரைவர், ஏசி காரு, அடிச்சுப் புடிச்சு அடஞ்சு, அடங்கி ஒக்காராம ரெண்டே பேரு.

செட்டியார்!! பேர் ராசி போல. எத தொட்டாலும் துலங்குது. பேங்க் ஆரம்பிச்சாங்க, பிஸ்நெஸ் பண்ணினாங்க, அழகழகா அரண்மனை மாதிரி வீடு கட்டினாங்க, சமுதாயத்துக்கும், சமயத்துக்கும் நெறையா தொண்டு பண்ணினாங்க, இந்த வரிசைல இந்த செட்டியார் பார்க். நாங்க போகும்போது ஒன்னும் நுழைவுக் கட்டணம் இல்ல. அருமையான, அழகான, அமைதியான எடம். ஊட்டி கார்டன், இல்ல அதைவிட அழகா. அவங்க வெட்டி போட்ருக்கற செடி குப்பையெல்லாம் வூட்டுக்காரம்மா பொக்கே பண்ணப் போறேன்னு எடுத்துனு வந்தாங்க. அடுத்தது குறிஞ்சி ஆண்டவர். முருகன் அழகுன்னு சொல்லனுமா. கோயிலோட ரெண்டு பக்கத்துலயும் பழனி வ்யூ, கோயம்புத்தூர் வ்யூ ன்னு காமிச்சாங்க. ரெண்டு ஊர்லேந்தும் வந்துருந்தா ஓரளவு புரிஞ்சிருக்கும். நமக்கு வளந்த, வாழற ஊர்லையே இன்னும் பாதி எடம் பக்கத்துலேந்து பாத்தாலே புரியல. தெரியல. அதுலெல்லாம் மனைவி கிரேட் (பொதுவா எல்லா பொம்பளைங்களுமே!!). புது அபீஸ் சேந்தா பாதி நாள் பஸ் மாறி ஏறது, ஸ்டாப் மாறி ஏறங்கறது, நம்ம வீட்டு சந்த விட்டு வேற சந்து மாறி சுத்தறது இதெல்லாம்தான் நான் மறக்காம பண்றது.

ஜெயின் கோவில் வர்ற வழில பேரிக்கா பறிச்சு போடற ஒரு எடத்துல நிறுத்தி, நாலஞ்சு பேரிக்கா வாங்கிக் குடுத்தார். என்னா பெரிசு. இதெல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணிடுவாங்கலாம். கடிச்சா ஜூஸ் கொட்றது. ஒரு லாபத்தையும் எதிர்பாக்காத பூமி மாதா எந்த கலப்படமும் இல்லாம அவ கொழந்தைங்களுக்காக தரா இதையெல்லாம். நம்ம ஊர்ல வண்டில, இல்ல ஒரு கூடைல ஒவ்வொரு சாமானா எடுத்துப் போட்டுப்போமே, அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர்லெல்லாம் இதுல பாதி சைஸு பேரிக்கா (+ கடை வாடகை + கரண்ட் பில்லு + தப்பு தப்பா பில்லு போடற ஆளுங்க சம்பளம் + வண்டி வாடகை + யாரும் வாங்காம வீணா போற சாமான்களோட விலை + கடை பராமரிப்பு + லாபம்) இருபது ரூபா வரை இருக்கும். வாட் வரி, இதெல்லாம் வேற. ஜெயின் கோவில் நம்மூர்ல அங்கங்க புள்ளையார் கோவில் கட்டி இருப்பாங்களே, அந்த சைஸு. ஆனா எல்லாம் மார்பிள். குட்டியா, ஆனா க்யூட்டா இருந்துது.

அருவிங்க கோடைக்கானல், அத சுத்தி இருக்கற கிராமங்களுக்கெல்லாம் குடி நீர். சில்லுனு வேற இருக்கும். அதுனால குளிக்காதீங்கன்னாரு ட்ரைவர் அண்ணா. சொல்றத கேக்கற பழக்கம்? கார நிறுத்தின எடத்துலேந்து ஒரு அம்பது அடி ஒத்தையடிப் பாதைல போணும். பாதைக்கு ரெண்டு பக்கமும் கரண்ட் ஃபென்சிங் (இரும்புத் தடுப்பு !!) போட்ருக்காங்க. கரடி வருமாம். சல, சலன்னு சத்தம். சிலு, சிலுன்னு காத்து. மனைவிய குளிக்க வேண்டாம்னு சொல்லிட்டு, துண்டக் கட்டிக்கினு டமால்னு தலைய வுட்டேன் கொட்ற தண்ணீல. சில்லுனு இல்ல ஜில்லுனு, ஹூஹூம். என்னவோ. மூச்சு நின்னுது ரெண்டு நிமிஷம். சொல்லவே இல்ல!! ஏற்கனவே ரெண்டு, மூணு பேர் குளிக்கறாங்க. சொல்லி இருக்கலாம். கேக்க மாட்டோம்னு தெரிஞ்சவங்களா இருப்பாங்க. கொஞ்ச நேரம் ஒரு பாறைல ஒக்காந்து யோசிச்சேன். கொஞ்சம் காலு, கொஞ்சம் கையி, கொஞ்சம் ஒடம்பு, அப்பறம் தலைன்னு நனைச்சிருக்கலாம். ஒடம்பு அந்த ஜில்லுப்புக்கு ரெடின்னு தெரிஞ்சதும் கொஞ்ச நேரம் குளிச்சேன். என்ஜாய் பண்ணினேன். என் நிலைக்கு வந்ததும் மனைவியவும் சும்மா கூப்ட்டு ஃபோட்டோ எடுத்துண்டோம். ட்ரைவர் தேடினு வந்துட்டார். பொன்னியின் செல்வன் பழவேட்டரையர் மாதிரி ஒரு பார்வை பாத்தார். பம்மினு வெளில வந்தோம். ஏரி கிட்ட போட் ஹவுஸ்ல விட்டுட்டு போனாரு.

போட்டிங் போற ஐடியா இல்ல. நெறையா போயாச்சு. வேற எங்கயும் இல்ல, இங்க மட்டும் தான் இருக்குங்கறத மட்டும்தான் அனுபவிக்கனும்னு ப்ளான். ஆளுக்கு ஒரு சைக்கிள் எடுத்துனு அப்டி ஜெமினி, சரோஜா தேவி மாதிரி போலாம்னு பாத்தேன். ஒரு தொப்பி விக்கற அம்மா, "பள்ளத்துக்கு ஓட்டிட்டு போகும்போது அப்டி இருக்கும், ஆனா மேட்டுக்குத் திருப்பி அமுத்தும்போது வில்லன் தொரத்தறா மாதிரி நினைச்சினா தான் அமுத்த முடியும்னுட்டாங்க". கல்யாணத்துக்கப்பறம் நெறையா பொண்ணுங்க சைக்கிள் ஓட்றது இல்ல. வண்டிக்கு மாறிடறாங்க. என் மனைவி என்னை விட சூப்பரா, பொறுப்பா எக்செல் ஹெவி ட்யூட்டி ஓட்றா. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்துல பொறுப்பு. நான் சூப்பரா பின்னாடி ஒக்காந்துப்பேன்.

ரூமுக்கு வந்தாச்சு. மணி சாயந்தரம் ஒரு அஞ்சு, ஆறு இருக்கும். மழை கொட்டுது, ரூமுக்குள்ளயும்!! அட்டாச்சுடு பாத் ரூம்ல பாத்தா கொச, கொசன்னு மம்மி படத்துல வர்றா மாதிரி அட்டைப் புழு. வெயில் அடிக்கும்போது மட்டும் தங்கற ரூம் போல இருக்கு காஷ்மீர் தலைநகரம் மாதிரி. இன்னும் ஒரு நாள் ஓட்டனும். நாலு எடத்தப் பாக்கணும். இது ஒன்னும் சரி படும்னு தோணல. எல்லாருக்கும் யூகலிப்டஸ் தைலம், பேரிக்கான்னு பைல ரொப்பினு போலாம்னு பாத்தா, இங்க இன்னும் கொஞ்ச நேரத்துல புழுவா ரொம்பிடும் போல இருக்கு. மத்த இடங்கள் காஸ்ட்லி நம்ம பட்ஜெட்டுக்கு. புழுவா, பணமா எதுக்கு பயப்படறது.

பணத்த கொடுத்துப் புழுவ தொரத்த வேண்டியதுதான். அண்ணாவுக்கு ஒடம்பு சரி இல்ல, ஊருக்குப் போறோம், காலி பண்ணிக்கறோம்னு சொன்னோம். ஒரு நாள் வாடகை (400), ப்ரோக்கர் கமிஷன் (150) போக மிச்சம் 250 தரேன்னு அன்பா சொல்லி குடுத்தாரு. யூகலிப்டஸ் தைலம் வாங்கலாம்னு பேசிண்டோம். எனக்குத் தெரிஞ்ச எடம் இருக்கு, விலை கொறச்சு வாங்கித் தரேன்னு சொன்னாரு. நாங்க விசாரிச்ச எடத்த விட இருபது ரூபா ஜாஸ்தி. அவர் த்ருப்திக்கு ஒண்ணு, ரெண்டு வாங்கிண்டோம்.

ஓடினோம் நேர சிவப்ரியா ஹோட்டல்க்கு. ஒரு நான் ஏசி டபிள் பெட் ரூம் வித் அட்டாச்சிடு பாத்ரூம் வித் சுடுதண்ணி, தொலைபேசி ஒரு நாளைக்கு எண்னூறோ, ஆயிரமோ சொன்னார். ஒரு தடவ முடிவு செஞ்சுட்டா நம்ம பேச்சையே நாம கேக்க மாட்டோமே. புக் பண்ணியாச்சு. ரொம்ப அருமை, ரூம், ரிசெப்ஷன், சாப்பாடு (விலை, டேஸ்ட்), கவனிப்பு, ஜோர், ஜோர். மெட்ராஸ் ரத்னா ஸ்டோர்ஸுக்கும் இவங்களுக்கும் தொடர்பிருக்கு. மெனு கார்டுல "விசிட் அவர் ஷோ ரூம்"னு போட்ருந்துது. நல்ல வ்யூன்னு சொல்லி ஒரு ரூம் குடுத்தார். இதெல்லாம் பாரதியார்க்குக் கெடச்சிருந்தா இன்னும் பத்துப் பாட்டாவது எழுதி இருப்பார். தூங்கறவங்களுக்கு என்ன யூஸு.

வெளில போயி அரசு டூரிஸ்ட் ஆபீஸக்கண்டுபுடிச்சோம். மிச்ச எடத்தப் பாக்கறதப் பத்திப் பேச. அவங்க ஒன்னும் அரேன்ஜ் பண்றதில்லையாம். லோக்கல் டூரிஸ்ட் ஆளுங்கள்ல ஒருத்தர நம்பிக்கையானவர்னு கூப்ட்டு எங்க பாக்கி லிஸ்ட குடுத்தார். அவர் சரின்னு சொல்லி தலைக்கு (எல்லாத்துக்கும்தான்) இருநூறு ரூபா போல சொன்ன ஞாபகம். சரின்னு பணத்தக் குடுத்தோம். வண்டி அடையாளங்கள சொல்லி காலைல ஹோட்டல்லையே வந்து பிக் அப் பண்ணிப்பாங்கன்னாரு. அப்டியே கொஞ்ச நேரம் சுத்திட்டு கொஞ்சம் பழங்கள வாங்கினு ஹோட்டல்க்கு வந்தோம்.
டிபன ஒரு கட்டு, கட்டிட்டு ஒரு தூக்கத்தைப் போட்டோம்.

30.08.2008 சனிக்கிழமை, வெளிச்சம் கண்ணத் தட்டியது, தொறந்தோம். எந்த க்ளைமேட்லயும் குளிக்கறதுக்கு ரெண்டு பேருமே அஞ்சறதில்ல. என்ன என் மனைவி வெளில போய்ட்டு வந்தா, மாலைக் குளியல்னு ஜமாய்ப்பா. நமக்கு நம்மூர் புழுதிய அலம்பி உட்ரதுல அவ்ளோ இஷ்டம் இல்ல. மனசு வலிக்கும். இப்பப்ப அதுவும் ஆரம்பிச்சாச்சு. டிபனும் சாப்டாச்சு. அலங்காரமும் ஆச்சு. வண்டி வந்தபாடில்ல. ரூம பூட்டிட்டு போலாம்னா, ரூம் க்ளீனிங்னு வந்துட்டாங்க. ரிஷப்ஷன்ல ஒடனே நீங்க வேற ரூம்க்கு போங்க சார். வெயிட் பண்ண வேணாம்னு உதவி பண்ணினார். கலைச்சுப் போட்ட ரூம்க்கும், புது ரூமுக்கும் வித்யாசம் இருக்கத்தான் இருக்கு. நான் கொஞ்சம் பெரிசு. என்னோட ஜிப்பா இன்னும் பெரிசு. போன் பேசற போட்டோல, மலை ஏற்ர போட்டோல காஷ்மீர் தீவிரவாதி மாதிரி இருக்கு. டூர் வண்டி வந்தாச்சுப்பா.

ஒரு மணி, ஒன்றை மணி நேரம் லேட்டு. விரட்டி, விரட்டி எதையாவது ஒண்ணு, ரெண்ட விட்டு கூட்டினு வந்திடப்போறானோ. ஒரு பதினஞ்சு, இருபது பேர் ஒக்காரலாம். என்னடா இவ்ளோ எடத்துக்கு 200 ரூபா வாங்கறாங்கலேன்னு பாத்தேன். இதான் விஷயம். வண்டில ரெண்டு, மூணு லிஸ்ட் கார்டு. க்ரூப், க்ரூப்பா ஒவ்வொரு டூரிஸ்ட்காரனும் புக் பண்ணி, ஒரே வண்டில ஏத்தி விட்ருக்காங்க. இது இன்னொரு விஷயம். எந்த க்ரூப் லிஸ்ட்ல இருக்கற எடம் கட் ஆகப் போறதுங்கறது சஸ்பென்ஸ். எதையோ காமிக்க போறாங்கன்னு நெனைச்சா ஒரு அரை மணி நேரம் கழிச்சு ஒரு எடத்துல நிறுத்தி இன்னும் ரெண்டு பேர ஏத்திக்கறாங்க. அவ்ளோதான். வண்டி கெளம்பியாச்சு. ஆட்டு மந்தை இருக்கற எடத்த பாக்க வன அதிகாரிகள்ட்ட பர்மிஷன் வாங்கனும்னு ஒவ்வொருத்தர்ட்டயும் இன்னும் முப்பது ரூபா வாங்கினாங்க. வழக்கம் போல கொஞ்சம் முனுமுனுப்பு, எதிர்ப்பு. அப்பறம் குடுத்தாச்சு. ஒவ்வொருத்தரும் அறிமுக உரையாடி முடிந்தது.

கிரீன் வாளீ !! பசுமைப் பள்ளத்தாக்கு வ்யூ,
கோல்ஃப் க்ரவுன்ட்,
டாப் லேக் வ்யூ,
சின்மயா மிஷனோட அனுமார் கோவில்,
பைன் ஃபாரஸ்ட்,
பாம்பாறு அருவி,
மகாலக்ஷ்மி கோவில்,
பூம்பாறை க்ராம வ்யூ,
பில்லர் ராக் வ்யூ,
குணா கேவ்,
ஷீப் ஃபார்ம் இதெல்லாம் தான் இன்னிக்குப் பாத்தது.

பசுமைப் பள்ளத்தாக்கு வ்யூ போற வழி முழுக்க ஊர்த் திருவிழாம்போது வழில ரெண்டு பக்கமும் பலகாரம், பொம்மை, எவர்சில்வர் சாமான்னு கடை போடுவாங்கல்ல, அது மாதிரி ட்ரை ஃப்ரூட், தேன், மூலிகை, பழங்கள்னு கடைகள். தாண்டிப் போனா இரும்பு வேலி போட்ருந்தாங்க. தாண்டிப் போகமுடியாதபடி. ஆனா கொரங்குங்க குடும்பம், குடும்பமா இங்க, அங்கன்னு போயிட்டு வருதுங்க. ஒரே பனி மூட்டம். ஏதோ ஆயிரக் கணக்குல ஆழம்னு சொன்னாங்க. ஒன்னும் சுத்தமா தெரியல. ரெண்டு, மூணு வகைல பெறிக்க வாங்கிண்டு, சுட்ட சோளக்கருது வாங்கித் தின்னுட்டு, ரோட க்ராஸ் பண்ணினா கோல்ஃப் க்ரவுண்ட். சுத்தி வலை போட்டு மூடி இருக்காங்க. ஓட்ட வழியா பாத்தோம். நாலஞ்சு அடிக்கு புல்வெளி தெரிஞ்சுது. அப்பறம் பனிதான். கீழ விக்கற விலைய விட இங்க பேரிக்கா கொஞ்சம் சீப்தான்.

அடுத்தது டாப் லேக் வ்யூ. கீழ இருக்கற ஏரிய மேலேந்து பாக்கறோம். ஸ்டார் வடிவத்துல தெரியும்னார் கைடு. மிஸ்ட் ஃபார்ம் (பனி மூட்டமாம்) ஆய்டுச்சாம். ஏரிய சுத்தி மரங்கள் வேற. தெரிஞ்சத பாத்துட்டு கெளம்பினோம். அடுத்தது சின்மயா மிஷன் சார்புல இருக்கற ஒரு சின்ன ஆஞ்சனேயர் கோவில். சூப்பரா இருந்தார். பைன் ஃபாரஸ்ட், சினிமால வில்லன் ஹீரோயின துரத்துவாரே அந்த இடம். சூப்பரா இருந்துது. குதிரை ரைடு கூப்டாங்க. ஏறல. குதிரை அன்னிக்கு இருக்கற மாதிரிதான் இருக்கு. ஆனா ஏதாவது ஆச்சுன்னா, இன்னிக்கு இருக்கற ஆளுங்க அத எம்.ஜி.ஆர் மாதிரி தடுத்து நிறுத்தி அடக்குவாங்களாங்கறதில அவ்ளோ நம்பிக்கை. ஃப்ரஷ்ஷா கேரட் வித்தாங்க, வாங்கி சாப்டோம். ஜம்முனு இருந்துது. இங்க ஒரு க்ராமத்து க்ரூப் அவங்கள போட்டோ எடுக்க சொன்னாங்க. ரெண்டு, மூணு எடுத்து, அவங்க ஊருக்கும் ப்ரிண்ட் போட்டு அனுப்ச்சு வச்சாச்சு. ரொம்ப நன்றின்னாங்க போன்ல. உருப்படியா ஒரு வேல.

முப்பது ரூபா வாங்கிண்ட ஆட்டு மந்தை காமிக்கல. மேயற எடத்த காமிச்சாரு. அங்க ஆட்டுப் புழுக்க கூட இல்ல. டீமுக்கு கோவம் வந்தாச்சு. சரின்னு ட்ரைவர் நான் ஒரு ஹேர் பின் பெண்டு போட்டு வரேன். நீங்க இப்டியே கைடு கூட கீழ எறங்கிப் போங்கன்னாரு. சூப்பர் புல்வெளி. பசங்கள்லாம் குதிச்சு, பொரண்டு, ஒருத்தன் மேல ஒருத்தன் விழுந்து, வித விதமான கெட் அப்புல போட்டோ எடுத்துண்டாங்க. நாங்க கொஞ்சம் பேர் கைடு கூட நடந்து வந்தோம். வழில அவரு ரத்தம் குடிக்கற அட்டைப் புழுன்னு ஒன்ன காமிச்சாரு. புழு சைஸ் தாங்க. நம்ம ஊரு அட்டைப் பூச்சி போல இல்ல. கருப்புக் கலர்ல ஒன்னு, ரெண்டு இன்ச் நீளத்துல இருக்கும் மெல்லீசா. யாரும் சொன்னா கேக்க மாட்டேங்கறீங்கன்னாரு. ஆட்டம் போடற பசங்கள்ட ஒடனே இதப் பத்தி சொன்னோம். அவ்ளோதான். எல்லாப் பயலும் கீழ ஒடியாந்துட்டான்க. அவனவன் செருப்பு, கோட், ஜெர்க்கின், ஷூ எல்லாத்தையும் கழட்டி ஒதறினாங்க. அங்கங்க விழுந்துது. நாலஞ்சு பேருக்கு கால் விரல் சந்துல சத்தம் போடாம ரத்தம் சாப்டுனு இருந்துது. எல்லாம் க்ளீன் பண்ணினு கெளம்பினோம்.

பாம்பாறு அருவி. நமக்குத்தான் அது பெரிய விஷயம் இதெல்லாம். உள்ளூர் காரங்களுக்கு அவசரத்துக்கு அலம்பிக்கற எடம். கீழ கொஞ்சம் மோசமா இருந்துது. மலை மேல ஏறி கொஞ்ச தூரம் போயி என்ஜாய் பண்ணினோம். அடுத்தது மஹாலக்ஷ்மி கோவில். இப்பத்தான் கட்டினு இருக்காங்க கேரளா ஸ்டைல்ல. சின்ன, சின்ன சன்னிதி, பூட்டி இருந்துது. சுத்தி அருமையான காட்சிகள், எல்லாத்தையும் போட்டோ எடுத்துனோம். பூம்பாறை க்ராமம் டூர்னு சொல்லிட்டு, இந்த எடத்துலேந்து கீழ இருக்கற பூம்பாறை க்ராமத்த காமிச்சாங்க.

அடுத்தது பசங்க அமக்களம் பண்ணினதுக்காக திருப்பி கொஞ்ச தூரம் நடந்து போயி குணா குகைகளுக்கு போலாம்னு கூட்டினு போனாரு கொல்லைப் பக்கம் வழியா. ஒரு ஒன்னு, ரெண்டு கி.மீ நடந்தோம். அருமையான சூழ்நிலை. பனி மூட்டம். அடர்ந்த மலைக் காட்டுக்குள்ள ஒத்தையடிப் பாதைல போறோம். வழில ராக் பில்லர் காமிச்சாரு. மலைகளே நாலு தூண் மாதிரி இருக்கு இயற்கையா. எங்களுக்கு ரெண்டுதான் தெரிஞ்சுது. மிஸ்ட்!! குணா குகைகளுக்குப் பேரு டெவில்ஸ் கிச்சன்னு வைச்சிருக்காங்க. நிறையா பேர் செத்துப் போயிருக்காங்க, காணாம போயிருக்காங்களாம். ஒடம்பு கூட கெடைக்காதாம். கல்வெட்டு கூட வெச்சிருந்தாங்க. ஷூட்டிங் நடந்த எடத்துக்கெல்லாம் இப்ப போக முடியாது. தரைல, சுத்தின்னு எல்லா எடத்துலையும் கனமான இரும்பு வேலி. அப்பறம் என்ன? அவ்ளோதான். அவனவன் கைல இருக்கற லிஸ்டுல இத காமிக்கல, அத காமிக்கலன்னு பொலம்பினே வந்தோம். ஹோட்டல் கிட்ட எறக்கி விட்டாங்க கொட்டற மழைல. புண்ணியம் போங்க. ஆனா ஒரு விஷயம். இந்த வேன்ல நாங்க ஒவ்வொரு எடத்தையும் பாத்துட்டு, வண்டில ஏறி கதை, கதையா பேசினு வந்தோம். ரெண்டு ஜோடி மட்டும் காச குடுத்துட்டு, கண்டக்டர், ட்ரைன் கார்டு மாதிரி எங்கயுமே எறங்கவே இல்லையே. ரூமுக்கு வந்தாச்சு. நல்ல டயர்டு. ரூம்லேந்தே நைட்டுக்கு வேண்டிய டிபன ஆர்டர் பண்ணி சாப்டுட்டு தூங்கினோம்.

31.08.2008, ஞாயிறு. திருச்சிக்கு வீட்டுக்கு் லஞ்ச்சுக்குப் போயிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு நைட் பஸ் ஏறலாமா, இல்ல இன்னும் பாக்கி இருக்கற எடத்துல பாக்க முடிஞ்சத பாத்துட்டு, திருச்சிக்கு ஈவினிங் போயிட்டு நைட் பஸ் ஏறலாமா. ஒரு டாக்ஸி அண்ணாச்சி கிட்ட கேட்டோம். செண்பகனூர் ம்யூஸியம் காமிச்சிட்டு, லா ஸலேத் சர்ச்சுல விடறேன்னாரு. நூறோ, இன்னும் ஒரு அம்பதோ குடுத்த ஞாபகம். செண்பகனூர் ம்யூஸியம் ஒரு க்றிஸ்டியன் காலேஜ் மெயின்டனென்ஸ்ல இருக்கு. அரிய, பழைய விலங்குகள், பறவைகள்னு எல்லாத்தையும் பதப் படுத்தி வெச்சிருக்காங்க. மூணு ரூபா ட்க்கெட்டு, போட்டோ எடுக்கக் கூடாதுன்னாரு ரிஸெப்ஷன்ல இருந்த ஃபாதர் தாத்தா. சரின்னு சொல்லி உள்ள போயி பாத்தோம். கொஞ்சம் பேர் ஃப்ளாஷ் இல்லாம போட்டோ எடுத்துண்டாங்க. நல்லா இருந்துது. அடுத்தது லா ஸலேத் சர்ச்சு. 1863 ல அடிக்கல் நாட்டப்பட்டது, இங்க ஒரு கோவில், ஃப்ரான்ஸ்ல லா ஸலேத்துங்கற இடத்துல அன்னை காட்சி கொடுத்த எடத்துல இன்னொரு கோவில். இதெல்லாம் அங்க வெச்சிருந்த கல்வெட்டுல போட்டுருந்துது.

பக்கத்துலயே கூக்கர்ஸ் வாக். சர்ச்சுலேந்து ஏரிக்குப் போக இந்த ஒத்தையடி குறுக்குப் பாதைய கூக்கர் கண்டு புடிச்சாராம். இப்ப நாலஞ்சு பேர் நடக்கற அளவு டைல்ஸ் போட்டு, என்ட்ரன்ஸ், கேமிராக்குன்னு காசு வாங்கினு உட்றாங்க. இயற்கை எடம் குடுக்கற வரைக்கும் நம்ம எக்ஸ்டெண்டு பண்ணினே இருப்போமே. அது எதிர்ப்பு தெரிவிக்கும் போது பாத்துப்போம், இருந்தா!! அப்டியே நடந்து வந்தா ப்ரெயின் பார்க் கிட்ட கொண்டு வந்து விடறது அந்த பாதை. இது செட்டியார் பார்க் இல்ல. கவர்மெண்ட்டோடது. அவங்க ஆபீஸ் மாதிரியே இருக்கு. கோடைக்கானல்லயே செடி, மரம் அதிகம் இல்லாத இடம் இது. எதோ வேலை பார்த்துக் கொண்டே, வேலை பார்த்துக் கொண்டிருக்காங்க இங்க. ஒரு போதி மரம் இருக்கு இங்க. அதுக்குக் கீழ சின்னதா ஒரு புத்தர் சிலைய வெச்சிருக்காங்க.

கவர்மெண்ட்டும் முன்ன மாதிரி இல்ல இப்பெல்லாம். சும்மா சாப்ட்டா திட்டு வாங்கறோம், மாட்டிக்கறோம் தெரிஞ்சிருக்கு. அதுனால புதுசு, புதுசா ஏதாவது வேலைய உண்டாக்கி எல்லாரும் எடுத்துண்டது போக திட்டத்துக்கு எவ்ளோ தேவைப்படும் கணக்குப்பாத்து நிதி ஒதிக்கித் தான் இப்பெல்லாம் ஆரம்பிக்கறது. நமக்கும் ரோடு (பின்னாடியே அத ஒடைக்கறதுக்கு கார்ப்பொரேஷன், ஈ. பி காரங்க, குடிநீர் வாரியம் ஆளுங்க, போன் ஆளுங்க,...) சாக்கடை வசதி (அப்பப்ப திறந்து இருக்கும் சூடு ஆறுவதற்காக, மழை காலத்துல இதுலேந்தும் தண்ணி வெளில வரும்), லைட் (டோல்கேட்டுக்கு முன்னாடியும், பின்னாடியும் கொஞ்ச தூரத்துக்கு, புதுப் பாலங்களுக்கு), பே அண்டு யூஸ் டாய்லெட் (சுத்தம் நாமளும் பண்ண வேண்டாம், அவங்களும் பண்ண மாட்டாங்க), நடைபாதை, (நடைபாதைக் கடைகள்), சிங்காரச் சென்னை 1950, 55, 60,65...இப்போ சிங்காரச் சென்னை 2010, புதுப் பாலங்கள்னு, ப்ளாஸ்டிக் சேர் மேல பெட்ஷிட் போட்ட மிதவை, சொகுசு, தாழ்தள, தங்கப் பேருந்துகள் (இரும்புல இருந்தா கொளுத்தும்போது த்ருப்தியா எரிய மாட்டேங்குதாம்), இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்துல ரெண்டு, மூணு ரூபாய் டிக்கெட்டுக்கு பஸ் (மதியம் 12 மணிலேந்து மாலை ஒரு 4 மணி வரை இந்தப் பேருந்துகள நீங்க பாக்கலாம்) நெறையா வசதிகள்.

மொழி, ப்ராந்திய, தேசியப் ப்ரச்சினைகள், தீவிரவாதம், விலைவாசி, புதுப் புது வ்யாதிகள் ஜாஸ்தி ஆயினே இருக்குன்னு நாம ஸ்டேட் கவர்மெண்ட் கிட்ட சொல்ல, அவங்க மத்திய அரசு கிட்ட சொல்ல, அவங்க ஐ. நா சபைல சொல்ல, அவங்க அமெரிக்கா, ப்ரிட்டன் கிட்ட சொல்ல, அவன் நிலால தண்ணி இருக்கா, புதுசா எதாவது க்ரகம் கிடைக்குதான்னு பாத்துட்டு வரேங்கறான். வெயிட் பண்ணுவோம், ப்ளீஸ். இல்ல நாமளும் இந்த தேசிய நீரோட்டத்துல கலந்துனு நம்ம பங்க ஆற்றுவோம், எடுத்துப்போம்

இதாம்பா டூர். 31ம் தேதி திருச்சி போயிட்டு, நைட் கெளம்பி மறுநாள் ரெஸ்ட் எடுக்க ஆபீஸ் வந்தாச்சு. ரொம்ப பிசி. அப்பறம் பாப்போம்.

ஜய் ஹிந்த்! ஜய் ஸ்ரீராம்!!

Jan 4, 2009

பெங்களூர் டூர்

டிசம்பர் 2008, கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் ஆச்சு. 1998 -ல M.C.A மொதல் செமெஸ்டர் பெங்களூர்லதான் படிச்சேன். பெரிம்மாவோட தங்கை மாலாக்கா ஆத்துல தங்கிண்டு. அப்பறம் இன்னொரு சித்தி தங்கை, ஷோபா சித்தியும் அங்கதான் இருக்கா. அந்த வருஷம் தீபாவளி அவங்க வீட்லதான். இப்டி அங்க இருந்தவங்க வீட்டுக்கெல்லாம் இன்னும் போகவே இல்ல. ஒரு வழியா ப்ளான் ரெடி.

மன்னார்குடி முகுந்த், கல்கட்டா வினோத் சர்மா, திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் எல்லாம் இப்போ பெங்களூர்லதான் இருக்காங்க. க்றிஸ்மஸ் வ்யாழக்கெழம. வெள்ளிகிழம ஒருநாள் லீவு போட்டா நாலு நாள் லீவு. ஆனா சனி, ஞாயிறு மட்டும் ப்ளான் போடலாம்னு ஆரம்பிச்சாச்சு. பெங்களூர், மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம், கூர்க், மந்த்ராலயம், நந்தி ஹில்ஸ், கோகர்ணம், உடுப்பி, ஸ்ருங்கேரி, இப்படி பல இடங்கள். மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம் ஒரு நாள், லோக்கல் பெங்களூர் ஒரு நாள்னு முடிவாச்சு. பஞ்சபாண்டவாஸ், பத்மநாபன் குடும்பம் ரெண்டும் கூட வர்றதா சொல்லியாச்சு. சரின்னு ஒரு சுமோ இல்ல க்வாலிஸ் ஏற்பாடு பண்ண சொன்னோம், ஷேர் பண்ணிக்கலாம்னு. கிலோ மீட்டருக்கு எட்டு ரூபா, ஒம்பது ரூபான்னு இருந்துது. சர்மாஜி கடின முயற்சி பண்ணி அவர் நண்பர் மூல்யமா, 6.50 -க்கு ஒரு க்வாலிஸ் ஏற்பாடு பண்ணினார்.

பெங்களூர் போயிட்டு வர டிக்கெட் புக் பண்ணனும். நம்ம தமிழ்நாடு பஸ்களுக்கு இன்டர்நெட் புக்கிங் கிடையாது. என் மிஸஸ்க்கு இந்த ட்ரிப்ப பத்தி ஒண்ணும் சொல்லாம சஸ்பென்ஸ் குடுக்கலாம்னு பாக்கறேன். சுப்ரிய தி.நகர் தமிழ்நாடு விரைவுப் போக்குவரத்துக் கௌண்டர்ல பண்ண சொல்லலாம்னா, அங்க பெரிய க்யூ.
கர்நாடகா பஸ்ல புக் பண்ணலாம்னா, அவனுங்க கடன்காரங்க மட்டும்தான் (கிரெடிட் கார்ட் வெச்சிருக்கறவங்க) புக்கிங் பண்ண முடியும்னு சைட்ல சொல்லி இருக்கானுங்க. சுப்ரியும் பாவம். நம்ம பத்மநாபன் ஒரு கிரெடிட் கார்டு ஹோல்டர். அவரு நான், என் மனைவி, சுப்ரி, கார்த்தி, கமல் அஞ்சு பேருக்கும் போக வர டிக்கெட் புக் பண்ணிட்டாரு. போக, வர பண்ணினா கர்நாடகா பஸ்ல பத்து பெர்சென்ட் டிஸ்கௌன்ட். பஸ் டயத்துக்கு முன்னாடி ரெண்டு மணி நேரம் கர்நாடகா ஸிட்டி பஸ்ல ஃப்ரீயா போகலாம்.

26.12.2008
வெள்ளிக்கிழம நைட்டு பஸ் ஏற வேண்டியது. 27, 28 அங்க சுத்தவேண்டியது. திரும்பி 28 நைட்டு அங்க பஸ் ஏறி, திங்கக்கிழம ஆபீசுக்கு வந்துட வேண்டியது. இதுதான் ப்ளான். க்வாலிஸ் ரெண்டு நாள்ல 500 கி.மீ. க்கு மேல சுத்தினாதான் கி.மீ. க்கு 6.50. அதுனால ரெண்டாம் நாள் ப்ரோக்ராம் திருப்பி யோசிக்கணும். மைசூர்லேந்து அப்டியே கூர்க் போகலாம்னு பத்மநாபனும், நானும் யோசிச்சோம். நான் முதல் நாள் நைட் மைசூர் இல்ல ஸ்ரீரங்கப்பட்டினத்துல தங்கிடலாம், ரூம் ரெண்ட் விசாரின்னேன். அவரு கூர்க்ல தான் தங்கனும்கறதுல ரொம்ப தெளிவா இருந்தாரு. நெட்ல பாத்தா ஒரு வெஜிடேரியன் ஹோட்டலும் கண்ல படல. ஹோட்டல், ஹோம் ஸ்டே எல்லாம் பயங்கர காஸ்ட்லி. அவனவன் கூர்க் இந்தியாவோட லண்டன், ரொம்ப கூல், குளிக்கவே முடியாது, அது இதுன்னு எழுதித் தள்ளியிருக்கான். பத்மநாபனே கொஞ்சம் ட்ரை பண்ணி, ஒரு ஹோம் ஸ்டேய எட்டு பேருக்கு, ஒரு ராத்திரிக்கு 2,200 ரூபாய்க்கு பேசி முடிச்சாரு.
சோ, முதல் நாள் மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம், ரெண்டாம் நாள் கூர்க் .

ட்ரைவர், பசங்க யாருக்கும் எங்கெங்க போகப்போறோம்னு ஒண்ணும் தெளிவா தெரியாது. நாங்களே ட்ரைவர் கடைசில வண்டி மலையெல்லாம் ஏறாது, வரும்... ஆனா... வராதுன்னு ஏதாச்சும் சொல்லி, ஏதாவது வெடி வெப்பாரோன்னு யோசிச்சினு இருந்தோம். முகுந்தன் மனைவி கன்ஸீவா மன்னார்குடில இருக்காங்க. அவரு தானும் சர்மாஜீயும் முதல் நாளைக்கு சாதம், உருளக்கெழங்கு கறி பண்ணிட்றதாகவும், நாங்க வரும்போது புளிக்காச்சல் மட்டும் கொண்டு வந்தா, புளிசாதமும், தயிர்சாதமும் செஞ்சு எடுத்துனு போலாம்னு உருப்படியா, தைரியமா ஒரு யோசனைய சொல்லி, வேலைய ஏத்துண்டாரு. ஆனா அவர் குக்கர் ரொம்ப சின்னது, அதுனால சர்மாஜி வெள்ளிகிழம நைட்டு, ஒரு பெரிய குக்கரோட முகுந்து வீட்டுக்கு வந்துட வேண்டியது. அவர் சமையல் பண்ண வேண்டியது. முகுந்த் அவருக்கு ஹெல்ப் பண்ணவேண்டியது. (முகுந்துக்கு சமையல் கட்டுல ஒரு சுக்கும் தெரியாது, ஆனா, சுப்ரி, சர்மாஜீக்கெல்லாம் ஐடியா உண்டு). நைட்டு ஒரு ரெண்டர மணிக்கா ஆரம்பிச்சு, ஆறு டம்ளர் சாதமும், ஒரு கிலோ உருளக் கெழங்கும் வேக வெக்க சொல்லிட்டோம்.

பத்மநாபனுக்கு ஒன்றை வயசுல ஒரு கைக்கொழந்த, இருபது, இருபத்தஞ்சு வயசுல இன்னொரு கைக்கொழந்த !(அவன் பொண்டாட்டிதான் !!). அதுனால சனிக்கெழம காலைல அவன குடும்பத்தோட அவன் வீட்லயே பிக்-அப் பண்ணிக்கலாம்னு முடிவு செஞ்சுட்டோம். இந்த பசங்க தயார் பண்ற சாதம் போறாதுன்னு, அவன் வேற காலம்பற டிஃபனுக்குன்னு ஒரு அறுபது இட்டிலி, தேங்கா சட்னி, வெங்காயம், தக்காளி சட்னி, போறாததுக்கு ரெடிமேட் பேல் பூரி, கொழந்தைக்கு பிஸ்கட்டு, பாலு, கஞ்சி மாவு, ஹ ஹ ஹா ... நாங்க இங்கேந்து சிப்ஸ், பேப்பர் ப்ளேட், ... முகுந்த் வீட்ல ஒரு இருபத்தஞ்சு லிட்டர் தண்ணி கேன் பைப்போட இருந்துது. அத ரொப்பி வண்டில ஏத்திக்க வேண்டியது. முடிஞ்சா அவனோட அடுப்பு, சிலிண்டர் (வழில, வீட்ல, கைல கெடைக்கறதெல்லாத்தையும் , ரெண்டு நாள் பிராம்மணாள், ரிலீஜியஸ் டூராச்சே !!).

26
நைட், மெட்ராஸ்-பெங்களூர் K.S.R.T.C பஸ் கெளம்பியாச்சு. சர்மாஜீட்டேந்து ஃபோன், " சார், சாரி சார், தப்பா நெனச்சுகாதீங்க, எங்க ரிலேடிவ் ஒருத்தருக்கு (தெளிவா சொன்னாரு. நமக்கு மறந்து போச்சு) ஒடம்பு சரியில்ல. நான் போய் மெட்ராஸ்ல சனி, ஞாயிறு கூட இருந்து பாத்துக்க வேண்டியிருக்கு !!!!!!!!!". எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவோமா நாம? "சரி, போய்க்கோங்க, போய்க் கூட இருந்து பத்ரமா பாத்துக்கோங்க" -னு சொல்லிட்டு, முகுந்தன சமையக் கட்டுக்குள்ள தெரியாம போய் மாட்டிக்காம காப்பாத்தாலாம்னு ஃபோன் பண்ணினோம். அவரு "வந்தா சேந்து, வராட்டி தனியா, எதிர்த்தா எதிர்த்து, எப்படியும் நான் குக்கர் வெக்கறது உறுதி" -னு தீத்து சொல்லிட்டாரு. பஸ்லேந்து நானு, என் வொய்ஃப், பத்மநாபன் அவன் வீட்லேந்து, முகுந்தன் வொய்ஃப் மன்னார்குடிலேந்து, இப்படி எல்லாரும் அவருக்கு சமையல் குறிப்பு குடுத்துனே இருக்கோம். எதுக்கும் பக்கத்து வீட்லயும், குக்கர நேர்ல காமிச்சு தண்ணி, அரிசி அளவு கேட்டுக்க சொல்றோம். அவர் வெள்ளிகிழம ராத்திரி ஒம்போது மணிக்கு!! குளிச்சு ரெடியா வேலைய ஆரம்பிச்சுட்டார். பஸ்ல எல்லாரும் தூங்கியாச்சு. நான் எங்க பஸ் எப்டி அடுத்த வண்டியேல்லாம் ஓவர்டேக் பண்றது, ரெண்டு நாளைக்கு பசங்கள எங்கெல்லாம் ஓட்டிண்டு, சாரி, கூட்டிண்டு போறது, முகுந்தன் என்ன பண்ணின்றுக்கானோ குக்கரோடன்னு பல சிந்தனைல தூங்காம, ஆர்வமா டூர எதிர்கொண்டு போய்ன்றுக்கேன். என் வொய்ஃபும் தூங்கல. சீட்டு நெறையா மூட்டப்பூச்சி வேற. குக்கர் சைஸ் தெரியாம நாங்க சொன்ன அளவுல அரிசி, தண்ணிய வெச்சுப்புட்டு, அதோட சித்து விளையாட்டு வேலையாடின்னு முகுந்து ஒரு வழியா ரெண்டு தபா குக்கர வெற்றிகொண்டார்.

27
காலை 3.30. மடிவாலா ஐயப்பன்கோவில் பஸ் ஸ்டாப்ல இறங்கியாச்சு. கார்த்தி பெங்களுர்ல வேல பாத்தபோது முகுந்த் கூட தான் தங்கியிருந்தார். நெறையா லேடீஸ் ஹாஸ்டல்ஸ அடையாளமா வெச்சுக்கினு, கரீக்டா முகுந்த் வீட்டுக்கு கூட்டியாந்துட்டார். எங்களப் பாத்தவொடனே அவருக்கு சந்தோஷம் தாங்க முடியல. பாத்தா அவர் குக்கர் ஒன்ற டம்ளர் சாதம் வடிக்கற குக்கர். அவர பாராட்டிட்டு, ஏழாம் தடவ வெச்ச குக்கர் சாதத்தோட சூப்பரா புளி சாதம் ரெடி. இனிமே தயிர் சாதத்துக்கு ஒரு ஏழு குக்கர் வைக்கோணும்!! வெச்சோம். ஆண்டவர் ரொம்ப கருணை மனம் கொண்டவர். எட்டாந்தரவ வெச்ச கொஞ்ச நேரத்துலையே கேஸ் காலி. முகுந்த அடிசனல் சிலிண்டர கொண்டு வரச் சொன்னோம். முகுந்த்: "சார், இதுவே ப்ளாக்ல வாங்கினது சார். இன்னொரு சிலிண்டர் இல்ல சார்" ன்னுட்டார். எல்லாரும் குளிச்சோம், முகுந்தனத் தவிர, முதல் நாள் ஒம்பது மணிக்கு தானே குளிச்சிருக்கார். இன்னிக்கு நைட் ஒன்பது மணி வர அது போறும்.

பத்மநாபன் ஃபேமிலிய கூட்டிண்டு, வண்டி முகுந்த் வீட்டுக்கு வந்தாச்சு. மணி 5.
பத்மநாபன் வீட்லேந்து: ஒரு அஞ்சு லிட்டர் வாட்டர் கேன், கொழந்த பால், ஃப்ளாஸ்க், கஞ்சிமாவுகள், பிஸ்கட்டுகள், பதினஞ்சு டப்பா பேல் பூரி, இத்யாதிகள். முகுந்த் வீட்லேந்து: ஒரு ஒம்போது டம்ளர் புளி சாதம், அரை லிட்டர் தயிரு, 25 லிட்டர் வாட்டர் கேன், கத்தி, எலுமிச்சம் பழம், சக்கர, சால்ட், மெட்ராஸ் டி. நகர்லேந்து உருளக்கெழங்கு சிப்ஸ், நேந்திரங்கா சிப்ஸ், பேப்பர் ப்ளேட், எட்டு பசங்களோட ட்ரெஸ் பேக்ஸ் (கூர்குக்குன்னு அவனவன் போர்வ, ஸ்வெட்டர், கொரங்குக் குல்லா, இதெல்லாம் வேற). கெளம்பிட்டோம்யா.

பெங்களுர்ல, அங்கேந்து மைசூர் போற ரோட்ல எங்கயும் ஒரு பயலும் டீ, காபி கடைய தெறக்கல. எவனாவது வந்தால்ல தெறந்துவைக்க. நடுப்பற ஒரு எடத்துல டீக்கடைய பாத்துட்டானுங்க. ப்ரேக். ட்ரைவர் தம்மு. பசங்க டீ, காபி. ட்ரைவர்கிட்ட சொல்றோம், நைட்டு அப்டியே கூர்க் போய்த்தங்கிடரோம்னு. அவருக்கு அப்பத்தான் தெரியும். ஓ. கே சொல்லிட்டார்.

அவரு பெங்களுரத் தாண்டினது இல்ல போல இருக்கு. மைசூர்ல அவரு, சுப்ரி ரெண்டு பேரும் வழியக் கேட்டுக் கேட்டு ஒரு வழியா சாமுண்டி ஹில்ஸுக்கு கொண்டாந்து வுட்டாங்க. சரியான கும்பல். நாங்க கொஞ்சம் யோசிக்கறதுக்குள்ள இருபது ரூபா க்யூவும் ரொம்பியாச்சு!!. பத்மநாபன் போய் டிக்கெட் வாங்கிண்டு வந்தார். போய் சாமுண்டேஸ்வரிய தரிசிச்சோம். வழில 20 ரூபா, 100 ரூபா, தர்ம தரிசனம் சேர்ற எடத்துல கொஞ்சம் பிரச்னை. வெளில வந்தோம். பத்மநாபன் ஒரு கண்ணுக்குட்டியோட ஃபோட்டோ எடுத்துக்க ட்ரை பண்றார். எல்லாப் பசங்களும் சேந்துக்கறாங்க. ஒரு ஃபோட்டோல ஒரு பெரிய நந்தியப் பாத்துப்புட்டு, அத விசாரிச்சினு போறோம். நந்தியத்தவிர எல்லாத்தையும் தரிசனம் பண்ணியாச்சு. நந்தி ரொம்ப தூரமாம். திரும்பி வந்துட்டோம் வண்டிக்கு. அங்க இட்லிகள காலி பண்ணிட்டு, கீழ இறங்கக் கிளம்பினா நந்தி வழில இருக்கு. போய் தரிசனம் பண்ணிட்டு, அங்க ஒரு குகை லிங்கம் இருக்கு. அதையும் பாத்துட்டு லலித மஹால்க்குப்போறோம். பத்மநாபன் அது ஒரு பேலஸ், அது, இது ஒரே கதை. போற வழில மலை மேலேந்து ரேஸ் கோர்ஸ் தெரியுது. வண்டிய நிறுத்தி ஃபோட்டோ எடுத்துண்டு, லலித மஹாலுக்கு போனா, அது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாம்!! முத்து படத்துல வர்றா மாதிரி ஒரு மஹாராஜா சேரட் அங்க இருக்கு. தலைக்கு 50 ரூபாயாம் அதுல ஒரு ரவுண்டு அடிக்க. எல்லாரும் பக்கத்துல நின்னுண்டு ஃபோட்டோ எடுத்துண்டோம், நம்ம மஹாராஜா இல்லேல்ல.

அடுத்து மைசூர் பேலஸ். ட்ரைவர் பேலஸ்ஸுக்குக் கொல்லைப்பக்கமா எங்கள விட்டுட்டு, வண்டீல ஏதோ வேல இருக்குன்னு பாக்கப்போயிட்டார். அங்கேயே ஆளுக்கு ஒண்ணு, ரெண்டு கரும்பு ஜுஸக் குடிச்சிட்டு (ஐஸ் போட்டா ஏழு ரூபா, போடாட்டி எட்டு ரூபா), விசாரிச்சுனு முன் பக்கம் டிக்கெட் கௌண்டருக்குப் போனோம். ஒருத்தருக்கு இருபது ரூபா. பேக் எல்லாம் ஸ்கேன் பண்றாங்க. கேமரா இருக்கான்னு கேக்கறாங்க. இல்லனுட்டு உள்ள போயாச்சு. கமலோட செல் கேமரால நாலஞ்சு ஃபோட்டோ எடுத்திருப்போம். ஒரு புண்யவான் வந்து புடுங்கினு போயிட்டார். நாங்க தோ, தோ மாதிரி அவர் பின்னாடியே கெஞ்சினே போறோம். ஒருத்தனும் உள்ளூர் இல்லேன்னு அவருக்கு நல்லா தெரிஞ்சுருக்கு. எடுக்கறவங்களையெல்லாம் அவருக்கு காமிக்கறோம். கொஞ்சம், கொஞ்சமா 500 ரூபா ஃபைன்லேந்து கீழெறங்கி, 300, 200 ஏதாச்சும் அவருக்கு குடுத்துட்டு போக சொல்றாரு. இல்லேன்னா வரும் விளைவுகளைப் பத்தி சொல்றாரு. ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் பத்மநாபன் வந்து கன்னடத்துல விளக்கி, 100 ரூபா தர்றதா பேரத்த முடிச்சு செல் ஃபோன வாங்கினு வந்தார். அப்பறம் என்ன நினச்சாங்களோ தெரியல, அவுங்களும் கண்டுக்கல, நாங்களும் கண்டுக்கல. ஒரு வேள, மஹாராஜா இருந்துருந்தா இதெல்லாம் நடந்துருக்குமா? இதுக்கப்பறமும் கமல் செல்லுல நாங்க ஃபோட்டோ எடுப்போமா? நோ சான்ஸ். கார்த்தி செல்லுல எடுத்தோம். மஹாராஜா சும்மா பூந்து வெளையாடிருக்கார். கண்ணாடி, விதானம், கோபுரம், தரை, செவுரு ன்னு ஒன்னத்த வுடல. எல்லாத்துலயும் அற்புதமான வேலைப்பாடுகள், செஞ்சவங்களையும் சும்மா சொல்லக்கூடாது. கூலிக்கு வேலை செய்யாம அவனவன் போட்டி போட்டுனு தன்னோட தெறமைய காமிச்சிருக்கான். நல்ல மொதலாளி. நல்ல தொழிலாளி.

மைசூர் சூ (அதான், ஜூ பா, ச்ச! வனவிலங்குகள் இருக்குமிடம்) சூப்பரா இருக்குமாம், என்ன பண்றது. டயம் இல்லியே. சாயந்தரம் நாலு மணிக்கா, ஸ்ரீரங்கப்பட்டிணம் டரியா தௌலத் பாகுக்கு போய் சேந்தோம். இது "மைசூர் புலி" திப்பு சுல்தானோட கோடைகால அரண்மனை. உள்ள போகல. லஞ்ச் புளிசாதம், பக்கோடா, உ. கிழங்கு சிப்ஸ், புளிக்காத தயிரு. ரெண்டு எலுமிச்சம் பழத்த நறுக்கி, ரெண்டு லிட்டர் வாட்டர் பாட்டில்ல சாற ஊத்தி, சக்கர, சால்ட்ட குத்து மதிப்பா போட்டு, தண்ணிய ரொப்பி, குலுக்கி, ஜூஸ் ரெடி. குடிச்சோம். கொறயக் கொறைய தண்ணிய ரொப்பி ரொப்பி குடிச்சோம். கெளம்பினோம். கர்னல் பெய்லி செத்துப்போன திப்பு சுல்தானோட ஜெயிலப் பாத்தோம். ஒரு பக்கம் காவேரி. சங்கிலியோட ஒரு முனை செவுத்துல. இன்னுரு முனை கைதிய கட்ட. வேணும்னா கைதி மூழ்கி சாகற அளவுக்கு தண்ணியும் ரொப்பலாம் (ராஜா படத்துலெல்லாம் பாத்துருப்போம்ல, அதே தான்). பிரிட்டிஷ் தாக்குதல்ல ஜெயிலுக்குள்ள விழுந்துருக்கற திப்புவோட ஒரு பீரங்கியும் இன்னும் அங்கேயேதான் கெடக்கு. வழில திப்புவோட ஒடம்பு கெடச்ச இடம்னு ஒரு எடத்துல கல்வெட்டு வெச்சு, சுத்தி தளம் போட்டு, கம்பி வேலி போட்டிருக்காங்க.


அத வண்டிலேந்தே பாத்துட்டு, நிமிஷாம்பா கோவில்னு ஒரு கோவில், ஸ்ரீரங்கப்பட்டினத்துல. அதுக்கிட்ட ஒரு த்ரிவேணிசங்கமம் இருக்கு. அங்க காவேரி கூட இன்னும் ரெண்டு நதிகள் சேர்றது. பாலம் இருக்கு. தோணியும் இருக்கு. அவ்ளவா ஆழம் இல்ல. தண்ணி நல்ல ஓட்டம். சாயந்தரம் நல்ல குளியல். மிஸஸ் பத்மநாபனத் தவிர அவர் கொழந்த மொதற்கொண்டு எல்லாருமே அருமையா மூழ்கிக் குளிச்சோம். அங்கேந்து மடியா!! போயி ஸ்ரீரங்கநாதர தரிசனம் பண்ணினோம். பசி. ஆனா கெளம்பனும். கடை ஒன்னும் உருப்படியா கண்ணுக்குத் தெரியல. ஒரு டீக்கடைல வடை, பஜ்ஜி, டீ, காபிய முடிச்சுட்டு, வண்டில ஏறியாச்சு.

ஹன்சூர் வழியா மடிக்கேரி (கூர்க், குடகு) போய்ச் சேரனும். நெட்ல மேப் பாத்தாச்சு. வழி ரொம்ப மோசம்னு போட்ருந்தாங்க. ட்ரைவர் இனிமே ரூட் தெரியாது. கேட்டுனே போலாம்னு தெளிவா சொல்லிட்டாரு. நாங்க ரெடி, கோவில்ல ஆரம்பிச்சு, கூர்க் வரைக்கும் ஒரு பத்து பேரையாவது விசாரிச்சினே போய் சேந்தாச்சு. இப்ப குசால்நகர் வரைக்கும் புது ரோடு போட்ருக்காங்க. சூப்பரா இருக்கு. குசால்நகர்லேந்து கூர்க் ஒரு முப்பது கி.மீ. இருக்கும். அந்த ரோடு தான் கொஞ்சம் மோசம். ஹோம் ஸ்டே இஞ்சார்ஜ காண்டக்ட் பண்ணி, ராத்திரி 12 மணிக்கு ரூமுக்குப் போய் சேந்தோம். கூர்க் குளிரும் இல்ல, ஒரு மண்ணும் இல்ல. மூட்ட, மூட்டையா ஸ்வெட்டர், போர்வைன்னு வெயிட் தூக்கினு போயிருந்தோம். எல்லாம் வேஸ்ட். பெட் ரூம் சைசுல ரெண்டு ஹால், ரெண்டு பெட் ரூம், ரெண்டு பாத்ரூம், டாய்லெட், கிச்சென், மொட்ட மாடி. கீசர் இன்டேன் கேஸ்ல ஓடறது. அவருக்கே எப்டி அத ஆபரேட் பண்றதுன்னு தெரியல. அது இன்னொருத்தர் வீடாம், அவரு ஊர்ல இல்லியாம். சமையல் கட்டு பூட்டி இருக்கு. வேற வழி. அடுப்புக்காக அந்த பூட்ட, அவுங்க ஒத்துழைப்போட ஒடச்சோம். ட்ரைவர் அண்ணாவையும் உள்ள வந்து படுக்க சொன்னோம். காலம்பர ஆறரை மணிக்கு காலி பண்ணிடுவோம்னு சொல்லிட்டு, அலாரத்த வெச்சுட்டு, தூக்கத்த போட்டோம்.

28.12.2008, காலை ஆறு மணி. எல்லாரும் எழுந்தாச்சு. பல்ல மட்டும் தேச்சுட்டு, போற எடத்துல குளிச்சுக்கலாம்னு ப்ளான். வீட்ட சுத்தி போட்டோ எடுத்து ஒன்றை மணி நேரம் டும் ஆய்டுச்சு. மொதல் நாள் புளிசாதத்த பசங்க காலி பண்ணினாங்க. இருக்கற எடத்துலேந்து 45 கி.மீ. ல பாகமண்டலானு இன்னொரு த்ரிவேணி சங்கமம். அங்கேயே பக்கத்துல தலைக்காவேரி. தலக்காவேரில இடுப்பளவு ஆழத்துக்கு ஒரு தொட்டில தான் எல்லாரும் புண்ய ஸ்நானம். எச்ச துப்பாத, சோப்புப் போடாதன்னு போர்டுகள். குளிச்சோம். அந்த தொட்டியோட ஒரு பக்கத்துல ஒரு சின்னத் தொட்டி. அதுக்கு திருவாசி வெச்சு, ஒரு பூசாரி பூஜை பண்ணினு இருக்கார். அவர்கிட்ட போனா அந்த சின்னத்தொட்டிலேந்து சொம்புல தண்ணிய எடுத்து நம்ம மூஞ்சில ஊத்தறார். நாங்களும் ஊத்திண்டோம். பக்கத்துலையே ஆண்கள், பெண்களுக்குத் தனித் தனியா குளிக்க, ட்ரெஸ் சேஞ் பண்ண (ஓசி பா) இடம், ஏற்பாடு பண்ணி இருக்காங்க. ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு, டீ, காபி குடிச்சுட்டு பாகமண்டலா போய், த்ரிவேணி தீர்த்தத்தப் ப்ரோக்ஷணம் பண்ணிண்டு, அங்க இருந்த ஒரு வெஜ். மெஸ்ஸுல டிபன் சாப்டலாம்னு போனோம். நூறு ரூபா தண்டம், வேகல, உப்பு ஜாஸ்தி. அங்கேயே இன்னொன்னு மெஸ்ஸுக்குப் போயி, செகண்ட் ரௌண்ட முடிச்சோம். சுப்ரி திருட்டுக் குளியலுக்குப் போயிட்டு, எங்களத் தேடி கொஞ்ச நேரம் அலஞ்சாரு. என்னோட பேண்ட்டக் காணோம். ரூம்லேயே விட்டுட்டு வந்திருக்கேன். ஒருத்தர்மேலயும் பழியும் போட முடியல. அவருக்குப் போன் பண்ணினா, வெளில இருக்கறதாகவும், ரூம்க்கு பக்கத்து வீட்ல தான் சாவி இருக்கு, வாங்கி எடுத்துக்கோங்கன்னு சொன்னாரு. அங்க போனா, பக்கத்து வீட்டுக்காரர் ஞாயித்துக்கெழம ப்ரேயர்க்குப் போயிருக்கார். ஒரு ஆண்ட்டி, அங்க இருந்த ஒரு பொட்டிக்கடைல அவர் நம்பர வாங்கிக்குடுத்தாங்க. ரொம்ப நல்லவர். ஒடனே வந்து தெறந்து உட்டார். பேண்ட் எடுக்கறதுல ஒரு அரை மணி நேரமாவது வேஸ்ட் ஆச்சு.

ராஜா சீட்டுன்னு (ஒக்காந்துக்கற இடம்!!) ஒரு இடம். இப்ப பார்க் அமைச்சிருக்காங்க. ஒரு நாலு கால் மண்டபம். ராஜா அங்க ஒக்காந்து காத்து வாங்குவாராம். ஒண்ணும் ஸ்பெசலாத் தெரியல. உள்ளேயும் போகல. போட்டோ எடுத்துண்டு, ஓம்காரேச்வர் கோவிலுக்குப் போனோம். கோவில் பூட்டியாச்சு. மொகல், கேரளா, சாயல்ல கட்டியிருந்தாங்க. கொளம் இருந்துது. சுத்தி, சுத்தி போட்டோ எடுத்துட்டு, அபி அருவிக்கு போனோம். கொஞ்ச தூரம் நடை. மாலை நேர சூரியன். அருமையான அருவி. தொங்கு பாலம். எறங்கிப் போயி குளிக்கணும். டயம் இல்ல. ஓடறோம். குளிக்கறதுக்கு ரெடியாயினு இருந்த சுப்ரியையும், அவன் மந்திரத்துக்கு மயங்கி, அவன் கூடப் போயிருந்த முகுந்தனையும் போன்ல புடிச்சு, வண்டில இழுத்துப் போட்டுண்டோம்.

ஒரு இடம் கூட உருப்படியா சாப்ட கெடைக்கல. ஒரு வெஜ். ஹோட்டலுக்குப் போனோம். அம்பது ரூபாய்க்கு அன்லிமிடெட் மீல்ஸுன்னு போர்டு வெச்சிருந்தான். செல்ப் சர்வீஸ்தான். பசங்க போயி ஒரே தட்டுல (அதுவும் டிபன் ப்ளேட்டு) சப்பாத்தி, குருமா, சாம்பாரு, காய், சாதம்னு எல்லாத்தையும் வாங்கினு வந்துட்டானுங்க. என் மனைவிக்கு இந்த மாசம் வாய்ப்புண்ணு!! அவ சாப்பாட்டையும் பசங்க தட்டுல போட்டா. போய் மோரு சாதம் வாங்கினு வந்து சாப்டா, இதுக்கு 50 ரூபா.

பெங்களூர்ல 9.30 மணிக்கு பஸ்ஸப் புடிக்கணும். இப்போ மணி நாலு. வழில துபேரேன்னு ஒரு எடத்துல யானை பயிற்சி முகாம் இருக்கு, காவேரில உண்டான நிசர்கதமான்னு ஒரு தீவு இருக்கு. திபெத்தியர்களோட ஒரு முகாமும், புத்தருக்கு ஒரு தங்கக் கோவிலும் இருக்கு. எதப் பாக்க, எத உட.? நேரா தீவுக்குப் போனோம், ஜம்முன்னு ஒரு குளியலப் போட்டோம். சுப்ரி அவரோட வசீகர தபத்தால எல்லாரையும் கவர்ந்திழுத்தார். ஒண்ணும் சிக்கல. இனிமே எதப் பாத்தாலும், பாக்காட்டியும் பஸ்ஸப்புடிக்க முடியாதுன்னு தெளிவா தெரியுது. எனக்கு ட்ரைவர் மேல ஒரு நம்பிக்கை. அவரும் சான்ஸ் இல்லன்னுட்டார். கொழப்பம், டென்ஷன் தீந்துது. நிம்மதியா, நிதானமா அடுத்த இடத்தைப் பாக்கக் கெளம்பிட்டோம்!! டிக்கெட்டையும் கேன்சல் பண்ண முடியல. யானை கேம்ப் ரோட்லேந்து உள்ள ஒரு பத்து கி.மீ. க்கு போகனுமாம். போகலை. தங்கக் கோவில். என்னமா இருக்கு. டீம்ல மேக்ஸிமம் எல்லாருக்குமே இது முதல் தடவை. ஜெட்லி, ஜாக்கிசான் படத்துலையே பாத்துனு இருந்த கோவில். பெரிய மணி, ட்ரம்ஸ், கோவில் கோபுரத்துக்கு தங்க முலாம் பூசியிருக்கறதாகவும், உள்ள இருக்கற மூணு பெரிய சிலைகளுக்கும் தங்க ப்ளேட் போட்டுருக்கறதாகவும் ஒரு பிக்ஷு சொன்னார். புத்தர நமஸ்கரிச்சோம். நல்ல வேலைப்பாடுகள் அவங்க ஊர் சாயல்ல.

மைசூர் தாண்டி ரெண்டு ஹோட்டல்ல !! டின்னர முடிச்சோம். மெஜஸ்டிக்ல பசங்கள எறக்கி விட்டோம். பத்மநாபன் போய் விசாரிச்சதுல மெட்ராஸ் பஸ்ஸெல்லாம் சாந்தி நகர் பஸ் ஸ்டேண்ட்லதான் போய் புடிக்கனும்னு தெரிஞ்சுது. அவருக்கு ஒரு ஜே போட்டுட்டு, பசங்களத் திருப்பி ஏத்தினு போயி, சாந்திநகர் பஸ் ஸ்டேண்ட்ல, ரெடியா இருந்த தமிழ்நாடு விரைவு சொகுசுப் பேருந்துல ஏத்தி விட்டோம்.

29.12.2008, திங்கக்கிழமை கமல் ஆபீசுக்கு வந்தாச்சு. சுப்ரி ரெஸ்ட். கார்த்தி போட்டோவெல்லாம் நெட்ல ஏத்தினு இருக்கார். முகுந்த் ஆபீஸ். பத்மநாபன் வீட்ல நானும், என் மனைவியும் ரெண்டு நாள் ரெஸ்ட்.

25.12.2008 - வ்யாழகிழமை - கிறிஸ்மஸ் - ஆபீஸ் லீவு.
26 - ஆபீஸ்.
27, 28 - சனி, ஞாயிறு ஆபீஸ் லீவு.
29, 30 - நான் ஆபீசுக்கு லீவு.
31 - ஆபீஸ், டூர் கணக்கெல்லாம் ரெடி.
01.01.2009 - வ்யாழக்கிழமை, ஹேப்பி ந்யூ இயர், ஆபீஸ் லீவு.
2 - ஆபீஸ்
3, 4 - சனி, ஞாயிறு ஆபீஸ் லீவு.

என்ன ஒரு வர வாரம் !!!