Jul 27, 2018

குமாரில பட்டர்

குமாரில பட்டர்:

வேத வழி முதலில் கெட்ட கார்யங்களில், எண்ணங்களில் நம் மனது செல்லாமலிருக்க இடைவிடாது வேலைகளை விதித்துக்கொண்டேயிருக்கிறது காலை முதல் இரவு வரை. நல்லோர் சேர்க்கை, நல்ல கார்யங்களில் மனதை ஈடுபடுத்தி செயல்படுத்துவது, நல்லதை கேட்பது, சொல்வது, பூஜை செய்வது என்று நம் மனஸும், கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்ற ஐந்து இந்திரியங்களும் இப்படி 50-70 வயதுகள் வரை தீய வழியில் செல்லாமல் நம்மை எப்போதும் நல்ல செயல்களில் பிசியாவே வைத்திருக்கும். இந்த பகுதியை, மந்திரங்களை பூர்வ (முதல்) பாகம் என்று சொல்வோம்.

இப்படி 4 மணிக்கு எழுந்திரு, இந்த குச்சிய வெச்சி பல் தேய், இந்தெந்த இடங்களில் பாத்ரூம் போ, இத்தன தடவ வாய் கொப்புளி, சுத்தம் செய்து கொள், நதி, குளங்களில் குளி, இந்தெந்த ஆடை உடுத்திக்கோ, சூர்ய பூஜை செய், உலக நன்மைகளை நினை, திட்டமிட்டுக்கொள், யோகா பண்ணு, த்யானம் பண்ணு, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை பூஜை செய், முன், 64 கலைகளையும், டைம் டேபிள் படி, படி, ப்ராக்டிஸ் பண்ணு. முன், பின் தெரியாத ஒருவனுக்கு சாப்பாடு போடு, கண்ணுக்குத் தெரியாத, தெரியும் மற்ற உயிரினங்களுக்கு உணவு கொடு, மாலை திருப்பிக் குளி, உலகம் நிம்மதியாகவும், பத்திரமாகவும் இருக்க ப்ரார்த்தனை செய்து கொண்டு தூங்கு. இதுல என்ன ஸ்பெஷல்னா இது எல்லாத்தையும் அது அதுக்குன்னு மந்திரங்களை சொல்லி செய்யனும். கர்மாக்களை (வேலை) உபதேசிப்பதால் இது கர்ம பாகம்.

இப்படி 60-70 வயது வரை இருந்து மந்திரங்களின் பொருளறிந்து, உலக நன்மைக்காக காலை முதல் இரவு வரை வேலைகள் செய்தவனுக்கு, வேதமே உபநிஷதங்கள் எனும் வேத சாரம் (ஜூஸ்) மூலம் இந்த எல்லா வேலைகளையும் விட்டொழித்து, இனி மீதமுள்ள ஆயுளை வெறும் உலக நன்மைக்கான த்யானத்தில் மட்டும் இறைவனை நினைத்து செய் என்று போதிக்கிறது. இதை எஸ்டாப்லிஷ் பண்ணத்தான் ஆதிசங்கரர் அவதாரம். வேதத்தின் இந்த பாகம் உத்தர பாகம் (பின், கடைசி, மோக்ஷ) வழி என்று உபதேசிக்கப்படுகிறது. இது ஞானத்தை போதிப்பதால் ஞான பாகம்.

குமாரில பட்டர், ஆதி சங்கரருக்கு ஒரு 50 வருடங்களுக்கு முன் அவதரித்தவர். பௌத்த மதம் பரவி எதுவும் மாயை என்று போதித்திருந்த காலம். ராஜாக்கள் உட்பட மக்கள் எவரும் எதிலும் பிடிப்பில்லாமல், பிக்ஷுக்களாக உருவகப்படுத்திக் கொண்டிருந்த நேரம். காரியங்கள் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. இதிலிருந்து மீண்டு சனாதனமான வேத மார்க்கத்திற்கு எல்லோரும் திரும்ப வேண்டும் என்று முயற்சித்தால் வாதம் செய்து, பெரிய பெரிய சாதனைகள் செய்து காண்பித்தாலே சாத்தியம். பின் அவதரிக்கப்போகும் பரமசிவனின் அவதாரமான ஆதி சங்கரர் ஞான மார்க்கத்தை உபதேசிக்கப்போகிறார். அதற்கு ஸ்டேஜ் செட் பண்றாப்ல முதலில் சோம்பியிருக்கும் மக்களை எழுப்பி மீண்டும் வேதத்தில் கூறியிருக்கும் வேலைகளை செய்ய வைக்க வேண்டும். சங்கரர் குறுகிய காலமே பூமியில் இருக்கப்போகிறார் என்று முருகக்கடவுள் ஸுப்ரமண்யரே குமாரில பட்டராக அவதரிக்கிறார். உலகிற்கு பரமபிதாவான நான்முகனும், சரஸ்வதி தேவியும் குமாரில பட்டரின் சிஷ்யர்களாக மண்டனமிஶ்ரர்-சரஸவாணி என்று அவதரிக்கிறார்கள்.

இப்ப தான் முக்யமான கட்டம், இந்த குமாரில பட்டர் சும்மா போய் ஏய், எல்லாரும் இங்க வாங்க, வேதத்தில் சொல்லி இருக்கற வேலைகளை செய்யுங்க. உங்க வழி, குருமார்கள் வேஸ்ட்டுன்னு சொல்லல. அவங்க மார்க்கத்துக்கு மாறி முறையா புத்த விஹார்ல 7-8 வருஷங்கள் கடினமா முயற்சி செய்து அவர்களின் கொள்கைகள், விஷயங்கள் முழுவதையும் சூப்பரா படிச்சி, தலைமை சீடர்ங்கற அளவுக்கு தேறினார். அதுக்கப்பறம் தன்னை வெளிப்படுத்துக்கொண்டு அவங்கள வாதங்களில் ஜயித்தார்.

கடைசியா இவர் இப்படி ஏமாத்தினதால 7ஆவது மாடிலேந்து குதிக்கச் சொல்லி உத்தரவு குடுத்தாங்க. அவரும் "வேத மார்க்கம் சத்யமாயிருந்தால் என்னை அது காக்கும்"னு சொல்லி குதிச்சார், உயிருக்கு ஒரு பாதிப்பும் இல்லை, முழுசா நம்பாம "இருந்தால்" னு சொன்னதால் கண்ணு மட்டும் பாதிச்சிது. பௌத்தர்கள் இவர் வழிய ஏற்றுக்கொண்டு வேதம் விதித்த வேலைகளை செய்ய தயாராயினர். ஆனா இவர், உங்களுக்கு என்னோட சீடன் மண்டனமிஶ்ரன் வழிகாட்டுவான், பௌத்தனா மாறி குருவ ஏமாத்தினதுக்கு, நான் பண்ணின குரு த்ரோகத்துக்கு என்ன ப்ராயச்சித்தம்னு புத்தகங்கள்ல பாத்தேன். கொஞ்ச, கொஞ்சமா அனுபவித்து சாகறது தான் தண்டனைன்னு சொல்லி இருக்கு, அதனால நான் நெல் உமி கழுத்து வரை ரொப்பின குழியில் நெருப்பு வெச்சி, அனுபவித்து என் உடலை விடப்போகிறேன்னு தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டார்.

அப்படி உயிர் விடும் தருவாயில் தான் அவரை சந்திச்ச ஆதிசங்கரர் அவரையும் வாதிட்டு ஞான மார்க்கத்தை போதித்து, மோக்ஷம் தந்து, அவர் சீடர் மண்டனமிஶ்ரரையும் அவர் மனைவி சரஸவானியையும் வாதம் செய்து அவர்களுடைய ஆயிரக்கணக்கான சீடர்களோடு ஞான மார்க்கத்துக்கு திருப்பினார் - இது வரலாறு. இன்று வரை காலங்காலமாய் நெறையா பேர் இந்த வழியில் குருமார்களாய் தோன்றி, மக்களையும் ஒழுக்கத்தோட, நிம்மதியோட, நம்பிக்கையோட, பயமில்லாம வாழ வெச்ச சரித்திரம்,

நம்ம பசங்க என்ன பண்றானுங்க, த்ராவிடம்னா என்னென்னு தெரியாது, ப்ராஹ்மணன், க்ஷத்ரியன்னா என்ன, எதுக்குன்னு தெரியாது, மனு ஸ்ம்ருதி, அட்லீஸ்ட் தமிழ் வேதங்கள் எதுவும் ஒன்ன கூட முழுசா படிச்சது கிடையாது, இதெல்லாம் தெரிஞ்ச, ப்ராக்டிஸ் பண்ற குருவையும் தேடிப் போய் கேட்டுத் தெரிஞ்சிக்கறதும் கிடையாது. முட்டாள் தனமா, மூர்க்கத்தனமா, அடிமைகள் மாதிரி, அடிப்படை அறிவு கூட இல்லாத எதிர்க்கறது.

சரி எதிர்க்கறானே, எதையாவது சாதிச்சானான்னா, இன்னி வரை தொண்டர்கள் உட்பட எல்லா மக்களையும் எல்லாத்துக்கும் அனாதைகளா, அடிமைகளா, பயத்தோட திண்டாட வெச்சி அவங்க மட்டும் குடும்பத்தோட சிறப்பா வாழ்வது தான் 60 ஆண்டு கால சாதனை. இப்படி ஒரு புக்குல ஒரு தண்டனை குரு த்ரோகத்துக்கு போட்டிருக்குன்னு தெரிஞ்சா அந்த புக்க நெருப்புல போட்டுடுவானுங்க இந்த பேட் பாய்ஸ். திட்டமிட்டு மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாறு.

நெறையா தேடித்தேடி நல்லவைகளைப் படிப்போம். ஆன்மீகம் வளர்ப்போம், தேசம் காப்போம். தலைமுறைகளுக்கு நல்ல பாதையை விட்டுச்செல்வோம்.

May 9, 2018

வெள்ளியங்கிரி இறைப்பயணம்

நிர்மிதாவின் சாகசப்பயணங்கள்

வெள்ளியங்கிரி இறைப்பயணம் - அவனருளாலே அவன் தாள் வணங்கி
தாயை வணங்கினாலும், ஒதுக்கினாலும், எதிர்த்தாலும் அவள் அருள் நமக்கு என்றும் உண்டு என்பது கண்கூடு.  தாயுமானவனும் அப்படியே, கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் உணவளித்துக் காப்பவன் அவன்.  வடக்கே வெள்ளிப்பனிமலையில் குடி கொண்ட கைலாஸபதியை சென்று தரிசிக்க முடியாதவர்கள், வெள்ளியங்கிரீஶனை சென்று தரிசித்து பிறவிப் பயனை அடைகிறார்கள்.

வெள்ளியங்கிரி:
கோயம்புத்தூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது.  இந்த மலை அடிவாரத்தின் அருகில் தான் தற்போது ப்ரபலமாகிவரும் ஜக்கிவாசுதேவின் ஈஶா த்யான நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து ஒரு 6000 அடி உயரமுள்ளது, மேற்குத் தொடர்ச்சி மலையை சேர்ந்தது.   தென் கயிலை என்று பெயர் பெற்றது.
விலங்குகள் நீரைத்தேடி கீழே இறங்கியிருக்கும் என்பதால்  ஃபிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை யாத்திரைக்கு உகந்தது.
பேறு காலத்தில் இருக்கும் பெண்கள் மலையேறுவதில்லை.  10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், 40-45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுமே மலையேறுகின்றனர்.



 வயதானவர்கள் தனியே பயணிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது.
கையில் ஒரு ஊன்று கோலுடன் பயணிப்பது அவசியம்.
தண்ணீர் அவரவர் உடல் நிலையைப் பொறுத்து 30-50 அடிகளுக்கு ஒரு முறை நிச்சயம் தேவைப்படும்.  ஏழு மலைகளைக் கொண்ட இந்த தொடரில் அடிவாரத்திலும், இரண்டாவது மலை முடிவிலும், ஆறாவது மலை முடிவிலுமே குடி நீர் கிடைக்கும்.
வெறுங்கால்களிலேயே யாத்திரை செல்வது உகந்தது.  ட்ரெக்கர்ஸ், முடியாதவர்கள் ஷூ, செப்பல் அணிந்தும் பயணிக்கிறார்கள்.


முதல் மலை முற்றிலும் ஒழுங்கில்லாத சுமார் 1000 படிகளால் ஆனது.  ஒரு சில படிகளில் முழு காலும் வைக்க முடியும், ஒரு சில படிகளில் பாதி கால் தான் வைக்க முடியும், செதுக்கப்படாத படிகள் என்பதால் கரடு முரடாக இருக்கும், செருப்பில்லாமல் பயணித்தால் எந்த ஒரு கால் ப்ரச்சினையும் சரியாகி விடும்.  காலில் கட்டை விரல், நுனிக்கால், குதிகால் என பல பகுதிகள் இருப்பதை இறங்கும் போது உணருவோம்.   முதல் மலை முடிந்ததும் ஒரு பிள்ளையார் கோவில், 30 ரூபாய்க்கு லெமன் சோடா, 20 ரூபாய்க்கு மோர், பிஸ்கெட், கடலை மிட்டாய், எள்ளுருண்டை, ஆரஞ்சு மிட்டாய் என கடை இரண்டு.  திருப்பதி- திருமலை ஏறும்போது காலி கோபுரத்தை அடையும் த்ருப்தி இந்த முதல் மலையை முடிக்கும் போது இருக்கும்.  ஒரு மணி நேரம் சுமாரில் இந்த மலையைக் கடப்போம் எந்த உடல் நிலையில் இருப்பவர்களும்.

இரண்டாவது மலை கல் பாறை மலை - 1974 ஆம் வருடம் யாத்திரை செல்பவர்களின் வசதிக்காக இந்த வழுக்குப்பாறைகளில் சிறு, சிறு படிகளை செதுக்கியிருக்கிறார்கள் தெய்வ நாயகி- பழனிச்சாமி கவுண்டர் தம்பதியர், திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் படிகள் போல, அவ்வளவு அகலம் இல்லை ஆனால்.  2 ஆவது மலை முடியும் இடத்தில் பாம்பாட்டி சுனை என்ற ஒன்றில் நீர் வருகிறது.  மூங்கிலைச் சொருகியிர்ந்த இடத்தில் இப்போது ஓஸ் பைப்பை செருகி இருக்கிறார்கள்.  பொறுமையாக நீரை வயிற்றிலும், பாட்டில்களிலும் நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடங்கலாம்.


இரண்டு, மூன்றாம், நான்காம் மலைகளை சுமார் மூன்று மணி நேரத்தில் கடப்போம்.  மூன்று, நான்கு மலைகளில் சில இடங்களில் ஒழுங்கற்ற படிகளும், பாறைகளும், மண் மேடுகளிலும் ஏறி பயணிப்போம்.  இந்த நான்கு மலை வரையிலேயே உயர்ந்த மரங்களும், ஓயாத காட்டு வண்டுகளின் ரீங்காரம் இடைவிடாது ங்கொய்ய்ய்ன்னு ஒலித்துக் கொண்டே இருக்கும்.  வெயில் அதிகமாக தெரியவில்லை.  பெண்கள் அனுமதி இல்லை என்பதால் மற்ற சுற்றுலா தலங்களில், புனிதத் தலங்களில் நாம் காணும் ஜோடிகளும், அர்த்தமற்ற, பொழுது போக்குப் பேச்சுக்களும் கேட்கவில்லை,  எங்கு பார்த்தாலும் சிவ நாமத்தை சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.

ஐந்தாம் மலை முழுதும் சுத்தமான செம்மண்ணைக் காண முடிந்தது.  குச்சியை ஊன்றினாலே செக்கச்செவேலென்று காஞ்சி காமாக்ஷி கோவில் குங்குமம் போன்ற கலரில் ஐந்தாவது மலையின் மண்.  அதிக ஏற்றம் இல்லை 5-6 மலைகளில்.  சமவெளியில் நடக்க முடிந்தது.   5 மற்றும் 6 வது மலைகளை சுமார் ஒரு மணி நேரத்தில் கடப்போம்.   ஆறாவது மலை மண் முழுக்க எங்க தோண்டினாலும் விபூதி மாதிரியே இருக்கு.

ஆறாவது மலை சமவெளி முடியும் இடத்தில் சரிவாக இறங்கினால் ஆண்டி சுனை இருக்கிறது.  சுனை நீர் வந்து சேரும் நிலையில் ஒரு குட்டி சிவலிங்கம் நடுவில் இருக்கிறது நீருக்கு மேல் தெரியுமாறு.  அங்கு தண்ணீர் தேங்கி செல்லுமாறு தடுப்புச்சுவர் இடுப்பளவுக்குக் கட்டி இருக்கிறார்கள்.  ச்சிலீர் என்று இருக்கிறது நீர்.  சிவலிங்கம் இருக்கும் சுனையில் சுவரில் உட்கார்ந்து இறங்கி டக்குணு ஒன்னு ரெண்டு முக்கு போட்டு எழுந்தால் அட்டைப்பூச்சியின்றி பயணிக்கலாம்.  அங்க கொஞ்சம் இளைப்பா இருக்குன்னு ஆட்டம் போட்டா, ஒரு 15-20 நிமிஷத்துல முட்டிக்காலுக்குக் கீழ எங்கயாவது கூச்சமோ, ஊசி போட்டாப்ல வலியோ வரும்.  அப்ப பாத்தா தான் அந்த அட்டைப்புழுவே கண்ணுக்குத் தெரியும்.  நம்ம க்ராமங்கள்ல தட்டையா இருக்கற அட்டைப்பூச்சி இல்ல இவர்.  கொடைக்கானல், ஊட்டிலயெல்லாம் இருக்குமே,  நம்ம ரத்தத்தை ஓட்டைப் போட்டு ஆட்டையப் போட்டு தான் பெரிசாகி இவர் கண்ணுக்குத் தெரிவார்,  தரிசனம் செய்து கொள்ளலாம், ஒரு குச்சியால் பட படன்னு இருக்கறதையெல்லாம் தட்டி விட்டா எவ்வளவு பெரிசாகியிருக்கேன் பாருன்னு பெருமையா பூமில காமிக்கும்.  ஓட்டை போட்ட இடத்துல நமக்கு ரத்தம் வந்திண்டு இருக்கும்.  நாம பாட்டுக்கு அட்டைப்பூச்சி, அட்டைப்பூச்சின்னு விளம்பரம் பண்ணிட்டுப் போய்ட்டே இருக்கலாம்,  எவனும் கவனிக்கப்போறதில்ல, அவனும் குளிச்சிட்டு அப்படியே தான் வரப்போறான்.  மருந்தெல்லாம் நாங்க ஒன்னும் போட்டுக்கல.  கொஞ்ச நாள்ல மறந்துடுவோம்.  சொரண வந்து தட்டி விட்டுட்டதால, ஓட்ட போட்டு உடம்புக்குள்ள போய்டுமா, அப்ப என்ன ஆகும், என்ன பண்ணனும், எனக்கு அனுபவமில்ல.

ஆண்டி சுனைலேந்து ஏழாவது மலை ஒரு 45-55 டிகிரி செங்குத்து, மண்ணு மலை.  5, 6 மற்றும் ஏழாவது மலை முழுதும் பச்சைப் பசேலென்று இருக்கிறது.  நாம் உண்மையாகவே மேகங்களுக்குள் பயணிப்போம்.  ஏழாவது மலை உச்சியில் நட்டு வைத்திருக்கும் வேல், சூலங்களுக்கு நடுவே இயற்கையான ஒரு கல் பாறைக்கூரைக்குக் கீழே வெள்ளியங்கிரீஶன் சுயம்புவாய் எழுந்தருளியிருக்கிறான்.  நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாஶம் என்ற பஞ்ச பூதங்களின் ப்ரதிநிதியாய் நான்கு சுயம்பு லிங்கங்கள்.  பூமியின் சார்பாக அந்த மலையே லிங்கமாய்.  அவன் மகனை முதலில் தரிசித்துப் பின் சிவனை தரிசிக்கிறோம்.  பூசாரிகள் தரிசனத்திற்கு உதவி செய்கிறார்கள்.  கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து துரத்துவதில்லை எவ்வளவு கூட்டமிருந்தாலும், சிவனிடம் தேங்காய் குடுத்தால் உடைத்துக் கொடுக்கிறார்கள்.  காணிக்கைக் காசுகளை உண்டியலிலேயே போடச்சொல்கிறார்கள் அனைவரும்.  ஒரு மடக்கில் விபூதியைக் குழைத்து வைத்துக் கொண்டு பக்தர்கள் அனைவருக்கும் நெற்றியில் பட்டையாக பூசி விடுகிறார் பூசாரி.  சித்தர் ஒருவர் அங்கேயே சிவனுக்கு எதிரில் குடிசையில் இருக்கிறார்.  நம்மிடமிருந்து அவர்களெவரும் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பது தமிழக அறநிலையத் துறைக் கோவில்களில் தரிசனம் செய்து பழக்கப்பட்ட நமக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.   சூர்யோதயத்தின் போது சிவ தர்ஶனம் செய்ய பெரிதும் ஆர்வமாய் இருக்கிறார்கள் பலர்.  அவர்கள் ஆறாம் மலை முடிவிலேயே ஒரு டீக்கடை இருக்கிறது.  அதற்கு எதிரில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஷெட்டில் வேண்டுமானால் தங்கி வரலாம்.  மேலே ஒரு குழுவினரும் தங்க முடியாது.  5, 6 மற்றும் 7 ஆவது மலை மே மாதம் சென்றிருக்கும் போதே இரவில் தாங்க முடியாத குளிர், பனி.  சூழ் நிலையைப் பொறுத்து மழை வந்து இந்த 5, 6, 7 மலைகளில் மாட்டிக்கொண்டால் இருக்கும் இடத்திலேயே இருப்பது தான் உயிருக்கு உத்தரவாதம்.  எறங்கறேன்னு மழையில், மலையில் எங்கயாவது வழுக்கி விழுந்தா இன்னும் வழில இருக்கறவங்களயெல்லாம் சரிச்சு விட்டுனு விழுவோம்.  அப்பறம் காவல் துறை என்ன செய்தது, வனத்துறை என்ன செய்தது, இங்கு இருக்கும் டில்லியின் எடுபிடி அரசு என்ன செய்தது, ராணுவம் எங்கே, மத்திய பார்ப்பணீய அரசு தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் த்ரோகம் இழைக்கிறதுன்னு கத்தி ப்ரயோஜனமில்ல.   இது சுற்றுலாத் தலமல்ல.  உடல், மன உறுதி கொண்டவர்கள் வந்து தரிசியுங்கள்.  ஈசன் ஒருவனே காப்பவன்.

நிம்மதியா ஏறி, தரிசித்து இறங்க 12-13 மணி நேரம்.

பூண்டி அடிவாரத்திலேயே பழங்கால சிவன் கோவில் ஒன்றுள்ளது.  பாரம்பரியம் மிக்கது.  மலை ஏற முடியாதவர்கள், மலை ஏற்றி விட வந்த மனைவி, குடும்பத்துப் பெண்கள் எல்லாம் மேலே சென்றுள்ளவர்கள் பத்திரமாக தரிசனம் முடிந்து திரும்பி வர வேண்டும் என்று இங்கு விரதம் இருக்கிறார்கள்.  மலையேற்ற நாட்களில் ஏராளமாக அன்னதானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  வருத்தி, வருந்தி உண்ண அழைத்து, உண்மையாய் உணவளிக்கிறார்கள்.  சொற்றுணை வேதியனை தரிசித்தோருக்கு அடிவாரத்தில் சோற்று மலை நிச்சயம்.    காவடிக் குழுவினர், அடிக்கடி மலையேறுவோர்கள், அப்பாவோடு ஏறும் குழந்தைகள், சிறு, பெரு வயது பெண்கள் என ஆர்வமாகப் பலர் மலை ஏறுகிறார்கள்.  அடிவாரத்திலேயே முடி இறக்க, காலைக்கடன்கள் கழிக்க, குளிக்க என்று வசதிகள் இருக்கிறது.

வனத்துறையினர் அடிவாரத்திலேயே பையில் இருப்பவைகளையெல்லாம் வெளியே எடுத்து வைக்கச் சொல்லி சோதனை செய்கிறார்கள் ப்ளாஸ்டிக் பேப்பர்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாதென்று.  வாட்டர் பாட்டிலில் சுற்றியிருக்கும் ப்ராண்ட் பேப்பர், கடலை மிட்டாய், பிஸ்கெட் கவர், சோத்து மூட்டை என்று எதுவாக இருந்தாலும் நீக்கி விடுகிறார்கள்.  உங்களுக்கு அப்படியும் மேலெ சென்று ப்ளாஸ்டிக் குப்பை போட வேண்டுமென்ற வேண்டுதல் இருந்தால் வழியில் உள்ள கடைகளில் குளிர்பான ப்ளாஸ்டிக் பாட்டில்கள், பிஸ்கெட், மிட்டாய் பாக்கெட்டுகள், மோர், கூழ் பேப்பர் டம்ளர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  ப்ளீஸ் தண்ணி பாட்டில் தவிர வேறெதையும் மேலே எடுத்து செல்லாதீர்கள்,  வழியில் ஒரு 100-200 செலவில் வாங்கி வேணுங்கறத தின்னுட்டு, குப்பையையெல்லாம் உங்க பையிலேயே எடுத்து வந்து அடிவாரத்துல ஸ்வச் பாரத் இருக்கு அங்க போடுங்க, க்ளீன் பண்ணிப்பாங்க.   அதிகமா யாரும சாப்டுட்டு நடந்து பாக்கல.  வெயில்ல பழக்கப்பட்ட நம்மவர்கள் பெரும்பாலும் காலை ஒரு நாலு மணி வாக்குல கீழேந்து கெளம்பி மாலை இருட்டறதுக்குள்ள தரிசனம் முடிச்சிட்டு, கீழ வந்துடறாங்க.  நம்மள மாதிரி சிட்டில, ஏசில வாழறவங்க ராத்திரி மலை ஏறுகிறார்கள்.  டார்ச் லைட் உதவியோடு,  அடிவாரத்துல 100 ரூபாலேந்து டார்ச் லைட், அதற்கான பேட்டரி கிடைக்கிறது.  வழித்துணையாம் ஈசன் தடி 30 ரூபாய்க்கு தேவஸ்தானம் விற்கிறது.  நீங்க கொண்டு வந்திருந்தாலும் எடுத்திட்டுப் போகலாம்.  இதை கீழ வந்ததும் வீட்ல பூஜைல வெச்சு பூஜிக்கறாங்க.

இதுவரை நீங்கள் படித்தது வெள்ளியங்கிரி யாத்திரையைப் பற்றிய பொதுக் குறிப்புகள், இனிமே தான் நாங்க அனுபவப்பட்ட எங்களோட பயணக்கட்டுரை.  மேல படிச்சா அவ்வளவு புண்ணியம்,  மல்டி லெவல் மார்கெட்டிங் மாதிரி ஒவ்வொருவரும் ஒரு பத்து பேருக்கு இந்த லிங்க்க அனுப்ச்சி படிக்க சொன்னா, பத்தே நாளில் உங்களுக்குள் நான் அதிசயங்களை காணப்பண்ணுவேன்.    ட்ரெக்கர்ஸ்சுக்கும் உபயோகமா இருக்கும்.

04 மே 2018 வெள்ளிக்கிழமை ராத்திரி 12 மணிக்கு ரப்திசாகர் ட்ரெயின்ல ரிசர்வ் பண்ணியிருந்தோம்.  இப்ப பல வருடங்களுக்குப் பிறகு நெறையா இடத்துல ரயில் ட்ராக் எல்லாம் பாத்து, பாத்து மாத்தறாங்க.  ஜல்லியும்.  எங்க ட்ரெயின் அதனால சென்ட்ரல் வராது, நீங்க காட்பாடில வந்து ஏறிக்கோங்கன்னு டிஜிட்டல் இந்தியாலேந்து ஒரு எஸ். எம். எஸ். ரயில்வே டிபார்ட்மெண்ட்லேந்து,  நேர்ல புக் பண்ணினவங்களுக்கெல்லாம் தூதர்கள் அனுப்சிருக்காங்களா, முரசு அறிவிச்சிருக்காங்களான்னு தெரியல.    பாத்தா அந்த ட்ரெய்யின் காட்பாடிக்கு அஞ்சாம் தேதி காலை 1.30 மணிக்கு வரும்னு சொன்னாங்க முதல்ல, அப்பறம் அது 24 மணி நேரம் தாமதமா வருதுன்னு இன்னொரு மெசேஜ் மொபைலுக்கு.  இது சரிபடாதுன்னு தத்கல்ல நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ல பாதிபேர், ஸ்லீப்பர் பஸ்ல பாதி பேர்.  ரெண்டு டீமும் தனியா போய்ட கூடாதுன்னு இறையருளால் எங்க ட்ரெயின் ஒரு நாலு, அஞ்சு மணி நேரம் கழிச்சு சனிக்கிழமை காலை 5 மணிக்குப் போகவேண்டியது, 10 மணிக்கு தான் போச்சு.  10-15 நாளா ப்ளாகு படிச்சு, லீடர் பால் கூடப் பேசி, என்னென்ன கஷ்டம் வரும், எப்படி சாதிக்கனும்னு எதிர்பார்ப்போட, தயாரிப்போட  ஆபீஸ்லேந்து சென்ட்ரல் வந்து ரயிலேறியாச்சு.  என் ஒரே மனைவி மற்றும் துணைவி பவானியம்மாள் என் பொண்ண தயார் பண்ணி கிண்டி ஸ்டேஷன்ல கொண்டு வந்து என்னயும் நம்பி வுட்டுட்டுப் போனாங்க.  நான் ரொம்ப அவங்கள விட்டு தனியா போனதில்ல.  வம்பிழுக்க யாராவது நமக்கு கூட வேணும்.  அதனால கொஞ்சம் ஃபீலிங்,  பட் பழைய தமிழ் பட லெவெல் தான், ரொம்ப யோசிக்க வேண்டாம் மேல.  ஆளுக்கொரு டப்பால தயிர்சாதம், மாங்காயோட, காலி பண்ணிட்டு தூங்கிட்டோம்.   திருச்சி-சென்னை ரயில்ல பழக்கமானதால நைட்டு தூங்க பயமா இருக்கும், ஸ்டேஷன விட்டுடுவோமோன்னு.  ஒரு தடவ சென்னை-பழனி, இப்ப சென்னை-கோவை, நிம்மதியா தூக்கம்,  ட்ரைவர் அண்ணன் புதுசா டூவீலர் கத்துக்கறாப்ல வெட்டி, வெட்டி ஓட்டினாரு, ஈரோடுல பிய்க்க முடியாத பூரி, குருமா ஜன்னல் வழியா வாங்கி குடுத்தேன், இனிமே பூரியே அவளுக்கு வெறுத்துப் போய்டனும்னு.  எனக்கு ஒரு பருப்பு வடை, ரென்டு ஆனியன் சம்சா,இறை பயணமோல்யோ.  என் பொண்ண பாய்னு போட்டு டிக்கெட் புக் பண்ணிட்டாரு லீடு.  அதனால் டிடியார் செக்கிங் முடியறவரைக்கும் பரம்பரை, பரம்பரையா அடுத்த பொட்டிக்குக் கூட்டிட்டுப் போவோமே, அதையே செய்தோம்.  நமக்கு எப்படிப்பட்ட டிடியார் வாய்ப்பாரோ, யார் கண்டா.   ஆனா நல்ல டிடியார்.

05 மே 2018, சனிக்கிழமை.  கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு.  அண்ணபூர்ணால தான் டிஃபன் சாப்டனும் அடம் புடிச்சு, நடத்தினு போய் சாப்டோம்.  அங்க ரோடுல விவேகானந்தர் டீம் ஒன்னு வேன்ல வெச்சிட்டு அன்லிமிடெட் அல்டிமேட் மோரு குடுக்கிட்டே இருந்தாங்கப்பா.   இந்த ஏடிஎம்கே டீம் ஒவ்வொரு சம்மர்லயும் பெரிசா வாழ மரம், தோரணம்னு, மைக் செட்டுனு போட்டு, அமைச்சர்கள கூப்டு ப்ரஹ்மாண்டமான கோடை கால குளிர் மோர் பந்தல்னு விளம்பரம் பண்ணி ஒரு ரெண்டு- மூனு மணி நேரம் இளநீர், மோர், தர்ப்பூசணின்னு அவங்களே அமக்களப்படுத்திட்டு போய்டறாங்க, அப்பறம் போய் பாத்தா பானை கூட இல்ல எங்கயும்.  இப்டியே பொலம்பிட்டே இருக்க வேண்டியது தான்.  சரி, எங்க டீம், வழக்கம் போல,

அண்ணன் பால்பாண்டி - குழுத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், கோவமே வரமாட்டேங்குதுப்பா இவருக்கு,
இளவரசன் - செயலாளர் (இன்னும் எவ்ளோ காசு கேக்கப்போறாரோ, பாப்பம்)
ஃபோட்டான் சிவக்குமார்
கோபால்
பழனி
சிவா
கார்த்திக்
மஹேந்திரன்
என் பொண்ணும் நானும்

என் பொண்ணு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி செலக்ஷனுக்காக நாகலாபுரம் கூட்டினு போயிருந்தோம் (http://jagadhguru.blogspot.in/2018/04/blog-post_23.html).  வெற்றிகரமா முடிச்சதன் பரிசு இப்ப இந்த வெள்ளிமலைப் பயணம்.  குளிக்கறதுக்கு ஈசாவுக்குப் போனோம்.   ஜக்கி வாசுதேவின் கனவுகள் இன்னும் மெய்ப்படலன்னுதான் தோனுது அங்க இருக்கற செட்டிங் எல்லாம் பாக்கும் போது.  த்யான லிங்கம் நல்லா இருந்துது.  ஆனா இங்க இருக்கற மொத்த அமைப்புமே, ஆண்கள் குளிக்க சூர்ய குண்டம், பெண்கள் குளிக்க சந்த்ர குண்டம்னு சிவலிங்கம் நடுவில் வைத்து தனித்தனி குளம் வைத்திருக்கிறார்கள்.   சுத்தத்திற்காக ஷவர்ல குளிச்சதுக்கு அப்புறம் தான் அந்த குளத்துல குளிக்க அனுமதி.  ஜென்ட்ஸ்க்கு ஒரு காவித் துண்டு தராங்க. அத கட்டிட்டு தான் அந்த குளத்துல குளிக்கலாம்.  வ்யாதி உள்ளவர்கள், ஜில் தண்ணி ஒத்துக்காதவங்க தவிர்க்கவும்,  முடியாதவர்கள் துணையோடு செல்லவும்னு போர்டு, வீடியோ அந்த குளத்தில் குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்னன்னு.  ஹிந்து மதத்தோட அமைப்புன்னு சொன்னா எல்லாரும் வரமாட்டாங்க.  ஆனா எல்லாரையும் வரவழைக்கனும், ஏன்னா எல்லாரும் ஆதில ஹிந்துங்கற சனாதன மதம்தானே.  கட்டுமானங்களுக்கும் காசு நிறையா வேணும்.  இப்ப அங்கங்க ப்ரஹ்மாண்டமான சிலைகள் வடிக்கறதுதான் ட்ரெண்டு.  கொஞ்சம் திடீர் ரிச், ஹைஜீனிக், கார்ப்பரேட் கம்பெனில வேலைன்னு இருக்கறவங்களுக்கு இந்த இடம் புடிக்கும்.  அவங்கதான் டார்கெட்டும்.  த்யான லிங்கம் தவிர மற்ற எல்லா இடங்களும் பெர்மனென்ட் மாதிரி தெரியல.  எதிர்காலத்துக்குத் தேவைப்படும்போது ஸ்லாப் ஆக்கிக்கலாம்ங்கற அளவுக்கு ப்ரஹ்மாண்டமான பெரும் பெரும் கற்பாறைகள்.  தரைகள், படிக்கட்டுகள், நீர் நிலைகள், சுற்றுச்சுவர்கள்னு எல்லாமே ஒரு தற்காலிக அமைப்பா தெளிவா தெரியுது.  த்யான லிங்கத்தக்கு பக்கத்துலேயே இப்ப லிங்க பைரவின்னு ஒன்னு, ஒரு அரை கிலோ மீட்டர் நடந்தா சிவ ராத்ரி அன்னிக்கு டிவில காமிப்பாங்களே அந்த பெரிய ஆதியோகி சிலை. மோர் வெயிலுக்குக் குடுத்திட்டே இருக்காங்க.  நீங்க வேணும்னாலும் டொனேட் பண்ணலாம்.  அங்கங்க பிரிஞ்சு இருக்கற சிலைகள பாத்தா இன்னும் நெறையா திட்டங்கள் இருக்குன்னு தோணுது.  நாங்க போன தடவ குளிச்ச இடத்துலயே இந்த தடவ குளம் இல்ல.  ஜென்ட்ஸ் குளத்துலயோ, ஷவர்லயோ என் பொண்ண கூட்டிட்டு போக அனுமதிக்கல,  லேடீஸ் குளிக்கற குளத்துல டிக்கெட் வாங்கலாம்னா அங்கயும் 12 வயதுக்கு மேல தான் அனுமதின்னுட்டாங்க.  வெள்ளியங்கிரி யாத்திரைக்குப் போறோம்.  நீங்களாவது கூட்டிட்டுப் போய், ஷவர்லயாவது குளிப்பாட்டி கூட்டிட்டு வாங்கன்னு கேட்டேன், அனுமதி மறுக்கப்பட்டது.  நெறையா பாம்பு சிலைகள் எங்க பாத்தாலும். பாய்ஸ் குளிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாங்க. நானும் பொண்ணும் அடிவாரத்துல இருக்கற கோவில் தொட்டில குளிச்சக்கலாம்னு ஐடியா குடுத்தாங்க பசங்க.  கெளம்பினோம். இஸ்கான் கோவில் மாதிரி செப்பல், லக்கேஜ், மொபைல் பத்திரமா வாங்கி வெச்சிட்டு திருப்பித் தராங்க.    ஆனா அந்த வாலண்டியர்ஸோட அன்பு, நடை, உடை, பாவனை எல்லாமே க்றிஸ்தவ மிஷினரி, ஷெல் பெட்ரோல் பங்க் உறுப்பினர்கள் மாதிரி செயற்கையா, பயிற்சியின் வெளிப்பாடா தெரியுது.  என்னமோப்பா, நல்லது நடந்தா சரி.

ஜக்கி வாசுதேவின் ஆஶ்ரமத்திலிருந்து 20 ரூபா ஷேர் ஆட்டோ பூண்டி அடிவாரக்கோவிலுக்கு.  கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்லேந்து 40 ரூபா டிக்கெட் அரசு டீலக்குசு பஸ்ல ஈசாவுக்கு வர.  ஒன்றரை மணி நேரம் பயணம்.  அடிவாரக் கோவில், புராதனக்கோவில் கோவில் தான்,  நல்ல தெய்வீகம்,  எக்சிபிஷன் பாக்க வந்தா மாதிரி இல்லாம சாமி பாக்க வந்திருக்கோம்னு நம்பிக்கையான, பக்தியான மக்கள் கூட்டம்.   குளிக்கற தொட்டிக்குப் போற வழி ரொம்பவெல்லாம் நல்லா இல்ல, கவர்மெண்ட் கோவில் மெயின்டெனென்ஸ் நல்லா தெரியுது.  திருப்பதிக்காரன் வர்ற காச திருப்பி செலவு பண்ணி, நம்மள திரும்பவம் வரவழைக்கறான்.  காசு சம்பாதிக்கறான்.   இந்த தமிழ்நாட்டு அறநிலையத்துறை நாங்க குடுக்கற இம்சையெல்லாம் தாண்டி முடிஞ்சா திரும்பி வந்து பாருன்னு செய்யறான்.  பழனி கோவிலுக்கு வராத காசா,  மலைய சுத்தி மூச்சா நாத்தம்.  முருகன் எறங்கவே மாட்டார்.

மாலை 5.30 மணிக்குப் பயணத்தைத் தொடங்கினோம்.  ஆளுக்கு ஒரு க்ளூகோஸ் டப்பா, ரெண்டு பாக்கெட் க்ளூகோஸ் மிட்டாய் பாக்கெட், ரெண்டு ஆரஞ்சு பழங்கள் பிரிச்சு குடுத்தாங்க டீம்ல.  பேக்ல போட்டுட்டு, கீழ வைக்க வேண்டிய லக்கேஜ், செப்பல்லாம் லாக்கர்ல வெச்சிட்டு, டோக்கன் வாங்கிட்டு, குச்சி, டார்ச் லைட் வாங்கிட்டு, சாமி கும்பிட்டுட்டு, வேண்டிட்டு கிளம்பியாச்சு.  வனத்துறை செக்கிங் முடிஞ்சுது, அவங்க எதிர்பாத்த எடத்துலயெல்லாம் ப்ளாஸ்டிக் கவர், பேப்பர் எதுவும் கிடைக்கல,  நான் ப்ரஹ்மாண்டமா மூனு சரவணா ஸ்டோர் கவர ஒளிச்சு வெச்சிருந்தேன், மழைக்கு, மேலேந்து குப்பைப் பொறுக்கிட்டு வர யூஸ் ஆகும்னு.  மாலையிளம் கதிரின் வெளிச்சத்துல 6.30 மணிக்கு முதல் மலைய முடிச்சோம்.  முதல் தடவ போற டீம்ல ஒரு நாலு பேரு முன்னாடி போய்ட்டாங்க.  நாங்க சீனியர்ஸ்கூட, இல்ல அவங்க எங்கள கூட்டிட்டு, எங்களோட வந்தாங்க.  ரெண்டாவது வழுக்குப் பாறை மலைலேந்து இருட்டுல டார்ச் லைட் பயணம்.  சொல்லிக்கறாப்ல ஏதாவது கண்ணுக்குத் தெரிஞ்சாதானே வர்ணிக்க.  அங்கங்க ரெஸ்ட் எடுத்திட்டு, பாம்பாட்டி சுனைல தண்ணி ரொப்பிட்டு, மூனு, நாலாவது மலைகளைக் கடந்தோம்.

ஐந்து, ஆறாவது மலைல ஆளே தெரியாத அளவுக்குக் கடும் பனி, டார்ச் லைட் வெளிச்சம் ரெண்டு அடிக்கு மேல போகல.  நாரதர் நடக்கறாப்ல நம்மள சுத்தி மேகங்கள் பஞ்சு, பஞ்சா.  மண்ணு இன்னும் ஜில்லுப்பு ஏறல, நாமளும் காலு ஜில்லுன்னு ஆகறதுக்கு நிக்கல, நடந்திட்டே இருக்கோம்.  பொண்ணு காட்டன் கார்கோ பேண்ட் அங்கங்க பாக்கெட்டோட, முழுக்கை டீ சர்ட், பாக்கெட்டுகள்ல க்ளூகோஸ், மிட்டாய், பழங்கள், மூஞ்சிய கண்ண மட்டும் விட்டுட்டு அவங்கம்மாவோட காட்டன் சால்வையால சுத்தியாச்சு.  வழில கூட்டமா காட்டு எருமைகள் பாகுபலி படத்துல பல்வால் தேவனோட மோதுமே, அத விட பெரிசு, பெரிசா இயற்கையா வளர்ந்தவைகள், மேய்ந்து கொண்டிருந்தன.  எருமைகள் தானே என்ன இருந்தாலும், நம்மள கண்டுக்கல.  எதிர்க்க இறங்கி வந்தவங்களும் தொல்லை பண்ணாம போங்கன்னு சொல்லிட்டுப் போனாங்க.    டீம்ல எல்லாரும் பாத்தாங்க.  எனக்கு ப்ரச்னையே இல்ல, இந்த ஐ.டி இன்டஸ்ட்ரீக்கு வந்து நமக்கு பகல்லயே பசு மாடு தெரியல, நைட்டுல எங்க எருமைமாடு தெரியப்போகுது.   அதனால நோ பயம் சிவன் மலைல எல்லாம் அவன் மயம்.    பொண்ணு முழுசா பால் அண்ணே கவனிப்பு, பராமரிப்புல.  அதிகமான வேர்வை அந்த குளிர்லயும்.  சில பேருக்கு பத்து படிக்கு ஒரு தடவ மூச்சா.   ஒரு வழியா ஆறாவது மலைலேந்து மெதுவா இறங்கி சுனையத் தாண்டினோம்.  ராத்ரி நேரம், இதுவரை இப்படி பனிய பாத்ததில்ல, அங்க வேற அட்டப்பூச்சி இருக்கும், குளிக்க வேண்டாம்ட்டாங்க.  கனத்த இதயத்தோடு க்ராஸ் பண்ணினோம்.  இன்டர்வல்,  400 ரூபா பாப்கார்ன், 80 ரூபா பப்ஸ், ஒளிச்சுக் கொண்டு வந்த 5 ரூபா பாப்கார்ன் சாப்டனும்னா சாப்டுக்கோங்க,  சீட்டு நுனிக்கு வரப்போறீங்க இனிமே தான்.


ஏழாவது மலை அடிவாரம், டீக்கடை, எதிரில் ஒரு ஷெட்,  யார் காலு, கை எங்க இருக்குன்னு தெரியாத அளவுக்கு, மொத்தமா ஒரு ஆயிரம் பாம்புகள ஒன்னா போட்டாப்ல ஒரு 50 பேர் தூங்கறாங்க,  நாங்க ஒரு அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்னு முடிவு பண்ணினோம். நா வேற மேல சிவன் கிட்ட போய் ஒரு நாலு மணி நேரம் சூரியோதயம் வரைக்கும் ருத்ரம், சமகம், சூக்தங்கள், உபநிஷத், சூர்ய நமஸ்காரம்னு வேத மந்த்ரங்கள் சொல்லலாம்னு திட்டம் போட்டு வந்தேன்.  நானும் பொண்ணும் ஷெட்டுல பக்கத்துல, பக்கத்துல ஒக்காந்து அவள மடில சாஞ்சு தூங்க சொன்னேன்.  ஒரு நிமிஷத்துல தூங்கிட்டா.  5 நிமிஷத்துல மழை, இடி, மின்னல்.  சூப்பரா ஒரு 15 நிமிஷத்துக்கு.  எங்கள்டேந்து முன்னே பிரிஞ்சு போன அந்த நாலு களவானிப்பசங்களயும் கொட்டகைல தேடினா, கூப்டா காணோம்.  பிஎஸ்என்எல் 2 ஆவது மலை வரைக்கும் தான் சிக்னல், பின்னாடி வந்த மதங்கள் மாதிரி மத்த ஜியோ, வோடஃபோன் 4 மலை வரைக்கும் சிக்னல், அதுக்கப்பறம் சிவன் மட்டும் தான்.  ஏழாவது மலைக் கோவில்ல சோலார் லைட் அப்பப்ப தெரியுது.  மழைத்தண்ணி எங்க பாத்தாலும் ஓடி வருது.  50 பேரு அந்த சின்ன கொட்டகைல, கீழேந்து சுனைல வேற குளிச்சிட்டு வராங்க பக்தர்கள் அந்த குளிர், மழைலயும், அட்டைப்பூச்சி உபசாரம் எங்க கொட்டகை வாசல்ல வந்து.

ஒரு பத்து நிமிஷம் ப்ரேக்,   திருப்பி இடி, மின்னல், குளிர் காத்து, மழை ஒரு அரை மணி நேரத்துக்கு.  ப்ரளயத்த மார்க்கண்டேயர் நேர்ல பாக்கனும்னு வரம் கேட்டாராம்.  நான் கேட்காமலே சிவன் அத அப்ப காமிச்சான்.  பொண்ண தரைல ஒரு துண்டு விரிச்சு அதுல ஒக்காத்தி, என் மேல சாஞ்சிண்டு, அவ துண்ட போத்தி, அது மேல என் மேல் துண்ட போத்தி, அது மேல என் துடைச்சிக்கற துண்ட போத்தி, மேல சொட்டற தண்ணி படாம இது எல்லாத்துக்கும் மேல சரவணா ஸ்டோர் கவர்.  குழந்தை பத்திரம். நான் பஞ்ச கச்சம் முட்டி வரை, மேல வெறும் உடம்பு தாத்தாவோட ருத்ராக்ஷ மாலையோட.   மணி ஞாயிறு காலை 3.30.  மக்கள் கொஞ்ச, கொஞ்சமா தைரியத்த வரவழைச்சிண்டு மேல ஏற ஆரம்பிக்கறாங்க.  ஒரு மூணு பேரு திடு புடு, திடுபுடுன்னு  மேலேந்து சருக்கினு, சேறு, சகதியோட வெற்றில வெறிச்சிப் போயி வந்தாங்க.  பாத்தா நம்ம களவானிஸ்.  நைட் 10-30 மணிக்கே சாமி கிட்ட போய்ட்டாங்களாம்.  கொஞ்சம் எல்லாருக்கும் வெயிட் பண்ணினதுல மழைல, குளிர்ல மாட்டிட்டு, மேல இருக்கவும் இடமில்லாம, ஒரு வழியா வழிக்கிட்டு வந்துருக்காங்க.   மேல போகாதீங்க, மேல போகாதீங்க, லைஃப் டேஞ்சர்னு இங்க வந்து எல்லார்ட்டயும் தெரிக்க விட்றாங்க.    பாலும் வந்து சீதா இந்த மாதிரி க்ளைமேட், மழை, குளிர் நாங்க இது வரைக்கும் பாத்ததில்ல.  நாம அடுத்த தடவ சாமி பாத்துக்கலாம், தங்கிட்டு இறங்கிடலாம்ங்க்றார்.  நான் தெளிவா இருக்கேன்.  அவங்களுக்கு நேர்ந்தது, பால் பயப்படறது இதெல்லாம் நான் படிச்சிட்டு, எதிர்பார்த்து தான் வந்திருக்கேன்.    பால் நாம ஒரு 300-400 பேருக்கப்பறம் போவோம், அவங்க காலடி பட்டு சேறு காஞ்சிடும்,  சிவனப் பாக்காம நா திரும்ப மாட்டேன், ராத்திரி 9 மணிக்கு தான் சென்னைக்கு ட்ரெயின்.  பொழுது விடிஞ்சு ஏறினா கூடி சாமி பாத்துட்டு, மெல்ல இறங்கினா கூட நிம்மதியா ட்ரெயின புடிக்கலாம்.  ஆனா எடுத்த காரியத்த முடிக்காம வர மாட்டேன், நீங்க கூட வாங்க, போறவங்க போகட்டும்னுட்டேன்.   அவரும் என்ன சொல்றதுன்னு தெரியாம ஃபீலிங்கோட எதிர்க்கடைக்குப் போயிட்டார்.  சாமி பாத்துட்டு வந்தவங்களும், எங்க கூட இருக்கறதுல ஒருத்தரும் கீழ இறங்க ஆரம்பிச்சிட்டாங்க.   ஒரு 5-5.30 க்கு மேல போகலாம்னு முடிவாச்சு.

நான் இதுவரைக்கும் இயற்கையான ஒரு மலைதானே வந்ததும், ஃபோட்டோஸ் எடுத்துட்டு, உடற்பயிற்சியா வந்ததும் அழிந்தது.  உண்மையாக, உணர்ச்சியின் வெளிப்பாடாய் அழ ஆரம்பித்தேன்.  அந்த இரவை நினைத்து இதை எழுதும் போதும் கண்ணீர் விடுகிறேன் என்னை அறியாமல்.  படித்த சிவத்தை அனுபவத்தில் உணர்கிறேன், நமக்கும் மேலான சக்தியை உணர்கிறேன்.   விளையாட்டுத்தனம், என் இயற்கையான சாதித்து விடுவோம் என்கிற முரட்டுப்பிடிவாதம் என்னிடமிருந்து என் இஷ்டத்தோடு என்னை விட்டு விலகுகிறது.  ஏழாவது மலையில் ஏறிச்செல்பவர்களின் டார்ச் லைட் ஒளித்தொடர் சிவனின் நடனத்தில் ஆடும் அவன் உடைபோல் தெரிகிறது.  அந்த மலை முழுவதும் நடராஜனாகவும், மேலே எங்கும் சூழ்ந்திருக்கும் இருள் மழை மேகங்கள் கங்கையில் தோய்ந்த அவன் ஜடைகளாகவும் கண்கூடாகத் தெரிகிறது.  என்னை அழாதே என்று தூக்கிக்கொள்ள வருவதை உணர்கிறேன்.  நான் அவனிடம் செல்ல இன்னும் தூய்மையில்லை என்று அவசர அவசரமாக ஆதித்ய ஹ்ருதய ஶ்லோகத்தை முழுவதுமாக மூன்று முறை விம்மி, விம்மி சொல்கிறேன்.  யாருக்கும் எந்த உயிர்க்கும் இன்று எந்த ஒரு தீங்கும் நேராது என்று நம்புகிறேன்.  இது அவன் வீடு.  இந்த ஶ்லோகங்களின் முழுப் பொருளும் எனக்கு முழுதாகத் தெரியாது.  ஆனால் அவன் தான் எதற்கும் முழு, முதற்பொருள் என்பதை அறிவேன்.    இந்த ஶ்லோகங்கள் 30 குறள் போன்றவை.  என் தாத்தா அமரபாரதி நடராஜ ஶர்மா அவர்கள் சொல்லிக்கொடுத்தது.  அவர் பெருமையும் தெரியாது காலம் முழுதும் அவர் என் தாத்தா என்றே விளையாடிக்கழித்தேன்.  வால்மீகி ராமாயணத்தில் 30 நாட்கள் நடந்த அந்த ராம-ராவண யுத்தத்தின் ஆரம்பத்தில் ராவணனின் ரத, கஜ, துரக, பதாதி ராட்சத பரிவாரப்படைகளையும், தன்னுடனிருக்கும் கரடி, குரங்குப் படைகளையும் எண்ணி பூமியில் நின்று கொண்டிருக்கும் ராமர் ப்ரமித்த போது அங்கு தோன்ரிய அகஸ்த்தியர் இருளைப் போக்கும் சூரியனே இந்த உலகிற்கு இறைவன், அவனே மும்மூர்த்திகள் என்று பல பொருள் படும் இந்த ஶ்லோகத்தை ராமருக்கு உபதேசித்து, ராமர் அதனை ஜபித்து, யுத்தத்தை ஜயித்தார்.

ஞாயிறு காலை 5.30 மணி,  எங்கள் பயணம் தொடர்ந்தது.  மலை அவ்வளவாக வழுக்கவில்லை.  10 நிமிடங்களில் டார்ச்சும் தேவைப்படவில்லை.  பொழுது பசுமையாகப் புலரத் தொடங்கியது.  எங்கும் பசுமை, ரம்மியமான ஒளி.  உற்சாகத்தோடு பல குழுவினரின் ஊடே நாங்களும்.  பொண்ணு இப்ப பேண்ட், டீ சர்ட், கைல தண்டம் மட்டும் தான்.  மேல சாமி குகை கிட்ட ஒரு 400 பேர் போல சேந்துட்டோம் 6.30 மணிக்கு. இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.  அருமையாக பிள்ளையாரைத் தரிசித்து, வெள்ளியங்கிரீஶனை அடைந்தோம்.  நிலம், நீர், காற்று அனைத்தையும் நன்றாக அனுபவித்த நாங்கள் ஆகாயத்தையும் தரிசித்து, இப்போது ஐந்தாவது பூதமான நெருப்பின் வடிவமாக சூரியனையும் தரிசித்தோம்.  என் பொண்ணு சிவன் மேல ஶம்போ, சிவ ஶம்போ ஸ்வயம்போன்னு பாட்டு பாடினா.  ரெண்டு பேருக்கும் மடக்குலேந்து விபூதிய எடுத்து பட்டை இட்டு விட்டார்கள் பூசாரிகள்.  அவளுக்குப் பரிசாக மல்லை, முல்லைச் சரம் குடுத்தார்கள்.  ஸ்வாமி கிட்டேந்து மாலை எடுத்து அணிவித்தார்கள்.  விபூதி, பொட்டலம்,, வில்வம், பச்சை, மலர்கள் எனக்கு ப்ரசாதம். தத்புருஷம், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம்,  ஈசானம் என்ற  ஒவ்வொரு முகத்துக்கும் ஒன்றாக வேத மந்த்ரங்களை சுருக்கமாகச் சொல்லச்செய்தான் இறைவன்.   கொண்டு போயிருந்த சங்கை எடுத்து குழுவினருடன் ஏழாவது மலை உச்சியில் கல்லால் இயற்கையாய் அமைந்திருந்த நந்தி (அல்லது மூஞ்சூறு) சிகரத்தினடியில் முழங்கினோம்.   அங்கிருந்த சித்தர் என் பெண்ணிடம் எங்க இருந்த வர, கொழந்த, பேரு என்ன, இப்பதான் வரியான்னு கேட்டு ஆசிர்வதித்தார்.  மாலையோடே நான்காவது மலை வரை வந்து விட்டாள்.  நாரு மட்டுந்தான் அப்ப இருந்துது அந்த மாலைல அப்ப, சித்தர் குகை கிட்ட ஒரு மரத்துல தூக்கிப் போட்டுட்டு, மெல்ல இறங்கினேன்.   வரும் போது நான் மட்டும் ஆண்டி சுனைல குளிச்சிட்டு, பூஜை முடிச்சிட்டு வந்தேன்.   நானும் இப்ப கார்கோ பேண்ட், டி சர்ட்டுக்கு மாறியாச்சு.  சிவன் பெரிய ஆளா இருப்பான் போல இருக்குன்னு மனசு சொல்லிட்டே வருது.  சரிவுல ஏறுவதும், படில இறங்குவதும் நமக்குக் கொஞ்சம் கஷடம்.  காலு ஆங்கிள்ல ஃப்ராக்சர் ஆகி இப்பதான் 5-6 மாதம் இருக்கும்.  அதனால, ரெண்டு குச்சி வெச்சிட்டு ஏறி, இறங்கினேன் மாடு போல.    வழில ஒரு கடை தாத்தா என் பொண்ண ஞாபகம் வெச்சிட்டு, பேர சொல்லி கூப்பிட்டு அவளுக்கு வெங்காய பக்கோடா, நீர் மோரு அப்ப தயார் பண்ணி குடுத்து ஆசிர்வதிச்சார்.  அவன் ஓயாம பேசிட்டே ஏறி, இறங்கிட்டா.   போகும் போது பால் பாத்து கூட்டிட்டு போனாரு.  வரும்போது சிவா.  ரெண்டாவது மலைல வீட்டுக்கு சுனை நீர் ப்ரசாதமா பிடிச்சிட்டு வந்தோம்.  அன்று காலை வந்து கொண்டிருந்தவராம்.  சுமார் 45-50 வயசு இருக்கும், தனியா வந்திருக்கார் இல்ல பிரிஞ்சிருக்கார்.  தண்ணி தவிச்சோ, வேறெந்த காரணமோ, நாலாவது மலைல உயிர் பிரிந்து விட்டது.  காட்டு மக்கள் ஃபோட்டோ எடுத்து போலீஸுக்கு அனுப்ச்சிட்டு, உடம்ப எகிப்து மம்மி மாதிரி துணியால மூட்டை கட்டி, ஒரு குச்சில வேட்டையாடின விலங்கு போல தொங்க விட்டு கட்டி, ரெண்டு பேரா தூக்கிட்டு ஓடினாங்க, நாங்க ரெண்டாவது மலைல தண்ணி பிடிச்சிட்டு இருந்த போது.  சிவலோக ப்ராப்தி.

அடிவாரத்துல வடை, பாயசம், சாம்பார், மூலிகை ரசம், மோர், கோஸ்-கேரட்-தேங்காய் கறின்னு தடபுடலா அன்னதானம்.  ஒரு பிடி, ஒரே பிடிதான்.  பின்ன, நேத்தி காலை ஒரு வடை, ஒரு சம்சா சாப்டது.  எறும்போது எதுவும் சாப்டல, நடுவுல மயக்கம் வந்தப்ப பை முழுக்க சாமான், எதையும் தேடி எடுக்க நேரம் இல்ல, பால் அவர் வெச்சிருந்த ஆரஞ்சு பழம் ரெண்ட உரிச்சுக் கொடுத்தார் பாத்துட்டு,  சுளைய கூட பிரிக்காம அப்டியே ஒவ்வொரு பழமா ஆரஞ்ச வாய்ல போட்டு கரும்பு ஜூஸ் மிஷின் மாதிரி ஒரு அழுத்து.  உயிர் வந்துது.   இறங்கும்போது ஒரு மாங்கா, ஒரு ஆரஞ்சு மிட்டாய், ரெண்டு டம்ளர் மோர், எங்களோட நாலு ஆரஞ்சு பழங்கள சிவன்ட்ட குடுத்திட்டோம் மேல,  அரிசி, வெல்லம் கொண்டு போய் குடுக்கனும்னு ப்ளான்,  ஆனா ட்ரெயின் லேட்டால அது ஃப்ளாப்.   7.30 மணிக்கு இறங்க ஆரம்பிச்சு மதியம் 2.30 மணிக்கு அடிவாரத்தை வந்து சேர்ந்தோம்.  பொண்ணு ஒரு மணி நேரம் தூக்கம்.  4.30 மணிக்குக் கோவில்லேந்து கிளம்பி, ஈசாவுக்கு வந்து 5.30 க்கு பஸ் ஏறினோம்.  6.30 மணி ரயில்வே ஸ்டேஷன்.  அத்தை, சித்தப்பான்னு ஒருத்தர் வீட்டுக்கும் போக முடியல,  நேர வீட்டுக்குத்தான் அனுப்பனும்னு அவன் திட்டம்.  அதே ட்ரைவர், அதே செக்கர், அதே நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ல.  அதே நாலு மணி நேரம் லேட்டு.   திங்கள் கிழமை, 07மே2018, காலை 9.30 மணிக்கு தாம்பரம் வீட்டுக்கு வந்து சேந்து, குழந்தைக்கு அவள் தம்பியும், அம்மாவும் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.  கதையெல்லாம் வேகமா சொல்லிட்டு ஆஃபீஸ் கெளம்பியாச்சு.  உடம்பு வலின்னு ஒன்னும் யாருக்கும் பெரிசா ப்ரச்சினை இல்லை.  மீண்டும் சந்திப்போம்.  நாங்க ஜயிச்சிட்டோம், ஜயிச்சிட்டோம், ஜயிச்சிட்டோம்.

May 2, 2018

வர்ணாஶ்ரமம் - பகுத்தறிந்தது

ப்ராஹ்மணர்கள் - கல்வியாளர்கள், தொடர்ந்து எல்லாத் துறைகளிலும் ஆராய்ந்து கொண்டே இருப்பவர்கள், 64 கலைகளிலும் தேறிய வல்லுனர்கள், தசாவதானி (10), அஷ்டாவதானி (8), சதாவதானி(100)  என்று ஒரே சமயத்தில் பலதுறைப்பட்ட தேர்வுக்கணைகளை வென்றவர்கள், பங்களித்தவர்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது.  புத்திக்கூர்மையே இவர்களுக்கு ப்ரதானம்.  நடமாடும் பல்கலைக்கழகங்கள் இவர்கள்.  பலரின் தோற்றமும், முடிவும் ஆராய்ச்சிக்கு எட்டாதது, அவசியமில்லாதது.  பராசரரின் (க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வ்யாசரின் தந்தை) வைமானிக சாத்திரம், சுஶ்ருதரின் அறுவை சிகிச்சை மருத்துவம், வாத்ஸ்யாயனரின் காம சூத்ரம்,  அகஸ்த்யர், த்ரோணர், பரசுராமர் என எண்ணற்ற ரிஷி, முனிவர்களின் யுத்த, அஸ்த்ர சாஸ்த்திரம், என சொல்லிக்கொண்டே போகலாம்.  புஷ்பக விமானத்தின் இலக்கணம், இஞ்ஜீனியரிங் அமைப்பு போன்றவைகளை ஒரு உதாரணத்திற்கு வைமானிக சாத்திரத்தில் பாருங்கள் எதாவது புரிகிறதா என்று.  பீமன் மகன் கடோத்கஜனின் ரதத்தில் 16 குதிரைகள் நான்கு, நான்காக பூட்டப்பட்டிருந்தன, எண்ணற்ற அளவில் பாணங்களும், வில்களும், கதைகளும், பணியாளர்களும் அதன் அறைகளில் இருந்தனர் என்று மஹாபாரதம் கூறுகிறது.  சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம் இதன் கடைசி வரிசை.  இதனாலேயே இவர்கள் அந்த மேலான மஹாசக்தியின் முகத்திலிருந்து தோன்றியவர்கள் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.  ப்ராஹ்மணன், அந்தணன் - இறுதியான இறையம்சத்தை அணுகுபவன், அணுகும் வழியை அறிந்தவன், போதிக்கிறவன்.

க்ஷத்ரியர்கள்:  தோள் வலிமையால், பாஹுபலி (பாஹு -தோள்) நாட்டு எல்லைகளையும், உள்ளூர் மக்களையும் அவர்களிடமிருந்து மண், கால நிலை போன்றவற்றைக் கொண்டு வசூலித்த வரிப்பணத்தால் காத்தவர்கள்.  அதனால் மஹாவிஷ்ணுவாக போற்றப்படுபவர்கள்.  ப்ராஹ்மணர்களைக் கூட எந்த வேதமும் இப்படி தெய்வமாகப் போற்றியதில்லை.  ப்ராஹ்மணர்கள் அரசாள வேண்டாம் என்று போதிக்கிறது.  அதே சமயம் எந்த க்ஷத்ரியனாவது மக்களை ஹிம்சித்தால் தண்டிக்கப்பட்டும் இருக்கிறார்கள்,  இதனால் இவர்கள் பராசக்தியின் தோள்வலிமைக்கு ஈடானவர்கள், அதிலிருந்து தோன்றியவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள்.

வைஶ்யர்கள்: திரைகடல் ஓடி திரவியம் தேடுவதும், பசு (என்றால் எல்லா வீட்டு விலங்குகளும் அடங்கும்), விவசாய பராமரிப்பும் இவர்கள் பணி.  குதிரை, ரதம், கப்பல் என்று சுற்றிக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு பயணங்களுக்குத் தோதாக தொடை வலுவுடன் இருக்க வேண்டும் என்று இவர்கள் என் தொடையிலிருந்து உண்டாக்கினேன் என்றான் க்ருஷ்ணன்.  அவனே அழியும் அவதாரம்.  அவன் கூறினான் என்றால் மேலான சக்தியான மஹாவிஷ்ணுவின் தொடை என்றே பொருள் கொள்ள வேண்டும்.

இவர்களுக்குத் தேவையான க்ரீடம், உடை, ரதங்கள், பாதணிகள், மாலை, மணிகள், சந்தன, ஜவ்வாது அலங்காரப் பொருள்கள், வாகனம் ஓட்டுதல், சமையல், வாகன, கட்டிட, ரோடு, ஆலய, விவசாய கட்டுமானங்கள் என்று ஃபீல்டு வொர்க் பார்ப்பவர்கள் சூத்திரர்கள்.  மேலே கூறியவர்களுக்கு படிப்பறிவே உண்டு இன்ஜினியரிங் படித்தவர்கள் போல,  ஆனால் சூத்திரர்கள் சூத்திரங்களை அனுபவத்தில் கண்டவர்கள், தேர்ந்தவர்கள்,  டிப்ளமோ ஹோல்டர்ஸ் மாதிரி.

இவர்களைத் தவிர காட்டிலிருந்து கொண்டு துஷ்ட விலங்குகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்துக் கொண்டு, காட்டு வளங்களைக் காத்துக் கொண்டு, அழிக்காமல் உபரி வளங்களை தந்தம், புலி, மான் தோல், விஷமுறிவு மூலிகைகளை அறிந்தவர்கள் பஞ்சமர்கள்.

பிறப்பால் ஒரு வர்ணம், பிழைப்பால் ஒரு வர்ணம்
ராவணன் - ப்ராஹ்மணனாய்ப் பிறந்து பெண்ணின் மேல் இரக்கக் குணமில்லாததால் அரக்ககுணம் கொண்ட க்ஷத்ரியன்
ஏகலைவன் - வேடனாய்ப் (பஞ்சமர்) பிறந்து க்ஷத்ரியனாய் பாரதப் போரில் வீரம் காட்டியவன்
த்ரோணர், பரசுராமர் - ப்ராஹ்மணனாய்ப் பிறந்து, க்ஷத்ரிய குணத்தை போரில் காட்டியவர்கள்
யுதிஷ்ட்ரர் - பஞ்ச பாண்டவரில் மூத்தவராய்ப் பிறந்து பல இடங்களில் ப்ராஹ்மண குணத்தை உடையவராய் வர்ணிக்கப்பட்டவர்
ப்ரஹலாதன், பலி - க்ஷத்ரியர்களாய்ப் தைத்ய குலத்தில் பிறந்து தேவர்களால் போற்றப்பட்டவர்கள்
விஶ்வாமித்ரர் - க்ஷத்ரியராய்ப் பிறந்து ப்ராஹ்மணனானவர்

இப்படி எந்த ஒரு தேச, சமூக வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும், எல்லாத் தொழில் துறைகளின் பாதுகாப்பிற்கும், பங்களிப்பிற்கும் இந்த பிரிவுகள் நிச்சயம் அவசியம், இவை ஒன்றுக்கொன்று வெகு உறுதியாக, அடிப்படையில் சார்ந்துள்ளன, பிணைக்கப்பட்டுள்ளன.   நாம் இவைகளின் பெயர்களை மாற்றி நாட்டிற்குத் தகுந்தாற்ப்போல், சூழலுக்குத் தகுந்தாற்ப்போல் மாற்றி
ப்ராஹ்மணர்கள் - கல்வியாளர்கள் - அரசுக்கு அறிவுரை கூறுபவர்கள், (IAS, IFS, IPS, CA, டாக்டர்கள், இன்ஜினியர்கள், ....),
க்ஷத்ரியர்கள் - ஆட்சியாளர்கள் - ஆளுனர், ப்ரதம, முதல், மற்ற அமைச்சர்கள், இராணுவ, காவல் துறை வீரர்கள்
வைஶ்யர்கள் - தொழில் முனைவர்கள், டாட்டா, பிர்லா, ர்லையன்ஸ், சிறு, பெரு தொழில் உட்பட, கால்நடை, விவசாயம் காப்பவர்கள், அதனால் பிழைப்பவர்கள்
சூத்ரர்கள் - வண்டி ஓட்டுபவர்கள், தொழில் கட்டுமானங்களில் வேலை செய்பவர்கள், கடை நிலைத் தொழிலாளர்கள், சொல்வதைச் செய்யும் உடல் உழைப்பாளிகள்.
பஞ்சமர்கள் - இன்றும் இவர்கள் சில இடங்களில் நம்மை விட்டு விலக்கியே, அடக்கியே, ஒடுக்கியே வைக்கப்பட்டிருக்கிறார்கள் நாகரீகமற்ற, படிப்பறிவில்லாதவர்கள் என்று,  அவர்களும் நம்மை விட்டு விலகிய, இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையையே விரும்பி இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்,  இதில் எங்கும் ஜாதிகளின் பெயர் பாராட்டப்பட்டோ, ஒதுக்கப்பட்டோ, இழிவு செய்யப்பட்டோ கூறவில்லை.  திருடர்களாகவும், திருடர்களின் தலைவனாகவும் இருக்கிறான், சண்டாளனாக ஆதி சங்கரருக்கு உபதேசிக்கிறான் பரமேஶ்வரன்.

கொஞ்சம் யோசித்து பார்த்தால், நம்முடைய ஒரு காணி விவசாய நிலத்தையோ, பரம்பரை சொத்தையோ பாதுகாத்து, பராமரித்து நம் அடுத்த தலைமுறைக்கு பத்திரமாகக் கொண்டு சேர்க்கவே, நம் குடும்பத்துக்குள்ளேயே இந்த நான்கு பிரிவுகளிலும் வேலை செய்து கொண்டிருப்பது தெளிவாகப் புரியும். வீட்டில் 3-5 மணி நேரம் நடக்கும் விசேஷங்களுக்கும் இந்த பகுப்புகளில் நாம் பிரிந்து வேலையை வெற்றிகரமாக முடிப்பது கண்கூடு.

இந்தப் பிரிவுகளின் தினசரி வாழ்க்கை முறை, சுத்தம், சுகாதாரம், உடல் மற்றும் புத்தியைக் கொண்டு உழைக்கும் நேரம், விகிதம், தொழிலுக்குத் தகுந்த உடை, வார்த்தைகள், இறையம்சத்தை அறியும், அடையும் வழி என அனைத்தும் வித்யாசப்படும்,  அதைக் கொண்டு அடக்கப்பட்டிருந்தவர்களின் புரட்சி, வெளிப்பாடுகளே அங்கொன்றும், இங்கொன்றுமாக காலத்திற்கேற்ப ராமானுஜர், நந்தனார், பெரியார், அம்பேத்கார்,   இவையாவையுமே காலத்திற்கேற்ப இறைவனால் நிச்சயிக்கப்பட்டதே,  ஆனால் அவரவர்கள் வளர்ப்பு, படிப்பறிவு, பகுத்தறிவு, வாழ்ந்த ஒழுக்கமுறை,  நமக்கு மேலான அந்த சக்தியிடம் கொண்ட நம்பிக்கையின் தெம்பு இவைகளால் இவர்கள் சாதித்த முறை, அங்கீகரிக்கப்பட்ட விதம் மாறுபடுகிறது,  பழிக்கப்படுகிறது,

இதிஹாஸ புராணங்கள், சாத்திரங்கள் பிறப்பால் எந்த வர்ணத்தில் இருந்தாலும் முயற்சியால் எந்த வர்ணத்திற்கும் மாறலாம் என்று அதை அனுமதிக்கின்றன, வாழும் முறையாலேயே வர்ணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன என்று முழங்குகின்றன,  ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைஶ்யர்களுக்கு சமூக, தேசப் பொறுப்புகள் அதிகம்.  சுய வாழ்க்கையிலும், கட்டுப்பாடுகள், கொள்கைகள், ஒழுக்க விதிகள், அவர்களின் சொந்த வாழ்க்கை எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் விதிக்கிறது சாத்திரங்கள் கடுமையான வரைமுறைகளை காலை எழுந்ததிலிருந்து, இரவு படுக்கும் வரை.  இந்த வர்ணத்தவர்கள் தெரிந்திருந்தும் தவறு செய்துவிட்டால் தண்டனையும் அதிகம்.  பஞ்சமரிலிருந்து மேலே ஏறி ப்ராஹ்மணனனாகும் போது ஒவ்வொரு படியிலும் அவனது ஒழுக்கம், அறிவு, கட்டுப்பாடுகள், பொறுப்புகள் அதிகரிக்கும். 

இன்றைய நிலையைப் பார்க்கும் போது மேற்கூறிய வர்ணனை, இலக்கணங்களின் படி இப்போது எல்லாவற்றையும் காசாக்கும், சொந்த சொகுசு வாழ்க்கைக்கு பலியாக்கும் தலைமுறையே வளர்த்து விடப்பட்டிருக்கிறது.  மேலோட்டமாக பார்த்தால் வைஶ்யர்களும், சூத்ரர்களுமே இருக்கிறோம்.   மக்களைக் காக்கும் க்ஷத்ரியர்களும், இறைத்தன்மையை அடையும் வழிக்கு அழைத்துச் செல்லும் ப்ராஹ்மணர்களும் வெகு அரிதாகவே காணப்படுகிறோம்.  இதைத்தவிர நானும் நானே அமைத்த டிகிரி படிப்பை முடித்து விட்டேன் என்று குறுக்கு வழியில் புத்திக் கூர்மையில்லாமல் வாங்கி விட்டு, வேலை ஏதும் இல்லையென்று, போராட்டம், பகுத்தறிவுப் போர்வையில் புரட்சி, கத்தல், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.    பாப்பான், பாப்பாரப்பய, பள்ளன், பறையன் என்பதெல்லாம் ஏசும் வார்த்தைகளாகி விட்டன இன்று,  சூரியனாய் இருப்பவன் இவைகளைப் பொருட்படுத்துவதில்லை, புத்தியால் ஜீவிக்கிறான்.  உணர்ச்சியால் தூண்டப்படுபவன் கத்துகிறான், அடிவாங்கி அடைபட்டு, பின் காலத்தால் திருந்தி பிழைக்கும் வழியைத் தேடுகிறான்.

புதிதாய் நம்மால் எந்த புரட்சியும் செய்ய முடியாது, செய்தாலும் அதன் விளைவுகள் நிலைக்காது,  காலம் மீண்டும் தன்னை சரி செய்து கொண்டிருக்கிறது. 

நாம் இதுவரை சுருக்கமாகப் பார்த்தது வர்ணங்களைப் பற்றியே,  ஆஶ்ரமம் என்பதும் இதனோடு சேர்த்து வர்ணாஶ்ரம கோட்பாடுகள் என்று இன்று ஜீவிகளால் போற்றப்படுகிறது.  ஆஶ்ரமங்கள் ஒவ்வொருவனுக்கும் பொதுவான மாணவன், மணமானவன், குழந்தைகளை விட்டு ஒதுங்கி வாழ்பவன், மனைவியையும் விட்டு விலகி வாழ்பவன் என்று நான்கு படிகள்.  தேவையேற்படும் போது அதைப்பற்றி பதிவோம், விவாதிப்போம்.

Apr 23, 2018

நாகலாபுரம் ட்ரெக்கிங்

நாகலாபுரம் ட்ரெக்கிங்

தேதி: 21 ஏப்ரல் 2018, சனிக்கிழமை

ரூட்: ராமாபுரம் - திருமழிசை - திருவள்ளூர் - பூண்டி - ஊத்துக்கோட்டை - சுருட்டப்பள்ளி - நாகலாபுரம் - ராமகிரி - பிச்சாத்தூர் - 100 கிலோ மீட்டர்




டீம்:
பால்பாண்டி - லீடர்
ஞானசேகர்
ராஜ்மோகன்
பழனி
மாஸ்டர் விசேஷ்
ஸ்ரீநாத்
ஸ்ரீகாந்த்
இளவரசன்
சிவகுமார்
என் பொண்ணும் நானும்

அன்னமிட்ட கை: பால்பாண்டி அம்மா

நாகலாபுரம் - தமிழகத்திலிருந்து திருப்பதி போற வழில ஆந்திரா பார்டர்ல நொழஞ்சு கொஞ்ச நேரத்துல வந்திடும்.  சுருட்டப்பள்ளில பள்ளி கொண்ட சிவன், நாகலாபுரம் ட்ரெக்கிங்னு சொல்றாங்க, ஆனா, அதையும் தாண்டி பிச்சாத்தூர்னு ஒரு ஊர்.  அங்க தான் இருக்கு இந்த மலை, சுனைப்புனல் எல்லாம்.  நாகலாபுரம் க்ருஷ்ணதேவராயர் அம்மா பேர்ல உருவாக்கப்பட்டதுன்னு வரலாறு.

வருஷம் முழுக்க போலாம் இங்க,  ஆனா மழைக்காலத்துல சூப்பரா வழுக்கும் வழி முழுக்க, அட்டைபூச்சி ஆசமா இருக்கும்,  குளிரும், கோடைக்காலத்துல வெயில் மண்டய பொளக்கும்,  நமக்குப் பழக்கப்பட்டது தானே.  தண்ணி இருக்கான்னு கேட்டுட்டுப் போனா நல்லா இருக்கும்.

சென்னை ட்ரெக்கர்ஸ் டீம்ல அவங்க டெஸ்ட்டுல செலக்ட் ஆகி, ரூல்ஸ் ஃபாலோ பண்ணி, டீமோட கைடென்ஸ்ல போகனும், நமக்குத்தான் ஒருத்தன் சொல்லி, அதைக் கேட்டு நடந்து பழக்கம் கிடையாதே,   எங்க டீம் லீடர், பால்பாண்டி இங்கெல்லாம் போய்ட்டு வந்திருக்கார்,  போலாமான்னு கேட்க, 10-20 பேர்ல ஆரம்பிச்சி, கடைசில 11 பேர் போய்ட்டு வந்தோம்.  நான் என் பொண்ண கூட்டிட்டுப் போலாம்னு ரெண்டு வாரமாவே ரூட், க்ளைமேட், ஏற்கனவே போய்ட்டு வந்தவங்க அனுபவங்கள்னு பாத்து வெச்சிருந்தேன்.

பூச்சி/கொசுக்கடி மருந்து,
தேங்காயெண்ணெய்,
பேண்டேஜ்,பேண்டேஜ் துணி,
உலர் பழங்கள், பிஸ்கெட், புளிப்பு மிட்டார்,
மொபைல், கேமரா,
மலையேற்ற ஷூ,
லைஃப் ஜாக்கெட்/ட்யூப்,
தீப்பெட்டி/லைட்டர், சூடம், நூடுல்ஸ் பாக்கெட், பாத்திரம், தட்டு,
ட்ராக் சூட்/கார்கோ பேண்ட்/ஸ்விம் சூட்
தொப்பி, சன் க்ளாஸ்,
ஸ்ட்ரா வெச்ச வாட்டர் பாட்டில்,
துண்டு,
கத்தி,
டார்ச் லைட்,
கம்பாஸ் (திசைமானி)
பெப்பர், சால்ட், லெமன்

எல்லாம் எடுத்துட்டுப் போலாம்னு லிஸ்ட்டும் ரெடி, ஒரு சிலத விட்டுட்டு மிச்சதெல்லாம் வாங்கியாச்சு.  பால், பழனில்லாம் ஏற்கனவே போய்ட்டு வந்திருக்காங்க.  மிச்ச பேர் எல்லாம் புதுசு. ஒரு நாலு பேருக்கு நீச்சல் தெரியாது, ரெண்டு பேர் தெலுகு பாய்ஸ், கெளம்ப ரெண்டு நாளைக்கு முன்னாடி தண்ணியடிச்சுட்டு வாரா வாரம் யாராவது தவறிப்போய்டறாங்கன்னு, ட்ரெக்கிங் தடை பண்ணிட்டாங்கன்னு ந்யூஸ் காம்சாங்க ஃப்ரெண்ட்ஸ், லோக்கல் மக்கள்ட்ட ஃபோன் பண்ணி கேட்டா அது அடிக்கடி நடக்கும், தடையெல்லாம் ஒண்ணும் பண்ணலன்னுட்டாங்க.

வெயில் ஜாஸ்தியா இருக்கு,  காலை 5 மணிக்கு கிளம்பிடலாம்னு ப்ளான்,  6 மணிக்கு தான் கிளம்பினோம் ராமாபுரத்துலேந்து, பழனி கார்ல, பால் கார்ல ரெண்டு டீம்,  சுருட்டப்பள்ளில ஒரு ரோட்டோரக் கடைல மூணு ரூபாய்க்கு மசால் வடை, சாப்டு, டீ குடிச்சு, வழில, தர்ப்பூசணி சாப்டுட்டுப் போனோம்.  ஆந்த்ரால ரோட்டோரம் பனங்கள்ளு விக்கறாங்க, நம்மூர்ல மது ஒழிப்பு, கள்ளச்சாராய சாவைத் தடுக்கறேன்னு, டாஸ்மாக்க தொறந்து வெச்சிருக்காங்க, சாகற வரைக்கும் சொன்னா கேப்பான், கொஞ்ச கொஞ்சமா சாகட்டும்னு,

ஒன்பது மணிக்குப் போய் சேந்தோம் ட்ரெக்கிங் பார்க்கிங் இடத்துக்கு,  மெயின் ரோடுலேந்து மண் ரோடு ஒரு 2-3 கிலோ மீட்டர்.  பால்பாண்டி அம்மா காலை ரெண்டு மணிக்கு எழுந்து பத்து பேருக்கு புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்கா கறி, உருளைக்கிழங்கு கறி, மாங்கா துண்டம், கரண்டி, அலுமினியம் பேக்கிங்னு தடபுடல், ரெண்டு வேளைக்கு சாப்டோம், எங்க வீட்ல கெஸ்ட் வந்திட்டதால 20 இட்லியும், ஒரு டப்பா தயிர் சாதமும் தான் நான் எடுத்துட்டுப் போயிருந்தேன், பழனி பையனுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திருந்தார்.  பார்க்கிங் சார்ஜ்ஜுன்னு 20 ரூபாய் வாங்கறாங்க, உள்ளூர்க்காரங்கன்னு நெனைக்கறேன்.  சாப்டுட்டு, அலுமினியம் கன்டெய்னர்ல மிச்ச சாப்பாட பேக் பண்ணிட்டு, காலி பாத்ரத்தையெல்லாம் கார்லயே வெச்சிட்டு கிளம்பினோம்,

சரியான வெய்யல், ஏரிக்கரைல ஏறி கொஞ்ச தூரம் நடந்து, உள்ள இறங்கினோம்.  மழை, வெள்ளத்தின் போது இந்த டேம்க்கு தண்ணி வந்து ரொம்பும் போல இருக்கு.  வழி நெடுக சைஸ் வாரியா கூழாங்கற்கள், மணல், இன்னும் சூடு ஏறல, ஒன்றை, ரெண்டு மணி நேரம் பாட்டு பாடிட்டு, கேட்டுட்டு, பேசிட்டு முதல் ஓடையை வந்து சேந்தோம்.  முதல் தடவைங்கறதால வழி நெடுக பட்டணத்த பாத்தாப்ல ஃபோட்டோஸ்,  தண்ணி சூப்பரா இருந்துது, குடிச்சிட்டு, பாட்டில்கள்ல ரொப்பிட்டு தாண்டினோம்.  நோ பாட்டில், அன்ஹெல்த்தி ட்ரிங்க்ஸ், ப்ளாஸ்டிக் குப்பைய காட்டுல போடறதில்லன்னு முடிவு பண்ணியிருந்தோம் பகுத்தறிவை யூஸ் பண்ணி,   வெல்லம் தூளா ஒரு கிலோ வாங்கிட்டு போயிருந்தேன். அதோட சுக்குப்பொடியும் ஒண்ணு, ரெண்டு விரல் போட்டு பாட்டில்ல குலுக்கி பானகம் ரெடி,  அடிக்கடி குடிச்சு, தொப்பைல லோடு சேக்காம, ஸ்ட்ரா வெச்ச வாட்டர் பாட்டில்.  கார்கோ பேண்ட்ல ஜெம்ஸ், ஆரஞ்சு, சீரக மிட்டாய்கள், பேரிச்சை, கடலை மிட்டாய், பிஸ்கெட் :)  எப்புடி,

பால் கொண்டு வந்த சாப்பாட்டால இந்த ஸ்னாக்ஸ் எல்லாம் அப்டியே ரிட்டர்ன் ஆய்டுச்சு.  முதல் ஓடைய தாண்டினதும் வெயில் தெரியல, மலை ஆரம்பிச்சுது, பாத்து, பாத்து பத்ரமா நடந்து ரெண்டாவது பனலுக்குப் போய் சேந்தோம்,  அதிக பட்சம் 10 அடி ஆழம் நடுவுல, இறங்கிப் போலாம்.  நல்லா குளிச்சு, மலை மேல ஏறி குதிச்சி ஆட்டம், கொண்டாட்டம்.  பழனி சார் வழக்கம் போல இங்கயே தங்கிட்டாரு.  பையன மட்டும் எங்கள நம்பி அனுப்பிச்சு வெச்சார்.  மூணாவது குளத்துக்கு அங்கிருந்து ஒரு அரை மணி நேரம் ஏறனும், பெண்களுக்கும், குண்டு பாய்ஸ்சுக்கும், நீச்சல் தெரியாதவங்களுக்கும் தேவையில்ல அங்க போறது,  எவன் சொல்றது, யார் கேக்கறது,  கொஞ்சம் கஷ்டம் சில இடங்கள்ல, குனிஞ்சு போகனும், பாறைய புடிச்சிட்டு, கால விளிம்புல வெச்சி ரெண்டு மூணு அடி போகனும் ஒரு எடத்துல..  இந்த இயற்கை நீர் நிலைகளுக்கு வரும்போது இன்னத்துக்கு ஷாம்பு, சோப்பு போட்டு குளிக்கறாங்கன்னு தெரியல,  எல்லாருக்கும் அதுதான் குடி நீரும் கூட,

போய் சேந்தாச்சு மூணாவது குளத்துக்கு,  குறைஞ்சது நாலாள் அடி ஆழம் இருக்கும், கொச கொசன்னு மீன்கள், பணிப்பெண்களாய்,  தெளிந்த , குளிர்ந்த நீர், குட்டி வாட்டர் ஃபால்ஸ், ட்யூப்ப இதுக்குன்னு சேப்பாக் ஸ்டேடியம் கிட்ட ஸ்போர்ட்ஸ் கடைல 400 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன் பொண்ணுக்குன்னு, 20 அடிக்கு தடியா ஒரு நைலான் கயிரும் தயார், மரக்கிளைல கட்டி, ட்யூப்ப ஊதி இன்னொரு முனைல கட்டி பொண்ண அந்த ஏரில இறக்கியாச்சு,    இறங்கிக் குளிக்க முடியாது, தண்ணியடிச்சிட்டு பாட்டில்கள எதுக்கு ஒடச்சு, ஒடச்சுப் போடறானுங்கன்னு தெரியல.  முட்டாப்பசங்க, ஊறிப்போன கால்ல எப்டி ஏறும்.  தீவட்டி பாய்ஸ்,  மலை மேல ஏறி, ஏறி குதிச்சு, நீச்சலடிச்சு, ப்ராணாயாமம் பண்ணிட்டே பத்மாசனம் போட்டு தண்ணில மிதந்து, நீச்சல் தெரியாத ஒருத்தனை உயிர் காத்து, வெயில்ல குளிர் காஞ்சு, ஃபால்ஸுல தலைய தோச்சு, குரங்குள தொரத்தி, நாங்க சாப்டு, பின்னர் அதுக்கும் குடுத்து, எங்கயும், கிழ விழாம, அடி பட்டுக்காம இறங்கி வந்தோம்  மாலை சூரிய அஸ்தமனம் அழகாய் ஏரில, மலைல, மரங்கள்ல,  நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே, அந்த மூணாவது குளத்துக்கிட்ட ஒரு குகை, குரங்குகள், காட்டுக் காய், பழங்கள், இப்படி யாராவது வரும் போது பிச்சையெடுத்து நாட்டு உணவு, தவ வாழ்க்கை, சூப்பரா இருக்கும்.  நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு இறங்கி வந்திட்டேன்.

பால்பாண்டி டீம முந்தி நாங்க வந்த வழிய விட்டு பெரிய பாளையம் ரூட்ல மாறி, வழில தேவையேயில்லாம கூகிள் மேப்புல வர்ற பொண்ணு சொல்றத தேட்டு ரெண்டு முட்டுச்சந்துக்குப் போனது தான் மிச்சம்.  பத்து மணிக்கு ஆபீஸ் கிட்ட அக்ஷயான்னு ஒரு வெஜிடேரியன் ஹோட்டல், டேஸ்ட், க்வாலிட்டி ஓகே, சர்வீஸ், ரேட் ஜாஸ்தி,  ஒவ்வொண்ணத்தையும் மூணு, மூணு தடவ கேட்க வேண்டியிருக்கு.  ஞானசேகர் ஆக்டிவால ஆபீஸ்லேந்து நைட் 12 மணிக்கு வீடு வந்து சேந்தோம்,  எல்லா புகழும் பால் பாண்டிக்கே :)

காட்டுல, நீர் நிலைகளில் குப்பை போடாதீங்க, சோப், ஷாம்பூ போட்டு குளிக்காதீங்க, எல்லா மூலிகைகளும் அந்த தண்ணிலயே இருக்கும், நமக்கு அங்க இருக்கும் போது அது தான் குடி நீர்.   சாராய பாட்டில தயவு செய்து உடைச்சுப் போடாதீங்க.

ஒவ்வொரு அடியும் பாத்து கண்ணு ஓகே சொன்னதும் காலை அழுத்தி வெச்சு நடங்க,  யாரையும் அவசரப்படுத்தாதீங்க, இஷ்டம் இல்லாதவங்கள, நீச்சல் தெரியாதவங்கள கட்டாயப்படுத்தி கூட்டிட்டுப் போகாதீங்க.  எதுக்கும் நீங்க பொறுப்பாக முடியாது.  வேர்களும், மரங்களும், பாறைகளும் தான் புடிச்சு ஏறுவதற்கும், கால் வைக்கறதுக்கும் துணை,  வேர்னு நினைச்சு தூங்கிட்டு இருக்கற பாம்பு, கறையான் அரிச்ச மரங்களை புடிச்சு ஏறாதீங்க :),  அட்டை பூச்சி கடிச்சு, கொஞ்ச நேரம் ரத்தம் உரிஞ்சனுத்க்கப்பறம் தான் நமக்கு எரியும், தெரியும், ஷூ, சாக்ஸ்குள்ளயும் சில அட்டைப்பூச்சிகளால போக முடியும்,  ஒரு குச்சியால அத எடுத்துப் போட்டுட்டு, கால கழுவிட்டு நடங்க, அதுவே சரியாய்டும் நாம வீட்டுக்கு வர்றதுக்குள்ள.

Apr 2, 2018

பங்குனி உத்திரம் காவடியாட்டம்




காவேரி ஒன்னு-ஒன்றை கிலோ மீட்டர் அகலம் இருக்கும் எங்க ஊர்ல.  நான் ஸ்கூல் படிச்சு முடிக்கற வரை வருஷத்துக்கு ஒரு 5-6 மாசம் முழுசா ஓடும்.  மிச்ச மாசம் ரெண்டு கரையை ஒட்டியும் தண்ணி ஓடும்.  எங்கப்பா எங்களை சலிக்காம தோள்கள்ல தூக்கி வெச்சிட்டு சித்திரைத் தேர், வைகுண்ட ஏகாதசியின் போதெல்லாம் காவேரி குறுக்க கூட்டிட்டு போவார்.  எதிர்க்கரை ஸ்ரீரங்கம்.  விழா களை கட்டியிருக்கும்.  ஆயிரங்கால் மண்டபத்துக்கு எதிர்க்க இருக்கற சிற்பங்கள், சுத்து சாமி சன்னிதிகள், தண்ணி பந்து, அம்மம்மா அப்பப்பா பலூன் (ஊதிட்டு விட்டா பலூன்ல சொருகியிருக்கற பீப்பில பான்னு சத்தம் வரும்).  ரெண்டு கரைலயும் ஓடும் தண்ணில குளியல், வெயில் காலப் பொசுக்கும், குளிச்ச தண்ணில துண்ட நனைச்சு கால்ல கட்டிட்டு எதிர்க்கரைக்கு ஓடி வருவோம்.  ஆடி மாசமா இருந்தா காத்துல மணல் உயிர் போறாப்பல அம்பு மாதிரி கால்ல பறந்து குத்தும்.  18-ஆம் பெருக்கு உத்சவத்துக்கு எங்க ஊர் பெருமாள் கோவில்லேந்தும் தெப்பத்தேர் காவேரில போகும்.

தண்ணீரைப் பிழைக்கக்கூடாது என்று ஒரு பழமொழி.  தண்ணி கம்மியா ஓடும் போதெல்லாம் அத எல்லாரும் சேந்து மூச்சா, ......... அலம்பிக்கறது, பவானி, அமராவதி, குடமுருட்டி ஆறுகளோட சாக்கடை, ஆலைக்கழிவுகள்.  திருச்சி சிந்தாமணி, டவுன் பகுதிகளோட சாக்கடைக் கலப்பு  எல்லாம் நடந்து கொண்டிருந்தது.  வருஷங்கள் ஆச்சு.   இப்ப வருஷத்துக்கு ஒன்னு, ரெண்டு மாசம் தான் அதிக பட்சமா காவேரி முழுக்க ஓடுது.  2-3 மாசம் ரெண்டு கரையையும் ஒட்டி ஓடுது.  மிச்ச மாசமெல்லாம் வற்றாமல் மணல் ஓடுது, தண்ணி இருந்தா தண்ணிய எடுப்போம், இல்லாட்டி மண்ண எடுப்போம்.  ஊருக்கெல்லாம் கொடுப்போம்.  எங்க ஊர்ல பெரிய, பெரிய கிணறெல்லாம் 4-5 போட்டு கி.மீ கணக்குல தண்ணிய உறிஞ்சி கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள்.  எங்க ஊருக்கே இப்ப ஆத்து நீரும் இல்ல, நிலத்தடி நீரும் இல்ல,  வருஷங்கள் போராடி காவேரி பைப் கனெக்ஷன் வந்தது தெருவுக்கு.  கூட்டுக்குடிநீர்க் கிணறுகளுக்கு தண்ணி ஓட்டம் இல்லைன்னு காவேரில ரெண்டு கரைலயும் ஓடின தண்ணிய ட்ராக்டர் வெச்சு வாய்க்கால் மாதிரி கிணறுகளுக்குக் கிட்ட கொண்டு வந்தாங்க..  இப்ப எந்த கரைலயும் தண்ணி இல்ல,  ஊற்றும் இல்ல, தடுப்பணை கட்டி தண்ணி தேக்கறாங்க, வந்தா !!

தமிழ்நாட்டுல எல்லா ஆற்றங்கரை ஊர்க்கதையும் இதேவாகத்தான் இருக்கும், அதனால் ஊர்ப்பேர் சிறப்பா சொல்லல :(  வினை விதைத்தவன் வினையும், தினை விதைத்தவன் தினையும் அறுப்பான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு பல பழமொழிகள் இயற்கையைப் போற்றுத் துதித்துப் பாதுகாக்காமல், சீரழித்து அழிந்து கொண்டிருக்கும் எங்கள் வரலாறுதான் இது.

28 மார்ச் 2018, புதன் கிழமை இரவு 11.20 க்கு வரவேண்டிய RPN ஏசி செமி ஸ்லீப்பர் பஸ், ஒரு மணி நேரம் தாமதமாக க்ரோம்பேட்டைக்கு வந்தது.  காலை திருச்சில இறங்கி, எங்க ஊர்க் காவிரில ஒரு குளியல் போட்டு,  வீட்டுல பரம்பரையா பூஜை பண்ணிட்டு வர்ற சாமிகளுக்கு அபிஷேகம் பண்ண தீர்த்தம் குடத்துல எடுத்திட்டு வந்து சூப்பர் பூஜை.  ஒரு சில வருஷங்கள் ஆச்சு நான் பூஜை பண்ணி.

நண்பர் கும்பகோணம் ஸ்ரீ சிவராம சிவாச்சாரியார் சமீபத்துல முக்திநாத், கைலாஷ், மானசரோவர் தீர்த்த யாத்ரை, க்ஷேத்ராடனம் பெற்றோர்களுடன் சென்று, ஒவ்வொரு ஸ்தலத்திலும் அந்த குளிரில் குளித்து ஆசாரக்குறைவில்லாமல் சிவபூஜை செய்து, எனக்கும் தீர்த்தம், ருத்ராக்ஷ மாலை கொண்டு வந்து கொடுத்தார்.  பாக்யம் செய்தவர், போகாமலேயே அந்தக் கதையெல்லாம் கேட்க, எழுத, ப்ரசாதம் கிடைக்க நானும் பாக்யம் செய்திருக்கிறேன்.  எங்க ஊர் தர்மசம்வர்த்தினியம்பா சமேத கம்பரசன்பேட்டை கைலாசநாதருக்கு அன்றைய ப்ரதோஷ அபிஷேகத்துக்கு இந்த கைலாஶ், மானசரோவர் தீர்த்தம் அமைந்தது.  கும்பாபிஷேகம் முடிந்து இன்னும் ஒரு வருஷம் ஆகவில்லை.  நானும் ருத்ரம், சமகம் க்ரமபாடம் சொன்னேன் அன்று பூஜையின் போது.  ப்ரதோஷ புறப்பாடும் உண்டு, ரிஷப வாகனத்தில் ஸ்வாமியும், அம்பாளும் எழுந்தருள நானும் இந்த முறை  ஒரு வாரைப் பிடித்தேன்.  அதிக அளவில்  2-3 மணி நேரங்களுக்கு பக்தர் கூட்டம், தேவார, திருவாசகப் பாடல்களோடு எண் திசைகளிலும் தீபாராதனைகளோடு சிறப்புப் புறப்பாடு,  பெரியார் மண்ணல்லவா.


30 மார்ச் 2018, வெள்ளிக்கிழமை, பங்குனி உத்திர நன்னாள், மாதமும் 12, நக்ஷத்ரமும் 12ஆவது ! ! பெருமாள் கோவில்களில் சேத்தி என்ற உற்சவம்.  ஸ்ரீரங்கம் தாயார் அவங்க எல்லை தாண்டி வரமாட்டார்.  பெருமாள் ரெங்கராஜா அவங்க கிட்ட போய், சேர்ந்திருந்து தரிசனம்.  சுப்ரமண்ய, சிவாலயங்களில் கல்யாண உற்சவம்.  எங்க பாட்டி பரம்பரையில் வந்த காவடிய பழனிக்குப் பாதயாத்ரையாகக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்களாம்.  எங்க தகுதியும்,  ஊர் இருக்கற நெலைமையும் தெரிஞ்சு முந்தின தலைமுறைகளிலேயே அது உள்ளூர் முருகன் சன்னதியில் முடியத் தொடங்கியிருந்தது.  நாம சினிமால பாக்கற காவடி இல்லை இது.  ரெண்டு பக்கத்துலையும் மரத்தால் பிள்ளையார், தண்டபாணி, இடும்பன், வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கும்.   இந்த தடவை நீயே எடு, நான் ஆத்து பூஜை பண்றேன்னு தம்பி பரத் அனுமதி.  காவேரியில் காவடிக்குக் காலை 6 மணியிலிருந்து ஒன்பது மணி வரை எல்லா அபிஷேகங்களும் குடும்பத்தோடு செய்து,  காவேரி நீர் கலச அபிஷேகத்தில் முடித்து, மணிகள் ஒலிக்கும் அந்தக் காவடியில் விக்ரஹங்களுக்கு வீட்டில் தயாரித்த விபூதி, சந்தன, குங்குமம் சார்த்தி, மயில்தோகைகள், பால் சொம்புகள், வேல் கட்டி, எடுத்து செல்பவருக்கு வெயில் கொளுத்தாமல் இருக்க மேனா என்ற ஒரு பட்டுத்துணியையும் கட்டி, சஷ்டி கவசம், திருப்புகழ், அரோஹரா கோஷங்கள் முழங்க, தீர்த்தக் குடங்களோடு கிளம்பும் எங்கள் காவடி.


வடக்குத்தெரு பிள்ளையார்க் கோவிலில் அண்ணாவுக்குப் பூஜை செய்து, சூரத்தேங்காய் உடைத்து, அக்ரஹாரத்தின் மேற்குத் தொடக்கத்தில் மாமனைக் கும்பிட்டு அங்கொரு தேங்காய் தெறிக்க, வழியில் விபூதி ப்ரசாதம் கொடுத்துக் கொண்டு, ஆங்காங்கே கொதிக்கும் கால்களுக்கு இதமாய் பக்தர்கள் குடம் குடமாய் நீரால் நனைக்க, வேல் வேல் வெற்றி வேல், வீர வேல், ஞான வேல், சக்தி வேல் என்று கோஷித்துக் கொண்டு சிவன் கோவில் முருகன் சன்னிதியில் உள்ளூர் சிவாச்சாரியார் பேபி மாமா குடும்பத்தார் பூஜித்து, இறக்கி வைப்பர்.  இந்த முறை பேபி மாமா, சதீஷ் அண்ணா, செந்தில், உதவிக்கு விக்னேஷ் என்று அவங்க டீம்.  முதல் நாளே கோவிலை சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு, வாழைமரம், தோரணங்கள் கட்டி, பூஜை சாமான்கள் அவர்களிடம் சேர்த்து விடுவோம்.  நாங்க காவேரிலேந்து வருவதற்குள் அவர்கள் தீர்த்தக் குடங்களில் முருகன், வள்ளி, தேவானையை வருவித்து இருப்பார்கள்.  மற்ற சன்னிதிகள் நித்யப்படி அபிஷேக அலங்காரங்களும் நடந்திருக்கும்.   10 மணிக்குக் கோவிலில் மஹான்யாஸ, ருத்ர, சமக, சூக்தங்கள் என்று வேத மந்த்ரங்கள், திருப்புகழ், பக்திப் பாடல்கள், கோஷங்களோடு அபிஷேகங்கள் தொடங்கி, வள்ளி, தேவானையோடு அலங்காரம், அஷ்டோத்திர, ஸஹஸ்ர நாம அர்ச்சனைகள், ப்ரசாத வினியோகம் முடிந்து வீட்டுக்குக் காவடியோடு திரும்பும் போது மணி மதியம் இரண்டாவது ஆகியிருக்கும்.

இந்த நாலு- ஆறு மணி நேரத்தில் வீட்டு பூஜையும் முடிந்திருக்கும்,  வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து, சூரத்தேங்காய் உடைத்து, காவடியை ஸ்வாமி ரூமில் அதன் பீடத்தில் இறக்கி, அர்ச்சித்து, நமஸ்கரித்து, பின் பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெற்று, சுற்றமும், நட்பும் சூழ இல்லத்தரசிகளின் கைவண்ணத்தில் முன்னாள் திட்டமிட்டு, இன்னாள் காலையிலிருந்து தயாரான சூடான, சுவையான, வகையான அன்லிமிட்டெட் சுப்ரமண்ய ஸ்வாமி கல்யான சமையல் சாதம் பரிமாறி, உள்ளூர் சிவ-விஷ்ணு கோவில் பட்டர்கள், நண்பர்கள், வெளி மனிதர்கள் விடைபெற்றதும், வீட்டு மக்கள், குழந்தைகள், பெரியோரோடு பந்தியில் அமர்ந்து பரிமாறும் பெண்டுகளை மிரட்ட, அவர்கள் மிரள, கடைசி பந்தியில் நாம சாப்ட ஒக்காந்து அதிகமா மிஞ்சினத அள்ளிப்போட்டு, குறைவா இருக்கறத காலியாக்கி, தீர்ந்து போனவைகளுக்கு சத்தம் போட்டு, சாப்பிடற வகையறாக்களில் நொள்ள, நொட்ட சொல்லினு, கால நீட்டி சாப்டும் சொகம் இருக்கே, அடடடடடடா.  சாப்ட தொப்ப மூட்டைய தூக்க முடியாம தூக்கி, கை, கால், வாய் சுத்தம் செய்து கட்டைய நீட்ட, அவங்க பாத்ரங்கள தேய்க்க ஒழிச்சி போட்டு, உள்ள வரும்போது 4 மணியாச்சே டீ, காபி ஏதாவது குடுங்கோம்மான்னு நாங்க, கேட்க, பாக்க, அவங்க கிட்டேந்து ஒரு அன்பும், பண்பும் அளவில்லாம பொங்க கொதிக்க, கொதிக்க அந்த பாழாப் போனா காபிய கொண்டாந்து குடுப்பாங்க பாருங்க.  சான்ஸே இல்ல.

முதல் நாள் வந்தா ப்ளான், ப்ரிபரேஷன் வொர்க்குன்னு எதாவது இருக்கும்.  மறுநாள் இருந்தா க்ளீனிங் வொர்க், பத்தாக்குறை, குறை தீர்ப்பு பட்ஜெட் மீட்டிங் இருக்கும்னு மேக்சிமம் யாரும் இருக்க ட்ரை பண்றதில்ல.  இருக்கவே இருக்கு அவர் ஐடி கம்பெனி, டெய்லி ராத்திரி லேட்டா தான் வரார்.  ஒழுங்கா சாப்பிடறது, தூங்கறது கூட இல்ல, லீவே குடுக்க மாட்டேங்கறான்,  இவனுக்கு ஸ்கூல் ப்ரமோஷன் மீட்டிங், அவளுக்கு புக்ஸ் வாங்க வரச்சொல்லி இருக்கான்னு எவ்வளவோ இருக்கு காரணங்கள் நமக்கு.  இந்த பங்குனி உத்தரம் வேற ஒவ்வொரு வருஷமும் அன்ப்ளான்டா வந்துடறது.   ஊருக்கு இளைத்தவன் புள்ளையார் கோவில் ஆண்டி,   எங்களுக்கு இளைச்சவன் உள்ளூர்ல இருக்கறவங்க.  இப்ப கொஞ்சம் பரவாயில்ல, வீட்டு வேலைக்கு ஆள், சாமான் வாங்கி காவேரி, வீடு, கோவில் பூஜைக்குப் பிரிச்சு வெச்சா போறும்,   பூ, சாப்பாடெல்லாம் வீட்டுக்கே வந்துடும்.

இதுக்கு முந்தின இல்ல பிந்தின நாள்ல எந்த நாள் வசதியோ, அந்த நாள்ல மொத்தக் குடும்பமும் குல தெய்வக் கோவிலுக்குப் போய், பூஜை, வழிபாடுன்னு ஏற்பாடு.  அதுக்கு ஒரு வண்டி, பாட்டு, கும்மாளம்,  க்ராமக்கோவில்ல போயி டண்டக்கு டண்டான்னு இறங்கினதும் பூசாரி பூஜைகள் செய்ய, இந்த, மூத்த தலைமுறை பெண்கள் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்ய, நாங்க ஐயர் கடைல ஆர்டர் பண்ணி எடுத்துனு போன டிஃபன், காபிய காலி பண்ணி உதவி பண்ணன்னு எல்லாமும் ரொம்ப பிசி.  காலை ஏழு மணிக்குக் கிளம்பி ரெண்டு கோவில்களில் பூஜை, தரிசனம் முடிந்து,  இப்ப இருக்கற ஊர் எல்லைக்கோவில்லயும் தரிசனம் முடிச்சு வீட்டுக்கு ஒரு 12-1 மணிக்கு வந்தா, பார்றா, வீட்லயும் லஞ்ச் வந்திருக்கு.  திருப்பி சலிக்க, சலிக்க சாப்டு, தூங்கு, காபி குடி, வூட்டு வம்பு, ஊர் வம்பு, இந்திய வம்பு, இன்டர்னேஷனல் வம்பு, ப்ரச்னைகளுக்குத் தீர்வுகள், தீர்ப்புகள்.  இங்க வந்த ஒன்னு ரெண்டு நாள்லயும் தனிக்குடித்தன டீம்கள், ஹைஜீனிக் சோப்புகள், அலங்கார சாமான்கள், நாலு துணிய, சார்ஜர மறந்துட்டு, ரெண்டு நாள் கடின உழைப்புக்கு ஈடா, மறுநாள் ஆஃபீஸ்க்கு தோதா தத்கல்ல புக் பண்ணின, இல்ல ஸ்லீப்பர் ஏசி பஸ்ல ஏறி, விடிய விடிய ஊர் வந்திருக்குமோ நிம்மதியா விழித்திருந்து,  வேலை பாக்கற ஊருக்கு வந்து, மிஸ் பண்ணிட்டு வந்த பொருள்களுக்கு ஊருக்கு ஃபோன் பண்ணி, அப்படியே பத்ரமா வந்து சேந்துட்டோம்னும் சொல்லி, தூங்கி, எழுந்து, குளிச்சு ஆஃபீஸ்க்கு வந்தாச்சு,  ஆசம், ஆசம், சாப்பாட்டு டப்பாவ வீட்லயோ, எங்கயோ மறந்துட்டு வந்தாச்சு.

Mar 26, 2018

திருவிசைநல்லூர் ஐயாவாள்

ரொம்ப டயர்டு, கீழ விழுந்து கால் கட்டு பிரிச்சு, இன்னும் ஆனா கால் சரியாகல. வீட்டிலயும் தொடர் வேலைப் பளுவால் வொய்ஃபும் செம டயர்டு.  எல்லா சனிக்கிழமையும் ஸ்கூல் வெச்சு பொண்ணும் டயர்டு.  வீட்டுல எல்லாரையும் அலர்ட்டாவே வெச்சிருந்து 3 வயசுப் பையனும் டயர்டு.  ரெண்டு நாள்ல கும்பகோணம் கோவிலெல்லாம் சுத்தி முடிக்க முடியாது.  ஆனா ஏற்கனவே 2-3 தடவ நெறையா கவர் பண்ணியாச்சு கார் டூர்கள்ல.  கெளம்பியாச்சு YBM ஸ்லீப்பர் ஏசி பஸ்ல.

16மார்ச், 2018, வெள்ளிக்கிழமை.  பொதுவா எல்லா ப்ரைவேட் பஸ்ஸுமே எல்லா ஸ்டாப்லயும் லேட்டாதான் வரும்.  ஆனா பாருங்க, இந்த பஸ்ஸு, போகும் போதும் சரி, வரும் போதும் சரி.  கரிக்டா டயத்துக்கு வந்துடுச்சி.  குட் பாய்ஸ்.  சும்மாவே வெள்ளிக்கிழமை சென்னைலேந்து வெளில போறதுக்கும், ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வரவும் கண்டபடி ரேட் போடுவாங்க ப்ரைவேட் பஸ்ல.  இப்ப கவர்மெண்ட் பஸ்ஸும் ரேட்  ஏத்திட்டாங்கள்ல,  வீக் எண்டு மட்டும் ஓட்டிட்டிருந்த ட்ராவல்ஸ் எல்லாம் இப்ப எல்லா நாளும் ஓட்றாங்க.   ஒரு குட்டி வாட்டர் பாட்டில், அடையார் ஆனந்த பவன் 5ரூபா ஸ்னாக்ஸ் பாக்கெட், பிஸ்கெட் குடுத்தாங்க. 

திருக்கருகாவூர், திருவலஞ்சுழி, கும்பேஸ்வரர், திருவிசைநல்லூர்,  கோவிந்தபுரம் மொத்தமே இவ்ளோதான் சனி, ஞாயிறு ரெண்டு நாள்ல போனோம். டவுன் பஸ்ல.  மிச்ச நேரம்லாம் ரெஸ்ட்.  திருப்பி ஞாயிற்றுக்கிழமை நைட் பஸ் ஏறி, திங்கள் கிழமை ஆபீஸ்க்கு வந்தாச்சு.

திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை சமேத மாதவி வனேஶ்வரர் (கருக்காத்தவள் உடனுறை முல்லை வன நாதர்).  ஒரு ரிஷி பத்னியின் கர்ப்பத்தை சாபத்திலிருந்து காத்த நாயகியாதலால் இன்றும் கர்ப்பக்கோளாறுகளிலிருந்து காக்க வேண்டி கண் கண்ட தெய்வமாய் இங்கு வந்து பலர் வேண்டி, குழந்தைப் பேறு பெறுகின்றனர்.  பாடல் பெற்ற ஸ்தலம்.  சிவபெருமானாரின் பஞ்ச வன தலங்களில் ஒன்று.

1.முல்லை வனம் - திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -*அவளிவள் நல்லூர் 3.வன்னிவனம் - அரதைபெரும்பாழி
4.பூளை வனம் - திருஇரும்பூளை
5.வில்வ வனம் - திருக்கொள்ளம்புதூர்
*அவளிவணல்லூர்

திருவலஞ்சுழி வெள்ளைப்பிள்ளையார் குட்டியூண்டா இருக்கார். அவர் இருக்கற சன்னிதியோட ஜன்னல்கள் சிற்ப வேலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.  பாடல் பெற்ற ஸ்தலம்.  ப்ருஹன்னாயகி ஸமேத கபர்தீஶ்வரர்.  12-12.30 க்குக் கோவிலெல்லாம் பூட்டிடறாங்க.

சாயந்தரம் கும்பேஸ்வரர் தர்ஶனம் முடிஞ்சு கடை வீதி சுத்தினோம், விண்டோ ஷாப்பிங்.  மரப்பாச்சி, மர பொம்மைகள், இரும்பு பாத்திரங்கள், நாழி, தோசைக்கல்லு, பல்லாங்குழின்னு எல்லாம் இருந்துது.  ஒரு சுக்கும் வாங்கல நாங்க.

ஞாயிற்றுக்கிழமை காலம்பற திருவிசைநல்லூர் ஐயாவாள் வீட்டுக்குப் போய் தரிசனம் செய்தோம்.   அவர் பெயர் ஸ்ரீதர வெங்கடேச தீக்ஷிதர்.  பகவந்நாம போதேந்த்ராள், நெரூர் சதாசிவ ப்ரும்மேந்த்ராள் எல்லாம் சம காலத்தவர்கள் போல.  இந்த ஐயாவாள் சதா ஈஶ்வர த்யானத்துலேயே இருக்கறவர்.  யாரையும், எதிலயும் பரமேஶ்வரனைப் பாக்கறவர்.  இவர் மூதாதையர்களுக்காக ச்ராத்தம் (திதி) பண்ற நாள். ப்ராஹ்மணர்களில் பித்ருக்களை த்யானம் செய்து அவர்கள் உணவருந்தி சென்ற பின்பே நாம் அன்று சாப்பிட வேண்டும்.  இவர் அன்னைக்கு அந்த ப்ராஹ்மணர்களுக்கு ஆசாரமாக சமைத்த உணவை வாசலில் வந்த தாழ்ந்த ஜாதிக்காரனுக்கு பரிமாறி, அவனை த்ருப்தி செய்து, சந்தோஷப்படுகிறார்.  வந்த ப்ராஹ்மணர்களும், ஊர்க்காரர்களும் உடனே கோபித்துக் கொண்டு தீட்டாகி விட்ட அவர் வீட்டில் உணவருந்த மறுத்து விடுகின்றனர்.  அவர் எவ்வளவு வேண்டியும் பயனில்லை.   கடைசியில் கங்கையில் நீராடி வந்தாலே இந்த பாபம் கழியும், அதுவே ப்ராயஶ்சித்தம்.  அதன் பின்பே நாங்கள் உங்கள் இல்லத்திற்கு வருவோம் என்கின்றனர்.  இவர் இருப்பது கும்பகோணம் திருவிசைநல்லூர் காவிரிக்கரையில்,  பித்ரு கார்யங்களுக்கு அந்த நாள் (திதி) மிகவும் முக்யம்.  ஒரு தடவை பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய திதியைத் தவற விட்டால் அவ்வளவு பாபம் என்கின்றன ஶாஸ்த்திரங்கள்.  ஏற்கனவே லேட்டு,  காசிக்குப் போய் கங்கைல குளிச்சிட்டுத் திரும்பி வந்து காலம் தவறாம ஶ்ராத்தம் பண்ண இனி வழியேயில்ல.  பார்த்தார்.  ஸ்வாமி மேல பாரத்த போட்டுட்டு, கங்கா தேவிய ப்ரார்த்தனை செய்து ஒரு அஷ்டகம் (எட்டு ஶ்லோகங்கள்),  கிணத்து மேல பலன்.  ஆமா,  அவர் வீட்டு கொல்லைப்பக்கத்துல இருந்த கிணத்துலேந்து கங்கை ப்ரவாகமா பொங்கி, வீதியெல்லாம் ஓட ஆரம்பிச்சுட்டா.   எல்லாருக்கும் இவரோட பக்தியோட ஶ்ரத்தையும், பகவானுக்கும் இவருக்கும் இடைப்பட்ட தொலைவும் புரிஞ்சுது.  இன்னிக்கும் அந்த கிணத்துல  நிறையா பேர் போய் அந்த தீர்த்தத்த தெளிச்சிண்டு வரா.   அமைதியான க்ராமம், வீடு.

பாடல் பெற்ற ஸ்தலம்.  சௌந்தர நாயகி ஸமேத யோக நந்தீஶ்வரர்.   சூர்யனோட நிழலை வைத்து இந்தக் கோவில் ப்ராகார சுவற்றில் ஒரு கடிகாரம் அமைத்திருக்கிறார்கள்.  காலை ஆறு முதல் மாலை ஆறு வரை காண்பிக்க.

கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்த்ராள் அதிஷ்டானம்:  இந்த பகவந்நாம போதேந்த்ராள்  காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தின் ஆசார்ய பரம்பரையில் வந்தவா.  தினமும் லக்ஷக்கணக்கா ராம நாம ஜபம் பண்ணினவா.  இவாளோட ப்ருந்தாவனம் யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி காலத்தால் மறைந்திருந்தது இந்த காவிரிக்கரையில்.  பஜனை சம்ப்ரதாயத்துல மும்மூர்த்திகள்ல ஒருத்தரா போற்றப்படும் மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் இந்த இடத்தைக் கால் பட்டுடாம கண்டு பிடிக்க, கால்களைக் கட்டிக்கொண்டு ராம, ராமான்னு சொல்லிண்டு அங்க ப்ரதக்ஷிணம் பண்ணினா. ஒரு எடத்துல திரும்பி ராம, ராமன்னு அவருக்குப் பதில் கிடைச்சுது.  அந்த இடம்தான் நாம இன்னிக்குத் தரிசனம் செய்த அதிஷ்டானம்.

Mar 9, 2018

பெண்கள் பாதுகாப்பு ?

சென்னை - மீண்டும் ஒரு கல்லூரிப் பெண் கழுத்தறுத்துக் கொலை

பெண்கள் குழந்தையாயிருக்கும் போது தகப்பன் பாதுகாப்பிலும், யுவதி கணவனின் பாதுகாப்பிலும், முதுமையில் மகனின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டியவர்கள், அவர்கள் சுதந்திரமாக விட்டு விடாதீர்கள் - மனு ஸ்ம்ருதி

இந்த வாக்கியம் இந்த  திருநாட்டில்  பக்கிகளால் நன்கு, சுயநலத்துடன் பரப்பி விடப்பட்டிருக்கிறது.  பெண்களும் வெளியே வந்து யூனியனாக சுதந்திரம், சுதந்திரம் என்று ஆரம்பித்து விட்டார்கள்.

செல்வந்தனுக்கு பத்து ரூபாய் பிக்பாக்கெட் திருடனிடம் பறி கொடுத்தால் கவலையில்லை.  உங்கள் விஷயமும் அப்படித்தான் என்றால், குஷ்புவின் கருத்துப்படி வாழ்பவர்கள் என்றால் சுதந்திரமாக இருக்கலாம், நாய், பூனைகளைக் கூட பாதுகாப்பாக பார்த்து, பார்த்து வளர்க்கிறார்கள்.  பெண் பிள்ளைப் பெற்று, இந்த கதி நேர்ந்தால், அல்லது இது போன்ற செய்திகளைக் கேட்கும் தாய்மையிலிருந்தால் இதன் விபரீதம் புரியும்.    நமக்கு நன்மை வேண்டுபவர்கள் சொல்வது சில சமயம் வருத்தமாகவும், இன்னும் வீம்பு கொள்ளச்செய்வதும் இயல்பே.   

திஹார் ஜயில்ல இருக்கறவன் ஸ்வீட் பாக்ஸ் பத்ரமா இருக்கனும்னா வீட்ல வெச்சிக்கோங்க, தெருவுல கொண்டு வந்து வெச்சா நாயும் நக்கி விட்டுப் போகும்னு திமிரா பேசற காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

இந்த சமூகம் இலக்கிய, காவியக் காதல், ஆன்மீக பாவ, புண்ணிய பயம், ஒழுக்கப் பாடங்களிலிருந்து வெளியேறி தலைமுறைகள் ஆகி விட்டன.     வீட்ல ஒருத்தர் பம்பரமா இருக்கனும், இன்னொருத்தர் அத சுத்தி விடும் கயிறா இருக்கனும், குடும்பம் உருப்படும்.

தற்போதைய செய்தியின் படி, காவல் துறையிடம் ஏற்கனவே கொடுத்த புகாரில் எச்சரித்து அனுப்பப்பட்டவன் இவன், தேடி வந்து பழி தீர்த்திருக்கிறான்.   நீ கராத்தே தெரிஞ்சிருந்து, துப்பாக்கி, கத்தி, , மிளகாய்ப்பொடியெல்லாம் வெச்சினு போக இதென்ன சண்டைக்குப் போறோமா, நம்ம தெருவுல நடக்கறோமான்னே தெரியல.  குழந்தை, கிழவியெல்லாம் கற்பழிக்கப்படுகிறார்கள்.  கடுமையான தண்டனைகள் கண்ணுக்கெட்டின தூரம் வரை இல்லை.  மிஞ்சிப் போனா ஜாதித் தலைவர்கள், பதவி, அரசியல், பணக்காரப் பின்னனி, மனித உரிமைக் கமிஷன்,  ஊர் பார்க்க வெளிச்சத்துல நடந்த ஒரு அநியாயத்துக்கு வருஷக் கணக்கில் கோர்ட் அலைச்சல்.  ஆறுதலும், 5-10 லட்சம் காசும் கிடைக்கலாம் லக்கிருந்தா.

படிச்சு, ஓரளவு சம்பளம், ஆனால் கெட்ட பழக்கங்கள் ஏதுமில்லாதவன், குடும்பத்திற்குத் தெரிந்தவன், சொந்தம் இதையெல்லாம் தள்ளி விட்டு வீடு இருக்கா, டிபெண்டென்ஸ் யாருமில்லையா, பேரெண்ட்ஸ் வேலைக்குப் போறாங்களா, விசா இருக்கா, எனக்குத் தெரிஞ்சு குழந்தையைத் தவிர மற்ற எல்லாம் இருக்கான்னு பார்த்து பெண் கொடுக்க ஆரம்பித்து விட்டோம்.   லோன்ல டிகிரி படிச்சு, செட்லாறேன், செட்டில் ஆறேன் சொல்லி இப்படி ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கறதே 30-40 வயசுல தான் இப்பல்லாம்.  கொஞ்சம் பேருக்கு டப்பா குழந்தை,  அதிகம் பேருக்கு நண்டு மாதிரி அம்மா தொப்பையைக் கிழிச்சு குழந்தை, மீதி பேருக்கு நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை.  கண்ணுக்கெட்டாத சந்த்ரன், இந்த்ரன் கிட்ட போறதுக்கெல்லாம் ராக்கெட் வந்தாச்சு, கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் குழந்தை வெளியே வர வழியில்லை.

பல தாரத் தலைவர், லிவ்விங் டுகெதெர், ஒரு மேல் ஜாதியாம், ஒரு கீழ் ஜாதியாம் கலப்புத் திருமணம் - இதெல்லாம் தான் இப்ப ட்ரெண்டு, ரோல் மாடல்.

அளவு தெரியாம நம்மூர்ல பாத்துப் பழக்கப்பட்ட ஆடைகள் அணிந்த காலம் போய், சைஸ் தெரியறா மாதிரி ட்ரெஸ், செத்த வீடு மாதிரி தலை விரி கோலம், கைலேந்து முட்டிக்கை வரை க்ளவுஸ் கறுத்துடக்கூடாது, மேனி பாதுகாப்புன்னு,  ஆனா கையில்லாத சட்டை, வேலைக்கு, படிப்புக்குன்னு வெளியூர்ல ஹாஸ்டல் வாசம், ஒரு கட்டுப்பாடும் இல்லாத சினிமாக்கள், செல்ஃபோன் வீடியோக்கள், லேட் நைட் ஷிஃப்ட்டுகள், பேலன்ஸ் பண்ணி ஓட்ட முடியாத வண்டில ஊட்டச்சத்து மிக்க உடல் வாகு, , ஆர்வத்தைத் தூண்டும் புதுப் பழக்கங்கள்.

பெண்கள் எங்கு கொண்டாடப்படுகிறாளோ அங்கு தேவதைகள் சந்தோஷிக்கிறார்கள் - மனு ஸ்ம்ருதி, 
எப்போது பெண் நகைகள் அணிந்து இரவில் தனியாக செல்கிறாளோ அதுவே உண்மையான சுதந்திரம் - காந்தி.  ஆனா இதெல்லாம் நடக்கறதில்ல இங்க.

சேத்துல இருந்து பன்றிக் கூட்டம் வந்தா, யானையும் ஒதுங்கித் தான் போகுது,  இதையெல்லாம் தாண்டி நீ உயரத்துல இருந்தா தான் வீட்டுக்கும், நாட்டுக்கும் சாதனை.  தீதும் நன்றும் பிறர் தர வாரா, 

Feb 28, 2018

ஜகத்குருவுடன் சில காலம்

ஜகத்குருவுடன் சில காலம்

- அவருக்குப் பணிவிடை செய்வதற்காக சிலர்.
- அவருடன் இருப்பதையே பாக்யமாகக் கருதி இருந்தவர் சிலர்.
- அவரிட்ட கட்டளைகளை பரதனைப் போல நடத்திக் கொண்டிருப்பவர் பலர்.
- பெரும் ப்ரச்னைகளாக அனுபவஸ்தர்களும், பதவியிலிருப்போரும் நினைத்துக் கொண்டிருப்பவைகளுக்கு, நிமிஷங்களல்ல, கேட்ட மாத்ரத்திலேயே நொடிகளில் அனாயாசமாக அவர் கூறும் தீர்வுகளை ரசித்து எப்போதும் ப்ரமித்துக் கொண்டிருப்பவர் சிலர்.

- குழந்தைகளோடு குழந்தையாகவும்
- நிர்வாகஸ்தர்களோடு தலைவராகவும்
- மூடர்களுக்குக் கருணாமூர்த்தியாகவும்
- பல்துறை வித்தகர்களுக்கு ஆச்சர்ய ரூபமாகவும்
- வேதாந்திகளுக்கும், அவர்கள் கூறும் சிக்கலான வேதாந்த தத்வங்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு எளிய உதாரணங்களோடு அவைகளை சுருக்கமாக விளக்கி விடும் ஜகத்குருவாகவும்
- சர்வ மத சித்தாந்திகளுக்கும் உதார புருஷராகவும்,
- சமூக சேவகர்களுக்கெல்லாம் கலங்கரை விளக்காகவும்,
- கர்ம சன்யாசிகளுக்கெல்லாம் முன்னோடியாகவும்
- வேத பாடசாலைகள், பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், முதியோர் இல்லங்கள், ஊனமுற்றோர் மற்றும் நலிந்தோர், பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம், மறுவாழ்வு, மருத்துவமனைகள் என எண்ணிலடங்கா திசைகளில் சேவைகள் செய்பவர்களுக்குக் காரண கர்த்தாவாகவும்,
- பல பாஷைகளில் நிபுணராகவும்,
- எல்லோராலும் எளிதில் அணுகக்கூடிய  மடாதிபதியாகவும்,
- வேண்டி அழுது தொழுவோருக்கு தன்வந்த்ரியாகவும்,
- சமூக சீர்திருத்தவாதிகளுக்கு உறுதுணையாகவும்  இருந்தவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.

பாரம்பரிய மடத்தின் வழித்தோன்றலாக முழு பாரதத்தையும் தன் குருவோடு காலடியாக சென்று அலங்கரித்தது, ஆதி சங்கரர் நினைவுக் கூடங்கள், வேத, சாஸ்த்ர, சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கிய பரிபாலனம்,  கடுங்குளிர், மழை, வெயில் காலங்களைப் பொருட்படுத்தாத ஓய்வறியாத உழைப்பு.

இதெயெல்லாம் இவரோட பதவிக்கும், சன்யாஸ ஆஸ்ரம தர்மத்துக்கும் செஞ்சிருக்க வேண்டியதே இல்ல.  கேக்கறதுக்கும் யாருமில்ல.  பாரதத்துல க்ருஷ்ணன், "நான் செய்ற எந்த நித்ய கர்மாவாலயும்  எனக்கு ஒன்னும் ஆகப்போறதில்ல.  ஆனா க்ருஷ்ணனே கடை பிடிக்கலையேன்னு பேச்சு வந்துடக்கூடாது" ன்னு சிரிப்பானாம்.  இவர் அவன் தான்னு சொல்லுவேன்.  மஹா பெரியவாங்க்ற ஞான ஸூர்யனோட எல்லா கனவுகளையும் எல்லைகளையும், தாக்குதல்களையும் அசகாயமாக எளிதில் தாண்டி, முடிச்சு வெச்ச வைராக்யம் கொண்ட பெரும் கர்ம யோகி.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் இப்படி ஒரு குண வரிசையைக் கூறி இப்படி யாராவது இருந்திருக்கிறார்களா என்று வால்மீகி முனிவர் கேட்டதற்கு, "இவை யாவும் ஒரே மனிதனிடத்தில் காண்பது மிகவும் அரிது.  ஆனாலும் அப்படி ஒருவன் இப்போதே அயோத்தியில் தசரதச் சக்ரவர்த்தித் திருமகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்" என்று நாரதர் பதில் கூறுவார்.

ஸ்ரீமத் வ்யாஸ பாரதத்திலும் "நல்லவைகளைக் காக்கவும், தீயவைகளை அழிக்கவும் நான் அவ்வப்போது அவதரிக்கிறேன்" என்று க்ருஷ்ணன் வாக்குறுதி கொடுத்திருக்கிறான்.

என்னைப் பொறுத்தவரை அப்படி ஒரு அவதாரம் தான் இந்த இருள் நீக்கியும்.

என் பணிப்பயணம் இவர் காலடியிலிருந்தே தொடங்கியது.
காலம்பற எழுந்திருக்கறது, மடத்துக்குள்ளேயே வாக்கிங் போறது, வாக்கிங்கோட கடைசி ரவுண்டுல தானே எல்லா லைட் ஸ்விட்ச்களையும் அணைக்கறது,  மஹா பெரியவா ப்ருந்தாவனத்துக்குப் பூஜை, சந்த்ரமௌளீஶ்வரர் பூஜை, பாஷ்ய பாடம் ன்னு எல்லாத்துலயும் பெரியவாளோட பன்ச்சுவாலிட்டி,  தண்டத்தைக் கைல வெச்சிண்டு பெரியவா நடக்கற ஸ்பீடு (சான்ஸே இல்ல, கூட ஓடித்தான் போகனும் எல்லாரும்) , காலை 4 மணிலேந்து ராத்ரி ஒரு பத்து, பதினோறு மணிவரை பெரியவா டைம் டேபிள் மனப்பாடம் எனக்கு அப்போதெல்லாம்.

எங்க தாத்தா அமரபாரதி நடராஜ ஶர்மா ஸ்ரீமடத்துல பெயர்.  மஹாபெரியவா சொன்னான்னு எங்க பாட்டியோட 100 பௌணுக்கு மேல சீரா இருந்த நகைகள் எல்லாத்தையும் வித்து ஸம்ஸ்க்ருதத்துக்குன்னு யுனிவர்சிட்டி திருச்சி சிந்தாமணில ஆரம்பிச்சு நடத்தி, பின்னாடி அதே பெரியவா சொன்னான்னு ஒரு வார்த்தை, ப்ரச்னை பண்ணாம வெளில வந்த மஹான்.  அவர் பையன்  RSS மனைவியோட பி.டபிள்யூ.டி இஞ்ஜினியர் வேலைய விட்டுட்டு முழு நேர ஸ்வயம்சேவக் - பெரியப்பா, பலதரப்பட்ட வேலைகளைப் பாத்துட்டு 14ஆவது வேலையா போலீஸ்ல கீழ் நிலைல சேந்து, முதலமைச்சர் விருது வாங்கிய இன்ஸ்பெக்டர் வேலைய விட்டுட்டு நம்ம க்ராமத்துக்கு, குழந்தைகளுக்கு நல்லதை விதைத்து, நல்ல எதிர்கால தலைவர்களாக்கனும்னு ஸ்கூல் நடத்தற எங்கப்பா, லிப்டன் டீ கம்பெனி வேலைய விட்டுட்டு கதாகாலக்ஷேபம்,  பக்திக்கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் சித்தப்பான்னு குடும்பத்தோட அடையாளம் தான் எனக்கு.  தனியா ஒரு சுக்கும், தகுதியும், அடையாளமும் கிடையாது.

யுனிவர்சிட்டில டீச்சர் வேலை, ரெண்டு, மூணு ஹாஸ்டல் பசங்களையும் இவன் பாத்துப்பான்னு வார்டன் பொறுப்பு  இதெல்லாம் பெரியவா என்னையும் மதிச்சு, நம்பிக் கொடுத்த வாய்ப்புகள்.
நான் தினமும் அந்த க்ராமத்துலேந்து மடத்துக்கு ராத்திரி வேதபாடத்துக்கு சைக்கிள்ல வந்துட்டுப் போறேன்னு, என்னையும், என்னோட குரு கருப்பத்தூர் ஸ்ரீ சந்த்ரசேகர கனபாடிகளையும் அழைத்து இன்னிக்கு ராத்ரி, நாளைக்கு காலம்பற 4 மணிக்குன்னு இவனுக்குப் பாடம் நடத்துங்கோ, என் கிட்டயே ஒரு ரூம் இவனுக்குக் குடுத்துடறேன், தினமும் வந்துட்டுப் போக வேண்டாம்னு அனுக்ரஹித்த தாயுள்ளம், ஐடியா ரத்னம்.

நான் தான் சம்பாதிக்கறேனே, நானும் மத்த மதங்கள்ல குடுக்கறாமாதிரி மாசா, மாசம் ஏதாவது சேவை கார்யத்துக்கு உபயோகமா மடத்துக்குக் காணிக்கை தரேன் சொன்னதுக்கு, நீ இங்க பாடம் படி, யுனிவர்சிட்டில பாடம் சொல்லிக் குடு, வேறெதுவும் பண்ண வேண்டாம்ன தகப்பன்.

வந்து சேந்த புதுசு.  மடத்துலயும், மடத்து நிறுவனங்கள், நிலங்கள்லயும் நெறையா தப்பு பண்றா நம்ம மனுஷாளேன்னு ஒரு தடவ பெரியவா கிட்ட சொன்னேன்.  "இது தர்ம ஸ்தாபனம், கவர்மெண்ட்  ஆபீஸ் மாதிரிதான்.  அவா, அவா வேலைய அவாளேதான் பாக்கனும்.   ஒருத்தர் 10 சதவீதம் தப்பு பண்ணுவா, இன்னொருத்தர் 20-30 சதவீதம் பண்ணுவா.  வேலைகள் இன்னும் நிறையா இருக்கு, மனுஷாள் 100 சதவீதம் சுத்தமானவாளா கிடைக்க மாட்டா.  அவா, அவா கிட்ட என்னென்ன கார்யம் நடக்குமோ, அதுதான் நடக்கும்.  சூர்யன்ட்ட போகும்போதும், கடினமான மலைல ஏறும் போதும் மேலப்போக, போக உஷ்ணம் தாங்காம இதெல்லாம் தானாவே உதிர்ந்து விழுந்துடும்.   ஸத்யமானவாலால மட்டும் தான் மேல வரைக்கும் போக முடியும்.  நீ இதையெல்லாம் பாத்துக் கொழப்பிக்காம, உன் வேலைய மட்டும் பாரு,  எதாவது சொல்லனும்னா சந்த்ரமௌளீஶ்வரர் கிட்ட போய் சொல்லிடு" ன்னு எனக்கும் கீதோபதேசம் செய்த ஆச்சார்யாள்.  அத பின்னாடி அனுபவத்துலயும் பாத்தேன்.

ஒரு தடவ பெரியவா வாக்கிங் போற பாதை கிட்ட  ஒக்காந்து காலை சந்த்யாவந்தன ஜபம் பண்ணிண்டு இருந்திருக்கேன்.  பெரியவா வரும் போது மரியாதையில்லாம, தெரியாம ஒக்காந்துண்டு இருக்கானேன்னு கூட வந்தவா கண்ண மூடிண்டு இருந்த என்ன எழுப்ப போறான்னு தெரிஞ்சதும், அவாளைத் தடுத்துட்ட பெரியவா, பூச்சிகள் ஒதுங்கனும்னு எப்பவும் பாத நுனியை சத்தப்படுத்திண்டு நடக்கற தன் பழக்கத்தையும் நிறுத்தி, சத்தப்படுத்தாம என்னைத் தாண்டிப் போனான்னு தெரிஞ்சுது.

வேதாந்த பாடம் நடந்துண்டிருந்த போது, பாஷ்ய வாத்யார் உப்புக் கரைஞ்ச தண்ணில உப்பு கண்ணுக்குத் தெரியரதில்ல, ஆனா ருசிக்கும் போது புலப்படறதுன்னு சொல்லிண்டு போறார்.  பெரியவா "அத குடிச்சதும், சுத்தமான தண்ணில ஆசமனம் (குடிச்சிட்டு) பண்ணிட்டு வா ன்னு ஏன் சொல்லியிருக்குன்னு" கேட்டா.  ஒருத்தர் அது ஆசாரம்னார், மத்தவால்லாம் ஒன்னும் விளக்கம் சொல்ல முடியல.  எதோ பெரிசா இருக்கும்னு ஆர்வமா பெரியவா கிட்டயே கேட்டா.  உப்பு தண்ணிய குடிச்சதும் அதும் உப்பு இருக்குன்னு தெரிஞ்சுப்பான்.  ஆனா சுத்தமான தண்ணில ஆசமனம் பண்ணினதும் மூளைல அந்த பதிவு அனுபவ வித்யாசத்தால இன்னும் ஸ்திரமா பதியும்னா.   மஹா பெரியவாளோட ப்ரதான சிஷ்யர் இப்படி வேதாந்தத்துக்கு ஒரு எளிய விளக்கம் குடுத்திருக்காளேன்னு ஆச்சர்யப்பட்டா, அது நிலா அழகா, குளிரா இருக்கேன்னு ஆச்சர்யபடறா மாதிரிதான்.

ஒரு முறை மடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பசங்களும் தெரிஞ்சிக்கட்டும், சேவை பண்ற பழக்கம் வரட்டும்னு ஸ்டூடண்ட்ஸ் கொஞ்சம் பேரக் கூட்டிண்டு போயிருந்தேன்.  அப்ப அங்க எங்களப் பாத்த பெரியவா ஆசிர்வாதம் பண்ணிட்டு, இன்னிக்கு லீவு இல்லியே, எங்க இங்க வந்தேள் எல்லாரும்னு கேட்டா.  நான் விஷயத்தை சொன்னேன்.  உடனே வார்டன் மாதிரி, "மடத்துல இப்படி தினமும் எதாவது நடந்துண்டேதான் இருக்கும், லீவு நாள்ல வந்து பாத்து, சர்வீஸ் பண்ணினா போறும், படிக்கறத விட்டுட்டு இங்கெல்லாம் வரக்கூடாது" ன்னு தீர்க்கமா சொல்லிட்டா.

அப்பா நடத்தற ஸ்கூலுக்குப் பணம் போதலைன்னு யுனிவர்சிட்டி வேலைய விட்டுட்டு ஐ.டி. கம்பெனி வேலைக்குக் கிளம்பி, ராஜினாமாவ வைஸ் சான்ஸ்லரும் அங்கீகரிச்ச போது, பெரியவா யுனிவர்சிட்டிக்கு வந்திருந்தா.  நண்பர்கள் யோசனைப்படி நான் டவுனுக்குப் போயிருந்தேன், பெரியவா பேசி, போக விடமாட்டான்னு.  எல்லா உயரதிகரிகள், ஸ்டூடண்ஸ், அலுவலர்கள் ன்னு பேசிட்டு எல்லார் முன்னாடியும் என்னை எங்கன்னு கேட்டிருக்கா.  எல்லாரும் கேம்பஸ் முழுக்கத் தேடி, விட்லயும் தேடறா, உன்னைப் பாக்கறதுக்காக ஒக்காந்திருக்கான்னு நண்பர்கள் ஃபோன் பண்ண, பதறியடிச்சிண்டு ஓடி வந்து, நமஸ்காரம் பண்ணி, அழுதேன்.  எல்லாரையும் வெளில இருக்கச் சொல்லிட்டு, என் கூட யுனிவர்சிட்டி லைப்ரரி கண்ணாடி ரூம்ல கும்பகர்ணன், விபீஷணன் கதைய சொல்லி, குழந்தைகளை வெளில அனுப்பு, நீ போய்டாதன்னு சொல்லி, வைஸ் சான்ஸ்லர் பி.ஏ வ கூப்டு, அந்த ரெஸிக்னேஷன் லெட்டர கிழிச்சிப் போட்டுடு, அவன் எங்கயும் போகலன்னு உத்தரவு இந்த ஃபவுண்டர் அண்டு பேட்ரன்.

அழைத்தும் எங்கும் எளிதில் வந்து விடாத இந்த இந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கம்பரசன்பேட்டை எங்க இல்லத்துக்கு ரெண்டு, மூணு தடவ கூப்டாமலேயே, எதிர்ப்பார்க்காத இன்ப அதிர்ச்சி இன்ஸ்பெக்ஷன், எழுந்தருளினது, குழந்தைகளை ஆசிர்வதித்தது, எங்காத்து விக்ரஹங்களுக்குப் பூஜை செய்ததெல்லாம் நாம் இன்னும் நெறையா எதிர்பார்ப்பில்லாத, எதிர்ப்புகள மீறின சேவைகளைத் தொடர்ந்து செய்யனும்க்ற உத்வேகத்தைக் கொடுக்கும் அங்கீகாரமே.

திரும்பி ஒரு தடவ பெரியவா கிட்டயே பர்மிஷன் வாங்கிண்டு, படிச்ச படிப்பு அனுபவத்துல எங்க, எப்படி உபயோகப்பறதுன்னு பாத்துட்டு, இன்னும் கத்துண்டு வந்துடறேன்னு வெளில வந்திருக்கேன்.  மேய்ச்சல் நிலத்துல மேஞ்சிண்டிருக்கற மாட்ட கட்டியிருந்த கொம்ப இப்ப காணோம்.  சிவன் இனிமே யார, எப்ப அனுப்பிச்சு, திரும்பி வழி நடத்தப் போறான்னு தெரியல.  இவாகிட்டேந்து எப்ப இதையெல்லாத்தையும் கத்துக்கறது,  நடைமுறைப்படுத்தறது ?  இந்த மாதிரி இவாளோட விஶ்வரூபத்தோட பல முகங்களைக் கூட இருந்து ரசிச்ச த்ருப்தி மட்டும் தானோ ! ! !

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.- திருமூலர் திருமந்திரம்

தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகரில்லாத தனித் தலைமை தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னிமிடை வைத்த பெரும் தெய்வம் - ராமலிங்க அடிகள் திருவருட்பா

என்று தோன்றினை என்று கூறவும் இயலா
தொன்மை வாய்ந்தவா இறைவா தொழுதழுகின்றோம்
எந்த நாளும் உந்தன் புகழ் ஓங்கி உயர்ந்திட - குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்.

ஜய ஜய பகவா குருவே ஜய ஜய பகவா
ஜய ஜய பகவா கொடியே ஜய ஜய பகவா

Oct 15, 2017

தீபாவளி

தீபாவளி - தீப + ஆவளி - தீபங்களின் வரிசை

நம் உள்ளும் புறமும் இருக்கும் இருளை அகற்றி, எங்கும் அறிவான, மகிழ்வான, ப்ரகாசமான ஒளி பரவ வேண்டும் என்பதைக் கொண்டாடும் நாள், இதற்கடுத்த கார்த்திகை மாதத்தில் தினமும் எல்லா க்ராமங்களிலும் மாலை வீட்டு வாசல்களில் சிறப்பாக விளக்கேற்றுவர், மார்கழியில் விடிகாலை அப்படி செய்வார்கள்.

பரமேஶ்வரன் தவத்தின் பலனாக அம்பிகைக்குத் தன் இட பாகத்தைக் கொடுத்து, அர்த்த நாரீஶ்வரனான நாள்

காமரூபம் - ப்ராக்ஜோதிஷம் (இன்றைய அஸ்ஸாம்) நாட்டை ஆண்டு கொண்டிருந்த பௌமன் என்ற அஸுரனைக் கொன்று அவன் அன்னை விருப்பப்படி மக்கள் துயரம் தீர்ந்து, அவன் இறந்த அந்த நாளை அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் நாள்.  அவன் செயல்பாடுகளால் அவனுக்கு நரகாஸுரன் என்று பெயர்,  நாம் படும் நரகங்களிலிருந்து விடுபட பண்டிகைக்குப் பெயரும் நரக சதுர்த்தசி தான், நரகாஸுர சதுர்த்தசி இல்லை.  இந்த நாளில் விடிகாலை நாம் தேய்த்துக் குளிக்கும் எண்ணையிலும், நீரிலும், மற்ற பொருள்களிலும் லக்ஷ்மியும், கங்கையும், மற்ற தேவதைகளும் வாசம் இருப்பார்கள்.

தீர்க்கதமஸ் என்ற முனிவர் ஏற்கனவே கஷ்டங்களில் இருக்கும் மக்கள் மேலும் தங்களை வ்ரதங்களாலும், சாப்பிடாமல் உபவாசங்களாலும் கஷ்டப்படுத்திக் கொண்டுதான் இறைவனை அணுகி, அவன் அனுக்ரஹம் பெற வேண்டுமா என்று கேட்டதற்கு, சனாதனர் என்ற ரிஷி அருளிய பூஜை முறையே இந்த தீபாவளி.

பகீரதன் தேவலோகத்துக் கங்கையை பூமிக்கு வருவித்த நாள்

க்ருஷ்ணன் கூறியதைக் கேட்டு கோபர்கள் கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்த நாள்

இராவணேஶ்வரனை அவன் செய்த தவறான பிறன் மனை நோக்கல் என்ற குற்றத்திற்காகக் கொன்று, சீதையோடும், இராமானுஜனாம் லக்ஷ்மணனோடும் (அனுஜன் - தம்பி), விபீஷணன், சுக்ரீவன் தலைமையிலான ராக்ஷஸ, கரடி, குரங்குக் கூட்டத்தோடு அயோத்தி திரும்பிய நாள்.

மஹாவீரர் முக்தியடைந்த நாள்

சீக்கியர்களுக்கு முக்யமான நாள்

புத்தாடை உடுத்தி, துயரங்கள் தீர்ந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டில் பட்டாசு, மத்தாப்பு கொளுத்தி, கூட்டுக் குடும்பங்கள்ல எல்லாரும் சேந்து செஞ்ச பக்ஷணங்களை வெளுத்துக் கட்டி, ப்ரச்னை வராம இருக்க தீபாவளி லேகியம் உண்ணும் நாள்.

குழந்தைகளுக்கு, அடுத்த தலைமுறையினருக்கு இப்படி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி இந்த நாட்களிலாவது கூடி வாழும் முறையையும், பகிர்தலையும், சந்தோஷத்தையும் கொண்டாட வேண்டிய நாள்.  நிச்சயமாக நாள் முழுக்க டிவி முன்னாடியே ஒக்காந்து இருக்க வேண்டிய நாள் இல்ல.

ஷேர் அண்டு கேர் கூட்டுக்குடும்பங்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.   மீண்டும் சந்திப்போம்.  ஜய் ஹிந்த்.

Aug 2, 2017

தம்பி உடையான் பகைக்கு அஞ்சான்

மனைவி உடையான் விருந்துக்கு அஞ்சான்
வாஹனம் உடையான் வழிக்கு அஞ்சான்
ஆடை உடையான் அவைக்கு அஞ்சான்
கல்வி உடையான் பேச்சுக்கு அஞ்சான்
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் - வாரியார் சொற்பொழிவு