1. பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
2. பிடியதன் உரு உமை கொள மிகு கரியது
வழி கொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலம் உறை இறையே
3. என்ன புண்ணியம் செய்தனை---நெஞ்சமே! இருங்கடல் வையத்து,
முன்னம் நீ புரி நல்வினைப் பயன்இடை, முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும்அதனாலே.
4. கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.
நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவ மவல மிலரே.
5. படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித் தூநீறணிந்துன்
அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம் பலத்தரனே
6. நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே
7. பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் நீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
8. அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
முந்தி எழும் பழைய வலிவினை மூடாமுன்,
சிந்தை பராமரியா தென்திருஆரூர் புக்கு,
எந்தைபிரானாரை என்றுகொல் எய்துவதே?
9. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
10. கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந் தனவே.
11. மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
12. சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே
13. பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்பது இடர்.
14. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.
May 12, 2009
புரசை அருணகிரி பாடல்கள் - 6
1. எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே யேத்து ( 3267 )
முன்னவனே யானை முகத்தவனே முத்தி்நலம்
சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே – என்னவனே
சிற்பரனே, ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்தாள் சரண்.( 1966 )
கலைநிறை கணபதி சரணஞ் சரணம்
கஜமுக குணபதி சரணஞ் சரணம்
தலைவநின் இணையடி சரணஞ் சரணம்
சரவண பவகுக சரணஞ் சரணம்
சிலைமலை யுடையவ சரணஞ் சரணம்
சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்
உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்
உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம் ( 2563 )
2. பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே ( 820 )
3. தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்
பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனி ஆற்றேன் ( 3386 )
அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே
பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே
மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே
ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே ( 5066 - 5069 )
அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
ஆனந்தத் தெள்ளமு துண்டே னே ( 5115 )
இருட்பெரு மாயையை விண்டே னே
எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே ( 5116 )
4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே ( 4082 )
5. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருப்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் ( 3904 )
6. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம் ( 3906 )
7. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே ( 4128 )
ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம் ( 4320 )
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் தேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம் ஆடிய ( 4321 )
8. ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே ( 9 )
அருளார் அமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனைஆள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம் ( 32 )
முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம் ( 34 )
9. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் சோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி ( 4615 )
ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம் ( 5255 )

May 11, 2009
புரசை அருணகிரி பாடல்கள் - 5
1. எங்கெங்கு காணினும் காவடிகள்
என்றும் புகழ்ந்திடும் சேவடிகள்
கந்தனின் கோவிலில் காவடிகள்
என்றும் வந்தனை செய்திடும் பூவடிகள்
ஆனைமுகன் தம்பி காவடிகள்
மன ஆறுதல் தந்திடும் காவடிகள்
ஆறு படை வீட்டில் காவடிகள்
அன்பர் அன்புடன் தந்திடும் காவடிகள்
பால் பழம் விபூதி காவடிகள்
ஞான பாலகன் முருகன் காவடிகள்
சந்தனம் பன்னீர் காவடிகள்
உயர் செந்தமிழ் பாடிடும் காவடிகள்
தைப்பூசத் திருநாள் காவடிகள்
பல புண்ணியம் சேர்த்திடும் காவடிகள்
ஆடிக் கிருத்திகை காவடிகள்
எங்கும் ஆடிஆடி வரும் காவடிகள்
2. காவடியாட்டம் காணக்கண்கள் கோடி வேண்டுமே
கந்தன் அருளை தினமும் நாமும் நாட வேண்டுமே
நலமே தந்திடும் திருப்புகழ் தினமும் பாட வேண்டுமே
நம்மைத் தொடரும் தீவினையெல்லாம் ஓட வேண்டுமே
பாலில் காவடி எடுக்க நமது பாவம் போகுது
பலப் பழத்தால் காவடி எடுக்க நமக்கு பண்பு வளருது
ஆயிரம் காவடி கண்டதும் மனத்தில் அன்பு பெருகுது
அன்புடன் கந்தன் அடியைப் பணிந்தால் அருளும் சுரக்குது.
உலகில் என்றும் உயர்வை நமக்கு உணர்த்தும் காவடி
உயர்வுடன் அழைத்து நமக்கு காட்டும் முருகன் சேவடி
அது மணணில் அறமே தழைக்க வந்த மருகன் பூவடி
நம் கண்ணில் ஒளியாய் காட்சியைத் தருமே கந்தன் திருவடி
3. ஆடிஆடி வருகுது கந்தன் காவடி- எங்கும்
ஹரோஹரா எனச்சொல்லும் அழகுக் காவடி
அன்பர்களின் தோள்களிலே அரிய காவடி - நல்ல
ஆடிமாத கிருத்திகையில் ஆடும் காவடி
பாலனவன் சிறுவனுக்குப் பாலில் காவடி - ஞானப்
பழமான தெய்வத்திற்குப் பழத்தில் காவடி
பூமியெங்கும் புகழைப்பாடும் புஷ்பக் காவடி
மாலின்மருகன் முருகனுக்கு மச்சக் காவடி
கந்தன்புகழில் கனிந்துருகும் சந்தனக் காவடி
எந்தைமுருகன் எழிலைக் காணும் எளியக் காவடி
பாடம்சொன்ன முருகனுக்குப் பன்னீர்க் காவடி
பார்க்கப்பார்க்கத் திகட்டாது பழனிக் காவடி
4. காவடி எடுத்து ஆடிடுவோம் - நம்
கந்தனை எண்ணியே பாடிடுவோம்
வந்தனை செய்தே வாழ்ந்திடுவோம் - வெற்றி
வடிவேல் முருகனைத் துதித்திடுவோம்
பழனியில் முருகனைப் பார்த்திடுவோம் - சுவைப்
பழத்தால் காவடி சேர்த்திடுவோம்
செந்தில் வேலவன் சன்னதியில் உயர்
சேவல் கொடியினை வணங்கிடுவோம்
தணிகை மலைப்படி ஏறிடுவோம் - தீந்
தமிழில் திருப்புகழ் கூறிடுவோம்
வேலுடன் காவடி செலுத்திடுவோம் - வடி
வேலவன் திருவடி பணிந்திடுவோம்
மாலின் மருகனை நினைந்திடுவோம்
முருகனைத் துதித்து உயர்ந்திடுவோம்
வள்ளி மணாளனைப் புகழ்ந்திடுவோம் - நாம்
வாழ்வினில் என்றும் சிறந்திடுவோம்
5. தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேனுனை நான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி அதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய பெருமாளே
6. ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே
7. அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு மாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்தனன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி யாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த பெருமாளே
8. காதின்மணி ஓலையிட்டு வருமானார்
காமவலை ஊடுபுக்கு மதிமாழ்கி
நீதிநெறி யேவிடுத்து மலையாதே
நீயுனிரு தாளளிக்க வரவேணும்
ஆதிமக மாயிபெற்ற குமரேசா
ஆறுமுக மேபடைத்த குருநாதா
தீதிலடி யார்மனத்தில் உறைவோனே
தேவர்குடி வாழவைத்த பெருமாளே
9. தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய பெருமாளே.

புரசை அருணகிரி பாடல்கள் - 4
1. எழும் போதும் வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து
தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன் தொழுதே உருகி
அழும் போதும் வேலும் மயிலும் என்பேன் அடியேன் உடலம்
விழும் போதும் வேலும் மயிலும் என்பேன் செந்தில் வேலவனே
2. ஓம் ஷண்முக பதயே நமோ நம, ஓம் ஷண்மத பதயே நமோ நம:
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம, ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம:
ஓம் ஷட்கோண பதயே நமோ நம, ஓம் ஷட்கோச பதயே நமோ நம:
ஓம் நவனிதி பதயே நமோ நம, ஓம் சுபனிதி பதயே நமோ நம:
ஓம் நரபதி பதயே நமோ நம, ஓம் ஸுரபதி பதயே நமோ நம:
ஓம் நடச்சிவ பதயே நமோ நம, ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:
ஓம் கவிராஜ பதயே நமோ நம, ஓம் தபராஜ பதயே நமோ நம:
ஓம் இஹபர பதயே நமோ நம, ஓம் புகழ்முனி பதயே நமோ நம:
ஓம் ஜயஜய பதயே நமோ நம, ஓம் நயநய பதயே நமோ நம:
ஓம் மஞ்சுள பதயே நமோ நம, ஓம் குஞ்சரீ பதயே நமோ நம:
ஓம் மல்லி பதயே நமோ நம, ஓம் மல்ல பதயே நமோ நம:
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம, ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:
ஓம் ஷஷ்டீ பதயே நமோ நம, ஓம் இஷ்டீ பதயே நமோ நம:
ஓம் அபேத பதயே நமோ நம, ஓம் சுபோத பதயே நமோ நம:
ஓம் வியூஹ பதயே நமோ நம, ஓம் மயூர பதயே நமோ நம:
ஓம் பூத பதயே நமோ நம, ஓம் வேத பதயே நமோ நம:
ஓம் புராண பதயே நமோ நம, ஓம் பிராண பதயே நமோ நம:
ஓம் பக்த பதயே நமோ நம, ஓம் முக்த பதயே நமோ நம:
ஓம் அகார பதயே நமோ நம, ஓம் உகார பதயே நமோ நம:
ஓம் மகார பதயே நமோ நம, ஓம் விகாச பதயே நமோ நம:
ஓம் ஆதி பதயே நமோ நம, ஓம் பூதி பதயே நமோ நம:
ஓம் அமார பதயே நமோ நம, ஓம் குமார பதயே நமோ நம:
3. சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
4. அபகார நிந்தைபட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே
5. மருமல்லி யார்குழலின் மடமாதர்
மருளுள்ளி நாயடிய னலையாமல்
இருநல்ல வாகுமுன தடிபேண
இனவல்ல மானமன தருளாயோ
கருநெல்லி மேனியரி மருகோனே
கனவள்ளி யார்கணவ முருகேசா
திருவல்லி தாயமதி லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே.
6. ஆறுமுக விலாசமும், பன்னிரு கண்கள், ஈராறு கரமான அழகும்
அய்யனின் மகுடமுடி நவரத்ன ப்ரகாச அலங்கார ஜோதி அழகும்
கோரும் அடியார்கள் வினை தீர்த்திடும் ஆறுமுக குண்டல ஜொலிப்பின் அழகும்
குஞ்ஜரி தெய்வயானை குறவள்ளி ரஞ்ஜிதன் புன்சிரிப்பான முகமும்
ஏறுமயில் ஏறிவிளையாடவும் கரமதனில் ஈட்டி வேல் பார்வை அழகும்
இடையில் ஒட்டியாணமும் பட்டுகள் பளபளென இருபாத தண்டை அழகும்
பாருலகத்தோர் புகழும் பன்னிரு விழிக் கருணை பகவானின் மேனி அழகை
யாராலும் வர்ணிக்க முடியாத ஆறுமுக ஐயனை போற்றி செய்வோம்
7. இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே
8. ஏதுபிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி தீதுபுரியாத தெய்வமே
போரூர் தெய்வமே, நீதி தழைக்கின்ற போரூர் தெய்வமே ( தணிமுதலே)
நாயேன் பிழைக்கின்றவாறு நீபேசு தெய்வமே
9. நாத விந்துக லாதீ நமோநம, வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸ்வாமி நமோநம வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம, போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம பரசூரர்;
சேத தண்டவி நோதா நமோநம, கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம, தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்;
ஈத லும்பல கோலா லபூஜையும், ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கம்பீர நாடா ளுநாயக வயலூரா
ஆத ரம்பயி லாரூ ராதோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே.
10. அதிருங் கழல்ப ணிந்து னடியேனுன்
அபயம் புகுவ தென்று நிலைக்காண
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கி லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த பெருமாளே
11. விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி யினிமேலோ
விண்டுவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள்சு வாமி யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் பெருமாளே.
12. தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதட வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயி ரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த வரிசைமொழி பகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிட மிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலிய மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி னகரிலுறை பெருமாளே
13. பொறந்ததையா நல்லநேரம் எழுந்து பாருங்க
போய்வரலாம் பழனிமலை நடந்து வாருங்க
நடந்ததெல்லாம் நடந்ததையா மறந்து போடுங்க
நடக்கப்போற காரியத்தை நினைந்து வாருங்க
சேவல்கூவி அழைக்குதுகண் திறந்து பாருங்க
சிங்காரவேலன் புகழை உணர்ந்து பாடுங்க
காவல்செய்யும் முருகன்மலை அருகில் தானுங்க
கடவுள்பெயரை சொல்லி சொல்லி உருகிப் பாடுங்க
ஆணும்பெண்ணும் கூட்டம்கூடி ஆடிப் பாடுங்க
வரம்ஆறுமுக சாமியிடம் கேட்டுப் பாருங்க
வேணும்உந்தன் காட்சிஎன்று சொல்லிப் போடுங்க
அவன்வேறு வார்த்தை சொல்லவந்தால் தள்ளிப் போடுங்க
ஹரோஹரா சொல்வதற்குத் தொடங்கிப் போடுங்க
வரும் அசுரப்பய கொட்டமெல்லாம் அடங்கிப் போகுங்க
மோதவந்த துன்பமெல்லாம் விலகிப் போகுங்க
மோதகத்தான் தம்பிபலம் வந்து சேருங்க
தந்தனத்தான் தந்தனத்தான் தாளம் போடுங்க
சங்கரன்பெற்ற பிள்ளையப்பற்றி ராகம் பாடுங்க
கந்தனுக்கு நெஞ்சினுக்குள் கோலம் போடுங்க
கண்ணில்வரும் நீரைக்கொண்டு பாலம் போடுங்க

May 10, 2009
பட்டினத்தார்
காலம்: 10 -ஆம் நூற்றாண்டு
ஊர்: காவிரிப்பூம்பட்டினம்
தாய்: ஞானகலாம்பை
தந்தை: சிவநேசர்
குலம்: வைச்ய குலம்
மனைவி: சிவகலை
மகன்: மருதவாணன்
சிவபெருமானின் நண்பரும், திசைக்காவலர்களில் ஒருவரும், யக்ஷர்களின் தலைவரும், இராவணேச்வரனின் சகோதரரும், புஷ்பகவிமானத்தின் சொந்தக்காரருமான குபேரன் ஒரு முறை பூமியில் அவதரிக்க நேர்ந்தது. தமிழகத்தில் திருவெண்காட்டிற்கருகில் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தில் சிறந்த வைச்ய குலத்தில் சிவநேசர்-ஞானகலாம்பை தம்பதிகளின் நற்பலனாக ச்வேதாரண்யன் (திருவெண்காடர்) எனும் திருப்பெயருடன் பிறந்தார்.
ஐந்து வயதில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டார். ஆறு வயதில் சிவனருளால் திருவெண்காடர் சன்னதியில் தாயார், சிவனடியார்கள் முன்னிலையில் வ்யாக்ரபுரத்தை சேர்ந்த ஒரு ப்ரம்மச்சாரியால் முறையாக பஞ்சாக்ஷர மந்திரமும், சிவபூஜை முறைகளும் உபதேசிக்கப்பட்டார். குருநாதர், சிவனடியார்கள், வறியவர்கள் என அனைவரும் பொருள்களாலும், த்ரவ்யங்களாலும், உணவு வகைகளாலும் அன்புடன் பெருமளவில் உபசரிக்கப்பெற்றனர்.
இளமைப்பருவத்தில் சிவசிதம்பரச் செட்டியார்-சிவகாமியம்மை தம்பதிகளின் தவப்புதல்வியான சிவகலை என்பவருடன் பட்டினத்தார் திருமணம் 5 நாட்கள் கோலாகலமாக நடந்தேறியது. அளவிற்கடங்கா செல்வக்குவியல், புகழ், சிவபூஜை, அடியார் பூஜை, தர்மகார்யங்கள் என வாழ்க்கை வளர்ந்தாலும், முப்பத்தைந்து வயதாகியும் மழலைச்செல்வம் ஒன்று இல்லாத குறை தம்பதிகளைப் பெரிதும் வாட்டியது. இடைமருதூர் ஈசனிடம் முறையிட்டனர்.
அதே வேளையில், திருவிடைமருதூரிலேயே மருதவாணர் பூஜைகளிலும், சிவனடியார் சேவையிலும் தன் செல்வங்கள் அனைத்தையும் செலவிட்டு, கடைசியில் இறைவன் திருவிளையாடலில் மனைவியின் திருமாங்கல்யத்தையும் அடியார் சேவைக்கே தீர்த்த சிவசருமர்-சுசீலை எனும் தம்பதியினர் மறுநாள் அடியாருக்கு அன்னமிட பொருளுக்கு என்ன செய்வது என்று பெரும் துயருற்று, வருத்தத்துடன் கண்ணயர்ந்தனர்.
இரு தம்பதிகளுக்கும் அருள திருவுளம் கொண்ட மருதீசர், சிவசருமர் தம்பதிகளின் கனவில் மலர்ந்து, "நாளைக் காலை காருண்யாமிர்தத் தீர்த்தக் கரையில் இருக்கும் வில்வமரத்தடியில் யாமே ஒரு குழந்தையாய் இருப்போம். எம்மை காவிரிப்பூம்பட்டினத்தில் இருக்கும் பட்டினத்தாரிடம் கொடுத்து எடைக்கு எடை பொன்னைப் பெற்றுக்கொள்ளுங்கள், இது பற்றி கவலை கொள்ளவேண்டாம். குபேரனே பட்டினத்தாராக அவதரித்திருக்கிறான். இவை முன்னமே முடிவு செய்யப்பட்டது. அவனுக்கு மெய்ஞான நிலை அருள்கையில் உமக்கும் குடும்பத்தோடு முக்தி பேறு அளிப்போம்" என்று கூறி மறைந்தார். அதேபோல் பட்டினத்துத் தம்பதிகளின் கனவிலும் "சிவசருமர் கொண்டுவரும் குழந்தையை எடைக்கு எடை பொன் கொடுத்துப் பெற்றுக்கொள்ளுமாறும், இந்தப் பிறவியில் உங்களுக்குப் பிள்ளைப் பேறு இவ்விதமே" என்றும் கூறி மறைந்தார்.
இறைவனுக்கீடாக எவ்வளவுப் பொருள் வைப்பது. குழந்தை இருந்த தராசுத்தட்டு கீழாகவே உள்ளது. சிவசருமர் போதும், போதும் என்க, பட்டினத்தார் என் பொருளனைத்தையும் கொடுத்து, என்னையும் கொடுத்து இந்தக் குழந்தையைப் பெற்றே தீருவேன் என்கிறார். இந்த நிலையில் அனைவரும் பார்த்திருக்க தராசுத்தட்டுகள் சமநிலைக்கு வருகின்றன. சிவசருமரே ப்ரோஹிதராக இருக்க குழந்தைக்கு "மருதவாணன்" என்ற பெயர் சூட்டப்படுகிறது. தகுந்த மரியாதைகளும், உபசரிப்பும் செய்யப்பெற்ற சிவசருமர் பட்டினத்தார் பல வண்டிகளில் அளித்த செல்வங்களுடன் பாதுகாப்புடன் இடைமருதூருக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். குழந்தையை யிழந்த வருத்தத்துடன் நாட்களைக் கழித்த சிவசருமர் தம்பதிகள் நாளைடைவில் இறையருள் பெற்று உய்கின்றனர்.
பட்டினத்தாரில்லத்தில் சீரோடும், சிறப்போடும், கலைகளில் சிறந்தும், பல திருவிளையாடல்களை நிகழ்த்தியும் குழந்தை வளர்ந்து பதினாறாம் ப்ராயத்தையடைகிறது. செல்வந்தர்களுக்கெல்லாம் தலைவரான பட்டினத்தாரின் குழந்தை அவருக்கு மெய்ஞ்ஞானம் அளிக்க நேரம் வந்ததையுணர்ந்து, நண்பர்களுடன் சேர்ந்து திரைகடலோடித் திரவியம் தேட தந்தையிடம் அனுமதி கேட்கிறார். பெறும் வற்புறுத்தலுக்குப் பின் அனுமதிக்கப்படுகிறார்.சென்ற இடங்களில் அனைவரையும் விஞ்சிப் பொருளீட்டுகிறார். திரும்பிக் கடலில் வந்து கொண்டிருக்கையில் காற்றும், பெருமழையும் கப்பல்களை அலைக்கழிக்க வைக்கின்றன. குளிரிலும், மழையிலும் அல்லலுற்ற நண்பர்கள் மருதவாணன் வறட்டிகள் வைத்திருப்பதையறிந்து சிலவற்றைக் கேட்கின்றனர். மீண்டும் அதே போன்ற வறட்டிகளையே திருப்பித்தரவேண்டுமென்று எழுதி வாங்கிக்கொண்டு வறட்டிகளைக் கொடுக்கிறார்.
திசை தெரியாமல் திண்டாடி, அங்குமிங்கும் சுற்றி, அனைத்துப் பொருள்களையும் இழந்து ஒருவாறு ஊரை அடைகின்றனர். மருதவாணரின் வறட்டிகள் மட்டுமே எஞ்சுகிறது. உயிருடன் திரும்பிய புதல்வர்களைப் பெற்றோரும், உற்றாரும் ஒன்று சேர்ந்து வரவேற்று மகிழ்கின்றனர். மருதவாணருடன் வந்தவர்கள் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாகவும், வறட்டிகளுக்குப் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டதையும் பட்டினத்தாரிடம் கூறிச்செல்கின்றனர். கப்பல்களில் கண்ட வறட்டி மூட்டைகளைக் கண்ட அவரும் பெரும் அவமானமும், வருத்தமும் அடைகிறார். ஒரு பெட்டியை தந்தையாரிடம் கொடுத்து, எல்லாவற்றையும் சரி பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு, மருதவாணர் அன்னையையும், பாட்டியையும் பார்ப்பதற்கு இல்லம் சென்று விடுகிறார்.
அந்தப்பெட்டியில் கடன் பத்திரங்களும், மாதிரிக்கு சில வறட்டிகளும் இருக்கின்றதைக் கண்டு நொந்த பட்டினத்தார் அவைகளைத் தூக்கி எறிகிறார். தரையில் விழுந்துடைந்த வறட்டிகளிலிருந்து முத்து, மாணிக்கம், வைர வைடூர்யங்கள் என செல்வங்கள் சிதறித்தெறித்தோடுகின்றன. அதைக்கண்டு நெஞ்சம் பதைக்க, பரபரப்போடு செல்வனைப் புரிந்து கொள்ளாமல் வருத்தப்பட்டதை நொந்து வீட்டை நோக்கி ஓடுகிறார். கிடைப்பாரா இனி? அனைவரும் அனைத்து இடங்களிலும் தேடியும் மருதவாணர் கிடைக்கவில்லை. அப்போது பட்டினத்தார் மனைவி, "நம் மைந்தன் தாங்கள் வந்தவுடன் கொடுக்கும்படி இந்தப் பேழையைக் கொடுத்திருக்கிறான்" என்றாள்.
ஆவலுடனும், பயத்துடனும் அதைத் திறந்துபார்த்த அவருக்கு அதில் ஒரு காதற்ற ஊசியும் (குண்டூசி), ஒரு ஓலைச்சுவடியும் காத்திருந்தன. "காதற்ற ஊசியும் வாராது காணுங்கடைவழிக்கே" - இதுவே அந்த சுவடியில் இருந்த வாசகம். குண்டூசியைக் கூட நாம் இறந்துபடும்போது எடுத்துச்செல்லப் போவதில்லை என்ற அந்த சொல், பக்குவமடைந்திருந்த பட்டினத்தாருக்கு பசுமரத்தில் ஆணி அடித்ததுபோல் பதிந்தது. துறவு கொள்கிறார். அம்மாவின் காலம் முடியும் வரை ஊர் எல்லையைத் தாண்டுவதில்லையென்று உறுதி செய்துகொள்கிறார். மனைவியை சிவனடியார்க்குத் தொண்டு செய்து கொண்டு இறைவன் திருவடிகளை அடையுமாறு அறிவுறுத்துகிறார். தலைமைக் கார்யதர்சியான சேந்தனாரிடம் எல்லா செல்வங்களையும் அனைவரும் எடுத்துக்கொள்ளும் வண்ணம் சூறையிடுமாறு கூறி விட்டு ஊர் எல்லையில் இருக்கும் ஒரு மண்டபத்தைத் தனக்கிருப்பிடமாகக் கொண்டு, தினமும் ஊரில் சென்று அனைவரிடமும் பிச்சையெடுத்து உண்டு, ஈசன் நினைவில் காலத்தைப் போக்குகிறார்.
அரசனுக்கும் வேண்டியவரான பட்டினத்தார் துறவு பூண்ட செய்தி எங்கும் பரவி, ஊர் மக்களும், பெரியவர்களும் அவர் தங்கியிருந்த மண்டபத்திற்கு வந்து திரும்பி வந்து விடுமாறு வேண்டுகின்றனர்.
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே
விழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே
விம்மி விம்மி இரு
கைத்தலைமேல் வைத்து அழும்
மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினை
புண்ணிய பாவமுமே
- என்று பதிலளிக்கிறார். விஷயத்தை யறிந்த மன்னர் பட்டினத்தாரிடம் வந்து, "வணிகர் குலத் தலைவரே ! எல்லாவற்றையும் உதறி விட்டு இப்படி பரதேசியாக இங்கு வந்து அமர்ந்திருக்கிறீரே. இதில் என்ன விசேஷத்தைக் கண்டீர்?" என வருத்தத்துடனும், பரிவுடனும் கேட்கிறார். "மன்னர் நிற்க, ஆண்டி நான் அமர்ந்திருக்கிறேன், இதுதான் விசேஷம்" என்கிறார். மன்னர் வருத்தத்துடன் திரும்பிச் செல்கிறார். அவர் முன்பிருந்த நிலையையும், இப்போதிருக்கும் நிலையையும் கண்ட உறவினர்களும், நண்பர்களும் வருத்தமும், வெறுப்பும் அடைகின்றனர். ஒரு நாள் பிச்சையெடுத்து வருகையில் அவர் தமக்கையாரே விஷம் கலந்த அப்பத்தை தயாரித்து அவருக்கிடுகிறார். சித்தரல்லவா அவர். "தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று தமக்கையின் வீட்டின் மீதெறிந்துவிட்டு செல்கிறார். மளமளவென்று வீடுகள் தீப்பற்றி யெரிய ஆரம்பிக்கின்றன. அவர் கால்களில் விழுந்து அனைவரும் மன்னிப்பு வேண்ட, கருணை புரிகிறார். நெருப்பு அணைந்து விடுகிறது.
காலம் கழிகின்றது. பட்டினத்தாரின் தாயார் இறைவனடி சேர்கிறார். விஷயத்தைக் கேள்விப்பட்ட பட்டினத்தார் விரைந்து வருகிறார். தாயின் மெல்லுடலை கட்டைகளும், சுள்ளிகளும் குத்திக் கொடுமைப் படுத்தும் என்று வாழை மட்டைகளால் சிதையமைத்து தாயின் பெருமைகளை நினைத்துப் பாடல்களைப் பாடுகிறார்.
முன்னை யிட்டதீ முப்புரத்திலே
பின்னை யிட்டதீ தென்னிலங்கையில்
அன்னை யிட்டதீ அடிவயிற்றிலே
யானும் இட்டதீ மூள்கமூள்கவே
- என்று பாட சிதை தானாகவே பற்றி யெரிகின்றது.
பல ஊர்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்துப் பாடல்களைப் பாடுகிறார். மௌன விரதம் இருந்த ஒரு நாளில், ஒரு வீட்டின் வாசலில் பிச்சைக்காகக் கையைத் தட்டுகிறார். அந்த இல்லத்தின் தலைவன் விவரமறியாமல் காம எண்ணத்துடன் எவனோ ஒருவன் தன் வீட்டு வாசலில் கையைத் தட்டுவதாக யெண்ணி அவரை அடித்து விடுகிறான். ஒரு சாண் வயிற்றுக்காகத் தான் படும் பாட்டை யெண்ணி, இனி எங்கும் பிச்சை யெடுப்பதில்லை யென்றும், இருக்கும் இடத்தில் கிடைப்பதையே உண்ணவும் நிச்சயித்துக் கொள்கிறார்.
இருக்கும் இடம் தேடி என் பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன் - பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே என் தேகம்
இளைத்தாலும் போகேன் இனி
உஜ்ஜயினியில் ஒருமுறை சிவதரிசனம் செய்துவிட்டு இரவில் ஒரு பழைய பிள்ளையார் கோவிலில் நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் உருவம் தெரியாமல் பிள்ளையார் என்று நினைத்து அன்று அரண்மனையில் திருடியதில் பங்காக ஒரு விலையுயர்ந்த மாலையைப் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர் ஒரு திருட்டுகூட்டத்தினர். அவர்களைத் துரத்திக் கொண்டு வந்த காவலர்கள் ஜொலிக்கும் அணிகலனைப் போட்டுக் கொண்டிருந்த பட்டினத்தாரை மிகுந்த கடமை யுணர்வுடன் சபைக்கு இழுத்துச் செல்கின்றனர். பலரின் வேறுபட்ட கூற்றுகளுக்கிடையே, மன்னர் பத்ரகிரியாரும் விதி வசத்திலிருந்து, அவரைக் கழுவிலேற்றிக் கொன்று விடச் சொல்கிறார். கழுமர மிருக்கும் இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட பட்டனத்தார் அதைப் பார்த்து,
என் செயலாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே
- என்று பாடுகிறார். கழுமரம் உடனே தீப்பற்றி யெரிந்து சாம்பலாகி விடுகிறது. அதிகாரிகளும், காவலர்களும் பத்ரகிரியாரிடம் விஷயத்தைத் தெரிவிக்கின்றனர். பக்திமானான அரசர் உண்மையைப் புரிந்து கொள்கிறார். அடியார் காலில் அரசர் விழுந்து, தன் தவறை மன்னித்தருளுமாறு வேண்டிக் கொள்கிறார். பட்டினத்தாரின் அருட்பார்வையும், உபதேசமும் பெற்ற அரசரும் துறவு பூண்கிறார். பட்டனத்தாருக்கு சீடராகிறார்.
மீண்டும் திருவெண்காட்டிற்கு வந்திருந்த பட்டினத்தாரிடம், அவர் செல்வங்களையும், சொத்துக்களையும் அரசு கஜானாவில் சேர்க்கும் பொருட்டு சேந்தனாரை யரசர் சிறையில் அடைத்து, சித்ரவதை செய்வதாக, வறுமையில் தவிக்கும் சேந்தனாரின் மனைவி, குழந்தைகளோடு வந்து கூறி யழுகிறார். அவர்களை யழைத்துக் கொண்டு இறைவன் சந்நிதிக்கு சென்ற பட்டினத்தார்,
மத்தளை தயிருண்டானும்
மலர்மிசை மன்னினானும்
நித்தமுந் தேடிக் காணா
நிமலனே! அமலமூர்த்தி!
செய்த்தளைக் கயல்பாய்
நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட
கைத்தளை நீக்கியென்முன்
காட்டு வெண்காட்டுளானே!
- என்று வேண்ட, பரமனருளால் பட்டினத்தார் முன் நிற்கிறார் சேந்தனார். அரசன் சிறையில் இருந்து விடுதலை யளித்தது போல், பிறவிக் கடலில் இருந்தும் அவருக்குத் தில்லையில் இறைவன் விடுதலை யளித்து ஏற்றுக் கொள்கிறான். பின்னொரு சமயம் காளத்திநாதரைத் தரிசிக்கையில்,
வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேனல்லன் மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேனல்லன் தொண்டு செய்து
நாளாறில் கண் இடந்தப்ப வல்லேனல்லன் நானினிச் சென்று
ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி யப்பருக்கே
- என்ற பாடலைப் பாடுகிறார்.
பெரும் செல்வங்களையும், சுற்றங்களையும் விடுத்து, பிச்சையெடுத்து உண்டும், பல சித்துக்களை செய்தும், பல தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடியும் தனது வாழ்க்கையைக் கழித்த பட்டினத்துப் பிள்ளை இறுதியில், திருவொற்றியூரில் இறைவனோடு கலக்கிறார்.

May 8, 2009
புரசை அருணகிரி பாடல்கள் - 3
1. விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை முகவோனே
2. எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய் விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய் வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா ளருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால் மருகோனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்மாழ் பெருமாளே
3. சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் முருகோனே
4. ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக தம்பிரானே
5. ஈனமிகுத் துளபிறவி யணுகாதே
யானுமுனக் கடிமையென வகையாக
ஞானஅருட் டனையருளி வினைதீர
நாணமகற் றியகருணை புரிவாயே
தானதவத் தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ முருகோனே
ஆனதிருப் பதிகமரு ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே
6. நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
நடித்து விதத்தி லதிமோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
நலத்தி லணைத்து மொழியாலுந்
திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை
திரட்டி யெடுத்து வரவேசெய்
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு கலைக்குள் விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
படர்ச்சி கறுத்த மயிலேறிப்
பணைத்த கரத்த குணத்த மணத்த
பதத்த கனத்த தனமாதை
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
வெளுத்த பொருப்பி லுறைநாதா
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
ம்ருகத்தை யெடுத்தோர் பெருமாளே
7. தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ்ச லித்தும் விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும் வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும் பெருமாளே
8. ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த பெருமாளே
9. இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
அறநூலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே

புரசை அருணகிரி பாடல்கள் - 2
1. சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.
2. உனது நாமம் சொல்லச் சொல்ல உள்ளமெல்லாம் உருகுதே
எனது மனம் நெகிழ்ந்திடவே இன்ப வெள்ளம் பெருகுதே
மால் மருகன் முருகனெ ன்றால் மாதவங்கள் கூடுதே
வேல் முருகா வேலா என்றால் வேதனைகள் தீருதே
வள்ளி நாதன் என்று சொன்னால் வறுமையெல்லாம் ஓடுதே
புள்ளி மயில் வேலா என்றால் புனிதநிலை காணுதே
ஷஷ்டி பூஜை செய்ய செய்ய சாபம் எல்லாம் தீருதே
இஷ்ட சித்தி என்னுள் காண இன்னல் எல்லாம் மாறுதே
பாடியாடி பணிந்திருந்தால் பரவசமே ஆகுதே
ஆடிவரும் நேரம் கண்டால் ஆனந்தம் ஆகுதே
வாழ்வளிக்கும் வள்ளல் என்றால் வானமுதம் பொழியுதே
ஏழ்மையினி இல்லை என்றே எங்கள்குலம் பாடுதே
3. விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
விழிபுனல் தேக்கிட அன்புமேன்மேல்
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
விழைவுகு ராப்புனை யுங்குமாரா
முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
முலைநுகர் பார்த்திப என்றுபாடி
மொழிகுழ றத்தொழு தழுதழு தாட்பட
முழுதும லாப்பொருள் தந்திடாயோ
பரகதி காட்டிய விரகசி லோச்சய
பரமப ராக்ரம சம்பராரி
படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
பகவதி பார்ப்பதி தந்தவாழ்வே
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
எழுகிரி யார்ப்பெழ வென்றவேலா
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
எழுகரை நாட்டவர் தம்பிரானே
4. சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
5. மனநூறு கோடிதுன்ப நொடிமீதி லேநி னைந்து
மதனூட லேமு யங்கி யதிரூப
மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி
மதிசீரெ லாம ழிந்து கொடிதான
வினைமூடி யேதி ரிந்து புவிமீதி லேயு ழன்று
விரகான்மெ யேத ளர்ந்து விடுநாளில்
விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து
வெளிஞான வீடு தந்து அருள்வாயே
தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று
சிறுபேதை கால்ப ணிந்த குமரேசா
திரையாழி சேது கண்டு பொருராவ ணேசை வென்ற
திருமால்மு ராரி தங்கை யருள்பாலா
முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்த
முதுசூரர் தானை தங்கள் கிளையோடு
முடிகோடி தூளெ ழுந்து கழுகோடு பாற ருந்த
முனைவேலி னாலெ றிந்த பெருமாளே
6. பாசிப் படர்ந்த மலை முருகையா
பங்குனித்தேர் ஓடும் மலை முருகையா
ஊசி படர்ந்த மலை முருகையா
உத்திராக்ஷம் காய்க்கும் மலை முருகையா
மலைக்குள் மலை நடுவே முருகையா
மலையாள தேசமப்பா முருகையா
மலையாள தேசம் விட்டு முருகையா
மயிலேறி வருவாயிங்கே முருகையா
அந்த மலைக்குயர்ந்த மலை முருகையா
ஆகும் பழநி மலை முருகையா
எந்த மலையைக் கண்டு முருகையா
ஏறுவேன் சந்நிதி முன் முருகையா
ஏறாமல் மலை தனிலே முருகையா
ஏறி நின்று தத்தளிக்க முருகையா
பாராமல் கைகொடுப்பாய் முருகையா
பழநிமலை வேலவனே முருகையா
வேலெடுத்து கச்சை கட்டி முருகையா
விதவிதமாய் மயிலேறி முருகையா
கோலா கலத்துடனே முருகையா
குழந்தை வடிவேலவனே முருகையா
உச்சியில் சடையிருக்க முருகையா
உள்ளங்கையில் வேலிருக்க முருகையா
நெற்றியில் நீறிருக்க முருகையா
நித்தமய்யா சங்குநாதம் முருகையா
தேரப்பா தைப்பூசம் முருகையா
தேசத்தோர் கொண்டாட முருகையா
இடும்பன் ஒரு புறமாம் முருகையா
இருபுறமும் காவடியாம் முருகையா
கடம்ப வனங்கண்டு முருகையா
காட்சிதர வருவாயிங்கே முருகையா
பாவிநான் என்றுசொல்லி முருகையா
பாராம லிருக்கிறாயோ முருகையா
பழனிமலை மீதில்வாழும் முருகையா
பாலகனைக் காக்கவாராய் முருகையா
வள்ளிதெய்வானை யோடு முருகையா
வரவேணும் மயிலேறி முருகையா
7. ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத மனோ
தீதா சுரலோக சிகாமணியே!
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே.
8. காரணம தாக வந்து புவிமீதே
காலனணு காதி சைந்து கதிகாண
நாரணனும் வேதன் முன்பு தெரியாத
ஞானநட மேபு ரிந்து வருவாயே
ஆரமுத மான தந்தி மணவாளா
ஆறுமுக மாறி ரண்டு விழியோனே
சூரர்கிளை மாள வென்ற கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற பெருமாளே
9. அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே

May 6, 2009
புரசை அருணகிரி பாடல்கள் - 1
சென்னை புரசைவாக்கத்துல E. அருணகிரி ன்னு ஒரு தாத்தா இருக்கார். கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு ரொம்ப புடிச்சவர். அவர்கிட்டயும், வேற நெறையா பேர்கிட்டயும் நல்ல பாராட்டுகளைப் பெற்றவர். திருப்புகழ், அநுபூதி ன்னு நெறையா பொக்கிஷங்களை இன்றைய தலைமுறைக்குப் போய் சேரும்விதம் மெட்டுப் போட்டு நல்லா பாடி, கேசட், சிடி க்களா வெளியிற்றிருக்கார்.
TMS, சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரமணியம்மா, பித்துக்குளி முருகதாஸ் இப்படி பல பேரோட பக்திப் பாடல்கள நாம கேட்டு லயிச்சதுண்டு. அந்த மார்கத்துல இவரும் தெய்வத் திருவருள் பெற்றவர்களின் பாடல்களோடு நடுப்பர, நடுப்பர ஜாலியான காவடி பாட்டுகளையும் பாடி இருக்கார். நான் கேட்ட இவரோட பாடல் வரிகளை இந்த கலெக்ஷன்ல போடலாம்னு இருக்கேன். அர்த்தம் போடல. அதுல கவனம் இல்ல இப்போ. அர்த்தம் தெரிஞ்சா அனுபவிச்சுப் பாடலாம் தான். கொழந்தைங்க நாம சொல்ற சாமான் என்னென்னே தெரியாம போய் கேட்டாலும், கடைக்காரன் தரத்தான் போறான். இப்போதைக்கு நம்ம நெலையும் அதான். இந்தப் பாடல்கள கேசட், சிடி யோட ஈஸியா ப்ராக்டிஸ் பண்ணி தூள் கெளப்புங்க. கஷ்டம் வந்தா கந்தன கூப்டுங்க, கவலையப் போக்கி, இஷ்டத்தப் பூர்த்தி பண்ணுவான்.
யூ ட்யூப் ஆடியோ சாம்பிள் லிங்க்:
https://www.youtube.com/watch?v=giZEp5YYJF8
மொதல் கலெக்ஷன்:
1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
பொருள்: சிவந்த மேனியையுடைய (துப்பு = சிவப்பு, பவளம்) தும்பிக்கையானின் பாதங்களை பூக்கொண்டு தவறாமல் பூஜிப்பவர்க்கு, வாக்கு, நல்ல மனம், லக்ஷ்மி கடாக்ஷம், வாட்டமில்லாத உடம்பு ஆகியன உண்டாகும்.
2. ஆடும் பரிவேல் அணி சேவலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே
3. உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத்தே பருகி பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பி தனக்காக வனத்தணைவோனே
தந்தை வலத்தா லருள்கை கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத் தானை முகப் பெருமாளே.
4. மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனை சென்று கண்டுதொழ
நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே.
5. பக்தியால் யானுன்னை பலகாலம்
பற்றியே மாத்திருப் புகழ்பாடி
முத்தனா மாறனைப் பெருவாழ்வில்
முக்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தம தான சத்குண நேயா
ஒப்பிலா மாமணி கிரிவாசா
வித்தகா ஞானசத் தினிபாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வா வா முருகா வடிவேல் அழகா
கந்தா முருகா கடம்பா முருகா
கதிர்வேல் முருகா கதிர்காம முருகா
குமரா முருகா குஹனே முருகா
மயில்வேல் முருகா மயூர முருகா
திருத்தணிகை முருகா திருச்செந்தூர் முருகா
ஸ்வாமியே முருகா ஸ்வாமிமலை முருகா
சரவண முருகா சரணம் முருகா
சரவண முருகா சரணம் முருகா
ஷண்முக முருகா ஷடாக்ஷர முருகா
6. வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்குமே
செந்தில்நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை.
7. வசன மிகவேற்றி மறவாதே
மனது துயராற்றி லுழலாதே
இசைபயில் ஷடாக்ஷர மதாலே
இகபர சௌபாக்ய மருள்வாயே
பசுபதி சிவாக்ய முணர்வோனே
பழனிமலை வீற்றருளும் வேலா
அசுரர் கிளைவாட்டி மிகவாழ
அமரர் சிறைமீட்ட பெருமாளே
8. உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான்பின் செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தி வாழ்வே.
9. காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப் படிந்து மடியாதே
ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்தி லந்த மருள்வாயே
தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.
10. யாமோதிய கல்வியும் எம்மறிவும்
தாமேபெற வேலவர் தந்ததினால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே
11. காவடியாம் காவடி கந்தன் வேலன் காவடி
கண்கொள்ளா காட்சிதரும் கடம்பனுக்குக் காவடி
வேல்முருகன் நாமத்திலே விதவிதமாய்க் காவடி
காவடியாம் காவடி கந்தன் வேலன் காவடி
வெற்றிவேலன் காவடி வீரவேலன் காவடி
சிங்கார வேலனுக்குச் சின்ன சின்னக் காவடி
வண்ணமயில் தோகையோடு ஆடிவரும் காவடி
காவடியாம் காவடி கந்தன் வேலன் காவடி
பழனிமலை பாலனுக்குப் பால்குடத்தால் காவடி
தென்பழனி வேலனுக்குத் தேன்குடத்தால் காவடி
ஸ்வாமிநாத வேலனுக்கு சந்தனத்தால் காவடி
பாலஸுப்ரமண்யனுக்குப் பஞ்சாமிர்த காவடி
ஆறுமுக வேலனுக்கு அழகுமயில் காவடி
வண்ண வண்ணக் காவடி வெற்றிவேலன் காவடி
மயூரநாதனுக்கு மச்சத்தால் காவடி
குன்றக்குடி குமரனுக்குக் குறைவில்லாத காவடி
பக்தரெல்லாம் கொண்டாடும் காவடியாம் காவடி
பாமாலைப் பாடியாடி நாடிவரும் காவடி
கண்கொள்ளாக் காட்சிதரும் கந்தவேலன் காவடி
காவடியாம் காவடி காணவேண்டும் கண்கோடி
12. காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே
13. பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காகமுற அருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வலம்வரு மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
14. பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே
15. கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே.
16. அன்பருக்கு அன்பனே நீ ஹரஹர முருகா
ஆறுபடை வீடுடையாய் ஹரஹர முருகா
இன்பமய ஜோதியே நீ ஹரஹர முருகா
ஈசனுமை பாலகனே ஹரஹர முருகா
உலகநாதன் மருகனே நீ ஹரஹர முருகா
ஊழ்வினையைத் தீர்த்தருள்வாய் ஹரஹர முருகா
எட்டுகுடி வேலவா நீ ஹரஹர முருகா
ஏறுமயில் ஏறிவா நீ ஹரஹர முருகா
ஐங்கரனுக் கிளையவனே ஹரஹர முருகா
ஒய்யார வள்ளிலோலா ஹரஹர முருகா
ஓம்கார தத்துவமே ஹரஹர முருகா
ஔவைக்குப தேஸித்தவா ஹரஹர முருகா
ஹரஹர முருகா ஸ்வாமி ஹரஹர முருகா
திருத்தணிகை வேலனுக்கு ஹரஹர முருகா
திருமாலின் மருகனுக்கு ஹரஹர முருகா
திருப்போரூர் முருகனுக்கு ஹரஹர முருகா
திருப்பழனி செல்வனுக்கு ஹரஹரோஹரா
குன்றிலாடும் குமரனுக்கு ஹரஹர முருகா
குறவள்ளிக் காந்தனுக்கு ஹரஹர முருகா

Subscribe to:
Comments (Atom)