Aug 16, 2018

போலி த்ராவிடமும், தலைவர்களும்

பஞ்ச த்ராவிடம் என்று வேத, புராண காலங்களில் போற்றப்படும் நிலப்பகுதிகளும், அரச வம்சத்தினரும், வஸிஷ்டரோடு காலத்தால் ஒத்த அகஸ்த்யர் வளர்த்த தமிழும் இன்றைய த்ராவிட வாதத்தாலும் சிதைந்து, திரிந்திருக்கிறது.  முதல், இடை, கடைச்சங்க கால புலவர்களைத் தாண்டி, தமிழை வளர்த்த தமிழ்த்தாத்தா உவேசா, மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கிவாஜ இவர்களைத் தாண்டி இன்று தமிழால் வாழ்பவர்கள் தான் இருக்கின்றனர் என்பது மிகையாகாது.

கீழே நான் லிஸ்ட் பண்ற கருத்துக்கு சில குழுக்கள்லேந்து சத்தம் :) வருது, பதில் வரல, அவர்களும் உண்மை புரிந்து தெளிவாக வேண்டும் என்பது அவா. கீழே உள்ள கருத்துக்கள் உண்மை என்று நம்புகிறவர்கள் மட்டும் பரப்புங்கள், உணர வையுங்கள். தெளிவாக வழிகாட்டுங்கள், தேச, தெய்வபக்தி வளரட்டும், பாரதம் உலக அரங்கில் ஒளிரட்டும்

  பகுத்தறிவு வ்யாபாரம் என்று விளம்பரம் செய்து 60 ஆண்டுகளாக தலைமுறைகளுக்கு அடிப்படை அறிவு கூட கிடைக்காமல் செய்த  போலி த்ராவிடம்

  இந்து தெய்வங்களையும்,பண்டிகைகளையும் மட்டுமே புறக்கணிக்கும், அவமதிக்கும்   போலி த்ராவிடம்

  மற்ற மதத்தவர்களின் பண்டிகைகள் கொண்டாடி, தவறுகளை தட்டிக்கேட்காத ஓட்டு ஆசை பிடித்த   போலி த்ராவிடம்

  தமிழை, தமிழ்நாடு, தமிழனை வளர்க்கிறேன் என்று பல பிரிவுகளோடு குடும்பத்தை செழிப்பாக வளர்த்த   போலி த்ராவிடம்

  அண்ணா, பெரியார், கலைஞர் முன்னாடி தமிழகமே இல்லாதிருந்தது போல் ஒரு மாயையை உண்டாக்க பஸ் ஸ்டாண்டு, தெரு எங்கும் இவர்கள் பெயர், சிலைகளையே வைத்த   போலி த்ராவிடம்

  உண்மையான சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களை, தமிழ் வளர்த்தவர்களை, சுதந்திர போராட்ட த்யாகிகளை கைக்கூலி வாங்கிக்கொண்டு திட்டமிட்டு பாடுபட்டு மறக்கடித்த வ்யாதி   போலி த்ராவிடம்

  தமிழ்நாட்டைத் தாண்ட முடியாமல் இஷ்டப்பட்டவர்களைக்கூட இன்னொரு மொழியைக் கற்காமல் செய்த   போலி த்ராவிடம்

  60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தொண்டர்களை படிப்பறிவு இல்லாமல், குடிகாரர்களாக ஆட்டுமந்தைகளாக வைத்து ஏமாற்றி முன்னேற விடாமல் ஓட்டு வங்கியாக வைத்திருக்கும்   போலி த்ராவிடம்

  லட்சக்கணக்கில் நம்பியிருந்த தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்ற போதும் நாற்காலிகளை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டிருந்த   போலி த்ராவிடம்
 
 காவிரி நதிநீரில் தமிழகத்திற்கு த்ரோகம் செய்து ஊரெங்கும் சாராய ஆறு ஓட விட்ட போலி த்ராவிடம்

தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊரு நீர் மோரு, பானகம்னு, குடிநீர்ப் பந்தல்னு திருவிழாவா இருந்த கலாச்சாரத்த மாத்தி குடிதண்ணி கூட இன்னிக்கு காசு குடுத்தா தான்னு செஞ்ச போலி த்ராவிடம்

 மத்திய அரசுக்கு ஒன்றுமே தெரியாத கச்சத்தீவை முழு உரிமையும், வரலாறும் தெரிந்தும் இலங்கையிடம் தாரை வார்த்த போலி த்ராவிடம்

குதிரை, காளை ரேக்ளா, கிடா, கோழிச்சண்டை, ஜல்லிக்கட்டு இவைகளை நாட்டு ரகமே இருக்கக்கூடாது என்பதற்காக பீட்டா குறி வைக்கிறது.  துணிவுள்ள, மக்களுக்கு நன்மை நினைக்கும் த்ராவிட அரசு, ஜல்லிக்கட்டுல வருடாவருடம் ஜயிக்கும் வீரர்களுக்கு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்புன்னு ஒரு சட்டம் இயற்றனும், அது தான் உண்மையான காப்பு, முடியுமா, செய்யுமா.

ராணுவத்தை, எல்லைகளை பலப்படுத்தாது, சிறப்பு அந்தஸ்து குடுத்து இன்று வரை ஜம்மு காஷ்மீரில் ஓயாத கலவரம்தான் காங்க்ரஸின் சாதனை

ஆன்மீகம் மூலமே ஒழுக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்,  பரம்பரை அரசியல் அதிகாரம் இல்லாத, மக்கள் குறைகளுக்கு செவி சாய்த்து தவறுகளை திருத்திக் கொள்பவனே நமக்கு தலைவனாக தேவை

பெண்களைத் தெய்வமாக போற்றும் குடும்பமே உயர்வடையும், அவர்கள் தகப்பனாலும், கணவனாலும், மகனாலும் பத்ரமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்னு போதித்து வளர்ந்த குடும்பம், சமூகம், சமுதாயத்தை பெண்ணியம், பெண் சுதந்திரம், சமத்துவம்னு தெருவுக்கு கொண்டு வந்து சீரழித்த போலி த்ராவிடம்

ஓசி ட்ராயர், ஓசி சட்டை, ட்ராயர், ஓசி மதிய உணவு, ஓசி சைக்கிள், ஓசி செருப்பு, ஓசி பாடப்புத்தகங்கள், ஓசி கம்ப்யூட்டர், ஓசி பஸ் பாஸ் இவைகளோடு ஒழுக்கமும், உழைப்பும், அர்ப்பணிப்பும், தேசபக்தியும் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் கற்றுக்கொண்டால் நாடு நலம் பெறும். நன்றியை வரியாக, தேசபக்தியாக, சகோதரத்துவமாக வெளிக்காட்டி பெருமிதம் பெறுவார்கள்.
இல்லையேல் உழைக்கத்தெரியாத குடிகாரர்களும், தேச த்ரோகிகளும், பாலியல் வன்முறை கூட்டங்களும், கைக்கூலிகளும், கொலை, கொள்ளைக்காரர்களும் டிகிரி படித்தவர்களாக உருவாகி உலவுவார்கள். இவர்களிலிருந்தே தலைவர்கள் தோன்றுவார்கள். நாடு நாசமாகும்.

கண் முன்னே வளர்த்த குடும்பம் ஜயிலுக்கு, கேசுக்கு, கோர்ட்டுக்கு அலைவதும், சொத்து சண்டை பார்ப்பதும், கொள்கைகளும்,கட்சிகளும் சின்னா பின்னமாவதை பார்ப்பதும், எம்ஜியாருக்கு பின் இன்று வரை அந்த சீட்டில் ஒருவர் உதவியுமின்றி உட்காராமல் போனது, இன்று வீட்டிலே நெனச்ச சீட்ல ஒக்காராம முடியாம போனது, கொடுமை, கொடுமை, கொடுமை

அண்ணே, காசுக்கு எழுதினது வேற, மக்கள் முன்னிலையிலும், சட்டசபையிலும் சொன்னவை:
பொன்னேட்டில் பொறிக்கப்படவேண்டிய வசனங்கள், நாகரீகமற்ற, பதில் கூற முடியாத போது, கேள்வி கேட்போரை கூசி, குறுகி, வாயடைக்க வைக்கும் மரபைக் கொடுத்த த்ராவிட தலைவர்கள்

1. பருவப் பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் காந்தி..
2. நேருவோ, மனைவியை இழந்தவர், சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?
3. காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா.
4. வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்.
5. சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்.
6. பாவாடை நாடா அனந்தநாயகி;
7.கறுப்பன், கருத்திருமன்; ஐஸ் புரூட் சம்பத்;
8. வழிப்போக்கன் வாழப்பாடி;
9. மூப்பனார் மூளையில் கோளாறு;
10.செவிடன் ஜீவா;
11.நொண்டி ராமமூர்த்தி;
12.காவடி கல்யாணசுந்தரம்
13. மலையாளி, கோமாளி, கூத்தாடி, எம்.ஜி.ஆர்.,
14. இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா;
15. பண்டாரம் வாஜ்பாய்;
16. பரதேசி அத்வானி;
17. ஆக்டோபஸ் மோடி;
18. காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை, ஜெயலலிதா.
19. செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்;
20. அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்;
21.போதை நடிகர் விஜயகாந்த்;
22. தரகர், தா.பாண்டியன்;
23.கம்யூனிஸ்ட் வேடதாரி, ஜி.ராமகிருஷ்ணன்;
24. மந்தபுத்தி திருமாவளவன்.
25. வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு;
26. ஓடுகாலி திருநாவுக்கரசு.
27. ஈ.வெ.ரா.,வை ஏமாற்றிய புறம்போக்கு, கி.வீரமணி;
28 .கள்ளத் தோணி, வைகோ.
29. இந்து என்றால் திருடன்;
30. ராமன் ஒரு குடிகாரன்;
31. கலாம் என்றாலே கலகம்
32. 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்'  என்பதுதான்
33. ராஜீவ் காந்தியின் சினேகிதி ஜெயலலிதா

அவ்வப்போது தோன்றும் குறிப்புகளின் தொகுப்பே இது, ஒரு வரிசையாக, கோர்வையாக இல்லாமைக்கு மன்னிக்கவும்

No comments: