Dec 25, 2008

மன்னார்குடி டூர்

மன்னார்குடில முகுந்தன், முகுந்தன்னு ஒரு நண்பர். அவருக்கு கல்யாணம் 04.07.2008 வெள்ளிக்கிழமை அன்னிக்கு. அவன் பேட்ச் M.C.A பசங்களுக்கு 'பஞ்ச பாண்டவர்கள்' னு பேரு. (ஏன்னா அவிங்க க்ளாஸ்ல மொத்தமே அவ்ளோ பேர்தான் !!). அவரு கல்யாணத்துக்குத்தான் மிச்ச நாலு பேரு, நான், என் மனைவி எல்லாரும் போகலாம்னு ப்ளான். இந்த பசங்களப் பத்தி ஒரு அறிமுகம்.
சுப்ரமணியன்: இவர்தான் தர்மர். திருநெல்வேலி கிட்ட அரிசி அப்பளத்துக்கு பேர் போன கல்லிடைக்குறிச்சி தான் இவர் ஊரு. ஐயர் பையன். கொஞ்சம் ஆசார சீன் போடுவார். இப்போ மெட்ராஸ்ல இருக்கார்.
கமலநாதன்: இவர்தான் பீமசேன மஹராஜா. ஸைஸும் அப்டியேதான் இருப்பார். பவர் இல்லாத போலீசு (எல்லாம் ட்ரைனிங் ஸ்கூல் போலீஸ்)! தண்ணி இல்லாத ஆறு!!(பாலாறு)! ராஜா இல்லாத கோட்டை ! இப்டி ரொம்ப புகழ் பெற்ற வேலூர் கிட்ட இருக்கற பள்ளிகொண்டா இந்த ராசாவோட ஊர். அந்த ஊர்ல இருக்கற பள்ளி கொண்ட பெருமாள் ரொம்ப ஃபேமஸ். இப்போ மெட்ராஸ்ல இருக்கார்.
கார்த்தி: இவர் அர்ஜுனன். ராமேஸ்வரத்த சேந்தவர். இப்போ மெட்ராஸ்ல இருக்கார்.
முகுந்த்: நகுலன். இவுருக்குதான் இப்போ கல்யாணம். இப்போ பெங்களூர்ல இருக்கார்.
வினோத் சர்மா: ஸஹதேவன். கல்கத்தாவ சேந்தவர். இப்போ பெங்களூர்ல இருக்கார்.

நான் இவுங்களுக்கெல்லாம் ஒண்ணு, ரெண்டு பாடத்துக்கு வாத்யார் M.C.A ல.

வடுவூர் ராமர்
ஆலங்குடி குரு
திருவாரூர் த்யாகேஸர்
நாகப்பட்டிணம் சௌந்தரராஜப் பெருமாள்
சிக்கல் சிங்காரவேலர்
மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி
திருபுவனம் ஸரபர்
திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி
கோவிந்தபுரம் போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ப்ருந்தாவனம்
ஒப்பிலியப்பன் கோவில்
திருநாகேஸ்வரம்
நாச்சியார் கோவில்
திருச்சேறை ருணவிமோசன ஸ்வாமி
பட்டீஸ்வரம் துர்கை
திருவலஞ்சுழி பிள்ளையார்
தாராஸுரம்
தஞ்சை ப்ரஹதீஸ்வரர்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்
ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள்
திருப்பராய்த்துறை
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், தாயுமானவர்
- இது தான் 3 நாள்ல நாங்க பாத்துட்டு வந்த கோவில் லிஸ்ட்டு !!

இனிமே எங்க டூர் கதை:

03.07.2008 (வ்யாழக்கிழமை) நைட்டு ராக் ஃபோர்ட் எக்ஸ்ப்ரெஸ்ஸ புடிக்க ப்ளான் பண்ணினபடி நான் 7.50 க்கு ஸ்டேஷனுக்கு வந்தாச்சு. இந்த பசங்க 8.50 க்கு வந்தானுங்க. ஒழுங்கா V.L.R ல சாப்டுருக்கலாம். வெளில வஸந்த பவன் போய்ட்டு வந்ததுல ஒரு 900 ரூபா மொதல் வெடி.
நான், என் மிஸஸ், கமலு, சுப்ரி நாலு பேருக்கு தான் டிக்கெட் ரிஸர்வ் பண்ணினதே. அதுவும் RAC. கார்த்திக்கு ஓப்பன் டிக்கெட் வாங்கி, TTR கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணி, எக்ஸ்ட்ரா 90 ரூபா கட்டி, கடைசில (வண்டி கடைசி இல்ல !!) எல்லாருக்கும் பெர்த்து கெடச்சாச்சு. யார், யார் எங்கெங்க படுத்துக்கரதுன்னு பேசி, பிரச்ன பண்ணி, முடிவெடுத்து படுத்து ஜோரா ஒரு தூக்கத்த போட்டோம்.

காலையிளங்கதிரில் தஞ்சை காட்சி தெரியுது. பிளாட்ஃ பார்ம் வேல நடந்ததுனு இருக்கு. வெளில வந்து, கொஞ்சம் ஃபோட்டோல்லாம் எடுத்துனு (பஸ் வரலியே), மன்னார்குடில வந்து இறங்கினோம். ஒரு ஹோம்லி மண்டபம். பொண்ணோட வீட்ல யாருக்கோ அரசியல் தொடர்பு. வெளில ஒரே பேனர், கீனர்னு கலர், கலரா ஒரே அமக்களம். குளிச்சோம். மெட்ராஸ் மேன்ஷன் பழக்கம், பசங்க ரெண்டு, ரெண்டு பேரா குளிச்சாங்க. முகுந்த் பெரியப்பா ரூம் கீய தர்றதா இல்ல. எல்லாரும் மேக்-அப் பண்ணினு வர்ற வரைக்கும் கூடவே இருந்து உதவி !! பண்ணினார்.

இட்லி, சட்னி, சாம்பார், பொங்கல், கொத்ஸு, பூரிக் கெழங்கு - காலை டிஃபன் இது. பூரி கொஞ்சம் தீஞ்சு இருந்துது. நண்பர் கல்யாணம். அதுனால மொய்யும் குடுக்க முடியாது!! (இது வேற). இப்பத்தானே கல்யாணத்துலெல்லாம் பூரி, தோசையெல்லாம். நல்லா சாப்டோம். நல்லதொரு ஐயங்கார் வீட்டு கல்யாணம். ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு பழைய, கலாச்சாரத்து, க்ராமத்து கல்யாணம். முஹூர்த்தம் ஆயாச்சு. M. B. A கார்த்திக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம். அவரும் காசியும் வந்தார்கள், பத்திரிக்கை குடுத்தார்கள், தின்றார்கள், சென்றார்கள்.

இனிமே லஞ்ச்சுக்கு தான் மண்டபத்துல வேல. கெளம்பியாச்சு டூருக்கு. மாப்ள அண்ணா அவரோட கார எங்களுக்கு அரேஞ்ஜு பண்ணி குடுத்தார் வடுவூர் ராமர தரிசனம் பண்ணிட்டு வரச்சொல்லி. ட்ரைவர் அண்ணாவ அட்ஜஸ்ட் பண்ணி, ஆலங்குடி குரு கோவிலையும் தரிசனம் பண்ணிட்டு வந்துட்டோம். ராமர் ஸ்டைலா சாஞ்சு நின்னுண்டு, சிரிச்சபடி அஸத்தலா போஸ் குடுக்கறார். காஞ்சிபுரம் கிட்ட கோவிந்தவாடி அகரம்னு ஒரு ஊர். சமீபத்துல அங்க குரு சிலைய மாத்தியிருக்காங்க. அது ஆலங்குடிய விட நல்ல ஒசரம்.

இந்த டூர்ல ரெண்டு விஷயம்
1. குரு கோவில், சிக்கல் சிங்காரவேலர், திருபுவனம் ஸரபர், பட்டீஸ்வரம் துர்கை இப்படி எல்லா ஸ்தலங்களுமே மேக்ஸிமம் சிவஸ்தலங்கள் தான். ஆனா, கோவில் நிர்மாண லக்ஷணப்படி அமைஞ்ச ப்ராகார சன்னதிகள் பேர் வாங்கியிருக்கு.
2. எங்களோட எல்லா டூர்களுமே கொஞ்சம் ஃபாஸ்ட் தான். இருக்கற காசுல, டயத்துல நெறைய்யா எடம் கவர் பண்ணனும். அதுனால, ஒவ்வொரு எடத்துலயும் முக்யமான விஷயங்கள பாத்துட்டு வண்டீல ஏறவேண்டியதுதான். பாதி எடம் ஃபோட்டோவ பாத்து தான், ஞ்யாபகப்படுத்திக்கவேண்டியிருக்கும். கல்யாணத்துல காண்ட்ராக்ட் சாப்பாடு சாப்டா மாதிரி. ஒரு கோவில் மெனு பாத்தா மாதிரி இருக்கும்.

திரும்பி மன்னார்குடி வந்து தம்பதிகளோட ஒக்காந்து (நிஜமான மாப்ள பெஞ்ச்), லஞ்ச் சாப்டோம். நல்ல விருந்து. உபசரிப்பு. கொஞ்ச நேரம் மாப்ள கூட இருந்துட்டு, பஸ்ல திருவாரூர் போய் சேந்தோம். த்யாகேஸர் நித்ய பிரதோஷத்துல ஒக்காந்து, நச்சுனு நாலு பாட்டு பாடினோம். அருமையான, ஸுகமான அனுபவம். மனுநீதிச் சோழன் கல் தேர், ஆழித் தேர் பாத்துட்டு, சங்கு தீர்த்தத்தையும் பாத்தோம். இந்த கொளத்துத் தீர்த்தத்த வச்சு விளக்கேத்தி, நமிநந்தி அடிகள் ஜைனத்துக்கு எதிரா சைவத்த நிரூபிச்சதா வரலாறு. பொழுது விடிஞ்சுட்டதால பூதங்கள் அப்பிடியே விட்டுட்டு போன கட்டிட வேலைகளையும் பாத்தோம். இந்த மாதிரி இடங்கல்லேந்து எடுத்துண்டு போன தூண்கள், பகுதிகளை வெச்சுதான் VGP கோல்டன் பீச் உண்டாச்சு. இந்த கோவில்ல நெறையா தேவர்கள், ரிஷிகள் வழிபட்ட சிவ சன்னதிகள் நெறைய்யா இருக்கு. கார்த்தி மாங்கா மடையன் காணாமப் போய், கெடச்சான், முக்கால் மணி நேரம் வேஸ்ட் ஆச்சு.

அங்கேந்து பஸ்ஸுல நாகப்பட்டிணம் போய் சௌந்தரராஜப்பெருமாள், பள்ளிகொண்ட பெருமாள்லாம் தரிசனம் ஆச்சு. இந்த கோவில்ல கருடனத் தவிர, கருடியும் உண்டு. நாங்க போயிருந்த அன்னிக்கு பெருமாளும், தாயாரும் கருடன், கருடில பொறப்பாடு. சூப்பர் தரிசனம். ஏற்பாடு N. J. கார்த்தியும், அவர் அப்பாவும். புளியோதரை, சக்கரப்பொங்கல் ப்ரஸாதம் சாப்டோம். இந்த பெருமாள் கைலயும் 'மாம் ஏக சரணம் வ்ரஜ' இருக்கு. ஆட்டோல வேகமாப்போயி சிக்கல் சிங்காரவேலரத் தரிசிக்கறோம். இங்க அஸுரர்கள வதைக்க, அம்மாகிட்டேந்து, முருகர் வேல் வாங்கின நாள ரொம்ப விசேஷமா சொல்றாங்க. அப்ப அங்க இருக்கற தூண், செவுரு, முருகர் சிலை எல்லாம் ரெண்டு, மூணு மணி நேரத்துக்கு வேர்க்குமாம். நைட்டு 1.30 மணிக்கு மண்டபத்துக்கு வந்து சேந்தோம். பசிக்கு பழமும், கல்கண்டு பாலும் மன்னார்குடி பஸ் ஸ்டாண்ட்ல வாங்கி சாப்டோம். காலம்பர சுப்ரி வெற்றிகரமா பெரியப்பாகிட்டேந்து சாவிய வாங்கிட்டு வந்தார். 5.7.2008 சனிகெழம காலைல ஆறு மணிக்கு மண்டபத்துலேந்து கெளம்பி, மாப்ள வீட்ல பக்ஷணம், வேஷ்டி, பொடவ வச்சு குடுத்தா. வாங்கிண்டோம். மன்னார்குடி கொளத்துக்கு பேரு ஹரித்வா நதின்னு சொல்றாங்க. காவேரி தண்ணி உள்ள வர்றதுக்கும், வெளில போறதுக்கும் அந்த கொளத்துல ஏற்பாடு இருக்கறதால நதின்னு சொல்றாங்க. அதன் கரைல மாப்ளைக்கு இன்னொரு வீடு இருக்கு. கொளத்துல குளிச்சுட்டு, அந்த வீட்ல ட்ரெஸ் சேஞ் பண்ணிண்டு, ராஜகோபாலஸ்வாமிய தரிசனம் பண்ணி, கொழந்த சந்தான கோபாலர் விக்ரஹத்த கைல வாங்கி, கொழந்த வரம் வேண்டி பூஜ பண்றதுக்கு மாப்ள வீட்ல ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.

இந்த சுப்ரி பையன் சொன்னத கேட்டு அந்த கொளத்துல இருக்கற நடு மண்டபத்த நீச்சலடிச்சு ரீச் பண்ணலாம்னு குதிச்சாச்சு. நல்ல, பெரிய செவ்வகமான கொளம். வேற ஒரு உள்ளூர் பயலும் நீச்சலடிச்சு பாக்கக் காணோம். சுப்ரி முக்காவாசி க்ராஸ் பண்ணின ஒடனே, டயர்டு ஆய்ட்டாரு. நான் மண்டபத்த புடிச்சுடுவேன். ஆனா வேற யாருக்கும் உதவி பண்ற நிலைமைல நானும் இல்ல. நீச்சல நிறுத்திட்டு, சுப்ரிய தண்ணி குடிக்காத, மூஞ்சில தண்ணி படறா மாதிரி நீச்சல் அடிக்காத, இப்டி சில ஐடியா குடுத்து ஒரு வழியா மண்டபத்த புடிச்சு ஏறி, ஒக்காந்துட்டோம். திரும்பி போக, இப்போதைக்கு தெம்பு இல்லேங்கரதுல ஐயா ரொம்ப தெளிவா இருந்தார். அது மண்டபம் இல்ல. கர்பக்ரஹம், அர்த்த மண்டபம், ராஜகோபுரம், ஒத்த ப்ராஹாரத்தோட இருக்கற ஒரு முழுக் கோவில். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தோம். அர்த்த மண்டபத்துல ஏற்கனவே அந்த எடத்துக்கு போயிருந்த வீரர்களோட கை வண்ணக் கருத்துக்களையும் பாத்தோம். கரைல இருக்கற பெடல் போட்ட எடுத்துண்டு வர சொல்லலாமா, எந்த கரைய பாத்து நீச்சல் அடிக்கலாம், என்ன டெக்னிக்க பயன்படுத்தி எனர்ஜிய மிச்சப்படுத்தலாம், இப்டி பல யோசனைகள். மண்டைல நெறையா நக்ஷத்ரங்கள்!! குதிச்சு தண்ணிக்குள்ளேயே கொஞ்ச தூரத்த க்ராஸ் பண்ணனும், அப்பறம் கொஞ்ச தூரத்த மல்லாக்க நீச்சலடிச்சு க்ராஸ் பண்ணலாம், மூஞ்சில தண்ணி படாம, வாயத் தொறக்காம கொஞ்ச தூரம், தூரம் கம்மியா இருக்கற கரைய நோக்கி ஆரம்பிக்கலாம் , இதெல்லாம் எங்களோட திட்டங்கள் சுப்ரிக்கு. கொஞ்ச தூரத்த தண்ணிக்குள்ளேயே க்ராஸ் பண்றேன்னு ஐயா குதிச்சாரு. கொஞ்ச நேரம் கழிச்சு தான் எழுந்தாரு, ஆனா அதே எடத்துலேயே!! ஆண்டவா!! அந்த மடையன நாலு திட்டு திட்டிட்டு, அண்ணாந்து நீச்சலடிக்க சொல்லிட்டு நானும் குதிச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா அவனக் காணோம். ஐயா அண்ணாந்து படுத்துனு திசை தெரியாம, ரெண்டு பக்கத்து கரையையும் உட்டுட்டு, ரெண்டு கரை சேர்ற மூளைய நோக்கி நீச்சலடிச்சுனுருக்கார். அவன் மூஞ்சில தண்ணி அடிச்சு அவன கரை எங்க இருக்கு, நீ எங்க போயினுருக்கன்னு பாருன்னு திட்டினேன். பாத்த ஒடனே, அவரு கடைசி ஆசையெல்லாம் ஞாபகப்படுத்திண்டாரு. கொஞ்சம் பயம் ஜாஸ்தியாயாச்சு. கொஞ்ச நேரத்துல படியத் தொட்டுட்டோம். திருநெல்வேலியிலிருந்து ஒரு குற்றாலீஸ்வரன். கார்த்தி தண்ணீலையே படல. தண்ணி கிட்ட இருக்கற படியில பள்ளிகொண்ட பெருமாள் மாதிரி படுத்துண்டு, ஒரு கையால தண்ணிய வாரி, வாரி தன் மேல எறச்சிண்டே, குளிச்சு முடிச்சுட்டாரு. ட்ரெஸ் மாத்திண்டு, கோவிலுக்கு போயி, தரிசனம் பண்ணி முடிச்சோம். சந்தான கோபாலர் விக்ரஹம் நல்ல வெயிட்டு. காலஞ்சென்ற ஸ்ரீ. பாலசுப்ரமணியன் வருஷக்கணக்குல ஒழச்சு, ப்ராஹார செவுர்ல ராமாயண, பாரத காட்சிகள சித்திரமா தீட்டியிருக்கார்.

அடுத்ததா, கம்ப்யூட்டர் இஞ்சிநீயரிங் படிக்கற கும்பகோணம் சிவராமன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி, ஒரு கார் ஏற்பாடு பண்ணி, அவர் தம்பியையும் எங்களோட வந்து கும்பகோணம் கோவில்களையெல்லாம் சுத்திக் காமிக்க உதவி கேட்டோம். சிவராமன் அப்பா வி.ஏ.ஓ வா இருக்கார். கும்பேஸ்வரர் மற்றும் சில பெரிய கோவில்ல எல்லாம் அவங்க பரம்பர, பரம்பரையா பூஜ பண்றவங்க. நாங்க ஃபோன் பண்ணினபோது வீட்ல பூஜ பண்ணிண்டு இருந்தார். சிவராமன் தம்பிக்கும் ஜொரம். சிவராம அம்மா எங்கள வீட்டுக்கு வரச்சொல்லி மோரு, தட்டை, காஃபி -னு ஒரே ஏற்பாடு. எனக்கும், என் மிஸஸுக்கும் ட்ரெஸ் வச்சுக் குடுத்தா. சிவராம அப்பா ரெண்டு, மூணு ஃபோன் பண்ணி, ஒரு அம்பாசிடர் காரும், கணேசன் -னு ஒரு நல்ல ட்ரைவரையும் ஏற்பாடு பண்ணி கொடுத்தார். 11 மணிக்கு வலங்கைமான்லேந்து அடுத்த டூருக்கு நாங்க கெளம்பறோம்.

திருபுவனம் சரபர பாத்துட்டு, திருவிடைமருதூருக்கு போய் சேந்தோம். மஹாலிங்க ஸ்வாமிய தரிசனம் பண்ணினோம். இந்த கோவில், மூணு மருதூர்கள்ல இடை மருதூர். பட்டினத்தார், பத்ரகிரியார், 'சத்யம் அத்வைதம்', பெரிய சுதை நந்தி, சோழன் ப்ரம்மஹத்தி, இவைகள் சம்பந்தபட்டது. சதுர்வேத பாடசாலை இன்னிக்கும் இங்க நடந்துண்டு இருக்கு. அங்கேந்து
போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ப்ருந்தாவனம் போய் சேந்தோம். கட்டிட வேல நடந்துண்டு இருக்கு. வரத ஆஞ்சநேயர் தரிசனம் பண்ணி, தயிர் சாதம் ப்ரஸாதம் கெடச்சுது. ராம், ராம் சொல்லி சாப்டுட்டு ஒப்பிலியப்பன், திருநாகேஸ்வரம் கோவில் ரெண்டும் நடை சாத்தியாச்சு. சரின்னு கும்பகோணம் போயி (வழில சாரங்கபாணி, கும்பேஸ்வரர் கோபுர தரிசனங்கள்), ஐடியா மணி அம்புலி உபயத்துல ஒரு பாக்கெட் ஏழு ரூபான்னு கலந்த சாதம், ஸ்நாக்ஸ் வாங்கிண்டு, ட்ரைவர் அண்ணா "தாராஸுரம் கோவில சுத்தி புல்வெளி, நிழல் இருக்கும், நிம்மதியா சாப்டலாம்" னு சொன்னத கேட்டு அங்க போயி, சாப்டோம். 4 மணிக்கு கோவில் திறக்கும் போது ஒப்பிலியப்பன் கோவில்ல நாங்க தான் மொதல் தரிசனம். அங்கேந்து திருநாகேஸ்வரம் ராஹு தரிசனம். சுப்ரி சாயங்கால அனுஷ்டானத்த அந்த கோவில் கொளத்துல முடிச்சார்.

அப்பறம் நாச்சியார் கோவில் கல் கருடன் (எண்ணைக்காப்பு சாத்தியிருந்தது) , திருச்சேறை ருண விமோசனர், பட்டீஸ்வரம் துர்கை தரிசனங்கள் ஆச்சு. அங்க எங்க அண்ணாக்கு நால்ரை கிலோ வெய்ட்ல பெண் கொழந்தை பொறந்துருக்கறதா தகவல் வந்துது. எல்லாருக்கும் வெங்காய பக்கோடா ட்ரீட். இனிமே எல்லா கோயில்கள்லையும் பசங்க தான் தரிசனம். எங்களுக்கு கொழந்த பொறந்த தீட்டு. பசங்க கடல்நொரைல பண்ணின திருவலஞ்சுழி விநாயகர், தாராஸுரம் ரெண்டையும் முடிச்சிண்டு, தஞ்சை பெரிய கோவிலையும் பாத்தாங்க. அங்க டின்னர் ட்ரீட் சர்மாஜி குடுத்தார். தலையாட்டி பொம்மை வாங்கினோம். நாராயண மூர்த்தி ட்ராவல்ஸ் பஸ்ல கார்த்தி மெட்ராஸ் கெளம்பினார். ட்ரைவர் அண்ணா எங்களோட வேகமான தரிசனங்களையும், வழில நாங்க பேசிண்டு வந்த விஷயங்களையும் பாத்து ரொம்ப சந்தொஷமாயிட்டார். பசங்க தஞ்சாவூர் தரிசனம் போயிருந்த போது, என்கிட்டயும், என் மனைவிகிட்டயும் ரொம்ப நேரம் பேசிண்டு இருந்தார்.

பொன்னையா க்ரூப் கல்வி நிறுவனங்கள், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், REC, நான் படிச்ச உருமு தனலக்ஷ்மி காலேஜ், SIT, BHEL, திருவெறும்பூர் கோவில், பால் பண்ணை ரவுண்டானா, காந்தி மார்கெட், சத்ரம் பஸ் ஸ்டாண்ட், ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை கோவில்களோட இரவொளிக்காட்சிகள், குடமுருட்டி பாலம் இதையெல்லாம் காம்சிண்டு கம்பரசம்பேட்டை வந்து சேந்தோம். எங்க ஊர் காவேரி தீர்த்தத்த தலைல தெளிச்சுண்டு, குடிச்சுட்டு நைட்டு ஒரு மணிக்கு வீடு வந்து சேந்தோம் (அப்பாடா). ட்ரைவர் அண்ணாக்கு காச குடுத்து, நன்றி சொல்லி அனுப்சிட்டு, உள்ள வந்து, மறுநாள் திருச்சில பாக்கவேண்டிய இடங்களயும், வழி, நேரங்களையும் முடிவு பண்ணினோம். எங்க வீட்டு பழைய ப்ளாக் அண்டு வொயிட் புகைப்படங்கள (பழைய ஒடஞ்ச க்ராமத்து வீடு, எங்க குடும்பத்து ஆளுங்க) இஷ்டமில்லாம டயர்டா பாத்துட்டு பசங்க தூங்கிட்டாங்க.

காலம்பற திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் தரிசனம் பண்ணினாங்க. திருச்சிலேந்து பெங்களூருக்கு எங்க வீட்ல ஒழுங்கா சர்மாஜீக்கு டிக்கெட் ரிஸர்வ் பண்ணல. நானும், கணேஷ் சித்தப்பாவும் ஜங்க்ஷன் பஸ் ஸ்டாண்ட சுத்தி இருக்கற எல்லா ப்ரைவேட் பஸ்லயும் ட்ரை பண்ணினோம். ரிசல்ட் ஜீரோ. பாவம் சர்மாஜீ, உடனே கட் ஜர்னிக்கு கெளம்பிப்போயிட்டார். கமலும், சுப்ரமணியும் திருப்பராய்த்துறை, மலைக்கோட்டையை முடிச்சிண்டு வீடு வந்து சேந்தாங்க.

நைட்டு 1.30 முத்து நகர் எக்ஸ்ப்ரஸ புடிக்கத் தயாரா பத்து மணிக்கே திருச்சி ஜங்க்ஷன் -கு வந்துட்டோம். ட்ரைன்லயும் கரெக்ட் பொட்டிய பாத்து ஏறினோம். ஆனா எங்க எடத்துல வேற ஆளுங்க படுத்துனு இருந்தாங்க. அவங்க TTR செக் பண்ணின டிக்கெட்டையும் காமிச்சாங்க. நாங்களும் TTR கிட்ட போனோம். அவர் டீ குடிச்சிண்டே கூலா, "இது நேத்தி டிக்கெட்" -னுட்டார். தூக்கு மூட்டைய, நாளைக்கு ஆபீசு. ஓடு பஸ் ஸ்டாண்டுக்கு. கோவில், டூர், சாமி எல்லாம் மறந்து போச்சு. சிரிப்பு ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கம். ஒருத்தர ஒருத்தர் ஓட்டிண்டும், நக்கலடிச்சுண்டும், நடந்த தவறு (தப்பில்லே, தவறு, ஆமாம்) எப்டி நடந்துருக்கும்னு ஆராய்ச்சியும் பண்ணிண்டும் பஸ் ஸ்டாண்ட்ல டயத்த போக்கினோம். பஸ்ஸக்காணோம். வந்தா எடத்தக் காணோம். ஆளுக்கு ஒரு பக்கம், திருடன்-போலீஸ் மாதிரி செல்
ஃபோனக் கைல வச்சிண்டு, சுத்தினு இருந்தோம். கமலு ஒரு M.G.R பஸ்ஸ (விழுப்புரம் ரெஜிஸ்ட்ரேசன்) இருட்டுல கண்டு புடிச்சு எடத்தப் போட்டு, எங்களுக்கு ஃபோன் பண்ணினாரு. 07.07.2008 காலை 10.30 மணி, தாம்பரத்துல வந்து இறங்கியாச்சு. ட்ரைன் எல்லாம் அன்னிக்கு மூணு மணி நேரம் லேட்டாம்!! கொஞ்சம் பேர் பேசிண்டு இருந்தாங்க. என் தம்பியும் அத கன்பாம் பண்ணினான். எல்லாம் சிவன் செயல். ஆபீசுக்கு பெர்மிஷன் போட்டு போய்சேந்தோம்.

- மூணு நாள். இருபதுக்கும் மேற்பட்ட கோவில்கள், கல்யாண சாப்பாடு. கூத்து, கும்மாளம், கொழப்பம், கொண்டாட்டம், கேலி,....
- பசங்க தான் சீக்ரம் டயர்ட் ஆயிடறாங்க,
- நல்ல வெய்யல், தண்ணி கூசாம நெறையா எடுத்துண்டு போணும்.
- லூஸ் ட்ரெஸ்ஸா எடுத்துண்டு போகணும்.
- ஒழுங்கான டாய்லெட்ட ஒழுங்கா பயன் படுத்தணும் - கோவில் டூரு.
- பழம், ஸ்நாக்ஸ் ஒரு ஹோல் சேல் கடைல வாங்கி போட்டுக்கணும்
- ஏ. சி கார் கூட புக் பண்ணிக்கலாம். இன்னும் சில நூறுகள் தலைக்கு.
- இந்த மாதிரி யார் வீட்டு ஊரு, விசேஷம் சமயம்னா இன்னும் நல்லது. நல்ல சாப்பாடா ஓசியில கெடைக்கும்
-
ஃபோட்டோ, வீடியோ நிச்சயம் எடுக்கணும்
- நம்மல மட்டும்
ஃபோட்டோ எடுக்காம, உள்ளூர்ல நமக்கு ஏற்பாடு, உதவி பண்றவங்களையும் எடுக்கணும்.
- டூர் முடிஞ்சதும் உதவி பண்ணினவங்களுக்கு நல்லபடியா முடிஞ்சதையும், வந்து சேந்ததையும் சொல்லணும்.
- எட்டாந்தேதி கமல்
போட்டோஸ் ரெடி பண்ணிட்டாரு. எல்லாருக்கும் அனுப்பியாச்சு. கணக்கு, வழக்கு சரிபண்ணி ஓ. கே ஆச்சு.

நிகழ்ச்சி ஏற்பாடுகள்:
- மன்னார்குடி முகுந்தன் குடும்பத்தார்
- நாகப்பட்டினம் கார்த்தி குடும்பத்தார்
- கும்பகோணம் சிவராமன் குடும்பத்தார்

பண உதவி:
- ராமேஸ்வரம், ACS, TCS புகழ் கார்த்தி
- கல்கத்தா, பெங்களூர் மைண்ட் ட்ரீ புகழ், "தாமரை இலைத் தண்ணீர்" வினோத் சர்மாஜீ

ஒளிப்பதிவு:
- "தங்கத் தாய் மாமன்" கமல் (எ) கமல்காந்த் (எ) கமலேஷ்

தொகுப்பு:
- பள்ளிகொண்டா கமல்
உதவி:
-வாத்யார் சீதாராமன்,
நிகழ்ச்சியில் உறுதுணை:
- நெல்லையார் சுப்ரி என்கிற சுப்ரமணி அனந்தராம சுப்ரமணிய அனுஷ்டான ஐயர்

Dec 12, 2008

கால் பேலன்ஸ்

செல்லுல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது
ஆனா மனுஷனால, கால் இல்லேன்னா பேலன்ஸ் பண்ண முடியாது

தேள்

அரிசி கொட்டினா அள்ளலாம், பருப்பு கொட்டினா அள்ளலாம், பால் கொட்டினா அள்ளலாம் , ஆனா தேள் கொட்டினா அள்ள முடியுமா?

கடைசி பெட்டி

ரயில் எவ்வளவு தான் வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசில தான் போகும்

தற்கொலை

ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்!

அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று!

அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.

அதற்கு அந்த சர்தார்ஜி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.

"அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்."எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.
உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.

அதற்கு அந்த புத்திசாலி சர்தார் "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்

பிளாட்ஃபாம்

கருத்து: என்ன தான் பணக்காரனா இருந்தாலும், ட்ரைன் ஏறனும்னா பிளாட்ஃபாம்கு தான் வரணும்

டைவெர்ஸ்

ஜட்ஜ்: சரி, உனக்கு டைவெர்ஸ் குடுக்கறேன். ஆனா 3 கொழந்தைங்க இருக்கே, அத எப்படி பிரிக்கறது ?
ஒருவர்: சரி, அப்ப அடுத்த வருஷம் எங்களுக்கு டைவெர்ஸ் குடுங்க !!

குடைய எடுத்துட்டு போ

ஒருவர்: ஏம்பா வேலக்காரா! செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தலாம்ல?
வேலைக்காரர்: மழை பெய்யுதுங்க
ஒருவர்: குடைய எடுத்துட்டு போ

அப்பர் பெர்த்

ஒருவர்: ட்ரைன்ல சரியா தூங்கவே இல்ல
அடுத்தவர்: ஏன் ?
ஒருவர்: அப்பர் பெர்த்து தான் கெடச்சுது
அடுத்தவர்: கீழ இருந்தவங்க கிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியது தானே
ஒருவர்: கடைசி வரைக்கும் வெயிட் பண்ணி பாத்தேன், யாருமே வரல !!

நிலம் எவ்வளவு தொலைவு?

டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருந்தது..
எங்கும் அழுகுரல்கள்.. ஓடினர்..அழுதனர்.. பலர் இறைவனைத் தொழுதனர்..
நம் சர்தார்ஜிக்குப் பக்கத்தில் நின்றிருந்த இத்தாலியர் கேட்டார்,
“இங்கிருந்து நிலம் எவ்வளவு தொலைவு?”

“இரண்டு மைல்கள்”-சர்தார்ஜி பதில் அளித்தார்.

“ப்பூ..வெறும் இரண்டு மைல்தானா? இதுக்குப் போய் ஏன் இந்த முட்டாள்கள் அழுது புலம்புகின்றனர்? எனக்கு நீச்சலில் நல்ல அனுபவம் உண்டு” சொல்லிக் கொண்டே கடலுக்குள் குதித்தார் இத்தாலியர்!

குதித்த இத்தாலியர் தண்ணீரின் மட்டத்திற்கு வந்ததும் கேட்டார், "எந்தப் பக்கமா நீந்தனும்?”

“அப்படியே கீழ் நோக்கி”-சர்தார்ஜி அசால்ட்டாகப் பதிலளித்தார்!

கொழம்பா? ரசமா?

புருஷனுக்கு இலைல சோறு போட்டுட்டு, பொண்டாட்டி ஒரு பாத்திரத்த கைல வச்சிண்டு கேக்கறா: ஏங்க! கொழம்பா? ரசமா?
புருஷன்: ஒனக்கே தெரியலியா?

Killing English

1. Principal to student..." I saw u yesterday rotating near girls hostel pulling cigerette... ? "

2. Class teacher once said : " pick up the paper and fall in the dustbin!!!"

3. once Hindi teacher said...."i'm going out of the world to America.."

4. Dont..laugh at the back benches...otherwise teeth and all will be fallen down.....

5. it was very hot in the afternoon when the teacher entered.. She tried to switch the fan on, but there was some problem. and then she said " why is fan not oning" (ing form of on)

6. teacher in a furious mood... write down ur name and father of ur name!!

7. "shhh... quiet... the principal is revolving around college"

8. My manager started like this "Hi, I am Pinky, Married with two kids"

9. "I'll illustrate what i have in my mind" said the professor and erased the board

10. "will u hang that calender or else i'll HANG MYSELF"

11. LIBRARIAN SCOLDE ," IF U WILL TALK AGAIN , I WILL KNEEL DOWN OUTSIDE"

12. Chemistry HOD comes and tells us.... "My aim is to study my son and marry my daughter"

13. Tomorrow call ur parents especially mother and father

14. "why are you looking at the monkeys outside when i am in the class?!"

15. Lab assistant said this when my friend wrote wrong code.. "I understand. You understand. Computer how understand??

16. Seing the principal passing by, the teacher told the noisy class.. "Keep quiet, the principal has passed away"

IAS interview answers

Source: http://ramanarayanan.blogspot.com/2006/05/ias-interview-answers.html
Hi all,

This is what presence of mind can really be! Maybe a good exercise for lateral thinking too.. read till end!
Not only our technical knowledge helps, but also the presence of mind and the right answer at right time. Even if u don't know the answer for a question just confuse the questioner

Question and the Answer given by Candidates (oh sorry they are IAS Officers now!)

Q.How can you drop a raw egg onto a concrete floor
without cracking it?
A. Concrete floors are very hard to crack! (UPSC
Topper)

Q.If it took eight men ten hours to build a wall, how
long would it take four men to build it?
A. No time at all it is already built. (UPSC 23 Rank
Opted for IFS)

Q.If you had three apples and four oranges in one hand
and four apples and three oranges in the other hand,
what would you have?
A. Very large hands.(Good one) (UPSC 11 Rank Opted for
IPS)

Q. How can you lift an elephant with one hand?
A. It is not a problem, since you will never find! an
elephant with one hand. (UPSC Rank 14 Opted for IES)

Q. How can a man go eight days without sleep?
A. No Probs , He sleeps at night. (UPSC IAS Rank 98)

Q. If you throw a red stone into the blue sea what it
will become?
A. It will Wet or Sink as simple as that. (UPSC IAS
Rank 2)

Q. What looks like half apple ?
A : The other half. (UPSC - IAS Topper )

Q. What can you never eat for breakfast ?
A : Dinner.

Q. What happened when wheel was invented ?
A : It caused a revolution.

Q. Bay of Bengal is in which state?
A : Liquid (UPSC 33Rank )


Interviewer said "I shall either ask you ten easy
questions or one really difficult question.

Think well before you make up your mind!" The boy
thought for a while and said, "my choice is one really
difficult question."

"Well, good luck to you, you have made your own
choice! Now tell me this. "What comes first, Day or
Night?"

The boy was jolted into reality as his admission
depends on the correctness of his answer,
but he thought for a while and said,
"It's the DAY sir!"

"How" the interviewer asked,

"Sorry sir, you promised me that you will not ask me a
SECOND difficult question!"

He was selected for IIM!
bye

Nov 25, 2008

People who brought me here - My Teachers

ஆசிரியர்கள்:

ஸ்ரீமதி அலிமா பீவி & ஸ்ரீமதி ஜெஸ்ஸி
:
- இவங்க ரெண்டு பேரும்தான் நான், என் தம்பி, எங்கண்ணா எல்லாருக்கும் ஒன்னாவதுலேந்து,
மூணாவது நாலாவது வரைக்கும் டீச்சர்ஸ்.
- கம்பரசன்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி எங்க ஸ்கூல்.
-
பெல் அடிக்கறது, சத்துணவு சாப்பிடறது, வாய்க்கால்லத் தட்டு அலம்பப் போய், தண்ணில ஆட்டம் போடறது, ட்ரெஸ்லெயெ ... போய்டறது, விழாக்களுக்கு கொடி கட்றது, கவெர்மென்ட் எலெக்ஷன் & ஸ்கூல் கொள்ளைகள வேடிக்கப்பாக்கறது இப்படிப் பல விஷயங்கள்ல எங்களப் பாத்துண்டு, பொறுத்துண்டு இருந்தவங்க.
- நல்லவங்க, அன்பானவங்க
- கண்ணா, பின்னான்னு எதுக்கெடுத்தாலும் அடிக்கமாட்டாங்க, பயமுறுத்தரதோட சரி
-
எங்க வீட்டு வழியாதான் ஸ்கூலுக்குப் போய், வரணும். வேலை, கல்யாணம்னு ஆன பிறகும், அவங்க ரிட்டைடு ஆறவரைக்கும் வழில பாத்தா வணக்கம் சொல்லி, பேசிட்டு தான் போவோம். அப்படி மதிக்கற, மறக்காத அளவுக்கு இருந்தவங்க.

ஸ்ரீ சுப்ரமண்யன்:
- கம்பரசன்பேட்டை ஸ்கூல் ஹெட்-மாஸ்டர்,
- எங்களுக்கு அஞ்சாங் க்ளாஸ் வாத்யார்
- நல்லவர், அன்பானவர், ஸ்கூல் சீனியர் ஸ்டூடண்ட்ஸ்ங்கிரதால நிறையா வேலை வாங்கறதுக்காக
கொஞ்சம் கண்டிப்பும்.
- எங்களுக்கு எதிர் வீடு. அவரோட பசங்களையே தெருவுலையே தண்டிக்கரதையும் நாங்க பாத்ததுண்டு.
- நேர் வழில போறது, ஒரு கவெர்மென்ட்டு ஸ்கூல் வளர்ச்சிக்காக பாடுபட்டு, சொந்த காச செலவு பண்றது, ஸ்கூலுக்காக
கவெர்மென்ட் ஆபீஸ், கோர்ட்டு, அவ்வப்போது நடக்கும் ஸ்கூல் கொள்ளை கேஸ்களுக்கு போலிஸ் ஸ்டேஷனுக்கு அலையறதுன்னு பல கஷ்டங்கள் பட்டவர்.
- பசங்கள உருப்பட வைக்கறதுல உள்ளூர் ஆளுங்க, பெற்றோர்கள் கூட மனஸ்தாபங்கள். எங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டார்.
- நல்லாசிரியர் விருதும் பெற்றார்.
- ஊர்ப் போக்கையும், மக்கள் போக்கையும் பார்த்து ரொம்ப வருந்துவார்.
- இன்னிக்கு நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். சாரும் ரிட்டைர்டு ஆகி வீட்டுப்பக்கம் திரும்பி இருக்கார்.
- ஒரே சேஞ். நாங்க வெள்ள வேஷ்டி, சட்டைலையே பாத்த சார் இப்போ பேன்ட், ஷர்ட் போட ஆரம்பிச்சிருக்கார்.

பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்:

- இங்க நான் ஆறாவது கால் பரிக்ஷைலேந்து ஆரம்பிச்சு, ஏழாவது வரை தான் படிச்சேன். இன்னும் இங்கயே படிக்க முடியலையேன்னு வருந்தினேன்.
-
ரயில்வே ஸ்டேஷன் கிட்ட நாங்க குடியிருந்த மார்டின்ராஜ் காலனியிலேந்து நடந்து போற தூரம் இந்த ஸ்கூல்.
- வழில காந்தி பார்க், குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்கள் படித்த கவெர்மென்ட் ஹை ஸ்கூல், ஹெட் மிஸ்ட்ரெஸ் வீடு.
- ஸ்கூல்ல வேலை பாத்த ஒவ்வொருத்தருமே அவங்களோட பொறுப்புணர்ந்து, விருப்பமா உழச்சாங்க.
- நான் சத்தமா உணர்ச்சியோட பேசறேன்னு ஸ்கூல் ஆண்டு விழா டிராமால எனக்கு மந்திரி வேஷம். அப்பா ராத்திரியோட ராத்திரியா அதுக்கு துணி வாங்கி, ட்ரெஸ் தெச்சு குடுத்தா.

ஸ்ரீ R. கிருஷ்ணமாச்சாரி:
- எங்க சித்தப்பாட்ட ஆரம்பிச்சு, என் தம்பி வரைக்கும் ஒம்பதாவது, பத்தாவதுல இங்லீஷ், சைன்ஸ் டீச்சர்
- கொஞ்சம் கண்டிப்பு
- இங்லீஷ் சூப்பரா சொல்லிக்குடுப்பார்

ஸ்ரீ ராஜாராம்:
- தெப்பக்குளம் பிஷப் ஹீபர் ஹை ஸ்கூல் என்.ஸி. ஸி. ஆபீசர்
- எங்களுக்கு
ஒம்பதாவது, பத்தாவதுல கணக்கு டீச்சர், அவர்கிட்ட ட்யூஷனும் போனோம்.
- இந்த ஸ்கூல் டீச்சர்ஸ் நிறையா பேர் எங்க தாத்தாவுக்கு ஜூனியர்ஸ். தாத்தா மேல ரொம்ப மதிப்பும், மரியாதையும் இருக்கறவங்க.
- இவர் அவர் அளவுல கொஞ்சம் நாஸ்தீகம். ஆனா சாமி, நம்பிக்கைகள் பத்தி ஏதானும் சொன்னா ஆர்வமா கேப்பார்.
- அருமையான மனிதர்.
- இன்னும் ஸ்ரீ. ஜார்ஜ் தங்கதுரைன்னு எட்டாம் க்ளாஸ் டீச்சர், பி.டி. மாஸ்டர்ஸ், ஜ்யாக்ரபி டீச்சர் (மேப் சூப்பரா சொல்லிக்குடுப்பார்) னு சிலர் ஞ்யாபகத்துல இருக்காங்க.

Centum செல்வராஜ்:
-
திருச்சி -ல ட்வெல்த்து கணக்கு ட்யூஷனுக்கு இவர் ரொம்ப பாப்புலர்.
- தன்மையானவர், சிரிச்ச முகத்தோட க்ளாஸ் எடுக்கற கணக்கு டீச்சர்.
- ட்யூஷன் இவருக்கு முழு நேர வேல.
-
ட்வெல்த்து அரையாண்டுத் தேர்வுல 200 க்கு ஆறு மார்க் எடுத்த என்ன மூனே மாசத்துல நூறுக்கு மேல வாங்க வச்சவர்.
- வருஷ ஆரம்பத்துலையே இவர் கிட்ட சீட் வாங்கணும். முழுப்பணமும் கட்டணும். ஐ. டி. கார்டெல்லாம் உண்டு. ஆனா எங்கப்பா ரிக்வெஸ்ட மதிச்சு, கடைசி மூணு மாசத்துக்கு என்ன சேத்துண்டு, மாச பீஸ் வாங்கிண்டார்.
-
ஒவ்வொரு சனிக்கிழமையும் டெஸ்ட் உண்டு. திங்கக்கிழம பேப்பர் திருத்தி வந்துடும். வீட்டுக்கு லெட்டரும் வரும்.
- நல்ல உழைப்பாளி. புக்ல இருக்கற எல்லா கணக்குகளையும் திருப்பித் திருப்பி போட வைப்பார்.

ஸ்ரீ. அசோக் குமார்
:
- திருச்சி யு.டி.வி. (உருமு தனலக்ஷ்மி வித்யாலயா, டௌன் ரயில்வே ஸ்டேஷன் கிட்ட இருக்கு) லெவன்த், ட்வெல்த் கம்ப்யூட்டர் டீச்சர்.
- ஜாலியான சார், ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட் உண்டு.
- க்ளாஸ் ஒழுங்கா படிக்கறோம்னு ஒரு பத்து பேர செலக்ட் பண்ணி, தனியா ஒரு கம்ப்யூட்டர் சென்ட்டர்ல ஓசி க்ளாஸ் சேத்துவுட்டார்.
- நான்தான் இவர் சப்ஜெக்டுல ஸ்கூல்ல முதல் மாணவர் !! அதுவும் அரசுத் தேர்வுல.
- இன்னும் கணக்கு, பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரீ, தமிழ் டீச்சர்லாமும் ரொம்பக் கஷ்டம்தான் பட்டாங்க. ஆனா நமக்குத்தான் தமிழ், இங்லீஷ், கம்ப்யூட்டர் தவிர மத்தத கண்டா பயம் இன்னிவரைக்கும்.

Major. ராமகிருஷ்ணன்:
-
திருச்சி யு.டி. காலேஜ் (உருமு தனலக்ஷ்மி) என்.ஸி.ஸி. ஆபீசர்.
- கெமிஸ்ட்ரீ துறைத் தலைவர்.
- ஆர்மீ ஆபீசர்ஸ், ரோட்டரி க்ளப் இப்படி ஊர்ல முக்யமானவங்க கிட்ட நல்ல தொடர்பும், செல்வாக்கும் உண்டு.
- நல்ல நிர்வாகி. (ஐ. ஏ. எஸ் எக்ஸாம் க்ளியர் பண்ணி இருக்கார்)
- காலேஜ் பசங்கள கையாளத் தெரிந்தவர்.

Lt. Col. V. சேகர்:
- திருச்சி என்.ஸி.ஸி. க்ரூப் ட்ரைனிங் ஆபீசர்
- பசங்கள ஜாலியா, ஆனா போக வேண்டிய, அடைய வேண்டிய இலக்கை நோக்கி சரியா கூட்டிண்டு போவார்.
- ஒவ்வொரு என்.ஸி.ஸி. ஸ்டுடென்ட் கிட்டயும் தனித் தனியா அக்கறை காமிச்சவர்.
- என்ன பல வேலைகள்ல ஈடுபடுத்தி, டெல்லி குடியரசு தின அணிவகுப்புல கலந்துக்கற அளவுக்கு தயார் பண்ணினதுல இவருக்கும் முக்யப் பங்குண்டு.

ஸ்ரீ சார்லஸ்:
-
திருச்சில ஜாவா சார்லஸ்னு சார் ரொம்ப பாப்புலர்.
- கம்ப்யூட்டர் சப்ஜெக்ட்ஸ் எல்லாமே இவருக்கு அத்துப்படி. ஸ்டூடென்ட்சையும் அப்படி ஆக்கிடுவார்.
- அநாவஸ்யமா சப்ஜெக்ட் தவிர எதையுமே பேச மாட்டார்.

ஸ்ரீ. சந்தானம்:
-
மெட்ராஸ் வைஷ்ணவா காலேஜ் கம்ப்யூட்டர் பி.ஜி. & ஆராய்ச்சித் துறைத் தலைவர்.
- ரொம்ப தெய்வ நம்பிக்கை
- ஜாலியா, எளிமையா இருப்பார்
- நல்ல என்கரேஜ் பண்ணுவார், சுதந்திரமா விடுவார், நமக்கு டைம் ஒதுக்கி, நம்மளோட பேசுவார்.
பேப்பர் பப்ளிஷ் பண்றது, கான்பிரன்ஸ் அட்டென் பண்றதுன்னு நம்மள தயார் பண்ணுவார்.
- லஞ்சம், அன்பளிப்பு கேக்காம விஷயத்துக்கு முக்யத்துவம் குடுப்பார்.

Nov 24, 2008

People who brought me here - சமூகப் பெரியவர்கள்:

மகா பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்:
புதுப் பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர
ஸரஸ்வதி ஸ்வாமிகள்:
- ஸ்பீடு,
- முடிவெடுக்கும் திறமை
- பிரச்னைகளை கைளாளும் விதம்
- பக்தர்களிடம் காட்டும் கனிவு
- எடுக்கிற வேலைல வரும் தடைகளைப் பத்திக் கவலைப் படாம, இருக்கற கொஞ்ச நல்லவாகிட்ட இருக்கற கொஞ்ச நல்ல விஷயங்களை சேர்த்துப் பயன்படுத்தி பெரிய விஷயங்கள சாதிக்கற நம்பிக்கை
- இருக்கற போஸ்டுக்கும், எடுத்துண்டிருக்கற வேலைகளுக்கும் அரசு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், பணக்காரர்களையும் அண்டாம ஒண்ணும் நடக்காது. ஆனா இவுங்களை அண்டினா மேல கொஞ்சம் சேறு, கறை எல்லாம் படத்தான் படும். ஆனா இது எல்லாத்திலயும் வரும் விஷத்தைத் தான் ஏத்துண்டு, அமிர்தத்தை நமக்குத் தரான்னு தான் தோண்றது. வேற யாரும் இந்த நீலகண்டர் வேலைக்கு வரமாட்டாளே. கிடைச்சிருக்கற விஷத்தை எல்லாம் வேற யாராலயும் தாங்கவும் முடியாது.
- பெரியாவாளா மட்டும் இல்ல, அரசியல்வாதி, பணக்காரன், அட்மிநிஸ்ட்ரேட்டர், நிர்வாக இயக்குனர் னு இப்பிடி பல வேஷத்துல வேலை பாத்தாகணும். எல்லாரையும் மறக்கற, மிதிக்கற , திருடற இந்த நன்றி கெட்ட சமுதாயத்துக்காக
- நம்பிக்கையான, திறமையான, நல்லவங்க டீம் ஒண்ணு கெடச்சா மகா பெரியவா மாதிரி அவங்க கிட்ட இந்த வேலையெல்லாம் வுட்டுட்டு திரும்பி பூஜை ரூமுக்குப் போவாளோ.


வாரியார் சுவாமிகள்:
-
மணிக் கணக்குல படிச்சவன், பாமரன் -னு எல்லாரையும் ஆர்வமா, மத்த வேலையெல்லாம் மறந்துட்டு, இல்ல ஒதுக்கிப்போட்டுட்டு நல்ல விஷயங்களை கேட்க வைத்தவர்.
- ஆன்மீகவாதி, நாஸ்தீகவாதி, பகுத்தறிவாளர் -னு எல்லாராலையும் மதிக்கப் பட்ட ஒரு, முதல் -னு கூட சொல்லலாம், சொற்பொழிவாளர்
- இன்னிக்குப் பல சொற்பொழிவாளர்கள் நான்தான் வாரிசு, வாரிசு -னு போட்டி போட்டுக்கற அளவுக்கு ஆன்மீக ஆராய்ச்சி, சொற்பொழிவுகளுக்கு ஒரு அடையாளமா இருந்தவர்
- நல்ல ஹைட்டு, அதுக்கேத்த ஒடம்பு, மணிக் கணக்குல நின்னுண்டே உபன்யாசம் பண்ற அளவுக்கு 'வயலூர் வள்ளல்' முருகப் பெருமான் அவருக்குக் கொடுத்த தெம்பு
- ஆன்மீகத்த மருந்தாகவும், சாப்பாடாகவும் யார் யாருக்கு எப்படிக் கொடுக்கணும்னு தெரிஞ்ச ஒரு வயசான தாத்தா.

வேங்கட சுப்ரமண்ய சாஸ்த்ரிகள் (எ) V. S. மாமா:
- என்னோட வேத வாத்யார்
- எனக்கு மட்டும் தனியா வேதம், சாஸ்த்ரம், ச்லோகம் சொல்லிக்குடுத்து, நான் பண்ணின தப்பு, தவறையெல்லாம் பொறுத்துக் கொண்டவர்
- சாப்பிடும்போது, நடக்கும்போது, குளிக்கும்போது, பிரயாணத்தின்போது, சபைல வைதீக கார்யங்கள் பண்ணும்போது, இப்படி எல்லா இடங்களிலேயும், வேலைலேயும் அதற்கான நித்ய, நிமித்த மந்திரங்கள், பக்தி, ஒழுங்கு, அடுத்தவங்களை அனுசரிச்சுப் போற தன்மை -னு பல விஷயங்களை என்ன மாதிரி நிறைய பேரை கவனிச்சு, பின்தொடர வச்சவர்.
-சம்பவனைக் குடுக்கரவாளத் திருப்தி படுத்தரதோட, அவாளத் திரும்பத் திரும்ப இந்த மாதிரி வைதீகர்களைக் கொண்டு நிறையா தர்ம காரியங்கள் பண்ணனுங்கற ஆசைய உண்டாக்கறவர்.
-
வைதீக கர்மாக்கள் பண்ணும்போது தானும், கூட இருக்கற வைதீகாளையும், பண்ணிக்கற குடும்பத்த சேந்தவங்களையும் அந்தக் கர்மாவோட முக்யத்துவத்தையும், பண்ற முறையையும் தெரிஞ்சு ச்ரத்தையா அதுல ஈடுபட வைத்தவர்.
- பண்ணிக்கற குடும்பத்துக்கு, வைதீக கர்மாக்கள் ரொம்ப காஸ்ட்லியானவைங்கற எண்ணம் வராம பாத்துக்கறவர்
- எந்த விஷயத்துலயும் காலம் தவறாதவர்
- ஒவ்வொரு பிராம்மணனும் பண்ண வேண்டிய வேலைகள்,
வேதம் படிக்கறது & சொல்லிகுடுக்கறது, தானம் குடுக்கறது & வாங்கறது, யாகம் பண்றது & பண்ணி வைக்கறது -னு இப்படி ஆறு இருக்கு. இது எல்லாத்துக்கும் அதுக்கான முறைகள், இன்றைய வாழ்க்கை முறையில் இதெல்லாம் பண்றதுல கஷ்டங்களும், இஷ்டமின்மையும் இருக்கு. ஆனா இதுல எதையும் கடைசி காலம் வரை விடாம, முறையா, ரொம்ப இஷ்டத்தோட
பண்ணினவர் மாமா.
- ரொம்ப எளிமையானவர், அடக்கமானவர்
- தேவைகளை சுருக்கிக்கொண்டவர்
- வேதம் சொல்ற முறையைப் பத்தி மாமா சொன்ன ச்லோகம்:

दीर्घी शीघ्री शिर:कम्पी था लिखितपाठ: |
अनर्थ: अल्पकण्ठश्च डेते पाठकाधमा : ||

பொருள்: வேகமா சொல்றவன், ரொம்ப நீட்டி சொல்றவன்,
தலையை ஆட்டி, ஆட்டி சொல்றவன், புஸ்தகம் பாத்து சொல்றவன்,
அர்த்தம் தெரியாம சொல்றவன்,
சொல்றது அடுத்தவங்களுக்கு கேக்காத அளவுக்கு சத்தம் கம்மியா சொல்றவன் - இந்த ஆறு பேரும் மட்டமானவர்கள் ! !

கருப்பத்தூர் சந்திரசேகர கனபாடிகள்:
- ரொம்ப ஆசாரம், காஞ்சிபுரம் மடத்துல எனக்கு வேத வாத்யார். நாங்களும் சில நியமங்களையாவது கடைபிடிக்க வச்சார்.
- என்னோட சௌர்யத்துக்காக ஒரு நாள் ராத்திரி, மறுநாள் காலம்பரன்னு தன்னோட ஓய்வுக்கு முக்யத்துவம் குடுக்காம பாடம் நடத்துவார்
- தன்னோட சாப்பாட தானே தான் குமுட்டி அடுப்புல தயார் பண்ணிப்பார்

-
திருவிடைமருதூர் சதுர்வேத பாடசாலைல வர்ஷம் தவறாம க்ரம பாராயணம் நடத்திண்டு வந்தார். நாங்களும் ஒரு தடவ போய் கைங்கர்யம் பண்ணியிருக்கோம்.

People who brought me here - Sri. J. Chandrasekaran

- சந்திரசேகர் எல்லாம் ஸ்கூல் பேரு. வீட்ல எல்லாரும் கல்யாணம் -னு தான் கூப்பிடுவோம்
- காலேஜ் என். ஸி. ஸி -ல டெல்லிக்குப் போயி, கல்சரல் க்ரூப்புக்குத் தலைமை தாங்கி, தமிழ்நாடு டீமுக்கு முதல் ப்ரைஸ் வாங்கிக் கொடுத்தவரு!!
- கொஞ்சம் ஹைட்டு
- புல்லாங்குழல் சூப்பரா வாசிப்பார், ரேடியோ , டி.வி. ல, ஸ்டேஜ் -லன்னு நெறையா ப்ரோக்ராம் பண்ணிண்டிருக்கார்.
- பெங்களூர் விவேகானந்தா யுனிவர்சிடி -ல யோகா -ல எம்.எஸ்ஸி பண்ணி இருக்கார்
- யோகோதெரபிஸ்ட் : யோகா மூலம் நிறையா பேருக்கு வைத்தியம் பண்ணி குணப்படுத்தி இருக்கார்
- கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்காகவும், கர்ப்பிணிகளுக்காகவும் சிறப்பு முகாம்கள் நடத்தி வருகிறார்.
- திருச்சி, சென்னை உட்படத் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா எனப் பல இடங்களில் அவரவர் தேவைக்கேற்ப வகுப்புகள் நடத்தி, மாணவர்களையும் உருவாக்கி வருகிறார்
- பல தேசிய, உலக அளவிலான போட்டிகளுக்குத் தலைமை தாங்கி இருக்கிறார்
- யோகா சம்பந்தமாக பல தொலைக்காட்சி, ரேடியோ நிகழ்ச்சிகளில் உரையாற்றியும், சந்தேகங்களுக்கு செய்முறையுடன் விளக்கமளித்தும் வருகிறார்.

என்னோட அண்ணா:
புல்லாங்குழல் மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கும், யோகா முகாம்கள், வகுப்புகள், வைத்திய ஆலோசனைகளுக்கும் இவர நீங்க நிச்சயமா நம்பி அணுகலாம்.
முகவரி:
ஸ்ரீ. ஜெ. சந்தரசேகரன்,
டைரெக்டர் - பத்மம் யோகா அகாடமி
3/21, கம்பரசன்பேட்டை,
திருச்சி - 620 101
இந்தியா
தொலைபேசி: 91-0431-2701848

People who brought me here - Smt. Meenakshi Nagarajan & Smt. Bhuvaneswari Govindhan

என் அத்தை
- நல்ல உழைப்பாளி 
- எப்ப வந்தாலும் ஏதாவது பக்ஷணம் வாங்கிக்கொண்டு வருபவர் 
- நாங்க லீவுக்கு போயிருந்த போது, அவங்க பசங்களோட சேத்து எங்களையும் கால், அரை, முக்கால் வாய்ப்பாடு மனப்பாடம் பண்ண செய்தவர் 
- திருவையாறு ஸப்தஸ்தாநத்தின்போது கோவிலுக்கெல்லாம் கூட்டிண்டு போய் சுத்திக்காமிப்பா 
- இவா புகுந்த வீடும் பெரிய குடும்பம். ஜாலியா, ஒரே அமர்களமா இருக்கும். 
- இவா நாத்தனார், நாங்க சுந்தராம்பா அத்தை -னு கூப்பிடுவோம். ஸ்கூல் டீச்சரா இருந்தா. 
- அத்தி பஸ் கண்டக்டர், டிக்கெட் செக்கர், பாம்பேல சாஸ்த்ரிகள் !! னு பல வேல. எலெக்ட்ரிக் வொர்க்கெல்லாம் சூப்பரா பண்ணுவார் 

என் அத்தை: 
- ஜாங்கிரி, க்ளோப் ஜாமுன் சூப்பரா பண்ணுவா. 
- கந்த சஷ்டி கவசம் சொல்லிக்குடுத்தா. 
- இவா புகுந்த வீடும் பெரிய குடும்பம்தான் 
- அத்தி கோவில் பூஜை பண்ணிண்டு இருக்கார் 
- சில வருடங்கள் பாலர் பள்ளி நடத்தி, க்ராமக் குழந்தைகளுக்குத் தொண்டு செய்தவர்.

People who brought me here - P. N. Ramakrishnan & P. N. Balaraman

- ரெட்டைப் பிறவிகள்
- நியூஸ் பேப்பர் ஏஜென்சி நடத்தியவர்கள்
- மேடைப் பாடகர்கள்
- ஒரே தலைமுறையில் 24 பசுமாடுகளை உருவாக்கி, அன்றைய தமிழக முதல்வர் திரு. எம். ஜி. ஆர் - இடம் சிறந்த பராமறிப்பிற்காகப் பரிசு வாங்கியவர்கள்
- இப்போது முதலாமவர் திருப்பூரில் கோவில் அர்ச்சகராக இருக்கிறார், இரண்டாமவர் கோவையில் ஒரு சமையல் பாத்திர உற்பத்தித்தொழிற்சாலையில் பணிபுரிகிறார்

என் சித்தப்பாக்கள்

Nov 23, 2008

People who brought me here - P. N. Parasuraman

- இவரும் SSLC தான்.
- மெட்ராஸ்ல லிப்டன் டீ தொழிற்ச்சாலைல ஒரு சாதாரண தொழிலாளிதான்
- பாட்டு, கூத்து இப்படி ஜாலியாதான் இருந்தார்
- அங்கேயே ஒரு நல்ல குடும்பத்து நல்ல பொண்ண சைட் அடிச்சு, லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கொண்டார்
- ஒரு திடீர் திருப்பம், காஞ்சிபுரம் மகாபெரியவா அழைத்து, ஆசீர்வாதம் பண்ணி சமய சொற்பொழிவு மூலம் மக்களுக்குத் தொண்டு செய்ய சொன்னார். இவரும் பெரியவாள முழுசா நம்பி, தைரியமா ஆரம்பிச்சார்.
- வேலைக்கு கட் அடிச்சுட்டு, காலக்ஷேபம் பண்ற அளவுக்கு பிசி ஆயாச்சு. பல மாசம் முழு சம்பளம் வாங்கினதா தெரியல.
- வேதம், சாஸ்த்ரம், புராணம் படிச்சவா இருக்கற இடங்கள், படிக்காத, பாமர சேரி ஜனங்கள் இருக்கற இடங்கள் என மெட்ராஸ்லையும், தமிழ்நாட்டோட மற்ற இடங்கள்ளையும் திரும்ப, திரும்ப விரும்பிக் கூப்பிடும் அளவுக்கு வளர்ந்தாச்சு
- மகாபெரியவாளால 'சொல்லின் செல்வன்' -னு ஆரம்பிச்சு பல பெரியவர்கள் பாராட்டிக் கொடுத்த பட்டங்கள்
- வீட்ல பல மொழிகள்ல ஒன்னர லக்ஷத்துக்கும் மேல புஸ்தகங்கள்
- அயராத படிப்பு, எழுத்து
- நூற்றாண்டு கண்ட பிரபல தமிழ்ப் புத்தக வெளியீட்டு நிறுவனம் அல்லயன்ஸ் பப்ளிகேஷன்ஸ் மூலம் புஸ்தகம் எழுத ஆரம்பித்து வெளி வந்த உபயோகமான நூல்கள் பல. மகாபெரியவாள் வாழ்க்கை வரலாறு, விதுர நீதி, சனத்சுஜாதீயம், வீபூதி ருத்ராக்ஷ மஹிமை, வைராக்ய சதகம், சித்தர்கள் சரித்திரம், அஷ்டாவக்ரர் உபதேசங்கள் என்பன அவற்றுள் சில.
- இது தவிர பல வாராந்திர, மாத இதழ்களில் வெற்றிகரமான வரவேற்பைப் பெற்ற தொடர்கள்
- தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ மற்றும் பல தனியார் தொலைக்காட்சிகளில் பேட்டி, தொடர் சொற்பொழிவுகள்

என்னோட சித்தப்பா:
சிம்ப்பிளா இருப்பார் இன்னிக்கும், யாரும் சமயம் சம்பந்தமான எந்த சந்தேகத்துக்கும், குழப்பத்துக்கும் தெளிவான தீர்வு கிடைக்கத் தொடர்பு கொள்ளலாம்:
முகவரி:
திரு. பி. என். பரசுராமன்
1, எல்.. ஜி காலனி,
அருணாசலேஸ்வரர் கோயில் முதல் தெரு,
புது வண்ணாரப்பேட்டை,
சென்னை - 81

Oct 28, 2008

People who brought me here - P. N. Jayaraman

ஸ்ரீமான் P. N. ஜயராமன்:

- S.S.L.C வரை படிப்பு
- காபிப் பொடி கடை, கான்க்ரீட் மின்கம்பங்கள் போடும் வேலை, திருச்சி UDC (உருமு தனலக்ஷ்மி காலேஜ்)-ல் ஆபீஸ் அஸிஸ்டண்ட், TVS கம்பெனியில் கேன்டீனில், புஸ்தகக் கடை, ஸ்லேட் தயாரிக்கும் இடம் என பல வேலை பார்த்து விட்டு, தமிழகக் காவல் துறையில் முதல் நிலைக் காவலராக (Gr. I Constable) சேர்ந்தவர்
- இவர்கள் பிரிவுதான் முதன் முதலில் கறுப்புக் குல்லாய் அணிந்து, மக்கள் மத்தியில் பவனி வந்தவர்கள்
(அதற்கு முன் சிவப்புத் தொப்பி )
- காவல் துறையில் பொது மக்களிடம் அன்பு, தவறு செய்பவர்களுக்கு பயம் என இருந்தவர்களில் இவரும் ஒருவர்
- படிப் படியாக நேர் வழியில் முன்னேறி, உதவி ஆய்வாளர் வரை (Sub-Inspector of Police) உயர்ந்தவர்
- சட்டம் மற்றும் ஒழுங்கு (Law & Order), பல்வேறு உளவுத் துறைகளில் (Security, Special Branch, Special Branch CID, Q Branch) பணியாற்றியவர்
- ஏறக்குறைய 26 வருடங்கள் இனிப்பான உணர்வுகளுடன் காவல் துறையில் இருந்து பொது மக்களுக்கு நல்ல பல காரியங்களை செய்து விட்டு, அதே நோக்கத்திற்காக விருப்ப ஓய்வில் வெளி வந்தவர்
- சுதேசிப் பிரசாரத்தில் ஈடுபட்டவர்
- 1999-ல் எதிர் கால தேசம் மற்றும் இளைய சமுதாயத்தின் நலம் இவைகளைக் கருத்தில் கொண்டு, கிராம குழந்தைகளுக்காக மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியை ஆரம்பித்தார்
- இந்தப் பள்ளி முதலில் அகில பாரத சிக்ஷா சம்ஸ்தான், புது டெல்லி மற்றும் வித்யா பாரதி, தமிழ்நாடு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டு நமது கலாசார 'சிசுவாடிகா' முறையில் கல்வி போதித்து வந்தது
- குழந்தைகள் 'சுமையில்லை, கவலையில்லை, பதட்டமில்லை' (No Carry! No Worry!! No Hurry!!!) என்ற முறையில் சிறந்த கல்வியை, சுலபமாக, விளையாட்டு வழியில் 5-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்
- தேவையைக் கருதி, 2004-ல் தமிழக அரசின் கல்வித் துறையின் ஒப்புதலையும் இப்பள்ளி பெற்றது
- ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ யேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஹிந்து முன்னணி ஸ்தாபகர் திரு. ராமகோபாலன், சமூக சேவகர் டாக்டர். கோபாலன், தமிழகக் காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு. S. குமாரஸ்வாமி I.P.S, ஜன கல்யான் மாநில அமைப்பாளர் திரு. ஈஸ்வரன், மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறை அதிகாரிகள் என பலர் இப்பள்ளிக்கு வருகை புரிந்து பாராட்டிச் சென்றுள்ளனர் .

- இப்பள்ளிக் குழந்தைகள் யோகா, ட்ராயிங், தடகளம் எனப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாவட்ட மற்றும் மாநில அளவில் பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றுள்ளனர்.


என்னுடைய அப்பா:
ஸமூக சேவையில் அவருடைய தொலைநோக்குத் திட்டங்கள், அவைகளை செயல்படுத்தும் விதம்,
நடை, வேகம், மிடுக்கு, தைரியம்,
தடைகளை மீறி நினைத்ததை முடிக்கும் பிடிவாதம்,
பாராட்டியும் விட்டுக்கொடுத்தும் அடுத்தவர்களை வளர்க்கும் ஸ்டைல்,
நல்லது, கெட்டதை சொல்லிவிட்டு முடிவெடுக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டு விடுதல் ,
எனப் பல விஷயங்கள் இவரைப் பற்றியது.

- இப்பள்ளிக்கு தயை மிகுந்தவர்கள் வருகை புரிந்து, குழந்தைகள் மற்றும் பள்ளி நடவடிக்கைகளை பார்த்து குறைகள் ஏதேனும் இருப்பின் நிர்வாகிகளிடம் கூறி, குழந்தைகளை ஊக்குவித்து, பள்ளி வளர்ச்சிக்கும் தாராளமாக பண உதவி புரிய வேண்டுகிறோம்:

முகவரி:

ஸ்ரீ காஞ்சி சங்கர வித்யாலயா,
3/21, கம்பரசன்பேட்டை அக்ரஹாரம்,
திருச்சிராப்பள்ளி 620101

தொலைபேசி: 91-0431-2701848

People who brought me here - Sri. P. N. Sankararaman

ஸ்ரீமான் P. N. சங்கரராமன்:

- திருச்சி SIT (சேஷசாயி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி) யில் சிவில் இஞ்சிநீயரிங் பிரிவில் பட்டம் பெற்றவர்
- 6 மாதங்கள் IMA (இந்தியன் மிலிடரி அகாடமி) யில் பயிற்சி பெற்றவர்
- தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 23 வருடங்கள் ஜூனியர் இன்ஜினியராகப் பணி புரிந்து, பிறகு விருப்ப ஓய்வு பெற்று, RSS (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்) மூலம், தேசப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்
- தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஸம்ஸ்க்ருதம் உட்பட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்
- அர்த்தம் தெரிந்து வைதீக கர்மாக்களை கடைபிடிப்பவர்

என் பெரியப்பா:
மேற்படி விஷயங்களை எங்களுக்குக் கூறுபவர்.

Oct 27, 2008

People who brought me here - sri 'Amarabhaarathi' Nataraaja sarmaa

ஸ்ரீமான் 'அமரபாரதி' நடராஜ சர்மா :

- ஸம்ஸ்க்ருத பண்டிதர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்
- திருச்சி SPG (Society for the Propagation of Gospel) கல்லூரியிலும், திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியிலும் மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் பிடித்த ஆசிரியராகப் பணியாற்றியவர்
( இந்த SPG கல்லூரிதான் தற்போது சென்னையின் MCC (மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்) )
- வேத மந்த்ரங்களின் அர்த்தம் தெரிந்தவர்
- ஸந்த்யாவந்தனம், ப்ரும்மயக்யம், ச்ராத்தம், நித்ய வேத பாராயணம் போன்ற கர்மாக்களை காலம் தவறாமல் 90 வயதிலும் முதுமை, உடல் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்து வந்தவர்
- 'தக்ஷிணாபத மாளவ்யா', 'அமரபாரதி' நடராஜ சர்மா என்று மகாபெரியவாளால் அன்புடன் கௌரவிக்கப்பட்டு, நடத்தப்பட்டவர்
- 1940-50களில் தன் மனைவி சந்தோஷத்துடனும், தர்ம கார்யங்களில் இருந்த ஆர்வத்துடனும் அளித்த சுமார் 100 சவரன் ஆபரணங்களைக் கொண்டு, ஸம்ஸ்க்ருத பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து சிறப்பாக நடத்தியவர்
- சுதந்திரப்போராட்ட வீரர், கல்லூரி வாழ்க்கையில் திரு. K. பாலதண்டாயுதம் (CPI) அவர்களுடன் சேர்ந்து சிதம்பரம் கொள்ளிடம் பாலத்தைத் தகர்க்க கை எறிகுண்டு வைத்த முயற்சியில் ஒரு கண்ணை இழந்தவர், சிறை சென்றவர்
- ஜிம்னாஸ்டிக், வாலிபால் டீம் கேப்டன்
- சமுதாய நலன்களுக்காக பல போராட்டங்களை மக்களைத்திரட்டி நடத்தி, கைதாகி வெற்றி
கொண்டவர்

என்னுடைய தாத்தா:
- குடும்பத்தின் ரோல் மாடல்.
- எங்கள் அனைவருக்கும் ஒழுக்கம், சாஸ்த்ரம், வேதம், ஓயாத உழைப்பு, பிரதி பலன் கருதாத ஸமூக சேவை எனப் பல விஷயங்களை தானும் கடைபிடித்து, கற்பித்து, வழி நடத்தியவர்.

People who Brought me here

ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் தற்போதைய வாழ்வு, வசதி, அவரவருடைய நடத்தை, ஒழுக்கம், இன்னும் பலவற்றிற்கு அவர்களுடைய சிறிய வயதிலும், பால்ய வயதிலும் கூடவே இருந்து, அவ்வப்பொழுது அறிவுரை கூறி, அதன்படியே வாழ்ந்தும் காட்டி, வழி நடத்திச் சென்ற நபர்கள் பலரும் ஒரு காரணம்.
இந்த நபர்களில் குடும்பப் பெரியவர்கள், சமுதாயப் பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியப் பெருமக்கள் என இன்னும் பலரும் அடக்கம். கூறும் விஷயங்கள் சில சமயம் பிடிக்காததாகவும், இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாததாகவும், பின்பற்ற முடியாததாகவும் தோன்றும். சில சமயம் பின்பற்றி இருக்கவும் தவறி இருப்போம். இந்தப் பெருமக்களின் தாக்கம் நம்மிடம் என்றும் இருக்கும். இவர்களில் பலர் நம்மில் பெரியவர்கள். ஒவ்வொருவரையும் காலம் கொள்ளும். அதற்குள் இவர்களிடமிருந்து விஷயங்களை கறந்து கொண்டால் பலன் நமக்குத்தான். இனிமேலாவது விரைவோம், கறப்போம், சிறப்போம்.
இந்தப் பகுதி என்னுடைய இன்றைய நிலைக்குக் காரணமான அந்தப் பெரியவர்களைப் பற்றியது. நினைவில் தோன்றியதை எழுதுகிறேன். எந்த வரிசையும், இலக்கணமும் கிடையாது.

குடும்பத்தினர்:

ஸ்ரீமான் 'அமரபாரதி' P. M. நடராஜ சர்மா
ஸ்ரீமான் P. N. சங்கரராமன்
ஸ்ரீமான் P. N. ஜயராமன்
ஸ்ரீமான் P. N. பரசுராமன்
ஸ்ரீமான் P. N. ராமகிருஷ்ணன்
ஸ்ரீமான் P. N. பலராமன்
ஸ்ரீமதி மீனாக்ஷி நாகராஜன்
ஸ்ரீமதி புவனேச்வரி கோவிந்தன்
ஸ்ரீமான் J. கல்யாணராமன் (எ) சந்திரசேகரன்

சமூகப் பெரியவர்கள்:

மகா பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
புதுப் பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர
ஸரஸ்வதி ஸ்வாமிகள்
வாரியார் சுவாமிகள்
வேங்கட சுப்ரமண்ய சாஸ்த்ரிகள் (எ) V. S. மாமா
கருப்பத்தூர் சந்திரசேகர கனபாடிகள்

ஆசிரியர்கள்:

ஸ்ரீ சந்தானம்
ஸ்ரீ சார்லஸ்
Major. ராமகிருஷ்ணன்
Lt. Col. V. சேகர்
அசோக் குமார்
Centum செல்வராஜ்
ஸ்ரீ ராஜாராம்
ஸ்ரீ R. கிருஷ்ணமாச்சாரி
பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்
ஸ்ரீ சுப்ரமண்யன்
ஸ்ரீமதி அலிமா பீவி
ஸ்ரீமதி ஜெஸ்ஸி

இனி இவர்களைப் பற்றி கொஞ்சம் விவரமாக:








Oct 26, 2008

Poetic Excellence of Mahakavi Kaalidoss - a Nector Drop

का त्वं बाले ? कान्चनमाला
कस्या: पुत्री ? कनकलताया: |
हस्ते किम ते? ताली पत्रं
का वा रे खा? - - - ||

பொருள்:

போஜ ராஜா ஒரு சமயம், - வரிசையை (ka-, kha-, ga-, gha-) மட்டும் கூறி , அதை வைத்து ஒரு பாடலை எழுதச் சொன்னார். சபையில் இருந்த ஒருகவிஞராலும் எழுத முடியவில்லை. இதை வைத்து என்ன, எப்படி எழுதுவதுஎன்று குழம்பிக் கொண்டிருந்தனர். மகாகவி காளிதாசர் கீழே உள்ள சாராம்சத்தில்உடனே ஒரு பாடலை எழுதிக் கொடுத்துவிட்டார்:
பாடல்:
குழந்தாய், உன் பெயர் என்ன? காஞ்சனமாலா.
யாருடைய பெண் ? கானகலதாவின்.
கையில் என்ன ? பனையோலை.
என்ன எழுதி இருக்கு? (ka-, kha-, ga-, gha-)

Meaning:

One time, The King Bhoja directed his assembly of expert poets to compose a poem which completes with the sequence of letters
ka-, kha-, ga-, gha-. (Note: Such sequence of letters are common in all Indian Languages' structure and are basic as part of Language Learning system.) All the experts were perplexed and in an complex environment of thinking to complete the given work. No one was able to finish that. One of his great poet, Kaalidoss took some time and simply submitted the completed poem as below:
Poem:
Hey Child! What is your name? Kaanchanamaalaa.
Daughtor of whom? Kanakalatha
What is in your hand? Palm leaf
What has written in that?
ka-, kha-, ga-, gha-

Jai Sri Ram...






Samskrit Slokam with Usage of 8 Cases

रामो राजमणि: सदा विजयते
रामं रमेशं भजे
रामेनाभिहता निशाचर चमू:
रामाय तस्मै नम:|
रामान्नास्ति परायणं परतरं
रामस्य दासोस्म्यहम
रामे सिध्धलय: सदाभवतुमे
हे राम मामुद्धर ||

பொருள்:

ராமன் அரசர்களில் சிறந்தவராக எப்பொழுதும் வெற்றியுடன் விளங்குகிறார்.
அப்படிப்பட்ட ரமை
(லக்ஷ்மி) யின் கணவரான ராமனைத் துதிப்போம்.
ராமனால் அரக்கர்களின் கூட்டம் அழிக்கப்பட்டது.
அப்படிப்பட்ட ராமனுக்கு வணக்கம்.

ராமனை விட மேலாக வாழ்ந்து காட்டியவர்கள், மேலானவர்கள் இல்லை.
அப்படிப்பட்ட ராமனுடைய அடிமையாக நான் உள்ளேன்.
ராமனுடன் இரண்டறக் கலந்த நிலை எப்பொழுதும் எனக்கு இருக்கட்டும்.
ஹே ராமா! என்னை உயர்த்தி விடு.

குறிப்பு: இந்த சுலோகத்தின் சிறப்பு, இதன் ஒவ்வொரு வாக்யமும் ஒரு வேற்றுமை உருபைக் கொண்டிருப்பதே. ராமன், ராமனை, ராமனுக்கு, ...

Translation:

Raam, the crown-jewel of kings remains ever victorious.
I worship Raam, the Lord of Lakshmi (the Goddess of riches).
The daemons' flock had been totally destroyed by Raam
Salutations to Raam of such valor.

No other person had lived a life par excellence, none is above him.
I am a slave of Raam, of above qualities.
Let there be a total amalgamation of me with Raam.
Hey Raam! Thou lift me up.

Note: The special characteristic of this poem is that it contains various Cases, such as Nominative, Accusative, Instrumental, ...Vocative.

Jai Sri Ram!!!

Oct 1, 2008

sāre jahān se acchā

For more details : http://en.wikipedia.org/wiki/Saare_Jahan_Se_Achcha

sāre jahān se acchā hindostān hamārā
ham bulbulain hai is ki, yeh gulsitān hamārā

ghurbat men hon agar ham, rahta hai dil vatan men
samjho vahīn hamen bhī, dil hain jahān hamārā

parbat voh sab se ūnchā, hamsāya āsmān ka
voh santari hamārā, voh pāsbān hamārā

godi men kheltī hain is ki hazāron nadiyā
gulshan hai jin ke dam se, rashk-e-janān hamārā

aye āb, raud, ganga, voh din hen yād tujhko
utarā tere kināre, jab kārvān hamārā

maz'hab nahīn sikhātā āpas men bayr rakhnā
hindvi hai ham, vatan hai hindostān hamārā

yūnān-o-misr-o-romā, sab miṭ gaye jahān se
ab tak magar hai bāqi, nām-o-nishān hamārā

kuch bāt hai keh hastī, miṭati nahīn hamārī
sadiyon rahā hai dushman, daur-e-zamān hamārā

iqbal ko'ī meharam, apnā nahīn jahān men
m'alūm kya kisī ko, dard-e-nihān hamārā

Translation
Better than the entire world, is our Hindustan;
we are its nightingales of mirth, and it is our garden abode

Though in foreign lands we may reside, with our homeland our hearts abide,
Regard us also to be there, where exist our hearts

That mountain most high, neighbor to the skies;
it is our sentinel; it is our protector

In the lap of whose, play thousands of rivers;
gardens they sustain; the envy-of-the-heavens of ours

O waters of the Ganga mighty, do you recall the day
when on your banks, did land the caravan of ours

Religion does not teach us to harbour grudges between us
Indians we all are; India, our motherland

While Greece, Egypt , Rome have all been wiped out
till now yet remains, this civilization of ours {it has stood the test of time}

Something there is that keeps us,our entity from being eroded
For ages has been our enemy, the way of the world

Iqbal! Is there no soul that could
understand the pain in thy heart?

Sep 30, 2008

Mile Sur Mera Tumhara

check http://en.wikipedia.org/wiki/Mile_Sur_Mera_Tumhara for more details

One phrase, repeated in 14 Indian languages: "Mile sur mera tumhaara, to sur bane hamaara", meaning "When my tune and your tune merge, it becomes our tune".

(Hindi) Mile sur mera tumharaa, to sur bane hamaraa....
Sur kee nadhiyaan har disha se behke saagar mein milee...
Baadalon ka roop lekar barsen halke halke...
Mile sur mera tumharaa.. toh... sur bane hamaara..
Mile sur mera tumhara...

(Kashmiri) Chaain taraj tahin nyay taraj
Ek but baniye saayen taraj

(Punjabi) Tera sur mile mere sur de naal
Milke bane ek nava surtaal

(Hindi) Mile sur mera tumharaa....
To sur bane hamaara..

(Sindhi) Mohnja sur tohi desa pyara mile jadein
Geet ashaanjo madhur tarano bane tadein

(Urdu) Sur ka dariya behke saagar me mile
(Punjabi)Badlaan da roop leike barasan hole hole

(Tamil) Isaindhal namm iruvarin suramum namadhakum..
Dhisai veru aanalum aariser aarugal
Mugilai mazaiyai pozivadu pol isai
...Namm isssaiiii....

Thik thakida thathikakidA....thaka thimi thaka junu

(Kannada) Nanna danige ninna daniyu,
Seridante namma daniyu..

(Telugu) Naa swaramu nee swaramu sangammamai,
Mana swaram ga avatarinchey

(Malayalam) Ente swaravum ningalude swaravum
Otthu chernnu nammude swaramai....

(Bengali) Tomaar shoor moder shoor srishti korook oikyashoor...
Tomaar shoor moder shoor srishti korook oikyashoor...

(Assamese) Srishti hok oikyatan
(Oriya) Toma mora swarer milan srishti kare chalbochatano

(Gujarati) Male sur jo taro maro, bane aapno sur niralo

(Marathi) Majhya tumchya julta tara madhur suranchya barasti dhara

(Hindi) Sur ki nadiya har disha se behke saagar mein mile...
Baadlo ka roop leke barse halke halke..
Oh...Mile sur mera tumhara tho....sur bane hamara...

Mile Sur mera tumhara
To sur bane hamara tho sur bane hamara
To sur bane hamara
.......

slowly merges into the tune of Jana Gana Mana, the Indian National Anthem

....jaya he jaya he
jaya jaya jaya he

Sep 19, 2008

அடையாறு ஹோட்டல்கள் - சிறப்புப்பார்வை

சென்னையில் 2008 -ஆம் வருஷம் நான் வேலை பார்த்தபோது, ருசித்த !! சில வெஜிடேரியன் உணவகங்களைப் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை இது.

ஸ்நாக்ஸ் சாப்ட பெஸ்ட் இடம்:

இடம்: அடையாறு சிக்னல் பஸ் ஸ்டாப் கிட்ட, பாலம் முடியற எடத்துக்கிட்ட, அடையார் பேக்கரி பக்கத்துல ஒரு சந்துல
பேரு: கிடையாது
டைம்: மாலை மூணு மணிலேந்து எட்டு மணி வரை
சிறப்பு: நல்ல கும்பல், சூடான, டேஸ்டான வகைகள், நல்ல சர்வீஸ், இப்போதைக்கு விலை கம்மி, நல்ல தரம் (இது வரைக்கும் ஒண்ணும் பிரச்ன பண்ணல), வெயிட் பண்ணி சாப்டுட்டு போறாங்க


இவங்களே பெசன்ட் நகர் வண்ணாந்துறை பஸ் ஸ்டாப் பக்கத்துல ராம் பவன் ஹோட்டல் நடத்தறாங்க. ரெண்டு, மூணு மாசமா சாப்பிடறேன். ஒன்னும் விலை, தரம் பிரச்னை இல்ல. காய்தான் ஒரே வாரத்துல ரெண்டு, மூணு நாள்வந்த காயே வேற, வேற உருவத்துல வரும்.
----------------------------------------------------------------------------------------------------

இந்த ஹோட்டல்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் (என்னைப் பொறுத்தவரை):

கடைத்தரம்
, இடைத்தரம்

கடைத்தர வரிசையில்:
- கணேஷ் பவன் (சிக்னல் அருகில்)
- ரத்னா கபே (சிக்னல் அருகில்)
- ட்ரீட் அவுட்-ஈட் (மலர் ஹாஸ்பிடல் ஸ்டாப்)
- க்ருஷ்ணா ஹாட் ஸ்பாட் (காந்தி நகர் ஸ்டாப், க்ருஷ்ணா ஸ்வீட்ஸ், சங்கீதா ரெஸ்டாரெண்ட்டுக்கு எதிரில்)
- யாஷ் (அடையார் பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்)

இடைத்தர வரிசையில்:
- க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் (காந்தி நகர் ஸ்டாப்)
- சங்கீதா ரெஸ்டாரெண்ட்
(காந்தி நகர் ஸ்டாப்)
-
ட்ரீட் (மலர் ஹாஸ்பிடல் ஸ்டாப்)
- க்ரேட் !! அடையாறு ஆனந்த பவன் A2B (சிக்னல் கிட்ட)
- வைகை உட்லேண்ட்ஸ் (சிக்னல் கிட்ட)
- வசந்த பவன் (BSNL ஆபீஸ் கிட்ட, L. B. ரோடு)
- ஸ்ரீ பவன்
(BSNL ஆபீஸ் கிட்ட, L. B. ரோடு)
- க்ரேட் !! சஞ்சீவனம்

ஸ்நாக்ஸ்:
இடைத்தரம்: மினிமம் 10 ரூ.
கடைத்தரம்: மினிமம் 5 ரூ.

டிபன்:
இடைத்தரம்: மினிமம் 40 ரூ.
கடைத்தரம்: மினிமம் 20 ரூ.
பரவாயில்ல: வசந்த பவன், வைகை, க்ருஷ்ணா ஹாட் ஸ்பாட்

ஒரு வேலைக்குக் குறைந்த பட்சம்:
இடைத்தரம்: ரூ. 150
கடைத்தரம்: ரூ. 50

தரம்:
இடைத்தரம்: எல்லாம் விளம்பரத்துல மட்டும் தான்.
கொஞ்சம் சமையல் ஸோடா,
டம்ளர்ல கை வுட்டு நல்ல தண்ணி,
மசாலா ஜாஸ்தி,
ஆயில் ஜாஸ்தி,
சங்கீதால நத்தை கிடைக்கும், வைகை உட்லேண்ட்ஸ் புழுத் தண்ணிக்கு பிரபலம்

கடைத்தரம்: நெறையா ஸோடா (ஒரு ஐட்டம் சாப்டாலே வயறு ரொம்பிடும் ) ,
கார்பொரேஷன் தண்ணி, கம்மி மசாலா, ஆயில் ஜாஸ்தி,

அளவு:
இடைத்தரம்: அடுத்த வகை ஹோட்டல விட பாதி
கடைத்தரம்: அடுத்த வகை ஹோட்டல விட ரெண்டு பங்கு

சர்வீஸ்:
இடைத்தரம்: பில்லுக்குக் கூட கூப்டனும் - வந்தா வரலாம்,
வகை வகையா யூனிபார்ம் போட்ருப்பாங்க,
சஞ்சீவனம் வொர்ஸ்ட்டு சர்வீஸ்
(தரமான, வகையான உணவு,
எல்லாத்தையும் நீயே சாப்டுடீன்னா)

கடைத்தரம்: அழுக்கு லுங்கி, சட்டை, பனியன், பரட்ட தல, ஷேவ் பண்ணாத மூஞ்சி, நமக்கு முன்னாடியே எங்கயாவது சொரிஞ்சிட்டு...,

பரவாயில்ல: வசந்த பவன், க்ருஷ்ணா ஹாட் ஸ்பாட்
வொர்ஸ்ட்டு:
வசந்த பவன் தவிர மிச்ச இடைத்தர ஹோட்டல்கள்

இடம்:
இடைத்தரம்: டைல்ஸ், கொஞ்சம் லைட்ஸ்,
கடமைக்குன்னு க்ளீன் பண்ணின டேபிள்ஸ் (நீ இல்ல சூபர்வைசர் சொன்னா தண்ணி வுட்டு, இல்லாட்டி வெறும் துணி),
பேருக்கு தண்டத்துக்கு ஏ. சி. , (ஆனா மின்விசிறி போடப்படாது)
அடுத்தவன் இலைல பட்ற அளவுக்கு
டேபிள், ஆறிப் போனதக் கொண்டு வர அரை மணி நேரம் டைம்,
தண்ணி வைக்க-ஆர்டர் எடுக்க- ஆர்டர் பண்ணினத குடுக்க - இப்டி ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரு
வைட்டிங் டைம்- ஒவ்வொரு ஆளு,
காத்தோட்டம் கிடையாது,
சூடு, சொரணை, கோவம் எல்லாம் உங்களுக்கு உடனே வரும்னா இங்க கொஞ்சம் கஷ்டந்தான்

கடைத்தரம்: கொஞ்சம் டார்க் கலர்ல !! இடம், நின்னிட்டுதான் சாப்டனும், லிமிடெடு தான்-
திருப்பித் திருப்பி
எதையாச்சும் கேக்கக் கூடாது, செல்ப் !! சர்வீஸ் தான், நல்ல கும்பல் (வேற வழி),
சின்ன இடங்கள்,

டாய்லெட்:
இடைத்தரம்: பஸ் சாப்ட நடுப்பற எங்கயாச்சும்
நிக்கற இடத்துல இருக்கும்ல, அந்த டாய்லெட் மாதிரி, ஆனா இங்க கொஞ்சம் தண்ணி வரும்.
சங்கீதால நல்லா இருக்குப்பா

கடைத்தரம்: அட போப்பா, இது சாப்ட வர்றவங்க இடம்

யாரு சாப்டலாம்:
இடைத்தரம்: ஹவுஸ் வொய்ப், பிரண்ட்ஸ், படிக்கிற பொண்ணுங்க, இநத
மாதிரி அடுத்தவன் காசுல சாப்றவன், கொஞ்சம் டீஜன்ட்டு பாக்றவன்,
சிட்டி பொண்ணுங்க, க்வாலிடீன்னு சாப்ட நினைக்கறவன்,
பொண்டாட்டி, குடும்பத்தோட போற கார் பார்ட்டி,
கடைத்தரம்: பசி - வேற வழி இல்ல, பொண்டாட்டி டப்பா தரல, கல்யாணம் ஆன-ஆகாத வேலை பாக்கற- ரூம்ல தங்கியிருக்கற பேச்சுலர்ஸ்

about Hotels in & around ADYAR Signal, Chennai-600020

about Hotels in & around ADYAR Signal, Chennai-600020
  1. Sanjeevanam Restaurent, Adyar, chennai-20 . Yes, Except the Different , Natural, Healthy food items, It is full of worst. Worst service, Worst A/C, but costs.
    Most of these certified & High class hotels like this, sangeetha, aanandha bhavan, saravana bavan , etc in Chennai like cities are in same category.
    Worst fellows, they keep banners like quality food, we care for your health, etc.
    I visited this sanjeevanam 3 times:
    FIRST TIME: went with free coupon for 2 lunch. ordered for 3 lunch. we enquired many times about the billing once we entered. And it was clearly mentioned in the coupon also. But that fools (ISO Certified fools) billed for all 3 lunches and went arguing on that. Finally one genius accepted and we came out by paying only for extra one lunch.

    SECOND TIME: Another 2 or 3 fools asked us to wait in reception since it was houseful at 2pm and told he will come and call us. Till 2.20 no one turned up. Then we entered and asked them. The Certified people replied that the meals are over. We were very hungry, tired. Not to disturb the others and the environment we came out quietly.

  2. about Hotels in & around ADYAR Signal, Chennai-600020

    2 Categories by current cost of living!!!: Low-class and Middle class
    LOW-CLASS:
    - items cost Rs. 20/- and above (Snacks from 5 rs)
    - if u have 50 rupees, enough for 1 session
    - Quality (according to me): may be filled with low-class (govt 1 rs/kg rice!!) rice/impure water/much baking soda(bread soda,cooking soda)/less masala items,
    - Quantity : doubles the another category
    - Environment: employees with local dress (dirty lungies and shirts/banian) without proper hair dress, without shaving, worst behaviours in front of customers,
    - we need to stand and eat in that unclean area
    - no proper ventilation, small dining rooms
    - cleaning dining tables without water
    - toilets: no
    - Service: Self service,
    Samples:Ganesh bhavan (near signal),Rathna cafe (near signal), Treat out-eat!! (near malar hospital bus stop), Krishna hot spot (opp. to krishna sweets/Sangeetha restaurent, gandhinagar bus stop), Yash (opp. adyar bus stand, not depot!!)

    MIDDLE-CLASS:
    - items cost Rs. 40/- and above (Snacks from 10 rs)
    - if u have 150 rupees, enough for 1 session
    - Quality (according to me): Hotels under this category keep big banners, advertise for their quality. But all are only up to that (only in banners and advertisements). Some times my self and our friends found (got!!)species and insects including snails and cockroach (TWO times in Sangeetha restaurent)
    may be filled with middle-class (15 rs/kg rice!!) ,LESS baking soda(bread soda,cooking soda)/MUCH masala items,
    - Quantity : HALF of the another category
    - Environment: employees with Uniforms, they dont come to customers, we should call them every time for every thing including for billing!!
    -Water: purified corporation water with their hands inside the cup!!
    - Tiles, grand and colorful bulbs with dim light, one will remove the emptied plates(wait for 5 min), one will clean the table, one will take order, one will serve (wait minimum 15-20 minutes for every order), one will supervise
    - no proper ventilation, big but congested dining rooms, A/C for namesake
    - cleaning dining tables with water if you or the superwisor is present
    - Service: Call bearer 2 or 3 times
    - toilets: yes
    Samples:near Gandhinagar or adyar canal bus stop- krishna sweets and sangeetha, near malar hospital bus stop: Treat, near adyar signal-the great adyar aanandha bhavan(A2B), vaigai woodlands!!,near BSNL Office, LB Road- Vasanth bhavan(better), sri bhavan, another hotel with lady’s name,opp. adyar bus stand, not depot!!-adyar bakery, janapriya (formerly non-veg)

    BEST SNCKS in ADYAR Signal (near adyar bakery): there is a nameless snacks shop in a lane,
    hot, fast moving & quality,
    starts from 3Rs, timings: Evening 3 to 8
    people wait and get satisfied every day

Aug 22, 2008

Useful links

Note:
- Some Links may contain unwanted, prohibited contents.
- Some links may be obsolete

1.Tamil-->English Dictionary Sometime (most of the time!!), we may need a dictionary which gives corresponding English word to our Tamil word. Here is a link:
http://www.tamildict.com/tamilsearch.php
2. Free E-Books under various categories with search:
http://www.gutenberg.org/wiki/Main_Page
3. computer science books: http://booksforpeople.blogspot.com/
http://kickjava.com/books/java.htm
http://www.sun.com/books/java_series.html
programming examples: http://www.anyexample.com/
4. Vedic Maths
http://www.vedicmathsindia.org
5. Song:Bho Shambho Shiva Sahmbho
Singer:Maharajapuram Santhanam
Composer: Swami Dayananda Saraswathi
Language: Sanskrit
Raag: Revati
Taal: Adi
Download link: http://as01.coolgoose.com/music/download.php?id=323489&PHPSESSID=832af
6. Sanskrit-->English, English-->Sanskrit Dictionary:
http://spokensanskrit.de/
7. www.kaumaram.com ... The website for Lord Murugan's Devotees (முருக பக்தர்களுக்கான ஒரு வெப்-சைட்)
8. http://www.shaivam.org - An adobe for Lord Shiva on Internet (சைவ சமயத்தவர்களுக்கான ஒரு வெப்-சைட்)
9. http://music.cooltoad.com - நான் இளையராஜாவோட ஹௌ டு நேம் இட், கீதாஞ்சலி முதலிய பலவற்றை டௌன்லோட் செஞ்ச சைட்.
10. http://indianraga.fileave.com/files/esnips_download_link_maker.html - இந்த சைட் யூஸ் பண்ணிதான் http://www.esnips.com சைட்ல இருக்கற பாட்டெல்லாம் டௌன்லோட் பண்ற லிங்க்க க்ரியேட் பண்றது. இந்த தகவல
http://tfmpage.mayyam.com/hub/viewtopic.php?p=1155426&highlight=&sid=3115d762b756f8286f709baf08f8577f#1155426 லிங்க்ல தான் பாத்தேன்.
11. http://www.snapfiles.com - site contains free utilities
12. http://projectmadurai.tamil.net/1 - contains huge collection of tamil books' lyrics in unicode format (like thiruvarutpa, kandhar alangaaram, thevaaram, etc)
13. http://thiruarutpa.vallalar.org/SearchInThiruArutpa.aspx
14. http://www.thevaaram.org
15. http://www.tamilvu.org -
தமிழ் வெர்ச்சுவல் யுனிவெர்சிடியோட சைட். லைப்ரரில நாம ஸ்கூல்ல படிச்ச (எங்க படிச்சோம்!!) மூதுரை, கொன்றைவேந்தன்முதலான உபயோகமான பலவைகள் பொருளோட இருக்கு. உருப்படியா, நாலுபேர் நமக்கு நல்லத நெனைக்கும்படி வாழ உபயோகமா இருக்கும்இதையெல்லாம் படிச்சு, வாழ்ந்தா.
16. http://murugan.org
17. http://eprarthana.com -
உள்ள போய் லிங்க்ஸ் பாருங்க. உங்க நண்பர்களுக்கு டாலர் ரேட்ல ஆன்லைன்ல புக் பண்ணி நம்மூர் கோயில்களுக்குப் பூஜை பண்ணின ப்ரஸாதம் அனுப்பறதுலேந்து பல விஷயங்கள்
18. http://senthilvayal.wordpress.com - நல்லா இருக்கு, விதவிதமான விஷயங்கள், ஈ-புக்ஸ்
19. http://www.puratchithalaivar.org/tamil - நம்ம எம்.ஜி.ஆர் பத்தி ஏராளமான விஷயங்கள் தமிழ்லையும், இங்லீஷ்லையும். ஆச்சர்யமா இருக்கு முந்தின தலைமுறை வரை இருந்த தலைவர்கள் இப்ப ஏன் இல்லன்னு புரியல. புடிச்சிருக்கோ இல்லியோ வாழ்வது எப்படின்னு தெரிஞ்சுக்க படிக்கலாம்.
20. www.arusuvai.com - தமிழ்ல ஒரு சமையல் வெப் சைட்.
21. http://abhisays.com - different topics found here
22. http://www.thirukkural.com/2009/01/1.html - மு. வரதராசனார், சாலமன் பாப்பையா இவர்களின் உரையோடு திருக்குறள்
23. http://www.layoutgalaxy.com/html-tutorial/,
http://www.yourhtmlsource.com/, http://www.htmldog.com/ சூப்பர் HTML ஹெல்ப் லின்க்ஸ்
24. http://www.linuxrsp.ru/win-lin-soft/table-eng.html linux and windows software table
25. http://www.virtualvinodh.com/  Grantha fonts, etc available here