Jan 16, 2009

பட்டினத்தார்

பக்தி  கொண்டாடுவோம் ,
தெய்வ பக்தி கொண்டாடுவோம்
பவ சாகரத்திலே கிடந்து தவியாவிதத்திலே உழன்று
பக்தி கொண்டாடுவோம் .

பணிவோடு நின்று திருநீறணிந்து மறவாத
சிந்தை கொண்டு தெய்வ பக்தி கொண்டாடுவோம்
.

பரிவு கொண்டு பகழ்த் துதி புரிந்து
எதிர்தனை வணங்கி உளம் உருகி நின்று பக்தி கொண்டாடுவோம் .

நிகழும் லோக வாழ்வதை சதமென அனு
தினமும் மாய மாதர் மோக வலையினில்
உழலும் காம க்ரோத லோப மதமதில்
சுழலும் பாவி ஆகி வாழ்வில் இடர்பட.
அகமும் வாடி நோய்களாலே மெலியவும்
அமுதும் வாயிலேகிடாமல் ஒழுகிட
வகையில்லாது சேய்களோடு மனைவியும்
கதறி வீழ நாடி பேத கனமதில்.
நமனும் வந்துயிரை கவரவும்
பிணமாய் சுடலை எண்டி நமதுடலும் வெந்தழியும் நாளிலே.

நம் நாடு எங்கே? பெரும் வீடு எங்கே?
காப்பு நஞ்சை எங்கே? தோப்புப் புஞ்சை எங்கே?
அதிகாரம் எங்கே? வ்யாபாரம் எங்கே?
மனைவி மக்கள் எங்கே? வைத்த ரொக்கம் எங்கே?
வாங்கின வட்டி எங்கே? இரும்புப் பெட்டி எங்கே?
அவையெல்லாம் கூட வருமோ அங்கே?
நாடி வருவதெது பாவபுண்யமல்லாது
நாம் அரையில் அணியும் கோமணமும் வராது ,
நன்குணர்ந்து கொண்டு சிந்தையும் தெளிந்து
கும்பிடுங்களென்றும்,
தவ நிலை நாட்டும் அருளமுதூட்டும்
பதவி காட்டும் பக்தி கொண்டாடுவோம் ,