ஸ்ரீமான் P. N. ஜயராமன்:
- S.S.L.C வரை படிப்பு
- காபிப் பொடி கடை, கான்க்ரீட் மின்கம்பங்கள் போடும் வேலை, திருச்சி UDC (உருமு தனலக்ஷ்மி காலேஜ்)-ல் ஆபீஸ் அஸிஸ்டண்ட், TVS கம்பெனியில் கேன்டீனில், புஸ்தகக் கடை, ஸ்லேட் தயாரிக்கும் இடம் என பல வேலை பார்த்து விட்டு, தமிழகக் காவல் துறையில் முதல் நிலைக் காவலராக (Gr. I Constable) சேர்ந்தவர்
- இவர்கள் பிரிவுதான் முதன் முதலில் கறுப்புக் குல்லாய் அணிந்து, மக்கள் மத்தியில் பவனி வந்தவர்கள்
(அதற்கு முன் சிவப்புத் தொப்பி )
- காவல் துறையில் பொது மக்களிடம் அன்பு, தவறு செய்பவர்களுக்கு பயம் என இருந்தவர்களில் இவரும் ஒருவர்
- படிப் படியாக நேர் வழியில் முன்னேறி, உதவி ஆய்வாளர் வரை (Sub-Inspector of Police) உயர்ந்தவர்
- சட்டம் மற்றும் ஒழுங்கு (Law & Order), பல்வேறு உளவுத் துறைகளில் (Security, Special Branch, Special Branch CID, Q Branch) பணியாற்றியவர்
- ஏறக்குறைய 26 வருடங்கள் இனிப்பான உணர்வுகளுடன் காவல் துறையில் இருந்து பொது மக்களுக்கு நல்ல பல காரியங்களை செய்து விட்டு, அதே நோக்கத்திற்காக விருப்ப ஓய்வில் வெளி வந்தவர்
- சுதேசிப் பிரசாரத்தில் ஈடுபட்டவர்
- 1999-ல் எதிர் கால தேசம் மற்றும் இளைய சமுதாயத்தின் நலம் இவைகளைக் கருத்தில் கொண்டு, கிராம குழந்தைகளுக்காக மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியை ஆரம்பித்தார்
- இந்தப் பள்ளி முதலில் அகில பாரத சிக்ஷா சம்ஸ்தான், புது டெல்லி மற்றும் வித்யா பாரதி, தமிழ்நாடு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டு நமது கலாசார 'சிசுவாடிகா' முறையில் கல்வி போதித்து வந்தது
- குழந்தைகள் 'சுமையில்லை, கவலையில்லை, பதட்டமில்லை' (No Carry! No Worry!! No Hurry!!!) என்ற முறையில் சிறந்த கல்வியை, சுலபமாக, விளையாட்டு வழியில் 5-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்
- தேவையைக் கருதி, 2004-ல் தமிழக அரசின் கல்வித் துறையின் ஒப்புதலையும் இப்பள்ளி பெற்றது
- ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஹிந்து முன்னணி ஸ்தாபகர் திரு. ராமகோபாலன், சமூக சேவகர் டாக்டர். கோபாலன், தமிழகக் காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு. S. குமாரஸ்வாமி I.P.S, ஜன கல்யான் மாநில அமைப்பாளர் திரு. ஈஸ்வரன், மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறை அதிகாரிகள் என பலர் இப்பள்ளிக்கு வருகை புரிந்து பாராட்டிச் சென்றுள்ளனர் .
- இப்பள்ளிக் குழந்தைகள் யோகா, ட்ராயிங், தடகளம் எனப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாவட்ட மற்றும் மாநில அளவில் பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றுள்ளனர்.
என்னுடைய அப்பா:
ஸமூக சேவையில் அவருடைய தொலைநோக்குத் திட்டங்கள், அவைகளை செயல்படுத்தும் விதம்,
நடை, வேகம், மிடுக்கு, தைரியம்,
தடைகளை மீறி நினைத்ததை முடிக்கும் பிடிவாதம்,
பாராட்டியும் விட்டுக்கொடுத்தும் அடுத்தவர்களை வளர்க்கும் ஸ்டைல்,
நல்லது, கெட்டதை சொல்லிவிட்டு முடிவெடுக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டு விடுதல் ,
எனப் பல விஷயங்கள் இவரைப் பற்றியது.
- இப்பள்ளிக்கு தயை மிகுந்தவர்கள் வருகை புரிந்து, குழந்தைகள் மற்றும் பள்ளி நடவடிக்கைகளை பார்த்து குறைகள் ஏதேனும் இருப்பின் நிர்வாகிகளிடம் கூறி, குழந்தைகளை ஊக்குவித்து, பள்ளி வளர்ச்சிக்கும் தாராளமாக பண உதவி புரிய வேண்டுகிறோம்:
முகவரி:
ஸ்ரீ காஞ்சி சங்கர வித்யாலயா,
3/21, கம்பரசன்பேட்டை அக்ரஹாரம்,
திருச்சிராப்பள்ளி 620101
தொலைபேசி: 91-0431-2701848
Oct 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment